World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்  

France: Ségolène Royal fears return of "class struggle"

பிரான்ஸ்: செகோலீன் ரோயால் "வர்க்கப் போராட்டம்" மீண்டும் வருமோ என அஞ்சுகிறார்

By Antoine Lerougetel and Alex Lantier
15 April 2009

Use this version to print | Send this link by email | Email the author

2007 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரான செகோலீன் ரோயால் பிரான்ஸில் ஒரு பெரிய சர்ச்சையைத் தூண்டியுள்ளார்; பெரும் பணி நீக்கங்களின் அச்சுறுத்தலைக் கண்ட பல தொழிலாளர் குழுக்கள் தங்கள் முதலாளிகளை பணியிடங்களில் தனிமைப்படுத்தி வைத்தனர். இத்தகைய அறிக்கைகள் நடைமுறையில் முற்றிலும் தெளிவாக இருக்கும் அரசியல்வாதியான ரோயலிடம் இருந்து வருவது பிரான்ஸில் வெளிப்பட்டு வரும் வர்க்க பதட்டங்களின் தீவிரத்தைக் குறிப்பிடுகிறது.

திரும்பத்திரும்ப பலமுறை முதலாளிகளை பிடித்துவைத்தல், வேலையை விட்டு அகற்றுவதற்கு கொடுக்க வேண்டிய பணத்தொகைகளுக்காக என்பது பிரான்ஸில் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாகிவிட்டது. பித்திவியேர்ரில் உள்ள 3M மருந்துத் தயாரிப்பு ஆலை, Bellegarde-su-Valserine ல் உள்ள Scapa Adheisves ஆலை, Pontonx-sux-l'Adour ல் உள்ள சொனி ஆலை ஒன்று -இங்கு சொனி பிரான்ஸின் CEO, Serge Foucher பிடித்துவைக்கப்பட்டார்-- மற்றும் Grenoble ல் உள்ள Caterpiller ஆலை ஆகியவற்றில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை அடைத்து விட்டனர்.

ரோயால் இக்கருத்துக்களை ஏப்ரல் 4ம் தேதி Journal du Dimanche என்னும் வாராந்திர ஏட்டிற்கு கொடுத்த நீண்ட பேட்டியில் கூறினார். Caterpiller நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களால் அடைத்து வைக்கப்பட்டது பற்றிக் கேட்கப்பட்டதற்கு ரோயால் கூறினார்: "அடைத்து வைக்கப்படுவது ஒன்றும் மகிழ்ச்சி தரும் செயல் அல்ல; பிறருடைய சுதந்திரமான இயக்கத்தை தடுடுத்தல் சட்டவிரோதம் ஆகும். ஆனால் எவரும் அவர்களை அவமானப்படுத்தவோ, மிருகத்தனமாகவோ நடத்தவோ இல்லை. அச்சுறுத்தப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், இழிவுபடுத்தப்பட்டவர்கள், வெளியேற்றப்படுமுன் பொய்கூறப்பட்டு அனுப்பப்பட்ட தொழிலாளர்கள்தாம்."

அவர் தொடர்ந்தார்: "சில பெரும் சலுகை படைத்தவர்களிடையே தவறான அணுகுமுறை உள்ளது; தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் சில இடங்களில், அத்தகையவர்கள் நிறுவனத்தின் இருப்புக்களை கொள்ளை அடிக்கும் முறையில் அத்தகைய தன்மை உள்ளது. ஒரு சமத்துவமற்ற ஒழுங்கிற்கு தாழ்ந்து நிற்குமாறு நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம்; அமைப்புமுறையில் ஆழ்ந்த பெரும் குழப்பம் உள்ளது...சில வலதுசாரி அதிகாரிகள் பணக்காரர்களுக்கு வரிக்குறைப்புக்கள் ஏழைகளை காக்கிறது என்று உறுதியுடன் விளக்குவதைக் கேட்கும்போது, நாம் Ancien Régime [1789 பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய முடியாட்சிக்காலம்] இற்கு திரும்பி விட்டோம் என நினைக்க வேண்டியுள்ளது. எனவே, இது வர்க்கப் போராட்டத்திற்கு திரும்பும் கட்டாமா? இருக்கலாம்."

