World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Modern-day Hoovervilles

தற்காலத்திய ஹூவெர்வில்லேக்கள்

By Tom Eley
27 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

பெருமந்தநிலைக் காலத்தில், அமெரிக்க நகரங்களுக்கு புறத்தே இடர்பாடுகள் நிறைந்த சிறுநகரங்கள் தோன்றின. வேலைகள் இழந்தோர் நிறைய இருந்த இப்பகுதி, தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குடியேறிய "ஹூவெர்வில்லேக்கள்" என அழைக்கப்பட்ட இப்பகுதி பெருமந்த நிலையினால் மனிதர்களுக்கு ஏற்பட்ட பெரும் துன்பங்களுக்கு அழிக்க முடியாத அடையாளமாயின. பெருமந்த நிலைக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த ஹெர்பர்ட் ஹூவெரின் (1929-1933) பெயர் இவற்றிற்கு ஏளனமான முறையில் இடப்பட்டன. வேலையில்லாதவர்கள், வீடற்றவர்களுக்கும் எந்தவித அரசாங்க உதவியும் கொடுக்கப்படாத போதிலும் "செழுமை இதோ வந்துவிடும்" என்பதை அமெரிக்கர்களுக்கு பலமுறை கூறும் பழக்கத்தை ஹூவெர் கொண்டிருந்தார்.

அமெரிக்க உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஹூவெர்வில்லேக்களை பற்றி அவர்களுடைய வரலாற்று பாடப் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றனர். இச்சேரிப் புறங்களை இந்நூல்கள் அமெரிக்க வறுமை எவ்வாறு ஜனாதிபதி பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் தன்னுடைய புதிய உடன்பாட்டில் (New Deal) இனி ஒருபோதும் திரும்பிவராத வகையில் அகற்றினார் என்பதற்கு உதாரணமாகக் கூறுகின்றன.

ஆனால் ஹூவெர்வில்லேக்கள் மீண்டும் வந்துவிட்டன.

வியாழக்கிழமை நியூயோர்க் டைம்ஸில் முதல் பக்கம் வந்துள்ள கட்டுரை ஒன்று ("சேரிப் பகுதிகள் முளைத்தெழுவதை நகரங்கள் சமாளிக்கின்றன") அமெரிக்க நகர்ப்பகுதிகளில் மீண்டும் இத்தகைய நகரும் சேரிப்பகுதிகள் வந்துள்ளது பற்றி விளக்கியுள்ளது. மிக அதிகம் இதுபற்றிக் கூறப்பட்ட பகுதி கலிபோர்னியோவிற்கு அருகே உள்ள சக்ரமென்டோவில் இருக்கிறது. அமெரிக்காவில் மிகச்செல்வம் கொழிக்கும் இந்த அதிக மக்கட்தொகையுடைய மாநிலத்தில் கிட்டத்தட்ட 125 மக்கள் இந்த ஹூவெர்வில்லேயில் வசிக்கின்றனர்.

ஆயினும் செய்தி ஊடகம் சக்ரமென்டோவிற்கு அருகில் உள்ள கூடார நகரம் தொடர்பாக காட்டும் கவனத்தைவிட ஹூவெர்வில்லேக்கள் மிகவும் பரந்ததுள்ளது. இது மீண்டும் பினிக்ஸ், அரிசோனா, ஒலிம்பியா, சியாட்டில், வாஷிங்டன், ரேனோ, நெவடா, போர்ட்லந்து, ஓரேகான், நாஷ்வில்லே, டென்னிசே, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், பிளோரிடா, கலிபோர்னியாவின் பிரென்சோ ஆகியவற்றில் இன்னும் பல இடங்களிலும் பரந்துள்ளது.

இந்த கூடாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் கூடாரங்களில், பழைய மரங்கள், தூக்கி எறியப்பட்ட உலோகங்கள், அட்டைகள் மற்ற கழிவுப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட வீடுகளில் உள்ளனர். வீடுகளில் நீர் வசதி, மின்வசதி, கழிவறைகள், குப்பைகள் அகற்றப்படுதல் போன்றவை இல்லை.

500,000 மக்கள் கொண்ட பிரெஸ்நோ பற்றி டைம்ஸ் முக்கியமாக குறிப்பிடுகின்றது. பிரெஸ்நோவைச் சுற்றி இப்பொழுது ஐந்து சேரிகள் உள்ளன. வீடில்லாதவர்களுக்கான தேசிய கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான Michael Stoops இப்பகுதிகளில் வாழ்பவர்களை "ஊட்டமான ஊடல்வாகு படைத்தவர்கள், நாள் முழுவதும் உழைப்பவர்கள், குறைந்தபட்ச ஊதியம் அல்லது சற்று அதிகமாக கூலிக்கு, தங்கள் வருமானத்தைக் கொண்டு முன்னர் வீடுகளில் வசிக்கக்கூடியவர்களாக இருந்தவர்கள்" என்று விவரித்துள்ளார்.

