World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

The Google Book Search copyright settlement and the future of information

கூகிள் நூல்கள் தேடுதல் பதிப்பு உரிமை உடன்பாடும் தகவல்பிரிவின் வருங்காலமும்

முதல் பகுதி

By K. Reed
12 August 2009

Use this version to print | Send feedback

கூகிள் நூல்கள் தேடுதல் உடன்பாடு பற்றிய இரு கட்டுரைத் தொடரின் முதல் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் முடிவுரைப் பகுதி வெளியிடப்படும்.

ஜோர்ஜ் ஓர்வெல் இன் 1984ல், நாயகன் வில்ஸன் ஸ்மித் "அந்த புத்தகம்" என்று அறியப்பட்டிருந்த ஒரு நூலின் பிரதியை, தான் வசிக்கும் கடினமான உலகின் உண்மையை பற்றி அறியும் பேரார்வத்தில் இரகசியமாக பெறுகிறார். Thought Police எனப்படும் சிந்தனைவடிவ போலீசார் தடைசெய்யப்பட்ட நூலை படித்ததால் அவரைக் கைது செய்த அளவில் அவருடைய அறியும் ஆர்வம் தடுக்கப்பட்டது.

1984ல் கூகிள் நூல் தேடுதலை கண்டறிந்து நீங்கள் ஒரு புதினத்தை இணைய உடன்நிகழ்வில் (Online) படிக்க முற்பட்டால், புதிரான வகையில் உங்களுக்கு ஓர்வெல்லிய அனுபவ கணம்தான் ஏற்படக்கூடும். ஒரு சில பக்கங்களை படித்தபின், கீழ்க்கண்ட எச்சரிக்கை தோன்றும்; "பார்வைக்கு இல்லாத ஒரு பக்கத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் அல்லது இத்தோடு இப்புத்தகத்தை படிக்கும் வரம்பு வந்துவிட்டது." கூகிள் புத்தகம் தேடுவதில் எதுவும் தடை செய்யபடவில்லை என்றாலும் (குறைந்தபட்சம் இதுவரை), எவரோ ஒருவர், அல்லது துல்லியமாகக் கூற வேண்டும் என்றால் ஏதோ ஒன்று உங்களைக் கண்காணிக்கிறது!

கூகிளின் ஓர்வெல் 1949 சிறப்பு நூல் 1990 Signet Classic பதிப்பின் டிஜிட்டல் பிரதி ஆகும்; இது பதிப்பு உரிமை கட்டுப்பாடுகளின்கீழ் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். இதைப்பொறுத்த வரையில், புத்தகம் தேடுதல் முறை எத்தனை பக்கங்கள் பார்க்கப்பட்டன என்பதை கண்டறிகிறது; அதன்பின் பதிப்பு உரிமை வைத்திருப்பவர் வரையறை செய்துள்ள குறிப்பிட்ட வரம்பு வந்தவுடன் கூகிள் உங்கள் தேடுதல் முயற்சிகளை நிறுத்திவிடும். உங்கள் வில்சன் ஸ்மித் இன் விதி பற்றி அறிய நீங்கள் விரும்பினால், 1984 புத்தகப் பிரதி ஒன்றை வாங்க வேண்டும் அல்லது உங்கள் உள்ளூர் நூலகத்தில் வாடகைக்கு அந்நூலைப் பெற வேண்டும்.

கூகிள் கீழ்க்கண்ட விளக்கத்தை கொடுக்கிறது. "கூகிள் புத்தகம் தேடுதலில் நீங்கள் பல புத்தகங்களை முன்பார்வையிட முடியும்; அவற்றுள் பல இன்னும் பதிப்பு உரிமையில் இருப்பதுடன், அவை வெளியீட்டாளர்களினதும், ஆசிரியர்களினதும் அனுமதியுடன் காண்பிக்கப்படுகின்றன. ஒரு புத்தகம் விற்கும் நிலையத்தில் காண்பதுபோல், "இந்த மட்டுப்படுத்தப்பட்ட முன்பார்வையை" நீங்கள் மேற்கொள்ளலாம், ஆனால் பதிப்பு உரிமை பெற்றவர் அனுமதித்துள்ளதற்கும் மேலதிகமான பக்கங்களை பார்வையிட முடியாது."