இத்தகைய அறிக்கைகள் உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பினால் அரசியல் முழு நனவினால் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றங்களுக்குச் சான்றாக உள்ளன. பல தசாப்தங்களாக அரசாங்க அதிகாரிகளும் தொழிற்சங்க அதிகாரிகளும் கூட்டாக, மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கு ஒரு சில பில்லியன் யூரோக்கள் கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறிக் கொண்டு சமூக நலச் செலவினக் குறைப்புக்களை நியாயப்படுத்திய பல தசாப்பதங்களுக்கு பின்னர் உழைக்கும் மக்கள் வங்கிகளின் பிணை எடுப்பிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன்கள் யூரோக்கள் அள்ளிக் கொடுக்கப்படுவது பற்றி சீற்றம் அடைந்துள்ளனர்.

வங்கிகளின் நிர்வாகிகளும் கார் நிறுவனங்களின் நிர்வாகிகளும் வீடுகளுக்கு ஏழு-இலக்க ஊதியங்களை கொண்டு செல்கின்றனர்; அதே நேரத்தில் பெரும் இழப்புக்களைக் காட்டி ஏராளமான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்கின்றனர்; பெருநிறுவன நிர்வாகம் ஒரு வர்க்கமாகவே பிற்போக்குத்தன, ஒட்டுண்ணித்தன, புரட்சிக்கு முந்தைய பிரபுத்துவத்தை போல்தான் காணப்படுகிறது. மூலதனச் சந்தை செயல்படும் முறை பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை பிரான்ஸில் வேலைகளில் இருந்து நீக்குகிறது; உலகெங்கிலும் பல மில்லியன் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கின்றனர். ரோயாலுடைய உரையை எழுதுபவர்கள் முதலாளித்துவத்தை பற்றி மக்கள் உணர்வைப் பிரதிபலிக்கும் சொற்களை நாடுகையில், மனதிற்கு வரும் சொற்கள் "சமத்துவ நியாயமற்ற", "பெரும் குழப்பம்" போன்றவைதான்.

Ancien Régime பற்றிப் பேசுகையில் ரோயால் தங்கள் வேலைகள், பணியிடங்கள் ஆகியவற்றைக் காப்பாற்ற தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் பற்றி அஞ்சும் நடைமுறையின் அடுக்குகளின் சார்பில் பேசுகிறார்; இதில் அரசியல் முழு நனவைப் பொறுத்தவரையில் சில மாற்றங்கள் உள்ளன; இவை தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற புரட்சிகரப் போராட்டத்தை மேற்கோள்ளக்கூடும் எனக் கருதப்படுகிறது.

முதலாளிகளை பிடிப்பவர்கள் தற்பொழுது கணிசமான மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளனர். ஏப்ரல் 10 Le Monde யில் வந்த கட்டுரை "முதலாளிகளை இழக்கத் துணிந்து இறங்குதல் ஏன் பிரபலமானது" என்பது இக்கருத்துப் பற்றி இரு கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் கொடுத்துள்ள விடைகளைக் கொடுத்துள்ளது. CSA 45 சதவிகித மக்கள் இத்தகைய எதிர்ப்பு முறை "ஏற்கத்தக்கது" எனக்கூறியுள்ளனர். IFOP 63 சதவிகிதத்தினர் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை ஏன் அடைத்து வைக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுவதாகவும், 30 சதவிகிதத்தினர் அத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் கொடுப்பதாகவும் தெரிகிறது.

Le Monde தொடர்கிறது: "வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பரிவுணர்வு என்பது இப்பொழுது தீவிர நடவடிக்கைகளாக பரவிக் கொண்டிருக்கிறது. சில முதலாளிகள் பெறும் ஊதியங்கள் பற்றித் தகவல் வெளிவந்துள்ளது, இலாபம் பெறும் நிறுவனங்களில் தொடர்ச்சியாக அதிக தொழிலாளர்கள் உள்ளது அகற்றப்படும் என்ற அறிக்கைகள், பொது மந்த நிலைப் பின்னணியில் பங்குதாரர்ககளுக்கு கொடுக்கப்படும் இலாபப் பணம், ஆகியவை பரந்த இழிவுணர்வை தூண்டியுள்ளன."