இந்த ஹூவெர்வில்லேக்களில் இருக்கும் மக்கள் வீடுகள் இல்லாமல் இருக்கும் மக்களில் ஒரு சிறிய பகுதியனரைத்தான் பிரதிபலிக்கின்றனர். வீடின்மையை இல்லாதொழிப்பதற்கான தேசிய கூட்டின் கருத்தின்படி 3.4 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த ஆண்டு வீடற்ற தன்மையை அனுபவிப்பர். இது 2007ல் இருந்ததைவிட 35 சதவிகிதம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை பேர்லின் நகர முழு மக்கட் தொகைக்கும் சமமாகும்; சிக்காகோ மற்றும் அயோவோ மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை இவற்றைவிட அதிகமாகும்.

வீடுகள் இல்லாத நிலையின் வளர்ச்சிக்கு உந்துதல் கொடுத்தது, கட்டாய ஏலத்திற்கு விடும் நெருக்கடியாகும். ஆனால் வீடுகள் இல்லாதவர்களின் எண்ணிக்கை முன்பு வாடகைக்கு இருந்தவர்களின் எண்ணிக்கையுடன் கூடுகிறது. விந்தையான முறையில் வீட்டுக்கடன்கள் கட்டமுடியாததால் ஏலத்திற்கு விடும் நிலை நாடு முழுவதும் வாடகையும் உயர்த்தியுள்ளது. ஏனெனில் மொத்த விடுகள் தேவை சுருங்கியுள்ளது. இதைத்தவிர அடுக்குமாடி வீடுகள் பிரிவுகள் ஏலத்திற்கு வருவதால், தங்கள் வாடகையை செலுத்த பின்தங்காதவர்களைக் கூட வெளியேற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன்பு பெரும்பாலன வீடற்ற மக்கள் வேலைகளில் இருந்துடன், 41 சதவிகிதத்தினர் குடும்பமாக குழந்தைகளுடன் இருந்தனர். வீடுகள் அற்றவர்களிடையே கணிசமான பகுதியில் உழைக்கும் வறியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ஏழைக் குடும்பங்கள் சமீபத்தில் மிக அதிகமாகிவிட்டது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒபாமா நிர்வாகம் இந்த வீடுகள் அற்ற நிலையின் அதிகரிப்பை எவ்விதமான கவனத்திற்கொள்ளாத தன்மையுடன்தான் எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்கா முழுவதும் படர்ந்துள்ள மகத்தான சமூக நெருக்கடி செவ்வாய் மாலை நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் செய்தியாளர் கூட்டத்தில் முற்றிலும் ஒதுக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவை சூழ்ந்துள்ள சமூக நெருக்கடியின் பரிமாணங்கள் பற்றி குறிப்புக் காட்டிய ஒரே கேள்வி புதிய கூடார நகரங்களைப் பற்றி இருந்தது. Ebony ஏட்டின் நிருபர் ஒபாமாவிடம் கேட்டார்: "நாடு முழுவதும் பாலங்களுக்கு கீழே, கூடாரங்களில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஒபாமா என்ன கூறுகிறார்" என்று கேட்டார்.

ஒபாமா இதற்கு கொடுத்த விடையிறுப்பு: ஒன்றுமில்லை. வினா எழுப்பியவரிடம் "அமெரிக்காவில் எந்தக் குழந்தை வீடின்றி இருந்தாலும் தன் இதயம் வாடுகிறது" என்றார். இந்த அறிவிப்பு AIG மேலதிக கொடுப்பனவுகள் பற்றி அவர் காட்டிய "கோபம்" போல்தான் உள்ளது. "வீடுகள் இல்லாத நிலையை சமாளிக்க பல தொடர் திட்டங்கள் வரவுள்ளன" என்ற தெளிவற்ற அறிக்கை தவிர வேறு குறிப்பு எதுவும் ஒபாமாவால் கொடுக்கப்படவில்லை.

