World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US expands war into Pakistan

Missile strikes to be intensified

அமெரிக்கா பாக்கிஸ்தானுக்குள் போரை விரிவாக்குகிறது

ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும்

By Keith Jones
8 April 2009

Use this version to print | Send feedback

அமெரிக்கப் படைகளின் கூட்டுத் தலைமையின் தலைவர் அட்மைரல் மைக் முல்லென், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் இருவரும் நாட்டின் புஷ்டுன் பேசும் ஆப்கானிய எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியை அடக்க பாக்கிஸ்தான் அதிகாரிகள் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு திங்கள், செவ்வாயன்று இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவினால் போன மாதக் கடைசியில் வெளியிடப்பட்ட வாஷிங்டனுடைய ஆப்கானிஸ்தானத்தை சமாதானப்படுத்தும் புதிய மூலோபாயம், வியத்தகு முறையில் போர் விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுகிறது --அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 38,000 த்தில் இருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக 68,000 என்று ஆக உள்ளதுடன், மேலும் போர் இன்னும் கூடுதலான முறையில் பாக்கிஸ்தானுக்குள் விரிவடைய உள்ளது; இந்த இரண்டும் இஸ்லாமாபாத்துடனான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், ஆனால் பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க ஒருதலைப்பட்ச தாக்குதல்கள் மூலம் நடக்கும்.

2004ல் இருந்து பாக்கிஸ்தானிய இராணுவம் பல முறையும் வரலாற்றளவில் தன்னாட்சி கொண்ட கூட்டாட்சி நிர்வாக பழங்குடிப் பகுதிகள்மீது (FATA) எழுச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளை பலமுறையும் கொண்டது; இதில் கிட்டத்தட்ட 1,500 உயிர்கள் இழக்கப்பட்டன; இது சிவிலிய இறப்புக்கள் பற்றி கவலைப்படாத தன்மை பற்றி பரந்த மக்களின் சீற்றத்தை தூண்டிவிட்டுள்ளது; மேலும் ஒரு மனிதாபிமான வகையிலான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. FATA மக்கள் பாதி மில்லியனுக்கும் மேலானவர்கள் அகதிகளாக மாற்றப்பட்டுவிட்டனர்.

கடந்த இலையுதிர்காலத்தில் அதிகப் போர்கள் நடந்த இடமான பாஜூரில் இராணுவம் மொத்தமாக பல கிராமங்களையும் தகர்த்துவிட்டது. ஒரு சமீபத்திய BBC தகவல்படி, தங்கள் வீடுகளை மறு கட்டமைக்க அரசாங்கம் உதவி அளிக்காதது பற்றி அகிதகளிடையே சீற்றம் பெருகியுள்ளது. பெஷாவருக்கு அருகில் உள்ள, 1980 உள்நாட்டுப் போர்க்காலத்தில் குடிபெயர்ந்த ஆப்கானிஸ்தான் மக்களை தங்க வைக்க பயன்படுத்தப்பட்ட அகதிகள் முகாமில் இப்பொழுது தங்கியிருக்கும் ஆசிரியரான அப்துல் ஹலீம், BBC இடம் கூறினார்: "அவர்கள் முழு கிராமத்தையும் அழித்துவிட்டனர், முழுச்சந்தையையும் அழித்து விட்டனர். பாஜூரில் மருத்துவமனைகள், பள்ளிகள், ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் இங்கு உள்ளனர்."

