World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP and ISSE to hold May Day meeting

இலங்கை சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளன

29 April 2009

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் சர்வதேச தொழிலாள தினத்தைக் கொண்டாட மே 1 அன்று கொழும்பில் மே தினக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.

1930 களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் இப்போது உலகப் பொருளாதாரம் ஆழமான நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலையிலேயே இம்முறை மே தினம் நடக்கிறது. உலகம் பூராவும் மில்லியன் கணக்கான தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும் வல்லரசுகள் அயல் நாட்டை மிகவும் ஏழ்மைக்குத் தள்ளும் கொள்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், இராணுவவாத மற்றும் யுத்த ஆபத்து உக்கிரமடைகின்றது.

முழு தெற்காசிய பிராந்தியமும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கில் தனது குற்றவியல் யுத்தத்தை உக்கிரமாக்கியுள்ள இலங்கை அரசாங்கம், பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல்கள், தொழிலாளர்களை இனவாத வழியில் பிளவுபடுத்தவும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தவும் ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற மே தினச் செய்தி, நடைமுறைத் தேவையாகும். ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே யுத்தம், வறுமை மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களின் தோற்றுவாயான இலாப அமைப்புக்கு முடிவுகட்ட முடியும். எமது கூட்டத்திற்கு வருகை தந்து கலந்துரையாடல்களிலும் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

நேரம் மற்றும் காலம்: மே 1 மாலை 4 மணி.

இடம்: புதிய நகர மண்டபம், கிறீன் பாத், கொழும்பு 7

பிரதான உரை: சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ்