World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialism and American public opinion

சோசலிசமும் அமெரிக்க பொதுமக்கள் கருத்தும்

By David Walsh
17 April 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் மாதத் துவக்கத்தில் நாடளாவிய தொலைபேசி கருத்தறிதல் Rasmusen Reports என்னும் அமெரிக்க கருத்துக் கணிப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. இது அமெரிக்கர்களில் 53 சதவிகிதத்தினர்தான் சோசலிசத்தைவிட முதலாளித்துவம் உயர்ந்தது என நம்புவதை கண்டறிந்துள்ளதுடன், 20 சதவிகிதத்தினர் சோசலிசத்தை விரும்புகின்றனர், 27 சதவிகிதத்தினர் முடிவு ஏதும் எடுக்கவில்லை எனக்குறிப்பிட்டது.

Rasmussen கருத்தின்படி, 30 வயதிற்கு உட்பட்டவர்கள் "அடிப்படையில் ஒரேமாதிரியாக பிரிந்துள்ளனர். 37சதவிகிதத்தினர் முதலாளித்துவத்திற்கும், 33 சதவிகிதத்தினர் சோசலிசத்திற்கும் 30 சதவிகிதம் முடிவு ஏதும் இன்றியும் உள்ளனர்."

இந்த முடிவுகள் அமெரிக்க ஆளும்வர்க்கம் பெரும் பரபரப்புடன் மறைக்க முற்படும் உண்மையான தற்போதைய பொருளாதார முறை மற்றும் சமூக நிலைமைகளுக்கு எதிராக ஆழ்ந்த மக்களின் எதிர்ப்பு உணர்வு உள்ளது என்ற தன்மையையே வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

Rasmussen கண்டறிதல்கள், அமெரிக்காவில் இருக்கும் சிந்தனைப் போக்கின் நிலைமையின் கீழ் உத்தியோகபூர்வமாக மக்கள் கருத்தை உருவாக்கும் தன்மைக்கு அதிர்ச்சி தரும் நிராகரிப்பு ஆகும். முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசம் உள்ளது என்பதை அறிந்துள்ள அளவுக்கு, மக்களின் கணிசமான பிரிவுகள் அதை ஆதரவுடன் காண்பதைக் காட்டுகிறது.

வங்கியாளர்கள், பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் எஞ்சியுள்ள நிதிய பிரபுத்துவத்திடம் பரந்த அளவில் மக்கள் சீற்றம் உள்ளது. இவர்கள் நாட்டை பல தசாப்தங்களாக கொள்ளை அடித்தது மட்டும் இல்லாமல் இப்பொழுது பல டிரில்லியன் டாலர்களை உதவியாகவும் பெறுகின்றனர். இது மிகவும் அநியாயம் என்று பல மில்லியன் மக்களால் காணப்படுகிறது. அவர்களுடைய வேலைகள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு நலன்கள் இப்பொழுது நீடித்த தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் வீடுகளின் மதிப்பு வியத்தகு முறையில் சரிந்துவிட்டதை காண்பதுடன், பொதுவாக இப்பொழுது எதிர்காலத்தை பெருகிய அவநம்பிக்கைத்தனம் மற்றும் ஆபத்துடன்கூட எதிர்பார்க்கின்றனர்.

வோல் ஸ்ட்ரீட்டின் மீது மக்கள் சீற்றம் மற்றும் தற்போதைய அமைப்புமுறை தொடர்பான பொதுவான அதிருப்தி என்பது தற்பொழுதைய பொறுக்க இயலாத நிலைமைகளுக்கு ஒரு மாற்றீடு வேண்டும் என்ற வலுவான விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது. அந்த மாற்றீடு, வெளிப்படையாக "சோசலிசம்" போன்ற பொது சொற்றொடர்கள் மூலம் அடையாளம் காணப்படுகிறது.