ஆனால் அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ உயரடுக்கு எழுச்சியை அடக்க பாக்கிஸ்தான் இன்னும் தீவிரமாக நடந்து கொள்ளவேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது; FATA மற்றும் அதன் அண்டைப் பகுதிகளான பலுச்சிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணங்கள் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு "பாதுகாப்பான புகலிடங்களாகி விட்டன" என்று குற்றம் சாட்டுகிறது. சமீபத்திய நாட்களில் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள், ஹோல்ப்ரூக், பென்டகனின் மத்திய கட்டுப்பாட்டுத் தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ் உட்பட, பகிரங்கமாக பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் இராணுவ உளவுத்துறை அமைப்பான ISI இன்னும் தாலிபனுடனும் மற்ற அமெரிக்க எதிர்ப்பு எழுச்சி அமைப்புக்களுடனும் நெருக்கமாக இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹோல்ப்ரூக் மற்றும் முல்லன் இஸ்லாமாபாத் வருகைக்கு நடுவே, நியூ யோர்க் டைம்ஸ், ஒபாமா நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கத்தான் இருக்க வேண்டும், பாக்கிஸ்தானுக்குள் வாஷிங்டன் போரைத் தொடக்கும் உறுதியை அடிக்கோடிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "பாக்கிஸ்தானில் இன்னும் இரைந்து ஒலிக்கும் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டது" ("More drone attackes in Pakistan Planned") என்ற தலைப்பில் வந்துள்ள அந்த அறிக்கை, "மூத்த நிர்வாக அதிகாரிகள் அமெரிக்கா அதன் தேனீக்கள் தாக்குதலை பாக்கிஸ்தான் பழங்குடி பகுதிகளில் மேற்கொள்ளுவதை அதிகரிக்கப்போவதாகக் கூறியுள்ளனர்" என்று தெரிவிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் முதல் அமெரிக்கத் துருப்புக்கள் குறைந்தது 35 முறையாவது ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்களை பாக்கிஸ்தானுக்குள் நடத்தி 340 பேருக்கும் மேலானவர்களைக் கொன்றுள்ளது; இவர்களில் பலரும், ஏன் அனைவருமே கூட, சாதாரணக் குடிமக்கள் ஆவர். மிக சமீபத்திய தாக்குதல் ஏப்ரல் 4ம் தேதி காலையில் வட வசீர்ஸ்தானில் ஏற்பட்டது. இறந்தவர்களில் மகளிரும் குழந்தைகளுமாக 13 பேர் அடங்குவர் என உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

செவ்வாயன்று டைம்ஸ் கட்டுரை ஒபாமா நிர்வாகம், "பலுச்சிஸ்தானுக்குள் ஏவுகணைத் தாக்குதலை அதிகப்படுத்துவது" பற்றி பரிசீலித்து வருவதாகத் தகவல் கொடுத்துள்ளது; இத்தகவல் முன்பு வந்த டைம்ஸ் அறிக்கையை மீண்டும் நினைவுபடுத்துகிறது.

FATA பகுதிகளில் நடத்தப்பட்ட தேனீ ஏவுகணைத் ஆக்குதல்கள் அமெரிக்க எதிர்ப்பு எழுச்சி தலைவர்கள் சிலரை பலுச்சிஸ்தான் தலைநகரான க்வெட்டாவிற்கு அனுப்பி விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் உட்குறிப்பு பாக்கிஸ்தானிய அதிகாரிகள் விரைவில் இந்த எழுச்சியாளர்களை பிடிக்கவோ, கொல்லவோ செய்யாவிடின், அமெரிக்கா க்வெட்டாவிலும் அதைச் சுற்றிலும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தும் என்பதாகும்; அந்நகரில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இஸ்லாமாபாத் வாஷிங்டனுக்கு பெரிதும் தாழ்ந்துள்ள அடிமை உறவைக் கொண்டு இருப்பதைத்தான் ட்ரோன் தாக்குதல்கள் நிரூபிக்கின்றன என்று சாதாரண பாக்கிஸ்தான் குடிமக்கள் நினைக்கின்றனர். ஒரு தசாப்தத்தின் பெரும்பகுதியில் தளபதி பர்வேஸ் முஷாரஃப்பை அதிகாரத்தில் நிலைநிறுத்துவதற்கு செலவிட்டபின், வாஷிங்டன் இப்பொழுது திமிர்த்தனமாக பாக்கிஸ்தானிய இறைமையை தன் விருப்பப்படி மீறமுடியும் என்று கூறுகிறது; வறிய கிராம மக்கள் மீது குண்டு மழை பொழிகிறது; பர்வேஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு முக்கிய ஆதரவு கொடுத்திருந்தார்.

மக்களுடைய உணர்வின் தீவிரத் தன்மையினால், பாக்கிஸ்தானிய அரசியல் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளும் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. முஷாரஃப் ஆட்சியின் பெரும்பகுதி உள்நாட்டு மந்திரியாக இருந்த அப்டாப் அஹ்மத் ஷேர்பாவோ சமீபத்தில் டைம்ஸிடம் பாக்கிஸ்தானியரில் 1 முதல் 2 சதவிகிதத்தினர்தான் அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது கொண்டுள்ள கொள்கைக்கு ஆதரவு தருவதாகக் கூறினார். "மக்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளனர். மற்றொரு பிரிவு மகிழ்ச்சியாக இல்லை; ஆனால் அதை வெளியில் கூறுவதில்லை."

Tehreek-e Taliban Pakistan (TTP) உடைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் FATA தளத்தைக் கொண்ட தாலிபன் ஆதரவு குழு வாரத்திற்கு இரு முறை தற்கொலைக் குண்டுவீச்சுக்களை நடத்தும் என்றும் இது அமெரிக்கா தன் ட்ரோன் தாக்குதல்களை நிறுத்தம் வரை தொடரும் என்றும் கூறினார். பாக்கிஸ்தானிய அதிகாரிகள் TTP தலைவர் பைதுல்லா மெசூட்டை பாக்கிஸ்தானின் முக்கிய நகரங்களின் மையத்தானத்தில் பேரழிவுத் தாக்குதல்கள் நடத்திவருவதற்காக குற்றம் சாட்டியுள்ளனர்; இதில் டிசம்பர் 2007 பாக்கிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசீர் புட்டோ படுகொலையும் அடங்கும். மெசூட் பெரும்பாலான குற்றச் சாட்டுக்களை மறுத்துள்ளார்; ஆனால் கடந்த வாரம் லாகூர் போலீஸ் அகாடமி மீதும் இஸ்லாமாபாத்தில் ஒரு துணை இராணுவ முகாமின்மீதும் நடந்த தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றார்.

பாக்கிஸ்தானிய உயரடுக்கின் புவிசார் அரசியல் மூலோபாயமாக பல தசாப்தங்களாக உள்ள, பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் பென்டகனுக்கும் இடையே உள்ள பிற்போக்குத்தன, வாடிக்கையாளர்-புரவலர் உறவை நிலைநிறுத்த தேவைப்படுவதால் மக்களுடைய உணர்வுகள் ஒருபுறம் இருக்க, பாக்கிஸ்தான் அரசாங்கம் ட்ரோன் தாக்குதல்களை சற்று பிடிக்காவிட்டாலும், பொறுத்துக் கொள்ளுகிறது என்பது பகிரங்க இரகசியம் ஆகும். உண்மையில் பல தாக்குதல்களும் பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் CIA தளத்தில் இருந்துதான் நடத்தப்படுகிறது என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஹோல்ப்ரூக் மற்றும் முல்லனுடன் பேசிய பாக்கிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார்: "ட்ரோன்கள் பற்றி நாங்கள் பேசினோம்; நான் வெளிப்படையாகக் கூறுகிறேன், எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே [அமெரிக்க அதிகாரிகள்] இது பற்றி பிளவுகள் உள்ளன. இப்பிளவை மூட நான் விரும்புகிறேன்."

"என்னுடைய கருத்து அது [ட்ரோன் தாக்குதல்கள்] தீவிரவாதிகளுக்கு ஆதரவாகத்தான் முடியும் என்பதாகும்."

இருதிறத்தாரும் "இது பற்றி உடன்படாததற்குத்தான் ஒப்புக் கொண்டுள்ளனர்" என்றார் குரேஷி. வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக பாக்கிஸ்தானுக்குள் இராணுவத் தாக்குதல்களை நடத்தும்; இந்த சர்வதேச சட்ட மீறல் போர்ச் செயலுக்கு ஒப்பானது ஆகும்.

