World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The UAW's silence

ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தின் மெளனம்

By Jerry White
9 April 2009

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரின் மறுசீரமைப்புத் திட்டங்களை நிராகரித்து கார் நிறுவனங்களை அவை அதிகமான வேலைநீக்கத்தை செய்து, இன்னும் "கடுமையான விட்டுக்கொடுப்புகளை" கார் தொழிலாளர்கள் மீது சுமத்தவில்லை என்றால் அவற்றை திவாலுக்குத் தள்ளுவேன் என அச்சுறுத்தி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகப்போகிறது.

இரு நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளும் உடனே இன்னும் ஆலைகளை மூடவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யவும், தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இன்னும் கூடுதலான ஊதியங்கள், பிற நலன்களை குறைக்கும் திட்டத்தை அளிப்பதாக உறுதியளித்தனர். இது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட முடியாவிட்டால் திவால் நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என ஜெனரல் மோட்டார்ஸின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியான Fritz Henderson கூறினார்.

நிலைமை இப்படி இருக்கையில் 90,000 தொழிற்சங்க தொழிலாளர்களையும் கிட்டத்தட்ட 1 மில்லியன் GM, Chrysler ஓய்வூதியத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அமைப்பு எதுவும் கூறவில்லை. ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ரோனால்ட் கெட்டில்பிங்கர் ஒரு சொல் கூட குறிப்பிடவில்லை. தொழிற்சங்கத்தின் வலைத் தளத்தில் எந்த பொது அறிக்கையும் இன்னும் வெளிவரவில்லை ஏன் என்று கேட்கப்பட்டதற்கு UAW செய்தித் தொடர்புப் பெண்மணி ஒருவர் WSWS இடம், "அறிக்கை வெளியிட வேண்டாம் என்று சங்கம் விரும்புகிறது", அதற்கு எவரும் "அழுத்தமும்" கொடுக்க முடியாது என்றார்.

இந்த மெளனம் மிகவும் முக்கியத்துவமானது. UAW அதிகாரத்துவம் மீண்டும் அதன் உறுப்பினர்களுக்கு பின்னே கார்த்தொழிலாளர்கள் மீது பாரிய சுமைகளை சுமத்த சதி செய்து கொண்டிருக்கிறது என்பதின் மூலம்தான் இது விளக்கப்பட முடியும்.

தங்கள் உறுப்பினர்களை பற்றி UAW அக்கறையற்ற உணர்வைத்தான் கொண்டுள்ளது. அரசாங்கம் நிதியப் பிரபுத்துவத்தின் ஆணையின்கீழ் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரத்தை அழித்து வட அமெரிக்கா முழுவதும் சமுதாயத்தை அழிக்கத் தயாராக இருப்பதை மறைக்க முற்படுகிறது.

ஜனாதிபதி ஒபாமாவிற்கு அது கொடுத்த முழு ஆதரவு உட்பட இப்பொழுது UAW இன் முந்தைய கொள்கைகளும் முழுத் தோல்வியடைந்துள்ளது என்பது அம்பலமாகிறது. UAW இடம் இருந்து விடையிறுப்பு ஏதும் வரவில்லை என்பதைக் குறிப்பிட்ட Reuters செய்தி நிறுவனம் எழுதியது: "தொழிற்சங்கம் ஒபாமா எடுத்துள்ள நடவடிக்கையினால் அதிர்ச்சி அடைந்துள்ளதை கார்த் தொழில் ஆய்வாளர்கள் காண்கின்றனர். முன்னாள் சமூக அமைப்பாளராக இருந்துத ஒபாமா UAW இடம் இருந்தும் மற்ற தொழிற்சங்கங்களிடம் இருந்தும் கடந்த ஆண்டுத் தேர்தலில் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்."

இது உண்மையானால், இது UAW அதிகாரத்துவத்தின் அறியாமை, மடைத்தனம் ஆகியவற்றைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கில் அள்ளிக் கொடுத்துள்ள, கார்த் தொழிற்துறையின் கட்டுப்பாட்டை முன்னாள் தனியார் முதலீட்டாளர்களிடமும், ஊகவாணிப முதலீட்டு நிதி மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட்ட ஒரு ஜனாதிபதியிடம் இருந்து அது என்ன எதிர்பார்க்கிறது?

போக்கை மாற்றிக் கொள்ளுவது ஒரு புறம் இருக்க, தன்னுடைய முழு அரசியல் நோக்கின் தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாத நிலையில், UAW அதிகாரத்துவம் ஒபாமா பங்கு பற்றி மெளனம் சாதிக்க விரும்புகிறது.

இது ஒன்றும் தவறான அரசியல் பிரச்சினை எனக் கூறுவதற்கு இல்லை ஜனநாயகக் கட்சியுடன் UAW இன் கூட்டு தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு அடிபணியச்செய்யும் அதிகாரத்துவத்தின் பங்கைத்தான் பிரதிபலிக்கிறது. இந்த அமைப்பின் நலன்களும் மற்றும் அமெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முழுவதின் நலன்கள் அடிப்படையில் இவை பிரதிபலிப்பதாகக் கூறிக்கொள்ளும் தொழிலாளர்களுடைய நலன்களுக்கு முற்றிலும் விரோதமானவை.

UAW மற்றும் பிற தொழிற்சங்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே முதலாளிகளுக்கு எதிர்ப்பு என்பதைக் கைவிட்டுவிட்டன. தொழிலாளர்-நிர்வாகம் "பங்காளித்தனம்", பொருளாதார தேசியவாதம் ஆகியவற்றினூடாக ஆலைகள் மூடல், பெரும் பணிநீக்கங்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகள் ஆகியவற்றிற்கான எதிர்ப்பை ஒடுக்கிவிட்டன.

1979ல் உச்சக்கட்டமாக 1.5 மில்லியன் என்பதில் இருந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகக் குறைவாக இன்று 431,000 என வந்துள்ள அங்கத்துவ சந்தா செலுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிந்தவுடன் அதிகாரத்துவம் தன்னுடைய சலுகைகளை தக்க வைத்துக்கொள்ள வேறுவகையிலான வழிமுறைகளை தேடமுயல்கின்றது. இது 2007ம் ஆண்டு "மாறுதல்" (Transformational) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதில் UAW பல பில்லியன் டாலர் ஓய்வூதிய சுகாதார நிதியின் பொறுப்பைப் பெற்றது. அதற்குப் பதிலாக இது புதிய தொழிலாளர்களின் ஊதியத்தை மற்றவர்களுடைய ஊதியத்தில் பாதியாக ஏற்றுக்கொண்டது.

வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனமான Lazard Freres ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட அந்த உடன்பாட்டைப் பயன்படுத்தி UAW தன்னை ஒரு இலாபம் உருவாக்கும் வணிக அமைப்பாக மாற்றிக்கொள்ள முயன்றுள்ளது.

UAW அதிகாரத்துவம் இப்பொழுது வெள்ளை மாளிகை, கார் நிறுவனங்கள் மற்றும் பெரிய முதலீட்டாளர்களுடன் ஆழ்ந்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதுடன், கார்த்தொழில்முறை செல்லும் போக்கில் எப்படி தன் நலன்களை பாதுகாக்க முடியும் என்று தீவிரமாக உள்ளது. UAW உடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்களில் Steven Rattner, Ron Bloom என்ற இரு முன்னாள் Lazard முதலீட்டாளர்கள் ஒபாமாவின் செயற்குழுவில் உள்ளனர். Ron Bloom இந்த தசாப்தத்தின் முற்பகுதியில் எஃகுத் தொழில் அழிக்கப்படும் காலத்தில் எஃகுத் தொழிலாளர் தொழிற்சங்கத்திற்கு ஆலோசகராக இருந்தவர் ஆவார்.