ஏப்ரல் 3ம் தேதி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு சிறப்பு ஆலோசகராக உள்ள Henri Guaino விடுத்த அறிக்கை நிர்வாகத்தின் தீவிர கவலை உணர்வைக் காட்டுகிறது. "மிக ஆழ்ந்த நெருக்கடியை" சுட்டிக்காட்டி Guaino கூறினார்: "அனைத்துமே கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடக்கூடும்; அரசியல் ஆபத்துக்கள் வலுவாக உள்ளன; வன்முறை, புரட்சி பற்றிய ஆபத்துக்கள் மிக அதிகமாக உள்ளன, இவை சீரழிவடையக்கூடும்." "எல்லா அரசியல்வாதிகளும், தலைவர்களும் இப்பிரச்சினை பற்றி கட்டாயம் நனவாக இருக்க வேண்டும்" என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

இக்காரணத்தையொட்டி, முதலாளித்துவம் முதலாளிகளை பிடிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது கடினம் என்பதை அறிந்துள்ளனர்; ஆனால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பது உண்மையே, 5 ஆண்டு சிறைத்தண்டனையும் கிட்டத்தட்ட 75,000 யூரோக்கள் அபராதமும் தண்டனைகள் ஆகும். ஆனால் தற்போதைக்கு கன்சர்வேடிவ்களில் மிகச்சிறுபான்மையினர்தான் அத்தகைய சட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

முதலாளித்துவத்தின் பரந்த அடுக்குகள் முதலாளித்துவத்திற்கு எதிரான விரோதப் போக்கை தணிக்கும் வகையில் அரசியலில் நடைமுறையில் இருக்கும் சில முக்கிய நபர்களை தவறாக உயர்த்தி வைத்து அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் எனக் காட்டிக் கொள்கின்றன. இப்பின்னணியில் ரோயலை பேட்டி கண்ட Journal du Dimanche நிதித்துறை, செய்தி ஊடகம் மற்றும் பாதுகாப்பு தொழில்கள் ஏராளமாகக் கொண்ட ஒரு பல பில்லியன்களை உடைய Arnaud Lagardère க்கு உரிமை என்பது குறிப்பிடத் தக்கது; அவர் சார்க்கோசியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

ஒரு மகத்தான சமூக சீற்றம் இருந்தாலும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து ஆலைகளை தொழிற்சங்கங்களின் உதவியுடன் மூடிவிடுவது இயலும் என்று அவர்கள் நினைக்கின்றனர். இவ்விததிதல் Laurent Joffrin தன் ஏப்ரல் 10 தலையங்கத்தில் எழுதினார்: "நாம் தொடர்பு கொண்டுள்ள பெரும்பாலான விஷயங்களில் தொழிலாளர்கள் தொழிலாளர் தொகுப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளனர். தங்கள் முதலாளிகளை அவர்கள் கடத்தியதற்குக் காரணம் இன்னும் கூடுதலான இழப்பீட்டுத் தொகை பெறலாம் என்பற்காகத்தான்." இத்தகைய பூசல்கள் "சமூக உரையாடல்கள் பல நிறுவனங்களிலும் இல்லாததால்தான்" என்று Joffrin குறைகூறியுள்ளார்.

சற்றே தேவையற்ற முறையில் Journal du Dimanche ரோயலை ஒரு முற்போக்காளராக காட்டும் வகையில் எழுதியது: "இவருடைய விரோதிகள் இவரை போலித்தன மையவாதம் கொண்டவர் என்று குற்றம் சாட்டினர்; உண்மையில் இவர் சோசலிஸ்ட்டுக்களிலேயே சிகப்பானவராகவும் ஒரு கோபமுற்றுள்ள நாட்டிற்கு பேசும் கோபமுற்ற பெண்மணியாகவும் உள்ளார்."

ஏராளமான மக்கள் முதலாளித்துவ நெருக்கடிக்குத் தங்கள் உள்ளுணர்வான எதிர்ப்பை வெளிப்படுத்துகையில், இத்தகைய உயர்த்துதல் ரோயலுக்கு கருத்துக் கணிப்புக்களில் ஏற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏப்ரல் 8-9 கருத்துக் கணிப்பு ஒன்றில், எந்த அரசியல்வாதி சார்க்கோசிக்கு எதிராக சிறந்து நிற்பார் எனக்கேட்கப்பட்டதற்கு ரோயல் முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சித் தலைவர் ஒலிவியே பெசன்ஸநோவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டார்; அவர் சில காலம் முதலிடத்தில் இருந்தார். ரோயலுக்கு 14 சதவிகிதம், 9 புள்ளி ஏற்றமும் பெசன்ஸநோவிற்கு 13 சதவிகிதம், PS ன் முதல் செயலாளர் மார்டின் ஒப்ரிக்கு 9 சதவிகித வாக்குகளும் கிடைத்தன.