அமெரிக்காவில் சோசலிசம் என்பது பலர் உள்ளத்தில் சாதகமானமுறையில் தொடர்பை கொண்டுள்ளது. இது ஒரு கூடுதலான மனிதாபினமானம், ஜனநாயக, சமத்துவக் கொள்கை என்றும், சமூகத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமே ஒழிய செல்வந்தரின் இலாப நலன்கள் அல்ல என்பதும் பொதுவாக அறியப்படுகிறது.

அத்தகைய கருத்துகளுக்கு மக்களிடையே உயர்ந்த ஆதரவு இருப்பது, அதுவும் குறிப்பாக இளைஞர்களிடயே இருப்பது குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பானது ஆகும். அதுவும் கடந்த 60 ஆண்டுகளாக சோசலிசம் அமெரிக்காவில் இடைவிடாமல் நிராகரிப்பிற்கு உட்பட்டு அல்லது பொது விவாதத்தில் இருந்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில். தாராளவாதப் பிரிவு உட்பட அரசியல் அமைப்புமுறைக்குள்ளேயே எவரையேனும் "சோசலிசவாதி" என்று முத்திரையிடுதல் முறையாக திட்டுவது அல்லது ஒதுக்குவது அல்லது தனிநபரை சமூகத்தைவிட்டு விலக்குவது என்பதற்கு ஒப்பாகும்.

சமீபத்திய தசாப்தங்களில் முதலாளித்துவ தடையற்ற சந்தை அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் திறனைக் கொண்டிருந்தது மற்றும் "அமெரிக்கமுறை-அல்லாத சோசலிசம்" ஒரு மடிந்து விட்ட விடயம் என்பதில் ஆளும் வட்டங்கள் ஒருமனதாக இருந்தன. இது அப்படி இருக்கவில்லை என்பது வெளிப்படையாகியுள்ளது.

ஆளும்வர்க்கத்தின் கருத்திற்கும் உழைக்கும் மக்களுடைய சிந்தனை மற்றும் உணர்வுகளின் ஒருமித்த கருத்திற்கும் இடையே ஒரு பெரும் பிளவு உள்ளது. சராசரி அமெரிக்கர் முக்கிய அரசியல் அரங்கில் எதையும் காண்பதும் இல்லை, அனுபவிப்பதும் இல்லை. செய்தி ஊடகம் சோசலிசம் பற்றி ஒரு சாதகமான சித்திரத்தையும் கொடுப்பதும் இல்லை. ஆயினும்கூட, இக்கருத்துக் கணிப்பின்படி, மக்களில் 47 சதவிகிதத்தினர் சோசலிசம் பற்றி ஆதரவு காட்டுகின்றனர் அல்லது சோசலிசம் பற்றி முடிவு எடுக்கவில்லை.

மார்ச் மாதம் பாரக் ஒபாமா உயர்மட்ட பெருநிறுவன இயக்குனர்கள் குழு ஒன்றிடம் கூறினார்: "தடையற்ற சந்தையின் சக்தியை வலுவாக நான் எப்பொழுதும் நம்பியுள்ளேன். அமெரிக்காவின் முன்னேற்றத்தின் இயந்திரமாக அது இருந்து வந்துள்ளது, தொடர்ந்து இருக்கும்-- மனித வரலாற்றில் இணையற்ற செழிப்பிற்கு அது ஆதாரம் ஆகும்." "பொருளாதார சமசீர்நிலையில் இருந்து வழுவும்போது அரசாங்கம் குறுக்கிட வேண்டும்" என்று வாதாடிய ஒபாமா, "ஆனால் இலக்குகள் எப்பொழுதும் கப்பலுக்கு வலது புறம்தான் இருக்க வேண்டும்; தனியார் நிறுவனங்களை தமது சிறந்த கைவேலைகளை கையாள அனுமதிக்க வேண்டும்" என்றார்.