GM ஐ இரு நிறுவனங்களாக, Chevrolet, Cadillac மற்றும் இலாபம் தரும் கார்கள் தயாரிக்கும் பிரிவுகள், சொத்துக்கள் கொண்ட ஒரு "திறமையான" நிறுவனமாகவும், Hummer, Saturn, சில மூடப்பட்ட ஆலைகள், பாரிய கடன்களை கொண்டதும் பல பில்லியன்கள் ஓய்வூதியம் சுகாதார நலன்கள் கொடுக்கும் பொறுப்பை உடைய மோசமான ஒன்றாகவும் பிரிக்க ஒபாமா நிர்வாகம் முயல்கின்றது என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தகைய உடன்பாட்டைக் கொள்ளுவதற்கு முன்பு அரசாங்கம் UAW அதன் ஓய்வூதிய சுகாதாரப் பாதுகாப்பு நிதிக்கு வரவேண்டிய $20 பில்லியனில் பாதியை ரொக்கத்திற்குப் பதிலாக பங்குகளாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக Businessweek அறிக்கை ஒன்று குறிப்பிடுகின்றது. மேலும் UAW முற்றிலும் புதிய ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்றும் அதில் தீவிர மருத்துவ நலன்களை குறைப்புக்கள் இருக்கும் என்றும் தற்போதைய தொழிலாளர்களின் ஊதியங்கள் ஜப்பானிய உடமையாக இருக்கும் அமெரிக்க ஆலைகளில் வேலைபார்க்கும் தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களின் ஊதியத்தை ஒத்து இருக்க வேண்டும் என்றும் நிர்வாகம் விரும்புகிறது.

இதற்கு ஈடாக UAW புதிய நிர்வாகத்தில் மிகப் பெரிய பங்குதாரர்களில் ஒன்றாக வரும் எனக் கூறப்படுகிறது. "GM ன் பங்குகள் இப்பொழுது 2 டாலர் தான் என்றாலும், நிர்வாகம் கடனை குறைத்தபின், தொடர்ச்சியான வங்குரோத்து பற்றிய ஊகம் இல்லாத நிலையில், பங்கு விலை இன்னமும் அதிகமாகும் எனக் கருதுகிறது" என்று Businessweek கூறியுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், UAW அதிகாரத்துவம் தன்னுடைய உறுப்பினர்களை சுரண்டும் ஒரு இளைய பங்காளி என்னும் முறையிலேயே பல மில்லியன்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதன் முக்கிய கவலை எப்படி கார்த் தயாரிப்பாளர்களை இலாப நிறுவனங்களாக தொடரவைப்பது, குறைந்த வறுமை ஊதியங்கள், வியர்வை சிந்தும் நிலை தொழிலாளர்களுக்கு இருந்தாலும் முந்தைய அமைப்பின் நிழல் போல் இருப்பது எவ்வாறு என்பதாகத்தான் உள்ளது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரை பொறுத்தவரையில், இப்பணியைச் செய்து முடிக்க தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்க வேண்டியிருக்கும். இவ்விதத்தில் ஒரு திவால் நிலைமை அவர்களின் விருப்பத்திற்குரியதாக இருக்கலாம். ஏனெனில் ஒரு தோல்வியடைய கூடிய ஒரு வாக்கெடுப்பை நடாத்துவதை தவிர்க்க தொழிற்சங்கத்திற்கு சந்தர்ப்பத்தை கொடுக்கலாம். ஒரு நீதிபதியால் குறைப்புக்கள் உத்தரவிடப்படும், தொழிற்சங்கம் ஊதியங்கள், ஒய்வூதியங்களை பொறுப்புகளில் இருந்து தனது கைகளைக் கழுவி விடலாம்.

கார்த் தொழிலாளர்கள் தங்கள் வேலைகள் அழிப்பு, வாழ்க்கைத் தரங்கள் அழிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரே முன்னிபந்தனை அழுகிய UAW அதிகாரத்துவக் கருவியில் இருந்து முற்றிலும் உடைத்துக்கொள்ளுவதுதான். தொழிலாளர்கள் ஆரம்ப முயற்சியை இப்பொழுது மேற்கொண்டு தொழிற்சாலைக் குழுக்களை கொண்ட புதிய போராட்ட அமைப்புக்களை கட்டமைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சோசலிச, சர்வதேச மூலோபாய அடிப்படையில் தொழிலாளர்களின் அரசியல் இயக்கத்தை கட்டமைப்பது மிகவும் முக்கியமாகும்.