"நீங்கள் ஒரு புத்தகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச பக்கங்களை பார்வையிட்டபின், உங்கள் பார்வையில் இருந்து மற்ற பக்கங்கள் அகற்றப்பட்டுவிடும். "இப்புத்தகத்தை வாங்கவும்" என்று முன்பார்வை பக்கத்தின் வலதுபக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகளை (links) உபயோகித்து எந்தப் புத்தகத்தின் முழு பிரதியையும் வாங்கலாம்." கூகிள் உங்களுக்கு புத்தகங்களை வாடகைக்கு கொடுக்கும் நூலகங்களுடைய தொடர்பையும் கொடுக்கும்.

பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை "மட்டுப்படுத்தப்பட்ட முன்பார்வையிடல்" (Limited preview) என்பது கூகிளில் புத்தகம் தேடுதலில் ஒரு வகையாகும். பொதுப் பிரிவில் இருக்கும் நூல்களின் தலைப்புக்கள் "முழுத்தோற்றத்தில்" காட்டப்படும்; அவை பின்னர் இணைய உடன்நிகழ்வில் படிப்பதற்காக உங்கள் கணினிகளில் இறக்கி வைக்கப்படவும் முடியும். மற்றும் இரு விருப்புரிமைகளாவன: "கண்ணோட்டம்" (snippet view) என்ற முறையில் புத்தகத்தை பற்றிய அடிப்படைத் தகவல் பொருளுரையின் சில பகுதிகளுடன் கொடுக்கப்படும்; "முன்பார்வை இல்லை" (no preview) என்னும்போது அடிப்படைத் தகவல் மட்டும் நூலக அட்டையில் பட்டியலிட்டுக் கூறியிருப்பது போன்ற தகவல்களை மட்டும் கொடுக்கும்.

கூகிள் புத்தம் தேடுதல் என்றால் என்ன?

கூகிள் புத்தகம் தேடுதல் என்ற முறை அச்சடிக்கப்பட்ட புத்தக பக்கங்களின் உள்ளடக்கத்தை தேடக்கூடிய பத்திகளாக பதிவெடுத்துவைத்து இணைப்பதாகும். கூகிளின் தகவல் தொகுப்பில் இருக்கும் புத்தகம் ஒன்று வலைத்தள தேடுதலில் இருந்தால் (கூகிள் மூலம்தான்), தேடிய புத்தகம் பட்டியலில் இடப்பட்டு காண்பிக்கப்படும். அதன் புத்தகம் தேடும் குறிப்பு பட்டியலில் நான்காவது இடத்திற்குள் தோன்றும் என கூகிள் உறுதியளிக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள 1984 உதாரணத்தில், "George Orwell 1984" என்பது பற்றிய தேடல் புத்தகம் தேடும் இணைப்பை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் கொடுக்கிறது.

நிறுவனம் அதனது சேவையின் பெயரை முதலில் இருந்த Google Print என்பதில் இருந்து Google Book Search (கூகிள் அச்சுப்பதிப்பு என்பதில் இருந்து கூகிள் புத்தகம் தேடல் என) மாற்றியது. இதற்குக் காரணம் மக்கள் தொழில்நுடப்பத்தை பயன்படுத்தும் வகைதான். பல நேரங்களிலும் வாசகர்கள் புத்தகம் தேடலுக்குள் ஒரு புத்தகத் தலைப்பை, வாடிக்கையான வலைத்தள தேடுதலில் ஒரு சொல் அல்லது சொற்றொடர் தேடும்போது கண்டறிகின்றனர். கூகிள் அதன் இணைய உடன்நிகழ்வில் புத்தகப் பொருளுரையில் தேடப்பட்ட சொற்றொடரை கண்டுபிடிக்கும்போது தலைப்பு விளைவுகள் பட்டியலில் காட்டப்படுகிறது. தலைப்பை அமுக்கும் போது, தேடும் சொற்றொடர் புத்தம் தேடல் சன்னலில் பார்க்கும் பகுதி முழுவதிலும் சிறப்பாகக் காட்டப்படுகிறது

