World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Iceland's parliament votes to apply for European Union membership

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ தகுதிக்கு விண்ணப்பிக்க ஐஸ்லாந்தின் பாராளுமன்றம் வாக்களிக்கின்றது

By Jordan Shilton
25 July 2009

Use this version to print | Send feedback

ஜூலை 16ம் தேதி ஐஸ்லாந்தின் பாராளுமன்றம் (அல்திங்கி) 33 ஆதரவு, 28 எதிர்ப்பு என்ற வாக்குக் கணக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புத் தகுதிக்கு விண்ணப்பிக்க வாக்களித்தது. இந்த வாக்கெடுப்பு சமீபத்திய வாரங்களில் பாராளுமன்றத்தில் நடந்த நீண்ட விவாதங்களை அடுத்து வந்தது. இப்பிரச்சினை பற்றிய முக்கிய கட்சிகளில் பிளவுகூட ஏற்பட்டது. இறுதியில் ஐந்து முக்கிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். Independence Party சேருவதை எதிர்த்து மிக அதிக குரல் கொடுத்த கட்சியாக இருந்தது.

சமீபத்திய தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ அந்தஸ்த்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த இடது பசுமைவாதிகள் திட்டம் இயற்றப்படுவதற்கு முக்கியமான ஆதரவை அளித்தனர். கட்சித் தலைவர் Steingrimur J. Sigfusson உட்பட எட்டு இடது பசுமைவாதிகள் விண்ணப்பம் செய்வதற்கு தங்கள் ஆதரவை கொடுத்தனர். ஐவர்தான் எதிர்த்து வாக்களித்தனர்.

அரசாங்கம் இப்பொழுது முறையாக ஜூனை 27 வரவிருக்கும், பிரஸ்ஸல்ஸில் நடக்கவுள்ள வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பத்தை அளிக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறை தலைமையை இப்பொழுது 2009 இறுதி வரை கொண்டுள்ள ஸ்வீடன், ஐஸ்லாந்தில் இருந்து வரும் விண்ணப்பம் முன்னுரிமை பெறும் என்று குறிப்புக் காட்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் 2010லேயே ஆரம்பிக்கக்கூடும், இரு ஆண்டுகளுக்குள் இறுதி உடன்பாட்டின்மீது சர்வஜனவாக்கெடுப்பு நடைபெறும்.

இந்த வாக்களிப்பிற்கு பிரஸ்ஸல்ஸ் ஆர்வத்துடன் பிரதிபலித்தது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முக்கிய மைய வலதுசாரிக் குழுவான ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) இன் தலைவரான வில்பிரெட் மார்ட்டென்ஸ் "ஐஸ்லாந்து ஒரு முக்கிய ஐரோப்பிய நாடு; நீண்ட ஜனநாயக மரபை நோர்டிக் ஐரோப்பிய உறுப்பு நாடுகளுடன் மட்டும் இல்லாமல் பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம் அனைத்துடனும் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய குடும்பத்தில் ஐஸ்லாந்திற்கு ஒரு இடம் உண்டு என்பது என்னுடைய வலுவான நம்பிக்கை." எனக்கூறினார்.

ஆனால் அங்கத்துவம் பற்றிய தன்மை சற்று சிக்கல் வாய்ந்தது. மக்களிடையே அங்கத்துவ நாடாவதற்கு கருத்துக்கள் சரிபாதியாக பிளவடைந்துள்ளன; சமீபத்திய கருத்துக்கணிப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு 39 சதவிகிதம் என்று காட்டுகிறது. மொத்தத்தில் 38 சதவிகித மக்கள் எதிர்ப்பதாகவும் காட்டுகிறது.

