World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Tamils demonstrate in Canberra against Sri Lankan military assault

இலங்கை இராணுவத் தாக்குதலை எதிர்த்து கான்பெராவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

By our correspondents
18 April 2009

Use this version to print | Send feedback

ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தை சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கான்பெராவில் தீவின் வடக்கே பிரிவினைவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருக்கும் இன்னும் ஒரு சிறிய பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளவயது தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், தொழில்நுட்ப மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர். சிட்னி மற்றும் மெல்பேர்னில் இருந்தும், சிலர் அடிலெய்டில் இருந்தும் கூட பல நூறு கி.மீ.தொலைவில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவினர்

பிரதம மந்திரி கெவின் ரெட்டின் உத்தியோகபூர்வ இல்லமால Lodge க்கு வெளியே குழுமிய பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரகத்திற்கு அணிவகுத்துச்சென்று ஆஸ்திரேலிய அரசாங்கத்தை இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தும் கொடுத்து உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்கும், உணவு, மருந்துப் பொருட்கள் மற்ற உதவிகள் மோதல் பகுதிக்குள் அனுப்பப்படுதல் மற்றும் அரசாங்க முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அல்லது போர்ப்பகுதியில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் உள்ளடங்கலான அனைத்து தமிழ் அகதிளும் தடையற்ற முறையில் எங்கும் செல்லும் உரிமை வழங்குமாறும் வலியுறுத்தினர்.

அணிவகுப்பில் இருந்த பதாகைகளும் கோஷ அட்டைகளும் மிக அதிக சாதாரண மக்கள் இறப்பு எண்ணிக்கை பற்றிய ஆழ்ந்த கோபம் மற்றும் 20 சதுர கி.மீ.காட்டுப் பகுதியில் 50,000 அரசாங்கத் துருப்புக்களால் சூழப்பட்டுள்ள 100,000 மக்கள் படுகொலைக்கு உட்படக்கூடும் என்ற ஆபத்து பற்றிய ஆழ்ந்த கோபத்தையும் வெளிப்படுத்தியது. "இந்த இனப்படுகொலையை நிறுத்துக", "ஆஸ்திரேலியா கொடுமைகளை நிறுத்த வேண்டும்" என்று அவற்றில் எழுதப்பட்டிருந்தது.

அதே தினத்தில் கொழும்புவைத் தளமாக கொண்ட ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் குறைந்தது 4,500 குடிமக்கள் கடந்த மூன்று மாத கால மோதலில் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் 12,000 பேர் காயமுற்றனர் என்று மதிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறினார்.

கைகளில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட கோஷ அட்டைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் முக்கிய நாடுகள் கொடுக்கும் உதவி, ஆதரவு ஆகியவற்றிற்கு விரோத உணர்வைக் காட்டின. "சர்வதேச நாணய நிதியம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலரை குற்றம் சார்ந்த இலங்கைவிற்குக் உதவு கொடுக்ககூடாது-- போரை நிறுத்துக", "ஆஸ்திரேலிய இலங்கைவிற்கு கொடுக்கும் உதவித் தொகையான $30 மில்லியனை நிறுத்துக", மற்றும் "இலங்கைமீது பொருளாதாரத் தடைகளைச் சுமத்துக" என்ற கோஷ அட்டைகளும் இருந்தன.

உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்கள்

இந்த ஆர்ப்பாட்டம் ஆறு உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர்கள் கோரிக்கைக்கு ஆதரவழிப்பதற்காக அவுஸ்திரேலிய தமிழ் இளைஞர் அமைப்பு, தமிழ் அமைப்புகளின் அவுஸ்திரேலிய கூட்டமைப்பு (TYOA, AFTA) உட்பட தமிழ்க் குழுக்கள் பலவற்றால் அழைப்புவிடப்பட்டிருந்தது. அதில் மூன்று பேர் ஆறு நாட்களாக உண்ணாவிரதம் உள்ளனர். தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை சிட்னியில் உள்ள Parramatta Mall இல் ஏப்ரல் 11 அன்று தொடங்கினர், பின்னர் பிரதம மந்திரியின் சிட்னி இல்லமான Kiribilli House க்கு மாறினர், இறுதியில் ஏப்ரல் 15 அன்று Lodge க்கு முன் வந்தனர். மெல்போர்னில் ஏப்ரல் 13ம் தேதி மூவர் உண்ணாவிரத்தில் சேர்ந்துகொண்டனர்; அதன் பின்னர் கான்பெராவிற்கு வந்தனர்.