கூகிளின் புத்தகம் தேடுதல் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமான தொழில்நுட்ப சாதனை ஆகும். 2004ம் ஆண்டு ஹார்வர்ட், மிச்சிகன் பல்கலைக்கழகம், நியூயோர்க் பொது நூலகம், ஆக்ஸ்போர்ட், ஸ்டான்போர்ட் ஆகியவற்றின் பங்காளித்தனத்துடன் அறிவிக்கப்பட்டு கூகிள் அச்சு நூலகத் திட்டம் என்று அழைக்கப்பட்ட இது பின்னர் இந்த நிறுவனங்களில் இருக்கும் முழு தொகுப்புக்களையும் டிஜிட்டல் முறையில் மாற்ற முற்பட்டது. இந்த நூலகங்களில் இருக்கும் மொத்த நூல்களின் எண்ணிக்கை 15 மில்லியனுக்கும் மேலானவை ஆகும். அக்டோபர் 2008 வரை கூகிள் 7 மில்லியன் புத்தகங்கள் பதிவெடுக்கப்பட்டு (Scanned) புத்தகம் தேடுதல் மூலம் காணப்பட முடியும் என்று கூறியுள்ளது.

உண்மையில் Universal digital library (அனைத்துலக டிஜிட்டல் நூலகத்தை) தோற்றுவித்தல் என்பது, எக்காலத்திலும், எந்த இடத்திலும், எவராலும் எழுதப்பட்டதை படிக்க வாய்ப்புள்ள ஒரு குறிப்பிடத்தக்க சமூக சாதனையாக இருக்கும். இதன் தொழில்நுட்ப குறிப்புக்கள் படைப்பாற்றலுடன் கெவின் கெல்லியால் அவருடைய மே 14, 2006 நியூ யோர்க் டைம்ஸ் இதழ் கட்டுரையான "Scan This Book!" (இந்த புத்தகத்தை பதிவெடு) என்பதில் சுருக்கமாகக் கூறப்பட்டது. "இந்த அனைத்து தகவல்களும் இப்பொழுது உலகிலுள்ள அனைத்து நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் இருக்கின்றன. முழுமையான டிஜிட்டல் பதிவு ஆன பின்னர், மொத்த தொகுப்பும் (தற்போதைய தொழில்நுட்ப முறைகளில்) 50 petabyte வன்தட்டுக்களில் (hard disks) அடக்கி வைக்கப்பட்டு விடமுடியும் (1 petabyte=1000terabytesக்கு சமமாகும்). இன்று 50 petabyte இருக்கும் புத்தகங்களை வைப்பதற்கு ஒரு சிறு நகர நூலக அளவு இருக்கும் கட்டிடம் நமக்குத் தேவைப்படும். நாளைய தொழில்நுட்பத்தில், இவை அனைத்தும் உங்கள் iPod ல் அடங்கிவிடும். அது நடக்கும்போது, அனைத்து நூலகங்களில் இருக்கும் நூல்களும் உங்கள் மூளைக்குள் மெல்லிய வெள்ளை மின்இழைகள் மூலம் நேரடியாக செருகப்படாமல் இருந்தால் உங்கள் பணப்பை அல்லது கைப்பையில் அடங்கிவிடும்."