அமெரிக்கா "சில சிவப்பு கோடுகளைப் பின்பற்றி" நடக்க ஒப்புக் கொண்டுள்ளதாக குரேஷி கூறுகிறார்; குறிப்பாக "பாக்கிஸ்தான் மண்ணில் வெளிநாட்டு காலணிகள் இறங்காது". உண்மையில் கடந்த மாதம் ஹோல்ப்ரூக்கும் தெற்கு, மத்திய ஆசியாவிற்கு அமெரிக்க உதவி வெளியுறவுத்துறை அமைச்சருமான ரிச்சார்ட் பெளச்சர் கடந்த செப்டம்பர் பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதல்கள் போல் மீண்டும் வராது என்ற உறுதியைக் கொடுத்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அந்தத் தாக்குதல் அமெரிக்க பாக்கிஸ்தானிய உறவுகளில் நெருக்கடியைத் தூண்டிவிட்டது; பாக்கிஸ்தானிய இராணுவம் ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்கப் படைகளுக்கு செல்லும் பொருட்கள் அளிப்புப் பாதையைத் தற்காலிகமாக மூடிவிட்டது. மேலும் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாக்கிஸ்தானிய வான் வழியைக் கடக்கும்போது வேண்டுமென்றே சுடப்பட்டன.

தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகள் பாக்கிஸ்தானை கடக்க வேண்டும் என்று பென்டகன் தெளிவாக விரும்புகிறது. ஆனால் வாஷிங்டனுக்கும் அதற்கும் இன்னும் முக்கியமான இலக்கு பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், சண்டையில் பெரும்பங்கு வகிக்க வேண்டும் மற்றும் போர்த்தீவிரத்தால் ஏற்படக்கூடிய விளைவான இறப்பு எண்ணிக்கையில் பங்கு பெற வேண்டும் என்பதாகும். அந்த விரிவாக்கம்தான் ஒபாமா நிர்வாகத்தால் இப்பொழுது உத்தியோகபூர்வமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ஒற்றை போர் அரங்கு என்று விவரிக்கப்படுகிறது.

அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகளின் அடியில் இருக்கும் பதட்டங்கள் "முக்கியமானது நம்பிக்கை பற்றிய பிரச்சினை ஆகும்.... ஒருவரை ஒருவர் மதித்து நம்பினால்தான் நாம் ஒன்றாக செயல்பட முடியும்" என்று குரேஷி அறிவித்துள்ள நிலையில், அவை குறைந்த வெளிப்பாடாக வந்துள்ளன.

இக்கருத்துக்கள் ஏற்கனவே அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளின் கூற்றான ISI உடைய சில பிரிவுகள் தாலிபன் அதே போன்ற குழுக்களுடன் உறவு கொண்டுள்ளது என்பதற்கு விடையிறுப்பு என்பது தெளிவு; பாக்கிஸ்தானின் புவி அரசியல் மூலோபாயத்திற்கு அது முக்கிய கருவி என ISI நம்புவதாகவும் கூறப்படுகிறது; இன்னும் பொதுவாக அமெரிக்காவின் புகார்கள் இஸ்லாமாபாத் வாஷிங்டனுக்கு அது கொடுத்துள்ள $10 பில்லியன் இராணுவ உதவி மற்றும் புஷ் நிர்வாகம் முஷாரஃப் ஆட்சிக்கு வழங்கிய "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உதவிகளுக்கு" உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை என்பதாகும்.

ஒபாமா நிர்வாகத்தின் ஆப்கானியப் போர் மற்றும் மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடு வாஷிங்டன் இஸ்லாமாபாத்துடன் கொண்டுள்ள உறவுகளை மறு வரையறை செய்வது போல் ஆகும். ஒபாமா திட்டம் பாக்கிஸ்தானுக்கு $1.5 பில்லியன் ஆண்டு ஒன்றுக்கு வளர்ச்சி நிதியாக அடுத்த 5 ஆண்டுகள் கொடுக்கப்டும் என்றும் இதைத்தவிர $3 பில்லியன் கூடுதல் எழுச்சி எதிர்ப்பு நிதியாக 5 ஆண்டுகளில் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வளர்ச்சி உதவி ஆண்டு ஒன்றுக்கு $10 ஒரு பாக்கிஸ்தானியருக்கு என்பதைவிட குறைவு ஆகும்; ஆனால் இராணுவமில்லாத உதவியை அளித்ததில் இதுகாறும் இல்லாத அளவு பெரியதாகும்.