ஆனால் ரோயால் முதலாளித்துவ முறைக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர் ஆவார்; இவர் தொழிலாளர்கள் போராட்டத்தை தழுவுதல் தற்போதைய நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்தை குழப்பி, நெரிக்கும் நோக்கத்தைக் கொண்டதே அன்றி அவர்களுடைய அரசியல் இயக்கத்தை வழிநடத்த அல்ல. சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரிப்பிரிவின் உறுப்பினரான இவர் அடிப்படையில் PS மற்றும் வலதுசாரி பிரான்சுவா பேய்ரூவின் MoDem க்கும் இடையே அசாதாரணமான உறவை ஏற்படுத்த பல முறையும் முயன்றார். 2007 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது இவர் ஓய்வூதியங்கள் குறைப்பிற்கு வாதிட்டு இளம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என்றும் கூறினார். தேர்தல் முடிந்தபின் இவர் பிரச்சாரத்தின்போது இவரே அழைப்புவிடுத்திருந்த குறைந்த பட்ச ஊதியங்களில் உயர்வு என்பதை பொருந்தாக் கொள்கை, தன்மீது மற்ற PS உறுப்பினர்கள் சுமத்திய கொள்கை என்று கண்டித்தார்.

ரோயால் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெற்ற ஒருவித ஆதவராளர் என்ற தவறான கருத்திற்கு சிறந்த மாற்று அவருடைய Journal du Dimanche பேட்டியிலேயே உள்ளது. நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவருடைய திட்டம், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரத்தின் மூலம் ஆகும்; இப்பேச்சுவார்த்தைகள் கடந்த இரு தசாப்தங்களாக ஓய்வூதியங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பணி நேரங்கள் ஆகியவற்றை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன; இதையொட்டி முதலாளித்துவத்திற்கு கிடைக்கும் இலாபங்கள்தான் குற்றம் சார்ந்த வகையில் நிதிய ஊகத்திற்கு வழிவகுத்து தற்போதைய நெருக்கடிக்கு கொண்டு வந்துள்ளது.

இவ்விதத்தில் ரோயால் "தொழிற்சங்கங்களின் வலுவற்ற தன்மை" பற்றி புலம்பி, கூறுகிறார்: "ஒவ்வொரு நெருக்கடியிலும் தொழிற்சங்கங்கள் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்கின்றன, ஆனால் விளைவு ஏதும் இல்லை என்பதை காண்கிறோம். அவர்கள் கூறியதைக் கேட்டிருந்தால், இடர்பாடுகளை எதிர்பார்த்திருந்தால், பல தீமைகள் குறைந்திருக்கும்."

தொழிலாளர்களையும் பொருளாதாரத்தையும் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து காப்பதற்கு தேவையான அரசியல் நனவு மற்றும் சமூகப் போராட்டத்தின் பல வடிவங்களுக்கு உறுதியான எதிர்ப்புடன் ரோயால் வெளிப்பட்டுள்ளார். தான் ஒன்றும் "காசாண்ட்ரா அல்ல" என்று குறிப்பிட்ட அவர், "அதே போல் ஒரு சமூக எழுச்சியை விரும்பவும் இல்லை, கணித்துக் கூறவும் இல்லை" என்றார்.

முன்பு அவர் ஆளும் வர்க்கத்தை Ancien Régime ல் இருந்த பிரபுத்துவத்தின் திமிர்த்தனத்தை நினைவு கூரவைக்கிறது என்று கூறியிருந்தாலும், அப்பட்டமாகத் தெரிவித்தது: "மிகச் சிறிய மனிதர்கள் பெரிய மனிதர்களுக்கு எதிராகக் காட்டும் விரோதப் போக்கு மடத்தனம் ஆகும்."