World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP public meeting launches provincial election campaign

சோசலிச சமத்துவக் கட்சி மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க பொதுக் கூட்டத்தை நடத்தியது

By our correspondents
27 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஏப்பிரல் 25 நடக்கவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக மார்ச் 24 அன்று பொதுக் கூட்டமொன்றை நடத்தியது. சோ.ச.க. யின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் தலைமையில் 46 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

கூட்டத்துக்கு முன்னதாக, ஜயவடனகம, ரத்மலான ரயில் தொழிலாளர்கள் குடியிருப்பு, கொட்டஹேன மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட மத்திய கொழும்பிலும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் சோ.ச.க. குழு பிரச்சாரம் செய்தது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் உடபட சுமார் 75 பேர் பங்குபற்றினர்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில் கூட்டத்துக்கு தலைமைவகித்தார். "மார்ச் மாதம் நடந்த முன்னைய மாகாண சபைத் தேர்தலைப் போலவே, சோ.ச.க. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் அணிதிரட்டும் எமது அரசியல் போராட்டத்தின் ஒரு பாகமாக முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கை பரிந்துரைப்பதன் பேரில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான பிரச்சினைகள் தொடர்பாக ஒரு ஆழமான கலந்துரையாடலை திறந்துவிடுவதே எங்களது இலக்கு," என சுனில் விளக்கினார்.

 

கூட்டத்தில் பங்குபற்றியோரில் ஒரு பகுதியினர்

தமிழர்களுக்கு எதிரான பொலிஸ் அரச நடவடிக்கைகள் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என சுனில் எச்சரித்தார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட "கதிர்வீச்சு சிகிச்சை" செய்யவேண்டிய ஒரு புற்றுநோய், என பயங்கரவாதத்தை பற்றி நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டினார்.

"புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர், இராஜபக்ஷ அரசாங்கம் முழு நாட்டையும் ஒரு இராணுவ முகாமாக மாற்றவும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் தாக்குதல்களை உக்கிரப்படுத்தவும் போகிறது என்பதே இதன் அர்தத்ம்," என சுனில் கூறினார். "இராணுவச் செலவாலும் உலக நெருக்கடியின் தாக்கத்தாலும் திணிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சுமைகள், தொழிலாளர்களதும் இளைஞர்களதும் போராட்டத்தை தூண்டிவிடும். அதை நசுக்குவதற்கே அரசாங்கம் தயாராகின்றது. யுத்தத்துக்கு முடிவுகட்டவும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடவும் தொழிலாளர்களின் சோசலிச இயக்கமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்."

சோ.ச.க. வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கும் விலானி பீரிஸ் பிரதான உரையை ஆற்றினார். சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பின் தலைவர் கபில பெர்ணான்டோ மற்றும் சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜாவும் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்கள். முடிவில் சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் சில கருத்துக்களை தெரிவித்தார்.

"சுதந்திரம் என சொல்லப்படுவதன் 61வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய இலங்கை ஆளும் தட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கியுள்ளது என்ன?" என கேள்வி எழுப்பியவாறு பீரிஸ் தனது உரையைத் தொடங்கினார். "அது யுத்தம், வறுமை, துயரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களையே கொடுத்துள்ளது. 26 ஆண்டுகால உள்நாடடு யுத்தம் கொடூரமான இனப்படுகொலை யுத்தமாக அபிவிருத்தி கண்டுள்ளது. இந்த மாகாண சபை தேர்தலில் மக்கள் கவனம் செலுத்தவேண்டிய இலங்கை அரசியல் நிலைமையின் மையப் பிரச்சினை இதுவே."

 

விலானி பீரிஸ் கூட்டத்தில் உரையாற்றுகிறார்

கார்டியன் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த அண்மைய ஐ.நா. அறிக்கையை பீரிஸ் சுட்டிக் காட்டினார். யுத்தப் பிராந்தியத்தில் "தண்ணீர், உணவு, மருந்து, தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகள் இன்றி சுமார் 150,000 மக்கள் உயிர் போகும் நிலைமையில் சிக்கிக்கொண்டுள்ளனர். ஒட்டு மொத்த மனிதப் பேரழிவு ஒன்று நிகழப் போகின்றது. இராணுவம் முன்னெடுக்கும் கண்மூடித்தனமான ஷெல் வீச்சு மற்றும் குண்டுத் தாக்குதல்களால் ஒவ்வொரு நாளும் சுமார் 60 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர்," என அந்த அறிக்கை தெரிவித்தது.