"அவர்களுக்காக முக்கியமாக நான் செய்யக்கூடியது அவர்கள் பெற்றோர்களுக்கு வேலை கிடைக்கச் செய்வதுதான்" என்றார் அவர். வேறுவிதமாகக் கூறினால் அவருடைய நிர்வாகத்திடம் வீடுகள் இன்மை நெருக்கடிக்கான திட்டம் ஏதும் இல்லை. வேலைகள் பற்றிய அவருடைய திட்டங்கள் வேலையின்மையின் அசாதாரண வளர்ச்சியைப் பார்க்கும்போது உருப்படியாக எதையும் காட்டவில்லை. வியாழனன்று தொழிலாளர்துறை வேலையற்றவர்கள் உதவிகளுக்காக விண்ணப்பதன் எண்ணிக்கை 5.6மில்லியன் என உயர்ந்து விட்டதாகவும், இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் இருக்கும் வேலைகள் பற்றி நெருக்கடியை கணிசமாக குறைத்துமதிப்பிடுகின்றது என்றும் கூறியுள்ளது.

முந்தைய நாள்தான் ஒரு டிரில்லியன் டாலர் "பொது-தனியார்' பிணை எடுப்பு மிகப் பெரிய வங்கிகளுக்கு கொடுத்த நிர்வாகம் என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும். இது ஒன்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்காக நடத்தப்பட்ட முதலும் கடைசியுமான பிணை எடுப்பு அல்ல. மொத்தத்தில், நேரடிக் கடன்கள், நிதி உட்செலுத்தப்படுதல், அரசாங்கம் கையேற்றுக்கொள்ளுதல், கடன்களுக்கு உத்தரவாதம், என்ற விதத்தில் வரி செலுத்துபவர்கள் வோல் ஸ்ட்ரீட்டிற்கு $8 முதல் $10 டிரில்லியன் வரை உதவியுள்ளனர். ஒப்புமையில், ஒபாமாவின் ஊக்கப் பொதி $1.5 பில்லியனை அவசரக்கால வீடுகள் இல்லாதவர்களுக்கு உறைவிடக் கட்டுமானத்திற்காக ஒதுக்கியுள்ளது.

தன்னுடைய வரவு-செலவுத் திட்டத்திலோ, ஊக்கப் பொதியிலோ குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வாடகை கட்டுவதற்கு உதவியாக எந்த ஏற்படாட்டையும் உள்ளடக்கவில்லை. வீடுகள் சந்தையை மறுகட்டமைக்கும் அவருடைய திட்டம் அதிக விலைக்கு அடைமானம் போயுள்ள மில்லியன் கணக்கான அமெரிக்க வீடுகளின் சுமையைக் குறைக்கப் போவதில்லை. சந்தை மதிப்பைவிட அவர்களின் வீடுகள் "மூழ்கிவிட்டன". இவ்விதத்தில் வீடுகள் இல்லாதவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பது உறுதியாகிறது.

The Nation ஏடு போன்ற ஒபாமாவின் தாராளவாத ஆதரவாளர்கள், ஒபாமாவை ரூஸ்வெல்ட்டுடன் ஒப்பிடுவதற்கு நிறைய எழுதியுள்ளனர். புதிய உடன்பாடு பெருமந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்ற போலிக் கருத்தை அவர்கள் வளர்க்கின்றனர். உண்மையில் உலப் பொருளாதாரத்தை அதிகம் அழித்தும், அதைத்தவிர குறைந்தது 60 மில்லியன் உயிர்கள் குடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரே பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேலும், சமூகக் கட்டுமானத்தின் உண்மையான மாறுதல்கள் அரசியல் ஆளும்வர்க்கத்திடம் இருந்து வராமல் தொழிலாள வர்க்கத்தின் பரந்த நடவடிக்கைகள் மூலம் வந்தாகும்.

அப்படி இருந்தும், ஒபாமாவின் பதவியிலுள்ள முதல் மாதங்களில் குறிப்பிடத்தக்கவை சமூக சீர்திருத்தங்கள் பற்றி எந்த தீவிரத் திட்டமும் இல்லாதது குறிப்பிடத்தக்கதாகும்.

தன்னுடைய முதல் 100 நாட்களில் முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கு சமூக சீர்திருத்தங்கள் தேவை எனக் கருதிய முதலாளித்துவ பிரதிநிதியான ரூஸ்வெல்ட் ஒரு "ஆரம்பகால உதவி" (Alphabet soup) திட்டங்களான பண்ணை பாதுகாப்பு நிர்வாகம், மறுசீரமைப்பு நிர்வாகம், கிராமப்புற மின்விசை அளிக்கும் நிர்வாகம், டெனிசி பள்ளத்தாக்கு அதிகாரம், பொதுமக்கள் பாதுபகாப்பு பிரிவு போன்றவற்றை ஏற்படுத்தினர். இவை பல நூறாயிரக்கணக்கானவர்களுக்கு வேலே கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்ததுடன், மின்சாரத்தை பல பகுதிகளுக்கு கொடுத்தது மிகப்பெரிய அளவில் கிராமப்புற விவசாய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியது.