ஆனால் இதுதான் உண்மையிலேயே கூகளில் சிந்தனையில் இருந்ததா? கூகிளின் புத்தக தேடல் ஒன்றும் அச்சு நூல்கள் பற்றிய ஒரே இணைய உடன்நிகழ் (online) நூலகம் அல்ல. அரசாங்கம் அல்லது இலாபமற்ற இணைய உடன்நிகழ் நூலகத் திட்டங்களான American Memory, Project Gutenberg அல்லது Internet Archive இவற்றில் இருந்து அது வேறுபட்டது. ஏனெனில் இது தனியார் உரிமையும், மிகசக்தி வாய்ந்த இணையதள நிறுவனங்களினால் நிதியம் பெறுவது. ஆரம்பத்தில் இருந்தே, புத்தக தேடல் திட்டம் என்பது கூகிள் நிறுவனர்களான Sergey Bri, Larry Page இற்கு ஒரு முன்னுரிமையாகத்தான் இருந்தது. இதை அவர்கள் கூகிளின் முக்கிய கூறுபாடான பணியாக "உலகின் தகவல்களை சீரமைத்து, அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில், பயன்படுத்தக்கூடிய விதத்தில்" இருக்க வேண்டும் என்றுதான் கண்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பகிரங்க வணிக இணையத்தள தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று, சந்தை மூலதனம் கிட்டத்தட்ட 140 பில்லியன் டாலரை கொண்டு இருக்கும் நிலையில், கூகிள் கணிசமான விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது. நிறுவனத்தின் முயற்சியின் தன்னை தீமை இல்லாத ஒன்று நிரூபித்துக் கொள்ளுவதில் (வழமைக்குமாறான நிறுவன கோஷம் "தீமையாக இராதே" என்பதே), கூகிள் பல இடங்களில் இருந்து தாக்குதலுக்கும் உட்பட்டுள்ளது. பயன்படுத்துவோர் தேடும் நடவடிக்கையை பின்தொடர்ந்து பதிந்து வைத்தல் என்பதால் அந்தரங்கத்தை மீறுதல், சீன அரசாங்கத்தின் தணிக்கை, கண்காணிப்பு முறையுடன் ஒத்துழைப்பு கொடுத்தது, பயன்படுத்துவோர் தகவலை சேகரித்து தன்னுடைய மகத்தான விளம்பர வருமானத் தேவைகளுக்கு அளித்தல் போன்றவை இதில் உள்ளது. அதன் 8 பெடாபைட்ஸ் நினைவாற்றல் என மதிக்கப்பட்டுள்ள 700,00 சேவையகம் (Servers) பாரியளவு விசையை பயன்படுத்துவதற்காக சீற்றத்திற்கும் உட்பட்டுள்ளது.

கூகிளின் பெருநிறுவன செயற்பாடுகளின் இந்தக் கூறுபாடுகள் சமூக, அரசியல் விளைவுகளின் எதிர்மறை உதாரணங்கள் என்பது தெளிவு. உலகின் தகவல் ஒழுங்கமைப்பாளர் தனிச்சொத்துடமை மற்றும் இலாப நோக்கில் செயல்படும் தன்மையை கொண்டுள்ளது. இதுதான் கூகிள் புத்தக தேடல் சேவை முறைக்கு அதன் இனிப்பு-கசப்பு கலந்த தன்மையைக் கொடுக்கிறது.

புத்தகம் தேடும் தொழில்நுட்பத்தில் இயைந்துள்ள முரண்பாடுகள் தற்கால வாழ்வின் உண்மை பற்றிய உதாரணங்கள் ஆகும். டிஜிட்டல் செய்தி ஊடக தொழில்நுட்பங்கள் அவை தோன்றிய சட்ட, சமூக வடிவமைப்புக்களில் இருந்து பெரிதும் நகர்ந்துவிட்டன. பதிவு செய்யப்பட்ட இசையில் பங்கு பற்றிய விவாதங்களைப் போலவே (Napstar), முறையற்று பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் You Tube மூலம் வருவதைப் போல், அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் தொகுப்பு முற்றிலும் தவிர்க்க முடியாமல் டிஜிட்டல் தகவலாக இணையத்தளத்தில் வருவது என்பது பதிப்பக வணிகம், பதிப்பு உரிமை காப்பு முறை, அரசாங்கம் மற்றும் கூகிளையும் பெரும் கொந்தளிப்பில் தள்ளியுள்ளது.

நம் டிஜிட்டல் உலகம் இதுகாறும் நம் வாழ்வில் எடுத்துக் கொண்ட பொருட்களை, புத்தகங்கள், புத்தகப்பதிப்பு, நூலகம் ஆகியவற்றை பெரும் புரட்சிக்கு உட்படுத்தியுள்ளது. மனிதப் பண்பாட்டில் இந்த முக்கியமான வளர்ச்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு முற்றிலும் புதிய முறையில் மாற்றப்படுகின்றன. ஹூட்டன்பேர்க்கின் (Gutenberg) கண்டுபிடிப்பான அச்சிடும் முறையின் பாரிய உற்பத்தியும் (அதையொட்டி கல்வியறிவின் விரிவாக்கமும்) மத்தியகாலத்தின் முதலாளித்துவ சமூகத்தின் உருவாக்கத்துடனான அதனது குறுக்கறுப்பை போல், தற்போதைய டிஜிட்டல் செய்தி ஊடகப் புரட்சி எழுச்சி பெற்று மாற இருக்கும் சமூகத்தின் சோசலிச மாற்றத்தின் தொழில்நுட்ப அஸ்திவாரங்களில் ஒன்றைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இங்கும் இத்தொழில்நுட்பம் முன்னேற்றம், முழுமனிதகுலத்தினதும் சிறப்பு என்பதற்குப் பதிலாக அழிப்பு, பிற்போக்கு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

2005 பதிப்புரிமை பிரச்சினையில் என்ன கூறுபாடுகள் உள்ளன?

ஆரம்பத்தில் பதிப்பு உரிமை பற்றி கூகிளின் விளக்கம் அமெரிக்க பதிப்பாளர்கள் சங்கம் (AAP) ஆசிரியர்கள் வழிகாட்டி (AG) ஆகியவற்றுடன் மோதலுக்கு உட்பட்டது. இந்த இரு அமைப்புக்களும் தனித்தனியே 2005ல் பதிவுரிமை மீறல் வழக்குகளை தொடர்ந்தன (The McGraw-Hill Companies et al. v. Google Inc., The Authors Guild et al v.Google Inc.): அவை புத்தகம் தேடல் திட்டத்தை நிறுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன.

இலக்கிய படைப்புக்களின் பதிப்புரிமை கொண்டிருப்போரின் இசைவு இல்லாமல் அவர்களுடைய புத்தகங்களை டிஜிட்டல் முறையில் பதிவு கூகிள் பதிப்புரிமை சட்டத்தை மீறி இணைய உடன்நிகழ்வில் கொடுத்ததாக பிரதிவாதிகள் கூறினர். மேலும் இந்நூல்களில் இருந்து "கூகிள் திட்டமிட்டு ஒப்புதல் இல்லாத வணிகப் பயன்பாட்டை" பெறு முனைவதை தடுக்கும் வகையிலும் நீதிமன்ற உத்தரவை நாடின.

தன்னுடைய திட்டத்தை காக்கும் வகையில் இணையதளத்தில் தேடக்கூடிய வகையில் புத்தகங்களின் பிரதிகளை தோற்றுவிப்பது "நியாயமான பயன்படுத்தல்தான்" என்றும், இது அமெரிக்க பதிப்புரிமை சட்டத்தின் நோக்கத்திற்கு உட்பட்டுத்தான் உள்ளது என்றும் கூகிள் கூறியது. "ஆசிரியர்களும் பதிப்பாளர்களும் புதிய படைப்பை தோற்றுவிக்க ஊக்கம் பெறுவதை உறுதிப்படுத்தத்தான் பதிப்புரிமை சட்டம் உள்ளதே ஒழிய, அத்தகைய படைப்பு உள்ளது என்பதை மக்கள் கண்டுபிடிப்பதற்கு தடை செய்யும் நோக்கம் இல்லை. மக்கள் புத்தகங்களை கண்டுபிடிக்க உதவுவதால், நாங்கள் அவர்கள் வெளியிடுவதற்கான ஊக்கத்தை அதிகரிக்கிறோம். சொல்லப்போனால், புத்தகம் பற்றி கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், அது வாங்கப்பட மாட்டாது.... எனவேதான் நாங்கள் உறுதியாக இத்திட்டம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், பதிப்பாளர்களை, விற்பனையாளர்கள் என்று அனைவருக்கும் நல்ல செய்தி என நம்புகிறோம்." என்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் திரைக்குப் பின் சட்ட செயல்களுக்கு பின்னர், நீதிமன்றத்திற்கு புறத்தே என்ற உடன்பாடு அக்டோபர் 28, 2008ல் ஏற்பட்டது. AAP, AG உடனான உடன்பாடு முத்தரப்பின் நலன்களையும் திருப்திப்படுத்தியது என்று கூகிள் அறிவித்துள்ளது. இந்த உடன்பாடு (இங்கு கிடைக்கும்), அச்சில் இல்லாத நூல்களை மறுபதிப்பு செய்ய இணைய உடன்நிகழ்விற்கு ஒரு வடிவமைப்பை கொடுக்கிறது. மற்றும் பதிப்பு உரிமை உள்ள/இல்லாத படைப்புக்கள், மற்றும் பதிப்புரிமை பெற்ற புத்தகக்கடைகளில் எளிதில் கிடைக்கும் நூல்கள் பற்றியும் இது உள்ளடக்கியுள்ளது. Book Rights Registry எனப்படும் இழப்பீட்டு கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இது புத்தகம் தேடும் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு பங்கு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு ஒரு புத்தகத்தை பதிப்பிக்கப்பட்ட அல்லது பகிரங்கமாக விநியோகிக்கப்பட்ட எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட புத்தகமுறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று என்று வரையறுக்கிறது. இதழ்கள், வெளியிடப்படாத தனிப்பட்ட சொந்த குறிப்புக்கள், கடிதங்கள் அல்லது அதிக அளவு இசைக் குறிப்புக்கள், பாடல்கள் இவற்றை குறிப்பாக ஒதுக்குகிறது.

