World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Clinton's ASEAN appearance signals US "back in Asia"

ஆசியானுக்கு கிளின்டன் வந்தது அமெரிக்கா "மீண்டும் ஆசியாவிற்கு" வந்துள்ளதை அடையாளம் காட்டுகிறது

By John Chan
28 July 2009

Use this version to print | Send feedback

அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கிற்கு மாற்றுக் கனமாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை உயர்த்தும் வகையில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பின் (Association of South East Asian Nations -ASEAN) தாய்லாந்தில் நடைபெற்ற உச்சிமநாட்டில் பங்கு பெற்று ASEAN உடைய TAC எனப்பட்ட ஒற்றுமை, ஒத்துழைப்பு உடன்பாட்டிலும் கையெழுத்திட்டார்.

ஆசியாவிற்கு கிளின்டன் முதல் வெளிநாட்டு பயணமாக வந்திருந்தபோது (ஜப்பான், தென்கொரியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு) பெப்ருவரியில் முன்வைக்கப்பட்ட திட்டத்தில், இப்பொழுது கையெழுத்திடப்பட்டதனால் ஜனாதிபதி புஷ்ஷினால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட அமைப்பும் அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய பிராந்திய அரங்காகிவிட்ட இவ்வமைப்பிற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் ASEAN தலைமைச் செயலாளர் Surin Pitsuwan தென்கிழக்கு ஆசியாவில் வாஷிங்டனின் "இராஜதந்திரமுறையில் பிரசன்னமின்மையை" கிளின்டன் முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற நம்பிக்கையை தெரிவித்திருந்தார்.

TAC உடன்பாட்டில் புஷ் நிர்வாகம் கையெழுத்திட மறுத்துவிட்டதால் பசிபிக் சக்திகளில் அமெரிக்கா ஒன்றுதான் அவ்வாறு கையெழுத்திடாத நாடாகியது. சீனா, ஜப்பான், ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா அனைத்துமே ஒப்பந்தத்தில் சமீபத்திய ஆண்டுகளில் கையெழுத்திட்டன. 2005ல் தொடக்கப்பட்ட கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பங்கு பெறுவதற்கு இது அடிப்படைத் தேவை ஆகும். ASEAN உடன் 3 விரிவாக்கம் (சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா) என்பது பெருகிய முறையில் ஒரு முக்கிய ஆசியப் பொருளாதார அரங்காக கருதப்படுகிறது.

ASEAN நீண்ட காலமாகவே பூசல்களை அமைதியாகத் தீர்த்துக் கொள்ள பங்கு பெறும் ஒரு அரசியலமைப்பு அஸ்திவாரமான ஒற்றுமை ஒப்பந்தமாக கருதி வந்துள்ளதுடன், மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதற்கும், வலிமையை பயன்படுத்துதல் என்ற அச்சுறுத்தலை கைவிடுவதற்கும் அரங்காக கருதியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க நீண்டகால ஆக்கிரோஷ வரலாற்றைக் கொண்டுள்ளது. அதில் வியட்நாம் போர் மற்றும் அமெரிக்க ஆதரவு இருந்த 1965 இந்தோனிசிய இராணுவ ஆட்சிசதி ஆகியவை இருந்தன. முன்கூட்டியே தாக்குதல் என்ற போர்க் கோட்பாட்டை புஷ் நிர்வாகம் கொண்டிருந்ததால், அது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயங்கியது.

ஆசியாவை பற்றி போதுமான கவனம் காட்டத் தவறியதற்கு புஷ் நிர்வாகத்தை ஜனநாயக கட்சியினர் குறைகூறிவந்துள்ளனர். கிளின்டனுக்கு முன் பதவியில் இருந்த கொண்டலீசா ரைஸ், ASEAN உச்சிமாநாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் இருமுறை பங்கு பெறாததுடன், மற்ற முக்கிய ASEAN கூட்டங்களிலும் பங்கு பெறவில்லை. அமெரிக்காவின் நெருக்கமான நட்புநாடுகளான ஆஸ்திரேலியா போன்றவை TAC யில் கையெழுத்திட்டுள்ளன. ஏனெனில் எழுச்சி பெற்று வரும் ஆசிய நாடுகள் முகாமால் தாங்கள் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது என்று அவை அஞ்சின.

உடன்பாட்டில் கையெழுத்திடும் முடிவை ஒபாமா நிர்வாகம் கொண்டது ஆசியாவில் அமெரிக்கச் செல்வாக்கை வலுப்படுத்தும் ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. ASEAN உச்சிமாநாட்டில் கிளின்டன் "அமெரிக்கா மீண்டும் தென்கிழக்கு ஆசியாவிற்கு வந்துள்ளது. ஜனாதிபதி ஒபாமாவும் நானும் இப்பகுதி உலக நிகழ்போக்கிற்கும், சமாதானத்திற்கு மற்றும் செழிப்பிற்கும் முக்கிமானது என்று நம்புகிறோம், எங்கள் ASEAN பங்காளிகளுடன் எங்களை எதிர்கொள்ளும் பல பரந்த வகை சவால்களையும் முற்றிலும் எதிர்கொள்ளுகிறோம்." எனக்கூறினார்.