பாக்கிஸ்தானிய உயரடுக்கிற்கு பெரும் ஏமாற்றம் கொடுக்கும் வகையில் உதவி அளிப்பு கடுமையான நிபந்தனைகளுடன் வருகிறது. பாக்கிஸ்தானுக்கு, "எதையும் செய்யலாம் என்ற விதத்தில் பணம் வராது" என்பதை ஒபாமா திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். ஆண்டு வளர்ச்சித் திட்ட நிதி இன்னும் கூறப்படாத நிபந்தனைகளுடன் பிணைந்துள்ளது; அவை அளவிற்கு உட்பட்டவை, பரிசீலனைக்கு உட்பட்டவை; குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும்; பாக்கிஸ்தான் அமெரிக்கா கூறுவதை ஆப்கானிய-பாக்கிஸ்தான் போரில் செய்கிறதா என்பது கண்காணிக்கப்படும். "பாக்கிஸ்தானிய எழுச்சி எதிர் திறன் நிதி" என்பது முன்னோடியில்லாத வகையில் பென்டகன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கும், அமெரிக்க நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கும்; இந்தியாவிற்கு எதிராக இந்த இராணுவ உதவிகள் பயன்படுத்தப்பட முடியாதவை.

இஸ்லாமாபாத் நீண்ட காலமாகவே பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு நவீன எழுச்சி எதிர்ப்புக் கருவிகளை கொடுக்கவில்லை என்று கூறுகூறி வருகிறது; இதில் இரவு நேரப் பார்வைக் கண்ணாடிகளும் தாக்கும் ஹெலிகாப்டர்களும் அடங்கும்.

தன்னுடைய புதிய ஆப்கானியப் போர் மூலோபாயத்தை அறிவிக்கையில், உயர்மட்ட ஒபாமா நிர்வாக அதிகாரிகள் இஸ்லாமாபாத் சங்கடத்தை காணும் வகையில் அமெரிக்கா காஷ்மீர் பற்றிய இந்திய பாக்கிஸ்தான் பூசலில் தலையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டனர். கடந்த நவம்பர் அமெரிக்க தேர்தல்களுக்கு முன்பு ஒபாமாவும் அவருடைய உதவியாளர்கள் பலரும் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க அமெரிக்கா இன்னும் கூடுதலான பங்கினை எடுக்க வேண்டும் என்று கூறினர்; அதன் உட்குறிப்பு இந்தியாமீது அழுத்தம் கொடுத்து காஷ்மீர் பற்றி பாக்கிஸ்தானுக்கு சலுகைகள் கொடுப்பது என்று இருந்தது; அதற்கு ஈடாக பாக்கிஸ்தான் இன்னும் கூடுதலான ஆதரவை அமெரிக்காவிற்கு அதன் ஆப்கானிய ஆக்கிரமிப்பிற்கு அளிக்கும் என்று கருதப்பட்டது.

பெரிய, வலுவான சக்தியான இந்தியா காஷ்மீர் பிரச்சினை இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினை என்றும் மூன்றாம் நபர் குறுக்கீட்டை கடுமையாக எதிர்த்தும் வந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் புது டெல்லி காஷ்மீர் பூசலில் அமெரிக்கத் தலையீடு வந்துவிடாமல் தடுப்பதை ஒரு முக்கிய முன்னுரிமையாகவே கொண்டிருந்தது. தூதரக முறைகள்படி அது வாஷிங்டனுக்கு நேரடியாக தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆனால் நவம்பர் மாதம் மும்பை மீது நடந்த பயங்கரவாதக் கொடுமையை பயன்படுத்தி பாக்கிஸ்தான்தான் உலகப் பயங்கரவாதத்தின் இணைத்தளம் என்றும் காஷ்மீர் எழுச்சி பற்றிய பேச்சு பாக்கிஸ்தானின் இராணுவப் பாதுகாப்பு நடைமுறையின் சதிவேலைகளின் விளைவுதான் என்றும் கூறுகிறது.