இந்த உடன்பாடு வெகு எளிமை, AG, AAP நலன்களை திருப்திப்படுத்துவதின் மூலம் பொது அக்கறையும் பாதுகாக்கப்படும் என்று அனைவரும் நம்ப வேண்டும் என்று கூகிள் நினைக்கிறது. ஆனால் இந்த உடன்பாடு இதில் தொடர்பில்லாத அனைவரின் நலன்களையும் பாதிக்கிறது. குறிப்பாக பொது மக்களை. இதற்கிடையில் இந்த உடன்பாடு பெரும் சிக்கல் வாய்ந்தது (134 பக்கங்கள், 15 பிற்சேர்க்கைகள் கொண்டது). இந்த வழக்கை விசாரிக்கும் கூட்டாட்சி நீதிமன்றம் ஆசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள் இன்னும் நான்கு மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று கெடுவை விரிவாக்கியுள்ளது.

இணைய உடன்நிகழ்வு பதிப்புத் மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் மகத்தான நிதிய நலன்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. American Association of Publishers என்னும் அமைப்பு பல பில்லியன் டாலர் தொழிலை, 300 உறுப்பினர் நிறுவனங்களை கொண்டு பிரதிபலிக்கிறது. இதில் உலகின் மிகப் பெரிய பதிப்பாளர்களான McGraw-Hill (புத்தகம் தேடல் வழக்கில் முக்கிய பிரதிவாதி), Houghton Miffin Harcourt, Simon & Schuster போன்றவை அடங்கும்.

McGraw-Hill "நிதியப்பணிகள், கல்வி, வணிகப் சேவைசந்தைகள்" ஆகியவற்றிற்கு தேவையான தகவல்களை தயாரித்து பகிர்ந்தளிப்பதில் உலகின் தலைமையில் உள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 2008ல் 6.3 பில்லியன் டாலராகவும், நிகர இலாபங்கள் 800 மில்லியன் டாலராகவும் இருந்தன. நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹரோல்ட் "டெரி" McGraw III கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார்.

புத்தகப் பதிப்பு தொழில் சமீபத்திய ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்ப தாக்கம், வாங்குதல் முறையில் மாறுதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் இணைந்த பாதிப்பினால் கணிசமான இழப்பை பெற்றுள்ளது. McGraw-Hill நிறுவனத்திற்கு இது 2008ம் ஆண்டு விற்பனையில் 6% குறைவும், இதே காலத்தில் நிகர இலாபத்தில் 21% என்று பொருள் ஆகும். நிர்வாகம் சமீபத்தில் 550 பணிநீக்கங்களை அறிவித்தது. ஏனெனில் அது வரவுசெலவுத்திட்ட குறைப்புக்களால் கல்விமுறை கடுமையாக பாதிக்கப்பட்டதால் பாடப்புத்தகங்களுக்கு செலவழித்தல் குறைந்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட இசை, ஒளிப்பதிவு தொழிற்துறை நெருக்கடிகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொண்ட புத்தக பதிப்பாளர்களும் ஆசிரியர் சங்கங்களும் கூகிளுடன் இணைந்து செயல்பட்டு ஒரு இலாபகரமான வணிக மாதிரியைக் கட்டமைக்க விரும்புகின்றனர். இது சட்டவிரோதமாக டிஜிட்டல் பதிவுகள் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்விதத்தில் கூகிள் புத்தக தேடல் உடன்பாட்டின் தலையாக அக்கறை கொள்ளையடித்தல் மற்றும் அனுமதியின்றி இணைய உடன்நிகழ்வில் பதிவு செய்யப்பட்டுள்ள நூல்களை வழங்குதல் ஆகியவற்றைத் தடுக்க வேண்டும் என்பதாகும்.

தொடரும்....