எதிர்ப்பு பல காரணிகளால் உந்துதல் பெறுகிறது. பல ஐஸ்லாந்துக்காரர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்றால் அரசாங்கக் கடனை குறைப்பதற்காக அரசாங்கச் செலவுகளில் இன்னும் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்பதை நன்கு அறிவர். இந்த மூலோபாயத்தின் தொடக்கம் சமீபத்திய "உறுதிப்பாடு உடன்படிக்கை" என்பதில் வெளிப்படுத்தப்பட்டது. இது அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்டது. அது ஒரு மூன்று ஆண்டு காலத்தில் 70 பில்லியன் க்ரோனர் செலவுக் குறைப்பை முன்வைத்துள்ளது (360 மில்லியன் யூரோக்கள்).

எதிர்ப்பிற்கு மற்றொரு முக்கிய தளம் மீன்பிடிக்கும் துறையாகும். ஐஸ்லாந்தின் ஏற்றுமதியில் மீன்துறை 39 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இதில் முக்கிய அக்கறை ஐரோப்பிய ஒன்றிய உறுப்புத்தன்மையின்படி ஐஸ்லாந்து பொதுவான மீன்பிடி கொள்கையை (CFP -Common Fisheries Policy) ஏற்க வேண்டும். அது ஐஸ்லாந்தின் நீர்நிலையின் மீன்பிடிக்கும் உரிமைகளை பிரஸ்ஸல்ஸுக்கு விட்டுக் கொடுக்கும். ஐஸ்லாந்தின் நீர்நிலைக்குள் மீன் இருப்புக்களை பெறுவது மற்றைய ஐரோப்பிய நாடுகளின் படகுகளுக்கும் திறந்துவிடப்படும்.

ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் மற்றொரு பிரச்சினை இங்கிலாந்துடனும் நெதர்லாந்துடனும் உள்ள IceSave உடன்பாடு ஆகும். இது ஒன்றியத்தனுள் ஐஸ்லாந்து அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நிபந்தனை போல் ஆகும். இந்த உடன்பாடு கடந்த ஆண்டு அக்டோபரில் ஐஸ்லாந்தின் முக்கிய வங்கிகள் சரிந்தபோது தங்கள் சேமிப்புக்களை இழந்த சேமிப்பாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தல் பற்றியது ஆகும். Landsbanki உடைய இணையதள வங்கி செயற்பாட்டு அமைப்பான IceSave 2 பில்லியன் பவுண்டிற்கு மேல் (2.3 பில்லியன் யூரோக்கள்) சேமிப்பை இங்கிலாந்து சேமிப்பாளர்களிடம் இருந்து மட்டும் ஈர்த்தது. கடந்த மாதம் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஐஸ்லாந்து அரசாங்கம் இழந்த பணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படுவதற்கு பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்த உடன்பாடு Reykajavik ல் மீண்டும் எதிர்ப்புக்களுக்கு வழிவகுத்தது. தலா நபர் அடிப்படையில் இதன் பொருள், ஐஸ்லாந்து முதல் உலகப் போருக்குப் பின்னர் வெர்சாய் ஒப்பந்தப்படி ஜேர்மனி கட்டாயப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட வேண்டிய பணத்தைவிட அதிகம் ஆகும்.

இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பிற்காக உள்ளது. இறுதி முடிவு தாமதமாகியிருப்பதற்கு காரணம் பாராளுமன்றம் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வருமாதலால் உடன்பாட்டு விதிகள் நிராகரிக்கக்கூடும் என்ற அச்சமாகும். உடன்பாடு நிராகரிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் முயற்சிக்கான பிரிட்டினதும் நெதர்லாந்தினதும் ஆதரவு அநேகமாக திரும்பப்பெறப்பட்டுவிடும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எதிர்ப்பு குறிப்பாக Independence கட்சியினால் ஒரு தேசியவாத திசையில் திருப்பப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் Bjarni Benediktsson ஐஸ்லாந்து தன்னுடைய இயற்கை ஆதாரங்கள்மீதான கட்டுப்பாட்டை விட்டுவிடுவதற்கு "நம்பத்தகுந்த காரணங்கள்" ஏதும் இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய விவகாரங்களைத் தானே கவனித்துக் கொள்ளுவதில் ஐஸ்லாந்து நல்ல நிலைமையில் இருக்கும் என்றும் ஐஸ்லாந்தின் சிறிய பரப்பளவு பிரஸ்ஸல்ஸில் அதிக செல்வாக்கைப் பெற்றிருக்காது என்றும் கூறுகிறார்.

