World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Jaffna University students speak to WSWS

இலங்கை: யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்

By Subash Somachandran
11 August 2009

Use this version to print | Send feedback

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும், பல்கலைக்கழகத்தின் சீரழிவு நிலைமை, அடிப்படை வசிதிகள் பற்றாக்குறை மற்றும் வட இலங்கை நகரான யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தற்போதைய இராணுவ ஒடுக்குமுறை பற்றி அண்மையில் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் உரையாடினர்.

கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணம் இன்னமும் பரந்தளவிலான வீதித் தடைகள் மற்றும் இடைவிடாத ரோந்து நடவடிக்கைகளுடன் கனமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளது. பாதுகாப்பு படையினரின் தொந்தரவில் இருந்து பாதுகாப்பதன் பேரில், மாணவர்களின் பெயர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை.

26 ஆண்டுகாலம் நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் போது மாணவர்கள் தலைவர்கள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் இலக்கு வைக்கப்பட்டனர். பலர் உயிரைக் காப்பற்றிக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். வெளியேறாமல் இருந்த பலர், இராணுவத்துடன் இணைந்து செயற்படும் அரசாங்க சார்பு கொலைப் படைகளால் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்.

WSWS நிருபருடன் ஒரு மாணவர் பேசும் போது தெரிவித்ததாவது: "இன்னமும் இராணவத்தின் அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்கிறோம். நாங்களும் எங்களது ஒன்றியமும் என்ன செய்கின்றோம் என்பதை கண்காணிக்க அது பல்கலைக்கழகத்துக்குள் ஒற்றர்களை அனுப்பியுள்ளது. எங்களது கருத்து வெளியிடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

"[இலங்கை ஜனாதிபதி] இராஜபக்ஷ யாழ்ப்பாணத்தை முழுமையாக இராணுவ மயப்படுத்தியுள்ளார். 2005 முதல் 2006 வரை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பல்கலைக்கழகம் மூடப்பட்டே இருந்ததோடு 2007ல் மாணவர் ஒன்றிய அலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த கம்பியூட்டர்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. 2008 ஜனவரியில், யாழ்ப்பாண மாவட்ட மாணவர் ஒன்றிய தலைவர் பஞ்சாட்சரம் குணேந்திரன் அலுவலகத்துக்கு வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்," என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் வசதிகள் மற்றும் அலுவலர் பற்றாகுறை வேதனையளிப்பதாக உள்ளது. அது கொழும்பிலும் தீவின் தெற்கில் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள தனியார் வகுப்பு நடத்தும் நிறுவனங்களையும் விட வறிய நிலைமைக்கும் கிழ் உள்ளது. அறைகளில் போதுமான வெளிச்சம் இல்லை. அதிமான மின் குமிழ்கள் பழுதடைந்துள்ளன அல்லது உடைந்து போயுள்ளன. மின்சார விசிறிகள் வேலை செய்யவில்லை. பல்கலைக்கழக தளபாடங்கள் அசுத்தமாக இருப்பதோடு மாணவர்கள் படிக்கும் அறைகள் தூசி நிரம்பியுள்ளன. பல்கலைக்கழக உணவகப் பகுதியில் நாய்களும் காகங்களும் வட்டமிடுகின்றன. மாணவர்கள் உப வேந்தருக்கு முறையிட்ட போதும் இதுவரை பலனில்லை.

விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் தெரிவித்ததாவது: "எங்களது பீடத்தில் ஒரு மின்சார விசிறிகூட இல்லை. நவீன கல்வி வசதிகளும் முறைகளும் இங்கு இல்லாததால் இதுவரை எங்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை. எங்களுக்கு இணைய வசதிகள் இல்லாததோடு எங்களிடம் கம்பியூட்டர்கள் இருந்த போதும் அவற்றை பயன்படுத்துவதற்கு அறைகள் கிடையாது. எங்களது ஆய்வுக் கூடத்தில் புதிய உபகரணங்கள் இல்லை மற்றும் [2006 நடுப்பகுதியில்] யுத்தம் மீண்டும் தொடங்கிய போது விஞ்ஞான வேலைகளுக்காக இரசாயனப் பொருட்கள் எமக்குக் கிடைப்பது நிறுத்தப்பட்டது.

"எங்களது கல்விக் காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தாலும் நான்கு ஆண்டுகளுக்கு குறைவான காலத்துக்குள் எங்களால் எமது படிப்பை முடிக்க முடியாது. நான் 2005ல் பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அதே சமயம் எனது சகோதரர்களில் ஒருவர் [கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள] களனி பல்கலைக்கழகத்தில் அதே துறையில் படிப்பைத் தொடர்ந்தார். அவர் இப்போது படிப்பை முடித்துவிட்டு இப்போது வேலையும் செய்கிறார். நாங்கள் எமது காலத்தை இங்கு வீனடிப்பதோடு பல மாணவர்கள் தமது படிப்பை கைவிட்டுவிட்டனர்."

மாணவர்கள் தங்குமிடம் கூட்டம் நிறைந்தும் சுகாதாரமற்றும் உள்ளது என அவர் கூறினார்: "மாணவிகள் தங்கும் அறைகளில் நான்கு மாணவிகள் ஒரு அறையை பகிர்ந்துகொள்ள வேண்டும். தண்ணீரில் பற்றீரியா கலந்துள்ளது. தண்ணீர் மாதிரி எடுக்கப்ப்டடு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் பெறுபேறு கிடைக்கவில்லை. ஆனால் மாணவர்கள் இன்னமும் அதே தண்ணீரையே பாவிக்கின்றனர். மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிலையம் ஒன்று இருந்த போதிலும் அங்கு மருந்துக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது."