பல மில்லியன் அமெரிக்கர்கள் வேறுவிதமாக சிந்திக்கின்றனர். ஆனால் அவர்களுடைய கருத்துக்கள் தற்போது இருக்கும் அமைப்புமுறையில் வெளிப்பாட்டை காண்பதில்லை. ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அரசியல்வாதியும், முக்கியத்துவம் அற்றோரும் சக்திவாய்ந்த பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய நலன்களால் விலைகொடுத்து வாங்கப்பட்ட, கைக்கூலி பெறும் எடுபிடிகள் ஆவர். நடைமுறையில் எண்ணெய் எரிபொருள் பிரிவில் இருந்து ஒரு செனட்டர், நிதித் துறையில் இருந்து ஒரு ஆளுனர், சுகாதாரக்காப்பு, நாட்டின் பாதுகாப்புப் பிரிவில் இருந்து ஒரு பிரதிநிதி என்று கொண்டிருக்கிறோம். சமூகச் சமத்துவமின்மை சமூகம் செயல்பட முடியா அளவிற்கு மட்டமான நிலையை அடைந்துள்ளது. பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்கள் செல்வத்தை இறுமாப்புடன் காட்டி அலைவது அனைவராலும் பார்க்கப்படுகிறது.

தொழிற்சங்கங்களின் அழுகிய தன்மை, மற்றும் குடி உரிமை அமைப்புக்கள் என அழைக்கப்படுபவை மற்றும் தாராளவாதம் என்பது மக்களுக்காக குரல் கொடுப்போர் எவரும் இல்லை என்பதான் அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூகத்தை கொள்ளை அடித்தல், காலனித்துவ வகைப்போர் மற்றும் பிற குற்றங்களிடம் இருந்து தாங்கள் இருந்து தப்பிவிட்டோம் என்று கற்பனை புரிகின்றனர். ஆனால் சமூக முரண்பாடுகள் அதிகமாக புறக்கணிக்கப்படுகையிலும் மூடிமறைக்கப்படுகையிலும், இன்னும் கூடுதலான வெடிப்புத்தன்மையைத்தான் பெறுகின்றன.

மக்கள் உணர்வு மற்றும் முழு அரசியல் முறையும் வெளிப்படையாக ஒத்திராத இந்த நிலை கொந்தளிப்பு நிறைந்ததுடன், ஏற்கத்தக்கது அல்ல. கடந்த ஏழு மாத காலத்தில் அமெரிக்கா பொருளாதார நிலைமுறிவால் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. ஆளும்வர்க்கத்தின் முயற்சிகளை அனைத்தையும் மீறிய வகையில் புறநிலை வளர்ச்சிகள், சமூக உணர்விற்கும் சமூக யதார்த்தத்திற்கும் இடையே உள்ள உறவுகளை வன்முறைரீதியாக ஒழுங்குபடுத்த பார்க்கின்றன. சோசலிசம் அமெரிக்க அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய நிலைப்பாட்டை கொண்டு எழுச்சி பெறும். இக்கருத்துக் கணிப்பு இந்த வழிவகை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

பல தசாப்தங்கள் பிற்போக்குத்தன தாக்குதலுக்கு பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி பெரும்பாலான அமெரிக்கர்கள் சோசலிசம் பற்றி குழப்பத்தில்தான் உள்ளனர். Rasmussen அல்லது வேறு எந்த நிறுவனமாவது மக்களை சமூகத்தின் உயர்மட்ட செல்வக்கொழிப்பு உடைய 1 சதவிகிதத்திற்காக (அல்லது 1 சதவிகிதத்தில் பத்தில் ஒரு பங்கிற்காக) அனைத்து கொள்கைகளும் உருவாக்கப்படும் சமுதாயம் வேண்டுமா அல்லது சமூக சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட சமூகம் வேண்டுமா என்று கேட்டால்....அத்தகைய வாக்கெடுப்பு எதைக் காட்டும்?

ஒரு நெருக்கடியில் தவிர்க்க முடியாமல் அடிப்படை சமூக நலன்களும் உணர்வுகளும் வெளிப்பாட்டை காணும். தற்போதைய முதலாளித்துவ முறையின் முறிவு புறநிலைரீதியாக மக்களை வர்க்கப் பிரிவுகள் வழியே இட்டுச் செல்லுகிறது.

அமெரிக்க சமுதாயத்தை மிருகத்தனமாக்கும் அனைத்து முயற்சிகளும் ஒரு புறம் இருந்தாலும், மக்களை பிறருடைய கஷ்டங்கள் மற்றும் நிலைக்கு பொருட்படுத்தாத்தன்மையை அளித்தாலும், சமீபத்திய கருத்துக் கணிப்பு மக்களில் பரந்த பிரிவினர் அடிப்படை சோசலிச் சார்பு கொண்டுள்ளதைத்தான் காட்டுகிறது. அவர்கள் அநீதியை எதிர்க்கின்றனர், சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவு கொடுக்கின்றனர், அவர்களுடைய பரிவுணர்வு ஒடுக்கப்பட்டவர்களுடன் உள்ளது.

முதலாளித்துவ செய்தி ஊடகம் அதன் உண்மையிலும், அதன் திரித்தலின் அளப்பெரிய திறனிலும் மற்றும் பொதுக் கருத்தை உருவாக்குவதிலும் நம்பிக்கைகொண்டுள்ளது. உண்மையில் வேறு நிகழ்போக்குகள் நடக்கின்றன. இவை இறுதியில் புரட்சிகர தாக்கங்களை கொண்டுள்ளன. நெருக்கடிக்காலத்தில் உணர்மையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இன்னும் கூடுதலான, ஆழ்ந்த கண்ணோட்டத்தை லியோன் ட்ரொட்ஸ்கி கொடுத்துள்ளார். "விஞ்ஞானபூர்வ சோசலிசம் என்பது உணர்மையற்ற வரலாற்று நிகழ்போக்கின் உணர்மையான வெளிப்பாடு ஆகும். அதாவது, தொழிலாள வர்க்கத்தின் உள்ளுணர்வு மற்றும் அடிப்படை உந்துதல் சமூகத்தை கம்யூனிச தொடக்கத்தில் இருந்து கட்டமைப்பது என்று உள்ளது. தொழிலாளர்களின் உணர்மையில் இருக்கும் இந்த உயிரியல் போக்குகள் நெருக்கடிகளும் போர்களுமுள்ள தற்கால சகாப்தத்தில் மிக விரைவாக உயிர்த்தெழும்."

சமூக வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத தர்க்கம் ஆகும். மக்கள் உணர்வு இடதிற்கு மாறிக் கொண்டிருக்கும் கணத்திலேயே, முதலாளித்துவத்திற்கு எதிராகச் செல்லுகையிலேயே, Nation ஏடு போன்ற தாராளவாத இடதுகளின் எஞ்சிய பிரிவுகள் "சோசலிசத்தை அடைவது ஒரு புறம் இருக்க, மறு கற்பனை செய்வது" இயலாது என்று பறையறிவிக்கின்றன. ஆழ்ந்த பழைமைவாத போக்கை உடைய இந்த சமூகக் பிரிவுகள், பொருளாதாரத்தில் இணைந்திருக்கும் தமது நிலையின் காரணமாகவும், ஒரு பரந்துபட்ட சோசலிச இயக்கம் அமெரிக்காவில் வளர்வதை மூர்க்கமாக எதிர்க்கும். அது அவர்களுடைய சலுகைகள் பெற்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை உள்ளுணர்வு ஆகும்.

Rasmussen நடத்திய கருத்துக் கணிப்பு உண்மையான நம்பிக்கைக்கு உரிய காரணம் ஆகும். இதே காரணத்திற்காக, மக்களின் மத்தியில் சோசலிச பரிவுணர்வு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளதால், இது வலதுசாரி வட்டங்களில் ஒரு பரபரப்பை தோற்றுவித்துள்ளது. பெரிய செய்தி ஊடகங்களில் இது அதிகமாக வெளியிடப்படவில்லை. ஒரு வலதுசாரி நற்செய்தி கிறிஸ்தவரால் நடத்தப்படும் Rasmussen கருத்துக் கணிப்பு ஒரு விழிப்பிற்காக அழைப்பு என்று கருதப்பட்டால் தொலைபேசி தொடர்பு சடுதியில் துண்டிக்கப்பட்டுவிடும்.