World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

The significance of the European election

ஐரோப்பியத் தேர்தலின் முக்கியத்துவம்

By Ulrich Rippert
21 April 2009

Use this version to print | Send feedback

ஒரு சில தினங்களுக்கு முன்பு ஸ்ட்ராஸ்போர்க்கில் இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றம் "ஐரோப்பிய தேர்தல்-உங்கள் முடிவு" என்ற கோஷத்தின் கீழ் மிகப் பெரிய விளம்பரத்தில் ஈடுபட்டது. செய்தி ஊடகத்தில் விளம்பர இடங்களை பிடித்தும், வண்ண கையேடுகளை வெளியிட்டும், மாபெரும் சுவரொட்டிகளை தயார் செய்ததுமான இந்த செலவுமிக்க பிரச்சாரத்தின் நோக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 375 மில்லியன் வாக்காளர்களில் மிக அதிகமானவர்களை ஜூன் 4 முதல் 7 வரை நடைபெற இருக்கும் ஐரோப்பிய தேர்தலில் பங்கு பெறச் செய்வதாகும். 27 நாடுகளில் இருக்கும் வாக்காளர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு 736 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர்.

இத்தேர்தல் பற்றி அக்கறை அதிகம் இல்லாதது பற்றி ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வேண்டுகோளின்பேரில் ஒரு யூரோ அளவுபார்க்கும் கருத்துக் கணிப்பு 27,000 குடிமக்களை வைத்து நடத்தப்பட்டது. அது ஜூன் மாதத்தில் தேர்தல்கள் நடக்கும் என்பது பற்றி 16 சதவிகிதத்தினர்தான் அறிந்துள்ளதாகவும், தேர்தலில் "ஒருவேளை" வாக்களிக்கக்கூடும் என்று கேட்கப்பட்டவர்களில் 34 சதவிகிதத்தினர் கூறியதாகவும் கண்டறிந்துள்ளது. பிரெஞ்சு நாளேடான Liberation இதன் பின் இதுகாறும் இல்லாத அளவிற்கு வாக்காளர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று எழுதியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 உறுப்பு நாடுகளில் உள்ள வாக்காளர்களில் 45 சதவிகித்தினர்தான் வாக்களிக்க முன்வந்திருந்தனர்.

தேர்தலில் பரந்த முறையில் அக்கறை இல்லாதது ஐரோப்பிய அமைப்புகளுக்கு பெருகும் எதிர்ப்பின் வெளிப்பாடு ஆகும். இதில் ஸ்ட்ராஸ்போர்க்கில் உள்ள பாராளுமன்றத்திற்கான எதிர்ப்பும் அடங்கும். சிறிதும் சக்தியில்லாத, முக்கியத்துவம் இல்லாத அமைப்பு என்று வரும்போது உலகில் வேறு எந்தப் பாராளுமன்றமும் ஐரோப்பிய பாராளுமன்றத்துடன் போட்டியிட முடியாது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முடிவுகள் தேசிய அரசாங்கங்கள்மீது கட்டுப்பாடுகளை கொண்டிருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் முடிவுகள் ஐரோப்பிய குழு மற்றும் மந்திரிகள் சபையினால்தான் எடுக்கப்படுகின்றன.

அவற்றின் முறையான அரசியலமைப்புக்களில் உள்ளபடி பல நாடுகளின் தேசிய பாராளுமன்றங்கள் சட்டமன்ற முடிவுகளை எடுக்கும் பங்கைக் கொண்டிருக்கையிலும் மற்றும் அரசாங்கத் தலைவரை நியமிக்க, மந்திரிகளை தேர்ந்தெடுக்க என்ற பொறுப்புக்களை பெற்றிருக்கையில், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அத்தகைய அதிகாரம் கிடையாது. ஐரோப்பிய குழுவின் தலைவர் உறுப்பு நாடுகளின் நாட்டு, அரசாங்கத் தலைவர்களால் நியமிக்கப்படுகிறார். ஐரோப்பிய பாராளுமன்றம் அந்நியமனத்தை உறுதிசெய்ய மட்டுமே இயலும்.

இப்பாராளுமன்றம் ஒரு விவாதக் குழுவின் தன்மையைத்தான் கொண்டுள்ளது. பல கட்சிகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொடுக்கப்படும் நல்ல ஊதியம் உடைய உறுப்பினர் பதவிகளை தங்கள் மூத்த அரசியல்வாதிகளுக்கு வெகுமதியாக அல்லது கடந்த கால சேவைக்கு பரிசாக விடைகொடுக்கும் வகையில் அளிக்கின்றன. ஐரோப்பிய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் விதம் பற்றி மக்களின் இகழ்வு உணர்வு "உங்கள் தாத்தா இருந்தால், அவரை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்." என்ற விதத்தில் உள்ளது.

பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் அற்ற தன்மை ஐரோப்பிய பிரதிநிதிகள் தங்களைப் பற்றிக் கொண்டுள்ள மிகையான தோற்றத்திற்கு எதிரான விதத்தில்தான் உள்ளது. உலகின் மிகப்பெரிய தேசம் கடந்த நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்றும் மற்றும் 500 மில்லியன் குடிமக்களின் பிரதிநிதிகள் என்றும் தங்களை விவரித்துக் கொள்ளுகின்றனர்.

பிரஸ்ஸல்ஸை தளமாக கொண்ட ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் மற்றும் அதன் மிக அதிக எண்ணிக்கையான 40,000 ஊதியம் பெரும் அதிகாரத்துவத்தின் செயல்பாடுகளுக்கு ஒரு போலி ஜனநாயக திரையைக் கொடுப்பதுதான் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உண்மையான செயல்பாடு ஆகும். அந்த அதிகாரத்துவத்தினர் எந்தவித ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டவர்கள் அல்லர். மாறாக கணக்கிலடங்கா வணிக செல்வாக்கு செலுத்துபவர்களின் (Business Lobbyists) விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுபவர்கள் ஆவர்.

ஐரோப்பாவில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தை நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள்மீது சுமத்துவதற்கு பயன்படுத்துகின்றன. இதுதான் திட்டமிட்டமுறையில் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்தல் மற்றும் ஒரு ஐரோப்பிய போலீஸ் அரசாங்கத்தை பிரஸ்ஸல்ஸ் எடுக்கும் முடிவின்படி அமைப்பது என்ற தடையற்ற சந்தை விதிகளின் நோக்கம் ஆகும். ஐரோப்பிய குழு ஏற்கனவே கட்டுப்பாடுகள் அகற்றப்படல், தாராளமயமாக்கப்படுதல் மற்றும் ஊழியர்கள் உரிமைகள் தகர்க்கப்படுதல் இவற்றுடன் இயைந்துள்ளது. ஐரோப்பாவில் பிராந்திய, சமூகப் பிளவுகளை அகற்றுவதற்கு பதிலாக, இக்குழு அவற்றை தீவிரப்படுத்துகிறது. ஐரோப்பிய பாராளுமன்றம் உட்பட ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள், இன்னும் வெளிப்படையாக ஐரோப்பிய பெரும் சக்திகளின் கருவிகளாக உருவாகி ஐரோப்பிய வணிகத்தின் செல்வாக்கிற்குப்பட்ட பிரிவுகளாகவும் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகப் பெருகிவரும் விரோதப் போக்கு என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் மக்களின் பரந்த பிரிவுகள் அதற்கு அவ்வாறு இருப்பது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தேர்தல்களுக்கு அக்கறை காட்டாமல் இருப்பது மட்டும் போதாது. ஐரோப்பாவின் வருங்காலம் நிதியப் பிரபுத்துவம் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்திடம் இருக்கும் என்றால், அதன் விளைவுகள் பேரழிவு தரக்கூடியதாக இருக்கும். தொழிலாளர்கள் தலையிட்டு ஐரோப்பாவின் விதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது முக்கியமானதாகும்.

ஐரோப்பிய தேர்தலில் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி (PSG) மற்றும் பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஆகியவை ஐரோப்பாவில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்து ஆதரவாளர்களுடன் பரந்த அளவில் குறுக்கிடுவதின் நோக்கம் இதுதான். நாங்கள் ஒரு முற்போக்கான தகவமைவை கொடுக்க விழைகிறோம்; அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக பெருகிவரும் இயக்கத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கை அளிக்க விரும்புகிறோம்.

சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்கனவே ஐரோப்பாவிற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை உற்பத்தி கணிசமாக குறைந்துவிட்டது. மந்த நிலை பெரும் வேகத்தில் வளர்ச்சியுறுகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி தொழில்துறை உற்பத்தி (கட்டுமானத் தொழில்களைத் தவிர) 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெப்ருவரி மாதம் சராசரியாக 18.4 சதவிகிதம் சரிந்தது.

வாரத் தொடக்கத்தில் Süddeteutsche Zeitung பத்திரிகை ''நெருக்கடியின் மூன்றாம் கட்டம்" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டு "பொருளாதார நெருக்கடிக்கும் அது பற்றிய மக்கள் உணர்தலுக்கும் இடையே விந்தையான முரண்பாடு உள்ளது. பொருளாதார தகவல் தொடர்ந்து கீழ்நோக்கு நிலையைக் காட்டும் வகையில் திருத்தம் பெறுவதுடன், கணிப்புக்கள் பெருகிய முறையில் இருண்ட தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் ஜேர்மனியர்கள் நிதானமாக உள்ளனர்." இப்பத்திரிக்கை இந்த நிலை "விரைவில் மாறும்" என்று கூறுகிறது. "நெருக்கடி மூன்றாம் கட்டத்தை வரவிருக்கும் மாதங்களில் அடையும். சமூகப் பாதுகாப்பு முறைகள் இயங்குவதற்கு பெரும் கஷ்டப்படும்." நெருக்கடியின் முதல் கட்டங்களைவிட அதுதான் மக்களைப் பெரிதும் பாதிக்கும் என எழுதியது.