ஜூலை 03 அன்று பல்கலைக்கழகத்துக்கு வந்த இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநயாகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைருமான டக்ளஸ் தேவானந்தா, தேர்தல் கூற்றமொன்றில் பேசினார். சிறு எண்ணிக்கையிலான மாணவர்களே அங்கு வருகைதந்திருந்த போதிலும், அமைச்சர் வேலையற்ற பட்டதாரிகளை பஸ்களில் அங்கு ஏற்றிவந்த அவர்களுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்தை நடைமுறையில் ஆதரித்ததில் ஈ.பி.டி.பி. அவப்பேர் பெற்றுள்ளது. அது கடந்த வாரக் கடைசியில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலுக்கு தலைமை வகித்தது.

WSWS நிருபரிடம் ஒரு விரிவுரையாளர் தெரிவித்ததாவது: "முப்பது ஆண்டு கால யுத்தம் நாட்டின் ஏனைய பகுதியில் இருந்து இந்த பல்கலைக் கழகத்தை துண்டித்து விட்டது. மாணவர்களுக்கு ஏனைய சமூகத்துடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்கள் ஏனைய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் பரீட்சியம் இல்லாதவர்களாக உள்ளனர். வறிய மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இங்கு வசதிகள் கிடையாது. மற்றும் இங்கு தங்குமிட வசதி பற்றாக்குறையாக உள்ளது."

இந்த பல்கலைகக் கழகத்தில் 2005 மே மாதம் இரு விரிவுரையாளர்களுடன் சட்ட பீடம் தொடங்கப்பட்டது. ஆனால் இராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தை 2006ல் புதுப்பித்தவுடன் அந்த வரிவுரையாளர்களும் வெளியேறிவிட்டனர். அப்போதிருந்து அந்தப் பீடத்துக்கு நிரந்தர விரிவுரையாளர்களோ, நூலகமோ அல்லது கம்பியூட்டர் வசதிகளோ கிடையாது.

சட்ட பீடம் இப்போது இரு பிரிவுகளாக இயங்குகிறது. முதலாம் ஆண்டு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் படிக்கும் அதே வேளை, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கொழும்பில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. "நாங்கள் திருப்திகரமான கல்வியைப் பெறாததோடு பல்கலைக் கழக சூழலிலும் கற்கவில்லை. எங்களால் கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்ற முடியாமல் இருப்பதோடு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையில் வாழ்கிறோம்," என ஒரு சட்ட பீட மாணவர் தெரிவித்தார்.

கலைப் பீட விரிவுரைகள் இப்போது விசேட நிகழ்வுகளுக்காக கட்டப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு பொது மண்டபத்தில் நடைபெறுகிறது.

பல்கலைக் கழக ஊழியர் ஒருவர் மருத்துவ பீட மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமையை விவரித்தார்: "உடலுறுப்பு பகுதியில் நிபுணர்கள் இல்லை மற்றும் நோய்குறி பகுதியில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இல்லை. இங்கு யுத்த நிலைமையில் மாற்றம் இல்லாமையினால் நிபுணர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரத் தயங்குகிறார்கள். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிக்க போதுமான விரிவுரையாளர்கள் இல்லை. மூன்றாம் ஆண்டுக்கு இரு கனிஷ்ட விரிவுரையாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் ஆறு பாடங்களை கற்பிக்கின்றனர். உளவியல் பகுதி ஒரு தற்காலிக விரிவுரையாளரால் கற்பிக்கப்படுகிறது."

யாழ்ப்பாணத்துக்கு தெற்கே கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகவும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் -கிட்டத்தட்ட 300,000 மக்கள்- இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு நிலையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களில் சுமார் 100 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பல மாணவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த முகாங்களில் உள்ளனர்.

மாணவர் ஒன்றிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்ததாவது: "பெற்றோர்கள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால் சுமார் 300 மாணவர்கள் பல்கலைக்கழக உதவியிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்கள் நிதி ரீதியாகவும் மன ரீதியாகவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்."

மாணவர்கள் ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் ஆழமாக எதிர்த்ததோடு பலர் புலிகளின் ஒடுக்குமுறையான ஜனநாயக விரோத வழிமுறைகளையும் விமர்சித்தனர்.

ஒரு மாணவன் தெரிவித்ததாவது: "எந்தவொரு கட்சியும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடப் போவதில்லை. அவர்கள் அனைவரும் தமது சொந்த நலன்களை பாதுகாப்பது பற்றி அக்கறை காட்டுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னர் புலிகளை பிரதிநிதித்துவம் செய்தது. அதற்கு 22 பாராளுமன்ற உறுப்பின்ரகள் இருந்தனர். ஆனால் படுகொலை யுத்தத்தில் இருந்து தமிழ் மக்களைக் காக்க எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இப்போது அவர்கள் இந்தியாவும் சர்வதேச சக்திகளும் தம்முடன் இருப்பதாகக் கூறிக்கொள்வதோடு அந்தச் சக்திகளின் ஆதரவுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அவர்கள் எதுவும் செய்யவில்லை."

இன்னுமொரு மாணவர் தெரிவிக்கையில், "புலிகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு இருந்ததாலும் மற்றும் அவர்கள் மக்களை தமது சொந்த குட்டி அரசின் மூலம் ஒடுக்கியதாலுமே வன்னியில் தோல்வி கண்டதற்கான ஒரு காரணம். எங்களது மாணவர்களுக்கு இந்தத் தேர்தலில் [யாழ்ப்பாண மாநகரசபை] அக்கறை இல்லை. 300,000 மக்கள் அகதி முகாங்களில் இருக்கும் போது எங்களுக்கு தேர்தலொன்று தேவையில்லை," என்றார்.