இரண்டே மாதங்களாக பதவியில் இருக்கும் ஒபாமா நிர்வாகம் ஒருமுனைப்பான உந்ததுதலுடன் பரந்த பொதுச் செல்வத்தை நிதிய உயரடுக்கிற்கு பாரிய வங்கி பிணையெடுப்புக்கள் மூலம் அள்ளிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களால் உணரப்பட்ட வர்க்க சீற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ரூஸ்வெல்ட் வோல்ஸ்ட்ரீட்டில் இருக்கும் "பணம் மாற்றுபவர்களுக்கு" எதிராகக் கடிந்து பேசினார். மாறாக ஒபாமா தேவையில்லாமல் பொருளாதார நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை எதிர்கொள்ளும் வகையில் நிறுத்தியுள்ள அதே நிதிய உயரடுக்கின் தேவைகளுக்கு வாரிக் கொடுக்கிறார்.

ஒபாமா சமீபத்தில் ஒரு உயர்மட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் உண்மையை முற்றிலும் தலைகீழாக்கிக்காட்டும் உரையில், "உங்கள் நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கும் சமூகங்களின் செழிப்பிற்கு உரமிட்டுள்ளன; இது கணக்கிலடங்கா தனிநபர்களின் வெற்றிக் கதைகள் ஆகும். அவர்கள் நம் நாட்டை செழிப்பாக்கியுள்ளனர். அவர்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த எழுச்சிக்கு புகழாரமாக உள்ளனர்." என கூறினார்.

புதிய சீர்திருத்த செயல்பட்டியலை செயல்படுத்துவதற்கு முற்றிலும் மாறாக, செவ்வாயன்று சமூக நலத்திட்டங்கள்மீது பெரும் தாக்குதல்கள் தயாரிக்கப்படுகின்றன, வங்கிகள் பிணை எடுப்புக்கள் முடிந்தவுடன் செயல்படுத்தப்படும் என்பதைத் ஒபாமா தெளிவாக்கினார். பலமுறையும் சுகாதாரப் பாதுகாப்பின் உயர் செலவுகள் பற்றிக் குறிப்பிட்டு ''சமூக உரிமைகளுக்கான சீர்திருத்தம்'' (Entitlement Reform), அதாவது வோல் ஸ்ட்ரீட்டிற்குக் கொடுக்கப்படும் பணங்களுக்காக ஏற்படும் கடன்கள் சுகாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு இன்னும் பல திட்டங்களில் வரவிருக்கும் குறைப்புக்களில் இருந்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

இங்கு ரூஸ்வெல்ட்டுக்கு எதிரிடையான தன்மையும் முக்கியமானது ஆகும். டிராட்ஸ்கி குறிப்பிட்டது போல், அமெரிக்காவில் செல்வம் ரூஸ்வெல்ட்டை இத்தகைய பரிசோதனைகளைச் செய்ய அனுமதிக்கிறது." அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த தொழில்துறை இருப்புக்கள் வர்க்க முரண்பாடுகளை அடக்கும் இலக்கை நோக்கமாகக் கொண்ட சமூக சீர்திருத்தக்கொள்கைகளுக்கு புறநிலை அஸ்திவாரங்களைக் கொடுத்தன.

இன்று அமெரிக்காவின் நிலைமை முற்றிலும் மாறானது ஆகும். அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தின் கட்டமைப்பின் மீது தன்னுடைய இரும்புப் பிடியை தக்கவைத்துக் கொண்டுள்ள நிதிய தன்னலச் சிறுகுழுவின் பரந்த செல்வக்கொழிப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு மற்றும் அதன் தொழில்துறை அஸ்திவாரங்களுடனை அழித்ததுடன் இணைந்த வகையில் வளர்ச்சி அடைந்தது ஆகும். ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தெளிவாக்கியுள்ளது போல், அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் சமூக சீர்திருத்தத்திற்கு ஆதரவாக எந்தப் பிரிவும் இல்லை.

முன்பு வந்த பெரு மந்த நிலை ஒரு பொருளாதார வீழ்ச்சியின் அடையாளமான ஹூவெர்வில்லேக்களுக்கு மட்டும் இட்டுச்செல்லவில்லை. இது பாரிய சமூக எழுச்சிகளுக்கும் வகை செய்தது. தற்போதைய நெருக்கடியின் விளைவாக தவிர்க்க முடியாமல் வர்க்கப் போராட்டம் அபிவிருத்தியடையும்போது, இவை புரட்சிகர சோசலிசம் மீண்டும் சக்தி வாய்ந்த முறையில் எழுச்சி பெறுவதற்கு புறநிலை அடிப்படையை அளிக்கும்.