வாஷிங்டன் அச்செய்தியை உணர்ந்து இந்திய உணர்வைப் போற்ற விரும்புகிறது; ஒரு தசாப்தமாக அது இந்தியாவை ஆசியாவில் எழுச்சி பெறும் சீனாவிற்கு மாற்றுக் கனம் உடைய திறன் என்று வளர்க்க விழைகிறது. புது டெல்லியைச் சமாதானப்படுத்தும் வகையில் ஹோல்ப்ரூக்கின் வேலை விவரம் கடைசி நிமிஷத்தில் ஆப்கானிஸ்தான, பாக்கிஸ்தான், இந்தியாவிற்கு என்பதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுக்கு சிறப்பு தூதர் என்று மாற்றப்பட்டது. உயர்மட்ட ஒபாமா நிர்வாகத்தின் புதிய ஆப்கானிய போர் மூலோபாயம் பற்றி நிருபர்களுக்கு விளக்கம் கூறும் அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்கா காஷ்மீர் பிரச்சினையில் தலையிடாது என்பதை வலியுறுத்தினர். "அப்பிரச்சினையில் தொடர்பு கொள்ள நாங்கள் விரும்பவில்லை" என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறினார். "ஆனால் இரு நாடுகளும் இன்னும் கூடுதலான பரஸ்பர நம்பிக்கையைக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்; அதையொட்டி பாக்கிஸ்தான் அதன் மேற்குப் புறத்தில் வந்துள்ள பிரச்சினைகளை கவனிக்க முடியும்."

உண்மை என்னவென்றால் வாஷிங்டனுடைய எண்ணெய் வளம் மிகுந்த மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்க செல்வாக்கை விரிவுபடுத்தும் உந்துதல், ஆப்கானிஸ்தான்மீதான வெற்றி மூலம் நடைபெறும்; அதேபோல் இந்தியாவை ஒரு "உலகந்தழுவிய மூலோபாயப் பங்காளி" என்று இருத்துவதின் மூலம் முடியும்; இது நெருக்கடி நிறைந்த பாக்கிஸ்தான் நாட்டிற்கு இன்னும் அதிக அழுத்தத்தைத்தான் கொடுக்கும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா இஸ்லாமாபாத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதப் போராளிகளுக்கு ஆசானாக இருக்கத் தூண்டியது; இது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அதன் பிற்போக்குத்தன உந்துதலின் ஒரு பகுதி ஆகும்; இதற்காக அது பாக்கிஸ்தா சர்வாதிகாரியும் இஸ்லாமிய பிற்போக்குவாதியுமான தளபதி ஜியாவுல் ஹக்கை முற்றிலும் ஆதரித்தது.

இன்று அது பாக்கிஸ்தான் தாலிபனை நசுக்க வேண்டும் என்று கோருகிறது. காபூலில் இருக்கும் அரசாங்கம் அமெரிக்க ஆதரவுடன் இந்தியாவுடன் பரந்த பிணைப்புக்களை வளர்த்துள்ள நிலையில், இது பாக்கிஸ்தானிய உயரடுக்கின் முயற்சியான ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை தக்க வைக்கும் முயற்சிகளைத் தகர்க்கிறது. இது பஷ்டுன் தேசிய உணர்வை ஆப்கானிய பாக்கிஸ்தான் எல்லையின் இரு பக்கங்களிலும் எரியூட்டியுள்ளது; அதைத்தவிர பாக்கிஸ்தான் நாட்டிற்குள் தேசிய இனவழி பதட்டங்களையும் வளர்த்துள்ளது; இராணுவத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது; பாக்கிஸ்தான் மக்கள் பார்வையில் அரசாங்கத்தை இன்னும் இழிவுபடுத்தியுள்ளது; ஏனெனில் அரசாங்கம் அமெரிக்க கூலிப்படை ஆட்சி போல் நடந்து கொள்ளுவது நிரூபணம் ஆகிறது.