கிழக்கு ஐரோப்பாவில் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மோசமாக உள்ளது. ஸ்ராலினிச ஆட்சிகள் கவிழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு பின்னர் முதலாளித்துவ முறை அறிமுகப்படுத்தல் பாரிய சமூக பின்நோக்கலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. ஒரு சிறிய புதிய பணக்கார உயரடுக்கும் பழைய ஸ்ராலினிசவாதிகளும் இருக்கும் சமூக செல்வத்தை பகிர்ந்துகொண்டு மகத்தான செல்வக் கொழிப்பை பெற்ற நிலையில், மக்களின் பரந்த பிரிவுகள் வறுமையில் தள்ளப்பட்டுவிட்டன.

நடைமுறையில் இருக்கும் கட்சிகள் எதுவும் மக்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை. இது இடதுசாரி கட்சிகள் என அழைக்கப்படுவதற்கும் பொருந்தும். ஜேர்மனியில், ஒஸ்கார் லாபோன்டைனின் இடது கட்சி, மெலென்சோனின் இடது கட்சி மற்றும் பிரான்ஸில் பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, இத்தாலியில் Refounded Communism, கிரேக்கத்தில் SYRIZA மற்றும் இதே போன்ற மற்ற நாடுகளில் உள்ள அமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் சரிவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதவற்கு தோற்றுவிக்கப்பட்டவை. இந்த "போலி-இடதுகள்" முதலாளித்துவ முறையை பாதுகாப்பதை செயற்படுத்த சேவை செய்ய முன்னிற்பதுடன், அவற்றின் முக்கிய பங்கு தொழிலாளர்களின் புரட்சிகர அபிவிருத்தியை தடுப்பதும் ஆகும்.

இந்த நிலைமையில் PSG மற்றும் SEP இரண்டும் ஐரோப்பியத் தேர்தலை வாக்காளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அது பற்றிய ஒரு பரந்த விவாதத்திற்கு ஊக்கம் அளிக்கவும் விரும்புகிறது.

அதன் வேலைத்திட்டத்தின் இதயத்தானத்தில் ஒரு சர்வதேச முன்னோக்கு உள்ளது. அனைத்து எல்லைகளையும் கடந்து தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு தங்கள் வேலைகள், ஊதியங்கள், சமூக நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற முன்கருத்து உள்ளது. அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் நெருக்கடியின் சுமையை மக்கள்மீது சுமத்துதல் தொழிலாளர்களின் ஒரு பிரிவை மற்றவற்றிற்கு எதிராக நிறுத்ததுதல் போன்றவை உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் இந்த நெருக்கடிக்கு எவ்விதத்திலும் பொறுப்பு ஆகமாட்டார்கள். அவர்கள் ஒன்றும் ஆபத்து மிகுந்த ஊக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர்கள் மில்லியன்கள் அல்லது பில்லியன்களை தங்கள் பைகளுக்குள் அள்ளிப் போட்டுக் கொள்ளவில்லை. நிதிய பிரபுத்துவத்திற்கு தங்கள் இலாபத்தை மீட்பதற்கு கொடுக்கப்படும் நூற்றுக்கணக்கான பில்லியன்களுக்கு பதிலாக, இந்த நெருக்கடிக்கு காரணமானவர்களை கண்டறிந்து, விசாரணை நடத்தி அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமைகள் ஆகியவற்றை கொள்கைரீதியாக பாதுகாத்துக் கொள்வதற்கு தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்ளுதல் தேவையாகும். அவைதான் புதிய விட்டுக்கொடுப்புகள் வழங்க தொடர்ந்து கையெழுத்திவதுடன், ஒப்பந்தங்களை பயன்படுத்தி இழிவான நிலைகளை ஏற்படுத்துவதுடன், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கங்கள் வெளிப்பாடமல் தடுக்கின்றன. தொழிற்சாலைக் குழுக்கள் வளர்க்கப்பட்ட போராட்ட வகைகள் அமைக்கப்பட வேணடும். அவற்றில் வேலைநிறுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள் ஆகியவை இருக்க வேண்டும். இவை தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

அத்தகைய அணிதிரளல் ஐரோப்பாவில் தொழிலாளர்கள் அரசாங்கத்தை தோற்றுவிப்பற்கான ஆரம்பக் கட்டமாக இருக்க வேண்டும். இது சமூகத்தின் தேவைகளை பெருவணிக இலாப நலன்களுக்கு எதிரான முழுமையாக நிறுத்தும். ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவும் போராட்டத்தில் வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தல் கணிசமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.