ஆனால், இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்ததை விட குறைந்த தன்மையில் என்றாலும்கூட, உண்மையில் க்ரோனா சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. 2008 தொடக்கத்தில் இருந்த மதிப்பில் மூன்றில் இரு மடங்கை நாணயம் இழந்துவிட்டது. இதன் விளைவாக இறக்குமதிகளின் விலைகள் சாதாரண மக்களுக்கும் உள்ளூர் வணிகத்திற்கும் பெரிதும் உயர்ந்து விட்டன. ஐஸ்லாந்தின் பொருளாதாரம் அதிகமாக ஏற்றுமதியை நம்பியுள்ளது. இதையொட்டி தனிப்பட்ட மற்றும் நிறுவனத் திவால்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் கடைசியில் வங்கிச் சரிவுகள் ஏற்பட்ட நேரத்தில் ஒரு மதிப்பீட்டின்படி ஐஸ்லாந்து மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முற்றிலும் திவாலாகிவிட்டனர் என்று கூறப்பட்டது.

வேலையின்மை சமீபத்திய மாதங்களில் மிகப் பெரிய அளவு உயர்ந்து கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்த ஒரு சதவிகிதத்திற்கு கீழ் என்பதில் இருந்து 9 சதவிகிதத்தைக் கடந்துவிட்டது. ஐஸ்லாந்தில், வேலை கொடுப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களுக்கு 90 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று வந்ததனூடாக வேலையின்மையின் முழு விளைவுகள் சமீபத்தில்தான் வெளிப்படையாயின. பணவீக்கம் இன்னும் உயர்ந்து 12 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. இது மத்திய வங்கியை உயர்ந்த வட்டிவிகிதங்களை தக்க வைக்கும் கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.

வேலையின்மை பெருகியுள்ள நிலையில், அரசாங்கம் ஆழ்ந்த செலவுக் குறைப்புக்களுக்கு தயார் செய்கிறது. பலரும் நம்பியிருக்கும் சமூக பாதுகாப்பு வலையை அகற்ற வேண்டியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முடக்கிவிடக்கூடிய ஆணைகளை ஒட்டி, ஐஸ்லாந்து அதன் அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தை 2013க்குள் சமசீராக்க வேண்டும். ஆனால் அப்போதுகூட வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால் உருவான அதன் மதிப்பிடப்பட்ட கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 200 சதவிதம் இருக்குமென்று தெரிகிறது.

சாதாரண மக்கள் வேலையின்மை அதிகரிப்பு, அரசாங்கச் செலவினங்களில் பெரும் குறைப்பு ஆகியவற்றை எதிர்கொள்ளுகையில், ஐஸ்லாந்தின் வங்கிகள் முழுமையாக மறு மூலதனத்தைப் பெற உள்ளன. திங்களன்று அரசாங்கம் ஒரு திட்டத்தை வெளியிட்டது. அதன்படி, 270 பில்லியன் க்ரோனர்கள் (1.5 பில்லியன் யூரோக்கள்) மூன்று முக்கிய வங்கிகளான New Kaupthing, New Landsbank, Islandbanki ஆகியவற்றின் மறுசீரமைப்பை முடிக்க பயன்படுத்தப்படும். New Kaupthing, Islandsbank ஐ பொறுத்தவரையில், முன்னைய கடன்கொடுத்தவர்கள் வங்கியின் பங்குகளில் பெரும்பான்மையை பெறுவர். கடந்த ஆண்டு பொருளாதார கரைப்பில் இந்த நிறுவனங்களின் பங்கு இருந்தபோதிலும் இந்நிலைமைதான். New Landsbanki ஐ பொறுத்தவரையில், IceSave ல் சேமித்த நிதிகள் பற்றி டச்சு மற்றும் பிரிட்டிஷ் சேமிப்பாளர்களின் பண நிலைமையை சிக்கலாக்குகின்றன.