சோ.ச.க. பிரச்சாரத்தின் அனுபவங்களை எடுத்துக் காட்டிய பீரிஸ், பெரும்பான்மையான மக்கள் யுத்தத்தைப் பற்றி மகிழ்ச்சிகொள்ளவில்லை என சுட்டிக்காட்டினார். "யுத்தத்துக்கு முடிவுகட்டவும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்காகப் போராடவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்குமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இந்த தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கமானது தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதன் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசாக ஸ்தாபிக்கப்படல் வேண்டும்," என அவர் விளக்கினார்.

இந்து பத்திரிகையில் ஒரு கட்டுரையை பீரிஸ் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி இராஜபக்ஷ "இந்தியா, சீனா, பாகிஸதான், ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுக்கு பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட முன்வருமாறும் மீள் கட்டுமானத்துக்கு உதவுமாறும், அவ்வாறு செய்தால் பயங்கரவாதத்தால் மீண்டும் தலை தூக்க முடியாது என்றும் அழைப்பு விடுத்ததாக" அந்தக் கட்டுரை தெரிவித்தது. "தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்டவர்களதும் எதிர்ப்பு வளர்ச்சி காண்பதையிட்டு பீதி கண்டுள்ள இராஜபக்ஷ, உலக சக்திகளிடம் இருந்து உதவிக்கு கோருகிறார். அவர் வடக்கு மற்றும் கிழக்கை ஏகாதிபத்திய முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடப் போகின்றார்," என பீரிஸ் விளக்கினார்.

ரஷ்யா மற்றும் சீனாவினதும் எதிர்ப்புக்கு எதிராக, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை யுத்தம் தொடர்பாக கலந்துரையாட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளின் நகர்வுகள் பற்றி பேச்சாளர் கவனத்தைத் திருப்பினார். "தீவின் உள்நாட்டு யுத்தமானது தெற்காசிய பிராந்தியத்தை குறிப்பாக இந்தியாவை ஸ்திரமின்மைக்குள் தள்ளி, சீனவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியாவைப் பயன்படுத்தும் அமெரிக்கத் திட்டங்களை கீழறுத்துவிடும் என அமெரிக்கா கவலை கொண்டுள்ளது." சகல பெரும் வல்லரசுகளும் பிராந்தியத்தில் தமது செல்வாக்கை விரிவுபடுத்த இந்த யுத்தத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் 1947-48ல் தெற்காசியாவில் அரச அமைப்புக்களை உருவாக்கியது தொடக்கம் யுத்தத்தின் வரலாற்று வேர்களை பீரிஸ் ஆராய்ந்தார். தேசிய முதலாளித்துவத்தின் உதவியுடன் துணைக்கண்டத்தை முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் இந்து செல்வாக்கிலான இந்தியா என பிரித்த பிரித்தானியா, சிலோனை (இலங்கையை) ஒரு தனியான அரசாகவும் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான ஒரு தளமாகவும் ஸ்தாபித்தது. ஏகாதிபத்தியத்துக்கும் தேசிய முதலாளித்துவத்துக்கும் இடையிலான இந்த ஏற்பாடுகளை ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.) மட்டுமே எதிர்த்தது.

 

விஜே டயஸ்

விஜே டயஸ் தனது குறிப்புகளில் தெரிவித்ததாவது: "மனித சமுதாயம் ஆழமான நெருக்கடியை எதிர்கொள்ளும் போது அது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கத் தள்ளப்படுகிறது. சாதாரண காலங்களில் அடிநிலையில் இருக்கும் ஆழமான வரலாற்றுப் பிரச்சினைகள், நெருக்கடி காலத்தின் போது எப்போதும் வெளியில் வரும். புரட்சிகர இயக்கத்தால் மட்டுமே, மார்க்சியத்தின் கொள்கைகளுக்கான, அதாவது விஞ்ஞான சோசலிசத்துக்கான அதன் நீண்ட போராட்டத்தில் இந்த வரலாற்று விவகாரங்களை ஆராய்வதற்கான கோட்பாட்டு ஆயுதங்களைப் பெறமுடியும்."

தனது அரசியல் தேவைகளுக்கு பொருத்தமாகும் வகையில், சந்தர்ப்பவாத நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) வரலாற்றை மோசமாக திரிபுபடுத்துவதை சுட்டிக்காட்டிய டயஸ், வரலாற்றுப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் சோ.ச.க. யின் அணுகுமுறையை வேறுபடுத்திக் காட்டினார். 61வது சுதந்திரத் தினத்தை கொண்டாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொண்ட ந.ச.ச.க. தலைவர் கருணாரட்னவின் கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டினார். "சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு விசேட பங்களிப்பை செய்த சமசமாஜ இயக்கத்தின் தற்போதையத் தலைவர் என்ற வகையில், சுதந்திரத்தைப் பற்றிப் பேச இந்த மேடையில் ஏறுவதற்கு நான் வெட்கப்படுகிறேன் அல்லது பீதியடைகிறேன்," என கருணாரட்ன பிரகடனம் செய்தார்.

டயஸ் விளக்கியதாவது: "என்னவொரு அவமதிப்பு! ந.ச.ச.க. யின் பெயரில், அவர் சோசலிச புரட்சியை சிதைப்பதற்காக சுதந்திரம் என சொல்லப்படும் பொறியை அமைக்க செயற்பட்ட யூ.என்.பி. தலைவர்களின் மேடையில் நின்றுகொண்டு பேசுகிறார். அவர் கூறியது போல், அவர் வெட்கப்படுவதற்கோ பீதியடைவதற்கோ காரணம் இல்லை. அவர் அவரது நண்பர்களுடனேயே அங்கிருந்தார். அவரால் இந்த இலங்கை அரசை உருவாக்க ஆதரவளிக்க முடியுமெனில், அதற்கான களத்தை அமைத்த யூ.என்.பி.யைப் போல் அதே மேடையை பங்கிட்டுக்கொள்ள முடியுமெனில், அடுத்து வந்த 61 ஆணடுகாலத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராக அந்த எதிர்ப்போக்கு ஆளும் வர்க்கம் இழைத்த சகல குற்றங்களையும், குறிப்பாக இரத்தக் களரி மூலம் தமிழர்களை அடக்கியதை ந.ச.ச.க. தர்க்க ரீதியில் பாதுகாக்கினறது.

அதிகாரத்தைப் பகிர்வதன் பேரில், தமிழ் முதலாளித்துவ தலைவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்தமைக்காக, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க முதல் ஜே.ஆர். ஜயவர்தன வரையான ஆளும் வர்க்கத்தின் அரசியல் தலைவர்களை விசேடமாக கருணாரட்ன புகழ்ந்தார் என டயஸ் சுட்டிக்காட்டினார். "அன்புடைமை மற்றும் இரக்கக் கொள்கைகளால்" வழிநடத்தப்பட்டமைக்காக அர்களை கருணாரட்ன பாராட்டினார். உண்மையில், இந்தத் தலைவர்களில் ஒவ்வொருவரும், ஜயவர்தன முன்னெடுத்த யுத்தத்துக்கு வழிவகுத்த தமிழர்களுக்கு எதிரான தொந்தரவுகளுக்கு பொறுப்பாளிகள். அந்த அதிகராப் பகிர்வு கொடுக்கல் வாங்கல்கள், சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ கும்பல்கள் தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதை உறுதிப்படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் பொறிகளே தவிர வேறொன்றும் அல்ல.

கூட்டத்தின் பின்னர் பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் WSWS நிருபர்கள் உரையாடினர்.

கொழும்பு துறைமுகத் தொழிலாளரான AR விளக்கியதாவது: "ஒரு தொழிலாளி என்ற வகையில் சுரண்டல் மற்றும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக எனக்கு அனுபவம் உள்ளது. நான் இந்த யுத்தத்தை எதிர்க்கிறேன். யுத்தம் முடியப் போவதாக அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறுகிறது. அது யுத்தத்தை முடித்தாலும், அதனிடம் தமிழ் மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் தீர்வு கிடையாது."

பூகோள பொருளாதார நெருக்கடி தொடர்பாக கருத்துத் தெரிவித்த AR, "துறைமுக நடவடிக்கைகளின் மூலம் பொருளாதாரம் பலவீனம் அடைந்திருப்பதை நாம் உணர்கிறோம். அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரே வழி கடன் வாங்கி பிரச்சினையைத் தீர்ப்பதாகும். ஆனால் அது பிரச்சினையைத் தீர்க்காது. மக்கள் வீதிக்கு வந்தால், இப்போது வடக்கு நோக்கி திருப்பப்பட்டுள்ள துப்பாக்கிகள் தெற்கு நோக்கித் திருப்பப்படுவது நிச்சயம். எப்போதும் [வேலை நிறுத்தம் செய்யும்] தொழிலாளர்கள் 'புலி' என முத்திரை குத்தப்படுகிறார்கள். துறைமுக ஊழியர்களுக்கும் அந்த அனுபவம் உள்ளது," என்றார்.

