World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Pentagon to Obama: Send more troops or lose war in Afghanistan

ஒபாமாவிற்கு பென்டகன் தகவல்: கூடுதலான படைகளை அனுப்புக அல்லது ஆப்கானிஸ்தானத்தில் போரில் தோல்வி

By James Cogan
13 August 2009

Use this version to print | Send feedback

ஒரு அவமானம் தரக்கூடிய அமெரிக்க தோல்வியை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் தவிர்த்து, தலிபான் எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கைகளுக்கு இடையே ஒபாமா நிர்வாகத்தால் ஆப்கானிஸ்தானத்தில் மற்றொரு பெரும் போர் விரிவாக்கத்தை அறிவிப்பதற்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு ஆப்கானிஸ்தானில் தளபதியாக இருக்கும் ஜெனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் அமெரிக்கச் செய்தி ஊடகத்தை தொடர்ந்து பயன்படுத்தி இன்னும் கூடுதலான படைகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்புதல், ஆக்கிரமிப்பிற்கு ஊக்கம் தரும் வகையில் அதிக பணம் ஒதுக்கப்படுதல் ஆகியவற்றை மக்கள் ஏற்கும் வகையில் சூழலை உருவாக்க முற்பட்டுள்ளார். இந்த வாரம் வெள்ளை மாளிகையில் போர் பற்றி ஒரு ஆய்வை தளபதி கொடுக்க இருந்தார். ஆனால் ஆகஸ்ட் 20 ஜனாதிபதி தேர்தல்களுக்கு பின்னர் கொடுக்கப்படலாம் என்று தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

திங்களன்று "தலிபான் இப்பொழுது வெற்றி பெற்றுவருகிறது" என்ற கடுமையான தலைப்பின்கீழ் வெளியிடப்பட்ட வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு வார இறுதியில் கொடுத்த பேட்டியிலிருந்த சில பகுதிகளில் மக்கிரிஸ்டல் மோதல் இப்பொழுது "முக்கியமான, முடிவு கொடுக்கும் கணத்தில்" இருப்பதாக அறிவித்துள்ளார். "இப்பொழுது தலிபான் ஒரு ஆக்கிரோஷமான விரோதி" என்றும் ஆக்கிரமிப்பு படைகளுக்கு அவர்களுடைய "செயற்பாடு, முன்னெடுப்புகளை" ஆகியவற்றை திறமையுடன் நிறுத்த 12 மாதங்கள் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மக்கிரிஸ்டல் தன்னுடைய திட்டத்தை முழுமையாக வெளியிடாவிட்டாலும், பெயரிடப்படாத அதிகாரிகள், பரிசீலனையில் பங்கு பெற்றவர்கள், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு திட்டம் பற்றிய விவரங்கள் எப்படி இருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர். இவற்றுள் அடங்கியிருப்பவை வருமாறு:

* ஆப்கானிய அரசாங்கம் இராணுவத்தை 135,000ல் இருந்து 240,000 ஆகவும், போலீஸ் பிரிவை 82,000 என்பதில் இருந்து 160,000 ஆகவும் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரிப்பதற்கு நிதியளித்தல்.

* இன்னும் 10,000 அமெரிக்க துருப்புக்களை நீண்டகாலம் அங்கு நிலைநிறுத்தி ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் பயிற்சியாளர்களாக, கண்காணிப்பாளர்களாக செயல்படச் செய்தல். பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் குறைந்தது 5 ஆண்டுகளாவது இந்த வழிவகை முடிப்பதற்கு தேவை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