நிதிய உயரடுக்கின் பாரிய பிணையெடுப்பிற்கு நிதி கொடுக்க, Reykjavik ரஷ்யாவிடம் மற்றொரு கடன் வாங்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. அதன் இருப்புக்களை வலுப்படுத்துவதற்காக இது 64 பில்லியன் க்ரோனர் (351 மில்லியன் யூரோக்கள்) கடன் என்று கூறப்படுகிறது. இதைத்தவிர ஸ்காண்டிநேவிய நாடுகளுடன் உடன்பாடு கொண்டு 2.5 பில்லியன் யூரோக்கள் கடன் வாங்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் நெதர்லாந்திடம் இருந்து 5 பில்லியன் யூரோக்கள் வாங்கப்பட்டன. சர்வதே நாணய நிதியத்திடம் இருந்து மிச்சம் இருக்கும் கடன் தவணையான 1.5 மில்லியனையும் சேர்த்தால், இந்த கடன்கள் பாராளுமன்றத்தில் IceSave நிறைவேற்றப்படுவதை நம்பியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில் ஐஸ்லாந்து தன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியும், அதே நேரத்தில் அதன் சமூக விளைவுகளையும் சுமுகமாக்க முடியும் என்பனது போலி வாதம் ஆகும். இத்தகைய "சுதந்திரம்" உண்மையில் பெயரளவிற்குத்தான் இருக்கும். ஏனெனில் Reulkavik யில் இருக்கும் அரசாங்கம் சர்வதே நாணய நிதியத்தின் தலைமையில் சர்வதேச நிதிய மூலதனத்தின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அதே நேரத்தில், ஐஸ்லாந்தின் பொருளாதார வருங்காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்வு என்று கூறுபவர்களின் கூற்றுக்களில் எத்தகைய நம்பிக்கையும் வைக்கப்படக்கூடாது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவில் இருக்கும் பெரும் சக்தி வாய்ந்த பெருநிறுவனங்களின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கண்டம் நெடுகிலும் அது பொதுப்பணிகள் தனியார்மயமாக்குதலைச் சுமத்தியது, கட்டுப்பாடுகளை அகற்றியது இன்னும் பல தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகள் கண்டத்தின் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்காக செய்துள்ளதற்கு பொறுப்பு ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம், புது உறுப்பினர்கள் ஒருபுறம் இருக்க, அதன் தற்போதைய அங்கத்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குக்கூட ஆக்கம் தரும் நிலையில் இல்லை. அயர்லாந்து மற்றும் லாட்வியா ஆகியவை இந்த ஆண்டு ஐஸ்லாந்து கொண்டதை விட மோசமான பொருளாதார சுருக்கங்களைக் கண்டன. அவை ஐரோப்பிய ஒன்றிய முகாம் உறுப்பு நாடுகளாக இருந்தும் இந்த நிலைதான். அயர்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவிகிதத்திற்கும் மேலாக சுருங்கக்கூடும், லாட்வியாவுடையது மலைக்க வைக்கும் 18 சதவிகிதக் குறைவைக் காணலாம்.

ஐஸ்லாந்தில் உள்ள தொழிலாள வர்க்கம் அதன் சொந்த முன்னோக்கை முன்வைக்க வேண்டும். அது ஐரோப்பா முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கம் தன் பொதுநலன்களை வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு எதிராக பாதுகாக்கும் அடிப்படையில் இருக்கவேண்டும். இதனால் தொழிலாளர்கள், நிதியச் சரிவைக் கொண்டுவந்த வங்கியாளர்களின் ஊக நடவடிக்கைகளுக்கு விலை தரவேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் நிராகரிக்க வேண்டும். சமூகத்தை சோசலிச மறு நிர்மாணம் செய்யப்படுவதற்காக போராட வேண்டும்.