சிட்னி உண்ணாவிரதப் போராட்டக்காரர்களில் ஒருவரான 27 வயதான பல்கலைக்கழக மாணவர் மதிவாணன் சின்னத்துரை வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு முன் பெரும் உடல்நிலை பாதிப்பிற்கு உட்பட்டதால், அவர் முதலுதவி வாகனம் மூலம் கான்பெரா மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் பெரும் களைப்புடன் இருந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டார். இதற்கு முந்தைய தினம் மற்றொரு உண்ணாவிரத போராட்டக்காரான 27 வயதான பல்கலைக்கழக மாணவர் சுதா தனபாலசிங்கம் உடலில் நீர்வற்றிய நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

நீர் குடிக்க ஒப்புக் கொண்டவுடன், தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாவிரத்தில் சேர்ந்து கொண்டார். கான்பெரா டைம்ஸிடம், "என்னிடம் ஒன்றும் இல்லை. என்னுடைய குடும்பத்துடன் ஆறு மாதங்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் உயிரோடு உள்ளனரா, இறந்துவிட்டனரா என்றுகூட எனக்குத் தெரியாது...என்னுடைய தாயார் கால வரையற்று இலங்கை அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு காவல் முகாமில் உள்ளார். என்னுடைய தந்தையார் அரசாங்கத் தாக்குதலால் ஒரு காலை இழந்துவிட்டார். என்னுடைய குடும்பமும் மற்ற தமிழ்க் குடிமக்கள் குடும்பங்களும் வடக்கு இலங்கைவில் தொடர்ந்து குண்டுவீச்சிற்கு உட்படுகின்றன." என்று கூறினார்.

ரூட்டிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் தமிழ் அமைப்புகளின் அவுஸ்திரேலிய கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ராக ராகவன் பிரதம மந்திரிரிக்கு தமிழ் மக்களை எதிர்நோக்கியுள்ள "கொடூர விதி" பற்றி ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், "அர்த்தமுள்ள இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் தரவேண்டும்" என்று கோரியுள்ளார். இக்கடிதத்தில் தமிழர் அமைப்புக்கள் இளவயது தமிழர்களின் சீற்றத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எங்கள் இளைஞர்கள் தன்னார்வத்துடன் இத்தீவிர நடவடக்கையை மேற்கொண்டுள்ளது ரூட்டின் தொழிற்கட்சி அரசாங்கம் இலங்கைவில் இருக்கும் தாய்த் தமிழகத்தில் இவர்களுடைய சகோதர, சகோதரிகளின் கஷ்டங்களை முடிவிற்கு கொண்டுவர நேரிய நடவடிக்கை இல்லாதது பற்றிக் கொண்டுள்ள வெறுப்பினை எடுத்துக்காட்டுகிறது. இவர்கள் தங்கள் பிரநிதிகளாக இருந்து பல முறை ஆஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகளிடம் முறையீட்டும் எந்தப் பயனும் கிடைக்காத தங்கள் சமூகத் தலைவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழுந்துவிட்டது போல் தோன்றுகிறது."

ரூட்டோ அல்லது வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரோ ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை. மாறாக, உண்ணாவிரதக்காரர்களின் குழு ஒன்று வெளியுறவுத் துறை அதிகாரிகளை அமைச்சரகத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். WSWS இடம் டாக்டர் ராகவன் ஆர்ப்பாட்டத்தில் உள்ளவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுவதாக ஒப்புக்க கொண்டனர் என்றும் இதற்குக் காரணம், "அரசாங்கத்துறை நம்முடைய கவலைகளைக் கேட்டறிந்து பிரச்சினைகள் சிலவற்றை இலங்கைவுடன் விவாதிப்பதாகக் கூறியுள்ளது என்பதால்" என்றார்.