ASEAN இல் ஒரு பணியை திறக்கும் திட்டத்தை கிளின்டன் அறிவித்தார். ஜாகர்த்தாவிற்கு ஒரு தூதர் நியமிக்கப்பட்டதனாடாக அதன் முக்கியத்துவம் வாஷிங்டனுக்கு உள்ளது என்பதை நிரூபித்தது. மேலும் ASEAN உச்சிமாநாட்டில் நேரம் கிடைத்தபோது கிளின்டன் அமெரிக்க-கீழ் மெகோங் மந்திரிகள் கூட்டத்தை லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நடத்தினார். அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் கருத்துப்படி, இக்கூட்டம் அதேபோன்ற முதல்முறைக் கூட்டம் ஆகும். சுற்றுச் சூழல், சுகாதாரம், கல்வி, உள்கட்டுமானம் என்று தலைப்புக்கள் இருந்தாலும், வாஷிங்டனின் நோக்கம் இப்பகுதியில் சீனச் செல்வாக்கிற்கு எதிர்ப்பலமாக இருப்பது ஆகும்.

அமெரிக்க நோக்கங்களைப்பற்றி கிளின்டன் இரகசியமாக எதையும் வைக்கவில்லை. அமெரிக்கா சீனாவின் எழுச்சியை சமப்படுத்த முற்படுகிறதா என்று நிருபர்கள் பாங்காக்கில் கேட்டபோது அவர் எச்சரிக்கையுடன் பின்வருமாறு அறிவித்தார்: "சீனாவின் அண்டை நாடுகள் பல [அதன் எழுச்சி பற்றி] கவலை தெரிவித்துள்ளன என்பதை நான் அறிவேன்; எனவே நாங்கள் கிழக்கிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் இருக்கும் நிறைய நாடுகளுடன் எங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்."

மே மாதம் அமெரிக்க தேசிய சட்டமன்ற ஆய்வுப்பிரிவின் ஆய்வு ஒன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததற்கு முக்கிய காரணம் "அது அமெரிக்காவில் செயல்படும் சுதந்திரத்தைக் கட்டுபடுத்தும், குறிப்பாக பர்மா மீது அது கொண்டுள்ள தடைகளை தக்க வைத்தல் அல்லது விரிவாக்குதலை கட்டுப்படுத்தும்". பர்மாவோ ASEAN ல் சீனாவில் முக்கிய நட்பு நாடாகும். ஆனால் அதில் கையெழுத்திடாதது பல ASEAN தலைவர்களை "அமெரிக்கா புறக்கணிக்கிறது" என்ற உணர்விற்குத் தள்ளியது.

சட்ட மன்றத்தின் ஆய்வு, அமெரிக்கா இப்பகுதியில் முக்கியமான நலன்களை கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. 500 மில்லியன் மக்களுக்கும் மேலாக ASEAN ல் உள்ளனர், "உலக வணிகத்தின் பெரும் சதவிகிதம் கடக்கும் உலகின் மிக முக்கிய கடல் வழிகள், மலாக்கா ஜலசந்தி உட்பட, இங்கு உள்ளன. இந்த ஜலசந்தி உலகெங்கிலும் அமெரிக்க கடற்படை ஈடுபடுத்தப்படுவதற்கு முக்கிய பாதையாகும். இதில் மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா ஆகியவை அடங்கியுள்ளன.

மேலும், இராஜதந்திரரீதியாகவும், மூலோபாயரீதியாகவும் சீனா, அமெரிக்கா, சற்று குறைந்த தன்மையில் ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையே செல்வாக்குப் போட்டி நடக்கும் இடமாக தென்கிழக்கு ஆசியா உள்ளது. குறிப்பாக சீனா தன்னுடைய நிலைப்பாடு, செல்வாக்கு ஆகியவற்றை தெற்குஆசியாவில் 2000 தொடக்கத்தில் இருந்து வளர்த்து வருகிறது." என்று ஆய்வு தொடர்கிறது. ASEAN உடன் சீன வணிகம் 1995-2008 காலகட்டத்தில் 75% ஆன அமெரிக்காவில் $178 பில்லியனுடன் ஒப்பிடப்படும்போது 1,034 சதவிகிதமான $231.1 பில்லியனாக உயர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் மிக அதிக வணிகப் பங்காளி நாடு என்ற அமெரிக்க நிலையை மறைத்துவிட்டது. அதே நேரத்தில் 2002-2006 கால புள்ளிவிவரங்கள் அமெரிகா இப்பகுதியில் நேரடி முதலீட்டை சீனாவை விட மிக அதிக அளவு கொண்டிருப்பதையும் காட்டுகிறது.