* தலிபான் செல்வாக்கின்கீழ் இருக்கும் இடங்களுக்கு எதிரான தாங்குதல்களை ஒருங்கிணைக்க தேவைப்படும் இரண்டில் இருந்து எட்டு கூடுதலான பிரிகேட் படையினரை குறுகியகாலத்திற்கு நிலைநிறுத்துதல். இதற்கு 10,000 முதல் 60,000 துருப்புக்கள் மற்றும் இதர உதவியளர்கள் தேவை. தற்போதைய அமெரிக்காவின் ஹெம்லாந்து மாநில நடவடிக்கைகளில் எழுச்சியாளர்கள் பெரிதும் தப்பியோட முடிந்ததற்குக் காரணம் போதுமான துருப்புக்கள் இல்லாதது என்ற இராணுவத்தின் கவலையை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்தவாரம் McClatchy செய்தித்தாட்களுக்கு வந்துள்ள கசிவு அமெரிக்க அரசாங்கம் பல ஆலோசனை பணிகளில் அலுவலர்களை பெரிதும் உயர்த்த வேண்டும் என மக்கிரிஸ்டல் விரும்புவதை குறித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பொதுப்பணி குழுவினரின் எண்ணிக்கை 2008 கடைசியில் இருந்த 560ல் இருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 1,000 ஐ எட்டும் என்றும் 2010 நடுப்பகுதிக்குள் 1,350 என உயரும் என்றும் கணித்துள்ளது. அடிப்படையில் இவர்களின் பங்கு காபூலில் இருக்கும் கைப்பாவை அரசாங்கத்தின் முழுப்பிரிவுகளையும் நடத்துவது ஆகும்.

மக்கிரிஸ்டலுடைய கருத்துக்கள் மத்தியக்கட்டுப்பாட்டு தலைவர், தளபதி டேவிட் பெட்ரீயஸின் வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது என நம்பப்படுகிறது. அவர்தான் ஈராக்கில் அமெரிக்காவின் படைகளை இயக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார்.

அமெரிக்க ஆளும் வட்டங்களில் உள்ள சிந்தனை மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுக்கான நிலையத்தின் (Center for Strategic and International Studies-CSIS) மூத்த வெளியுறவுக் கொள்கை பகுப்பாய்வாளராக இருக்கும் ஆன்டனி கோர்ட்ஸ்மானால் வெளியிடப்பட்டது. சமீபத்தில்தான் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து திரும்பியுள்ள கோர்ட்ஸ்மன், மக்கிரிஸ்டலால் தன்னுடைய பரிசீலனையைத் தயார் செய்ய உதவுமாறு அழைக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 10ம் தேதி, அவர் தன்னுடைய முடிவுகளை பிரிட்டிஷ் தளமுடைய டைம்ஸில், "கூடுதலான படைகள், இங்கிருந்து குறைந்த கட்டளைகள், நாம் தீவிரமாவோம்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

புஷ் நிர்வாகம் 2007 வரை தீவிரமாக தலிபான் எழுச்சியை கணக்கில் எடுத்துக்கொள்ளாததற்காக அதை கோர்ட்ஸ்மன் கண்டித்து, நேட்டோ நாடுகள் போதுமான படைகளை அளிக்காததற்காகவும், தங்கள் படைகள் பயன்படுத்ததுல் பற்றி கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதற்கும் குறைகூறியுள்ளார். வாஷிங்டனும் நேட்டோவும் "அரை தசாப்தத்திற்கும் மேலாக விரோதியை ஆரம்ப முயற்சி எடுக்க அனுமதித்துவிட்டது" என்றும் அவர் அறிவித்தார்.

ஜனாதிபதி ஹமித் கார்சாயியின் ஆப்கானிய அரசாங்கம் "ஊழலான, மிக அதிக அளவு அதிகாரம் மையப்படுத்தப்பட்ட, திறனற்ற, ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியில் செயலற்ற" அரசாங்கம் என்று அவர் முத்திரையிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் உதவி என்பது, "அதிகாரத்துவ பிளவுகளால் முடக்கம் கண்டுள்ள செயல்படாத, வீணான குழப்பம்" என்றும் கடுமையாக சாடினார்.

"இதன் விளைவு தலிபான் நாடுகடத்தப்பட்ட, தோல்வியுற்ற குழு என்பதில் இருந்து நேட்டோவையும் ஆப்கானிய அரசாங்கத்தையும் தோற்கடிக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் ஒரு சக்தியாக வர்ந்துவிட்டது" என்று கோர்ட்ஸ்மன் அறிவித்தார். 2003ல் 30 மாவட்டங்களில் இருந்து எழுச்சி 2008 இறுதியில் 160 மாவட்டஙகளில் வந்துவிட்டது. ஆக்கிரமிப்பு படைகள் மீது அது நடத்தும் தாக்குதல் அக்டோபர் 2008ல் இருந்து ஏப்ரல் 2009 வரை 60 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. ஜூலை மாதம் 75 அமெரிக்க படையினரும் நேட்டோ துருப்புக்களும் கொலை செய்யப்பட்டன. இது முழுப் போரிலும் மிக அதிக எண்ணிக்கையாகும். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர். ஆகஸ்ட்டில் இதுவரை மற்றும் ஒரு 27 படையினர் உயிரிழந்துள்ளனர்.