இந்த அணியின்போது அமைப்பாளர்கள் ரூட்டும், முக்கிய நாடுகளின் அரசாங்கங்களும், குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் ஆகியவை, தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற தோற்றத்தை வளர்த்தனர். ஆனால் சான்றுகளோ அவை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ அவருடைய அரசாங்கம் 2006ல் உள்நாட்டுப் போரை மீண்டும் துவங்கியதில் இருந்து ராஜபக்சவின் இராணுவத் தாக்குதலைத்தான் ஆதரித்துள்ளதைக் காட்டுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்த கோஷங்கள் மற்றும் அதன் முன்னோக்கான ஒரு தனி சிறு தமிழ் நாடு இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்பதைத்தவிர கூட்டத்தில் இருந்த பேச்சாளர்கள் அதிகம் கூறவில்லை. அவுஸ்திரேலிய தமிழ் இளைஞர் அமைப்பின் பிரதிநிதி நிஷா நவரட்ணம் கூட்டத்திற்கு "நம்முடைய மக்களின் வேதனையை அரசாங்கங்கள் கேட்க உதவவும்" என்று முறையிட்டு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆதரவு தருமாறும் கோரினர். "நாம் ஒன்றாக ஐக்கியப்படுவதற்கு குறைந்தபட்சம் அதைத்தான் நாம் செய்ய முடியும்" என்று அவர் அறிவித்தார். நவரத்தினம் எழுப்பிய கோஷங்களில், "ஆஸ்திரேலியா: தமிழர்களைக் காப்பாற்று", "ஒரு தலைவர், பிரபாகரன்" மற்றும் "ஒரே தீர்வு, பிரிவினை." என்பவை இருந்தன.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினர்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வந்திருந்த கட்டுரைகள் சிலவற்றை வினியோகித்தனர். இது கூடியிருந்த பலரிடையே, குறிப்பாக இளைஞர்களிடம் சிங்கள இனவாதம் மற்றும் தமிழ்ப் பிரிவினை இவற்றிற்கு மாற்றீடாக ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் சிங்கள தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதற்கும், உடனடியாக துருப்புக்கள் வடக்கில் இருந்து விலக்கப்படவதற்கும், இலங்கை, தமிழ் ஈழத்திற்கான ஒரு ஐக்கிய சோசலிச அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு சோசலிச மாற்றீட்டின் தேவை குறித்த விவாதத்தை உருவாக்கியது.

ஐரோப்பா மற்றும் கனடாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் இருந்தது போல் இல்லாமல், ஆஸ்திரேலிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தவோ மக்களை WSWS தகவல் பற்றி படிப்பதைத் தடை செய்யவோ இல்லை. ஆனால் அதன் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் (AFP) அதிகாரிகளிடம் சோசலிச சமத்துவகட்சியின் குழு பிரச்சாரம் செய்வதை நிறுத்துமாறு கோரினர். இரு AFP கூட்டாட்சி பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரிகள் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் "வன்முறையை தூண்டக்கூடும்", "சமாதானத்தை குலைக்கக்கூடும்" என்று கூறி எதிர்கொண்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் அரசியல் விவாதத்தை நடத்துவதற்கான தங்கள் ஜனநாயக உரிமையை வலியுறுத்தியவுடன் APF அதிகாரிகள் பின்வாங்கி விட்டனர்.

பலரும் WSWS இடம் பேட்டி கொடுத்தனர். ஒரு தொழிலாளி தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்கு காரணம் "இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக ராஜபக்ச அரசாங்கம் நடந்து கொள்ளும் முறையை நான் எதிர்க்கிறேன்; அவர்கள் செய்தல், சாதிக்க முயலுதல் ஆகியவற்றை ஏற்கவில்லை. அவர்கள் இராணுவ வெறி கொண்டு, மனிதாபிமானம் இல்லாமல் உயிரிழப்புக்களைப் பற்றி கவலைப் படாமல், சிறுபான்மை குழுக்கள் பற்றி கவலையின்றி உள்ளனர். மக்கள் பிளவுகளில் செல்லுவதை அவர்கள் அனுமதிக்கின்றனர்; இதையொட்டி மக்களும் தீவிர எதிர்ப்புக்களை ஒருவர்மீது ஒருவர் காட்ட அனுமதிக்கின்றனர். கொழும்பில் இருக்கும் தமிழர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ரவில்லை." என கூறினார்.

"இலங்கைக்கு நான் சென்றதில்லை; ஏனெனில் நாங்கள் திரும்பினால் என்ன நேருமோ என்று எங்கள் தந்தை கவலையுற்றுள்ளார் 1982 கலவரங்களுக்கு பின்னர் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டோம். அவர்கள் பலர் கனடாவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ளனர்."

ஒரு தனித் தமிழ் நாட்டிற்கு ஆதரவு கொடுக்கிறாரா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் கடந்த கால அனுபவம் இரு-நாடுகள் தீர்வு தேவை, அப்பொழுதுதான் "தமிழர்களுக்கு ஒரு குரல் இருக்கும்" என்றார். ஆனால் சோசலிச தீர்வு பற்றி சில விவாதங்களுக்குப் பிறகு, தொழிலாள வர்க்கம் சிங்கள ஆளும்வர்க்கத்தை அகற்றி தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவது பற்றி கலந்துரையாடிய பின்னர் அவர் கூறினார்: "நான் இவ்விதத்தில் சிந்திக்கவே இல்லை. இனவழி பிளவுகளைத்தான் கண்டுள்ளேன். தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது." என்றார்.

ஒரு இளைய மகளிர் குழு தங்கள் கருத்துக்கைள தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில்லரை விற்பனைத் தொழிலாளி கூறினார்: "தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று தடைசெய்யப்பட்டுள்ளது; அந்தத் தடை அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, விடுதலைப் போராட்ட வீரர்கள். இலங்கையில் நடப்பதை நிறுத்துவதற்கும். போர் நிறுத்தம் வேண்டும் என்கிறோம் அதற்காகத்தான் நாங்கள் இங்கு உள்ளோம். ராஜபக்ச அரசாங்கம் நிரபராதியான தமிழர்களைக் கொன்று வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதாக அவர் கூறுகிறார், ஆனால் உண்மையில் அவர்கள் அதைச் செய்யவில்லை; அவர்கள் சாதாரண தமிழ் மக்களை கொல்கின்றனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்."

"இலங்கை அரசாங்கம் செய்தி ஊடகத்திடம் இருந்த அனைத்தையும் மறைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கொல்லுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது அர்த்தமற்றது. தங்கள் மக்களையே ஒருவர் எதற்காகக் கொல்ல வேண்டும்? இது அபத்தமானது. ஆனால் செய்தி ஊடக்திற்கும் உண்மை செல்லவில்லை; எனவேதான் நாங்கள் இங்கு இருக்கிறோம்--என்ன உண்மையில் நடக்கிறது எனக் காட்டுவதற்கு."

ஒரு மருத்துவ உதவியாளர் கூறினார்: "இலங்கை அரசாங்கத்திடன் போர் நிறுத்தம் வேண்டும் என்று கெவின் ரூட் கூறவேண்டும் என்று விரும்புகிறோம். இன்னும் அதிக சர்வதேச அரசாங்கங்கள் குறுக்கிட்டு ராஜபக்சவிடம் போரை நிறுத்த வேண்டும் எனக் கூற நாங்கள் விரும்புகிறோம். எனவேதான் ஆறு இளைஞர்கள் உண்ணாவிரதம் உள்ளனர்; சிலர் ஆறாவது நாளாக. இந்த உணர்வுகளை அனைத்தும் ரூட்டினால் கேட்கப்படும் என்று நினைக்கிறோம்; நம் தீவிரத்தை அவர் அறிவார் என நினைக்கிறோம். ராஜபக்சவுடன் தான் பேச இருப்பதாக கெவின் ரூட் கூறும் வரை அல்லது ஒரு கடிதம் அனுப்பும் வரை இந்த உண்ணவிரதக்காரர்கள் நிறுத்தப்போவதில்லை. அவர் ஏதேனும் செய்ய வேண்டும்."