தலையீடு இல்லை என்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தாலும், கிளின்டன் பெய்ஜிங்கின் இரு நட்பு நாடுகளான பர்மா, வடகொரியா ஆகியவற்றை உச்சிமாநாட்டில் கடுமையாக தாக்கினார். பர்மாவின் இராணுவ ஆட்சிக்குழுவிடம் ASEAN கடுமையாக இருக்க வேண்டும் என்றும் அதற்கு காரணமாக எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூ கியின் விசாரணை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கிளின்டன் வட கொரியா, பர்மா ஆகியவற்றிற்கு இடையே உள்ள இராணுவ ஒத்துழைப்பு பர்மாவிற்கு ஏவுகணைத் தொழில்நுட்பம், அணுவாயுதத் தொழில்நுட்பத்தை பியோங்யாங் விற்பது பற்றி இருந்தது என குறிப்பிட்டு, "இப்பகுதியில் இது உறுதிப்பாட்டை சீர்குலைத்துவிடும். பர்மாவின் அண்டை நாடுகளுக்கு நேரடி அச்சுறுத்தலை இது கொடுக்கும். தாய்லாந்தின் உடன்பாட்டு நட்புநாடு என்னும் முறையில் நாங்கள் இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுகிறோம் என்பது குறிப்பிடப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். கடந்த மாதம் அமெரிக்க கடற்படை வடக்கு கொரிய சரக்கு கப்பல் Kang Nam ஐ பின்தொடர்ந்தது; ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் சமீபத்திய தீர்மானத்தை மீறிய வகையில் ஆயுதங்கள் பர்மாவிற்கு கொடுக்கப்படுகின்றன என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தார்.

இப்பகுதியில் அமெரிக்க செல்வாக்கு குறைந்து கொண்டு வருகிறது. தாய் தொலைக்காட்சியில் கிளின்டன் ஜூலை 22 அன்று ASEAN பர்மாவை வெளியேற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் தாய் பிரதம மந்திரி அபிஷித் வெஜ்ஜஜீவா அந்த அழைப்பை நிராகரித்து, ASEAN மற்றும் அமெரிக்கா, "ஒரே இலக்கைக் கொண்டாலும், ஒரே கொள்கையை செயல்படுத்த முடியாது" என்றார். ASEAN உச்சிமாநாடு ஒப்புமையில் மிருதுத்தன்மையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சூ கீயின் கைது பற்றி "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியது; ஆனால் அதற்காக இராணுவ குழுவை கண்டிக்கவும் இல்லை, தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறவும் இல்லை.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், சூ கியின் ஜனநாயகத்திற்கான தேசிய குழுவின் மூத்த உறுப்பினர் Nyo Ohn Myint ஐ மேற்கோளிட்டு ASEAN தலைவர்கள் "மிக அதிகமாக ஆட்சியை குறைகூற விரும்பவில்லை" என்றும் அதற்குக் காரணம் அந்நாட்டின் சீனாவுடனான அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகள்தான் " என்று கூறியது.

கிளின்டன் நாடு திரும்பியதும் அவர் வட கொரியா மீது தாக்குதலை நடத்துவதில் கவனத்தை காட்டினார். NBC உடைய "Meet the Press" நிகழ்ச்சியில் அவர் வட கொரியா அதன்நட்பு நாடுகளில் இருந்து கூட "இப்பொழுது மிகவும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது" என்றார். பெய்ஜிங் "மிகவும் நேரிய, ஆக்கபூர்வத்திறனை" அணுவாயுத திட்டத்தை கைவிட வட கொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதில் கொண்டுள்ளது என்றும் கூறினார். அதே நேரத்தில் "பர்மா கூட" ஐ.நா. தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுத்து பியோங்யாங் மீது பொருளாதார தடைகளைச் சுமத்தியுள்ளது என்றார். ASEAN உச்சிமாநாட்டில், "வட கொரிய பிரதிநிதியின் அமெரிக்கா பற்றிய குறைகூறலை "வேறு எவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை" என்று கிளின்டன் கூறினார்.

பல தசாப்தங்கள் செய்தது போல் தெற்கு ஆசியாவில் அமெரிக்கா அதன் ஆணைகளை இடுவதில்லை என் உண்மையை கிளின்டனின் கருத்துக்கள் மூடிமறைக்க முடியாது. ஒரு பர்மா நாட்டு வரலாற்றாளரான தாண்ட் மியின்ட் யூ Asia Times Online இடம் கூறினார்: "பர்மா பற்றிய அமெரிக்க அலங்காரச் சொற்களுக்கும் நடக்கும் நிகழ்வுகளை அது செல்வாக்கில் கொள்ளுவதற்கும் இடையே பெருத்த பிளவு உள்ளது. இப்பகுதியில் அமெரிக்காவின் ஒப்புமைரீதியாக அதிகாரம் குறைகையில், இது பொதுப் போக்காக மாறிவிடுமோ என்ற கவலையும் உள்ளது. ஏனெனில் கேட்பதற்கு நன்றாக உள்ள மனித உரிமைகள் பற்றிய அறிக்கைகள், உள்ளூர் பார்வையாளர்கள் களிப்பதற்காக நிதானமான வடிவத்தை கொண்டிருந்தாலும் விளைவுதரக்கூடிய கொள்கைகளாக இருக்கின்றன."

தனது பெப்ரவரிமாத முதல் பயணத்தின்போது, அமெரிக்க அரசாங்கத்தின் பங்குப்பத்திரங்களை வாங்குமாறு கிளின்டன் பெய்ஜிங்கிடம் கேட்டிருந்தார். இது இரண்டுநாடுகளினதும் சார்பான நிலைமைகளை மாற்றுவதை எடுத்துக்காட்டுவதன் அடையாளமாக இருந்தது. அமெரிக்க-சீன மூலோபாய பொருளாதார பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ASEAN உச்சிமாநாடு நடைபெற்றது. Brookings Institution இன் ஈஸ்வர் பிரஸாத்தின் வார்த்தைகளில் இதுபற்றி பின்வருமாறு கூறப்பட்டது.'' அண்மைக்கால வரலாற்றில் ஒருபோதுமில்லதவாறு பெய்ஜிங் மீது அமெரிக்கா தனது கட்டுப்பாட்டை மிகக்குறைவாக வைத்துள்ளது. தனது வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைக்கும் தற்போதைய கணக்கு பற்றாக்குறைக்கும் அமெரிக்காவிற்கு கூடிய நிதித்தேவை உள்ளது. அது முன்னோருபோதிமில்லாதவாறு அதனை சீனா மீது தங்கியிருக்க செய்துள்ளது.

ஆசியாவில் இருந்து திரும்பிப்போதல் என்பதற்கு முற்றிலும் மாறான வகையில் அமெரிக்கா அதன் சரிந்துள்ள பொருளாதார சக்திக்கு ஈடுகட்டும் வகையில் இராணுவ மேன்மையைத் தொடர்கிறது. ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் புஷ் நிர்வாகம் நடத்திய புதுவகை காலனித்துவப்போர்கள் முக்கிய எரிபொருள் செழிப்பான பகுதியான மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டிருந்தன. சீனாவை சுற்றிவளைத்தல் என்ற அமெரிக்க மூலோபாய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் அது முயன்றது. அதற்காக உடன்பாடுகள், தளங்கள் என்ற முறைகளை ஜப்பானிலும் தென் கொரியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்திய துணைக்கண்டத்திலும் மத்திய ஆசியாவிலும் மேற்கொண்டது.

ஒபாமா ஜனாதிபதி நிர்வாகம் தொடர்ந்து இதே கொள்கையை கொண்டது. குறிப்பிடத்தக்க வகையில் கிளின்டன் இந்தியாவில் ஐந்து நாட்களை செலவழித்தபின் தாய்லாந்திற்கு வந்தார். அங்கு அவர் இராணுவ, பொருளாதார உடன்பாடுகளில் கையெழுத்திட்டார். புது டெல்லியை இப்பகுதியில் சீனாவிற்கு எதிர்க்கனமாக, ஒரு மூலோபாயப் பங்காளியாக வாஷிங்டன் கருதுகிறது.

அந்தப் பின்னணியில், கிளின்டனுடைய கோஷமான "ஆசியாவிற்கு மீண்டும்" என்பது சீனாவுடன் அழுத்தங்களை அதிகப்படுத்ததான் செய்யும். அதைத்தவிர பகுதியில் செல்வாக்கிற்கான போட்டி அதிகரிக்கையில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கும். மே மாதம் Pattaya வில் நடைபெற இருந்த ASEAN உச்சிமாநாடு வெளியேற்றப்பட்டிருந்த தாய் பிரதம மந்திரி தாக்சின் ஷினவட்ராவின் ஆதரவாளர்கள் அரங்கை தடுத்தமையால் ஒத்திப்போடப்பட்டது. சமூக அழுத்தங்கள் ஆழமடைந்துள்ள நிலையுடன், அமெரிக்க-சீன போட்டியும் தாய்லாந்திலும் மற்றும் இப்பகுதியில் இருக்கும் நாடுகளிலுள்ள அரசியல் கொந்தளிப்பில் ஒரு முக்கியமான காரணியாகும்.