ஒரு இளம் தமிழரான SS தெரிவித்ததாவது: "இது ஒரு நல்ல வேலை. நீங்கள் உங்களது முன்நோக்கை விளக்கியுள்ளீர்கள். ஒரு விரிவான பிரச்சாரத்தை முன்னெடுக்க மேலும் உறுப்பினர்களை வெல்ல வேண்டும். யுத்தம் தமிழர்களை அழிப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளே அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்."

SM தெரிவித்தாதவது: "ஆம், இலங்கை சமுதாயத்தில் யுத்தம் ஒரு மையப் பிரச்சினை. இந்தத் தேர்தலில் உங்களது தைரியமான நிலைப்பாட்டுக்கு நான் தலைவணங்குகிறேன். நீங்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் யுத்தத்துக்கும் எதிராக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.

"நான் உலக சோசலிச வலைத் தளத்தின் நீண்டகால வாசகர். சோ.ச.க. யின் வேலைத்திட்டம் மற்றும் முன்நோக்கு மீது எனக்கு நம்பிக்கை உண்டு. எவ்வாறெனினும், கடந்த சில மாதங்களில் நாம் கண்ட முதலாளித்துவத்தின் திடீர் பொறிவை என்னால் நம்ப முடியவில்லை.

"உலக விவகாரங்களில் அக்கறை காட்டாத எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள், இப்போது நிதி நெருக்கடி, ஈராக் யுத்தம், பெருந்தொகையான வேலை நீக்கம், வேலையின்மை மற்றும் பலவற்றைப் பற்றியும் பேசுகின்றனர். ஆனால் அவர்களுக்கு பல்வேறுபட்ட பார்வை உள்ளது. இந்த நெருக்கடி தவறான நிர்வாகத்தின் விளைவு என்று கூட பலர் நினைக்கின்றனர்."

ஒரு சுவீடன் மாணவரான KR பேசுகையில், "இந்த கூட்டம் எனக்கு ஒரு பெரும் புதிய அனுபவம். உலக ஐக்கியம் பற்றி நீங்கள் பேசும்போது நான் முதலில் கொஞ்சம் பயந்தேன். அது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்காவின் கீழ் உள்ள உலகம் போன்றிருக்கும் என நான் நினைத்தேன். ஆயினும், அவ்வாறானது அல்ல என்றும் அது உலகின் ஐக்கிய சோசலிச குடியரசுகளாக இருக்கும் என நீங்கள் விளக்கிய போது, இது ஒரு புதிய திட்டம் மற்றும் மிகவும் ஆர்வமாகவும் உள்ளது என நினைத்தேன்.

"ஆம், சல நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இது இருக்குமெனில், அது மிகவும் ஈர்க்கக் கூடியது. தொழிலாள வர்க்கத்தின் ஆட்சியால் மட்டுமே மனித குலத்தை ஐக்கியப்படுத்த முடியும். இத்தகைய ஒரு இயக்கம் ஏற்கனவே உலகம் பூராவும் உள்ளது என்பதை இந்தக் கூட்டம் எனக்குக் காட்டியுள்ளது," எனக் கூறினார்.

ஒரு ஈராக் மாணவரான BS தெரிவித்ததாவது: "நான் பக்தாத்தைச் சேர்ந்தவன். உலகின் மிகவும் மோசமான அழிவுகரமான யுத்தத்தின் நேரடி அனுபவம் எனக்கு உண்டு. ஈராக்குக்கு எதிரான தனது சொந்த நாட்டின் யுத்தத்தை எதிர்க்கும் மற்றும் அந்த நாட்டு இராணுவத்தை திருப்பியழைக்கக் கோரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இளைஞர்களை நான் பாராட்டுகிறேன். உங்களை நான் அவர்களது சகோதரர்களாக கருதுகிறேன்.

"இளைஞர்களும் சரி முதியவர்களும் சரி உங்களது கூட்டத்தில் உரையாற்றும் ஒவ்வொரு பேச்சாளரும், ஒரு இலக்குப் பற்றி பல கோணங்களில் இருந்து பேசுகிறீர்கள். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிந்திய சமாதானத்தின் நாற்றமெடுப்பின் விளைவே இவை அனைத்தும் என்ற உங்களது விளக்கம் மிகவும் கவனிக்கத் தக்கது. அதே போல், மத்திய கிழக்கில், மத்திய கிழக்கு சோசலிச குடியரசு என்ற வேலைத் திட்டத்துக்காக அராபிய-இஸ்ரேல் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டும். அந்தப் பிரதேசத்தில் பல பிரச்சினைகள் உண்டு. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம், ஆனால் ஒரே வழிமுறை அது மட்டுமே."