இந்த அரசாங்கமும் இதற்கு முன்பு இருந்தவையும் தெற்கிலுள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக வன்முறையை பிரயோகித்த வரலாற்றை கொண்டிருக்கையில் தமிழ், சிங்கள தொழிலாளர்களை இதற்கு எதிராக ஒன்றுபடுத்தும் தேவை பற்றி கேட்கப்பட்ட போது, இப்பெண்மணி இந்திய துணை கண்டம் முழுவதும் ஒரு சோசலிச கூட்டமைப்பாக கொண்டுவருவது "பொருள் உடைய கருத்து என்றும்" "முந்தைய இனவெறி வரலாறு" இதற்கு தக்க ஆதாரமாக இருக்கும் என்றும் கூறினார். ஆனால் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் அவ்வளவு கொடுமைகள் இழைத்துள்ளதால் சிங்களவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது இயலாது என தான் இன்னும் சிந்திப்பதாக'' கூறினார்.

இரு மகளிர் தாங்கள் ஒரு தனித்தமிழ் நாட்டின் பொருளாதார அடிப்படை அல்லது கட்டுமானம் எப்படி இருக்கும் என்று தங்களுக்குத் தெரியாது என்றனர். இருக்கும் வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவை பெயரளவிற்கு சுதந்திரமாக இருக்கும் கிழக்கு தீமூரில் இருப்பதைப்பற்றிய விவாதத்திற்குப் பின் அவர்கள் WSWS கொடுத்துள்ள தகவல் பற்றி இன்னும் படிப்பதாகக் கூறினர்.

மூன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சுருக்கமாக தாங்கள் ஏன் ஆர்ப்பாட்டத்திலும், ஆறு நாட்கள் உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளுகிறோம், என்பதை விளக்கினர். "அவர்கள் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இலங்கையின் வடக்கே மக்கள் தமிழர்களாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இறந்து கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் அரசாங்கங்களை நம்ப வைக்க எதிர்ப்புக்கள் நடந்து வருகின்றன; லண்டனிலும் இங்கும்; ராஜபக்ச மீது இவை போர்நிறுத்தம் பற்றி அழுத்தும் கொடுக்கும்."

"ராஜபக்ச அரசாங்கம் ஊழல் மிகுந்தது. அவர்கள் இலங்கைவில் தமிழர்களை அடியோடு அழித்துவிடப் பார்க்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் சம உரிமை கோருகிறோம்; ஆஸ்திரேலியா ஒரு ஜனநாயக நாடானால் அது நமக்கு உதவ வேண்டும். பேச்சுரிமை உள்ளது என்றால், கெவின் ரூட் குறைந்தபட்சம் நாங்கள் கூறுவதைக் கேட்க வேண்டும், மற்ற அரசாங்கங்களுடன் குறைந்த பட்சம் போர் நிறுத்தம் பற்றிப் பேச வேண்டும்." என கூறினர்.

மெல்போர்னில் இருந்து ஒரு கல்லூரி மாணவர் "எங்களுடைய நண்பர்களும் உறவினர்களும் கஷ்டத்தில் உள்ளனர். என்னுடைய உறவினர்களும் ஒரு சகோதரியும் போர்ப் பாதிப்பு பகுதியில் உள்ளனர். கடைசி முறை நாங்கள் அவர்களோடு பேசியது மூன்று மாதங்களுக்கு முன்பு. இப்பொழுது அவர்களோடு தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதற்கான வசதிகள் இல்லை. கடைசிமுறை நாங்கள் YouTube மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த அவர்களுடன் தொடர்பு கொண்டோம்''.

"ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் இது பற்றி ஏன் அக்கறை கொள்ளவில்லை, எங்கள் பிரச்சினை பற்றி கூறவில்லை என்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் மெல்போர்னில் பல எதிர்ப்புப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளோம்; ஆனால் ஒன்றுகூட தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை. பெரும்பாலான ஆஸ்திரேலிய மக்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாது." எனக்கூறினார்.