கோர்ட்ஸ்மனுடைய பரிகாரத் திட்டம் "மூன்றில் இருந்து ஒன்பது கூடுதலான போரிடும் பிரிகேடுகளை" ஏற்கனவே இந்த ஆண்டு ஒபாமா உத்தரவிட்ட 21,000க்கும் அதிகமாக அனுப்ப வேண்டும், ஆப்கானிய இராணுவம் போலீஸ் ஆகிவற்றின் எண்ணிக்கை இரு மடங்காக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் இருந்து ஊழல் கூறுபாடுகளை அகற்றுதல், "பிளவுற்ற, பெரும் திறமையற்ற ஊழல் மிகுந்த சர்வதேச உதவி முயற்சிகளை" சீரமைத்தல், மற்றும் பாக்கிஸ்தான் எல்லை பழங்குடி மக்கள், ஆப்கானிய எழுச்சிக்கு உதவுபவர்கள்மீது கூடுதலான நடவடிக்கை எடுத்தல் ஆகிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

அமெரிக்க மற்றும் நேட்டோ அரசாங்கங்கள் "தங்கள் மக்களுடன் இன்னும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்; ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு "நீண்ட கால பங்களிப்புவேண்டும்'' என்பது தெளிவாக்கவேண்டும். அடுத்த 12 மாதங்கள் இராணுவ முறையில் தலிபானை அடக்குவதற்கு மிக முக்கியத்துவம் கொண்டவை என்றும் 5 இருந்து 10 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை அமெரிக்காவிற்கு அடிபணிந்த நாடாக வளைந்து கொடுக்கும்விததில் செய்வதற்கு பிடிக்கும் என்ற கருத்தில் கோர்ட்ஸ்மன் போன்ற போர் ஆதரவு உடைய பகுப்பாய்வாளர்களிடையே உடன்பாடு உள்ளது.

எனவே ஆயிரக்கணக்கான இறப்புக்கள், பாரிய நிதிய செலவினங்கள் ஆகியவை ஏற்படும். 2001ல் இருந்து ஆப்கானிஸ்தான் ஏற்கனவே அமெரிக்க கருவூலத்திற்கு $223 பில்லியன் செலவைக் கொடுத்துள்ளது. Brookings Institution உடைய மைக்கேல் ஓ ஹால்னல் வாஷிங்டன் போஸ்ட்டிம் இந்த வாரம் இராணுவ செயற்பாடுகளின் செலவு மட்டுமே வரும் ஆண்டில் $100 பில்லியாக இருக்கும் என்று கூறியுள்ளார். முன்னாள் துணை உதவி செயலரான பிங் வெஸ்ட், குறைந்தபட்ச மதிப்பீடாக, இதைத்தவிர, "ஆப்கானிஸ்தான படைகளினால் ஆண்டு ஒன்றுக்கு $4 பில்லியன் வீதம் மற்றும் ஒரு தசாப்தத்திற்கு செலவு ஏற்படும் என்றும், அதே போன்ற தொகை தனியாக அபிவிருத்திக்கும் தேவை என்றும்" கூறியுள்ளார்.

அமெரிக்க வரவுசெலவுத்திட்டம் எதிர்கொாள்ளும் நெருக்கடி இருந்தபோதிலும்கூட, போரை இன்னும் விரிவாக்கம் செய்தல் என்பது காங்கிரசில் அதிக கடினமில்லாமல் நிறைவேறும் என்று தெரிகிறது. மே மாதம் ஆயுதப் படைகள் குழுவின் 17 ஜனநாயக மற்றும் குடியரசு செனட்டர்கள் கூட்டுக் கடிதம் ஒன்றை ஒபாமாவிற்கு எழுதி ஆப்கானிய இராணுவம் இரு மடங்காகக்கப்பட வேண்டும் என்று கையெழுத்திட்டனர். இது இன்னும் கூடுதலான அமெரிக்க பயிற்சியாளர்களை அனுப்பும் முடிவையும் கொண்டிருக்கும்.

இந்த வாரம் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்சே கிரஹாம் காங்கிரஸின் இரு அவைகளிலும் இருக்கும் ஜனநாயகப் பெரும்பான்மை குடியரசுக் கட்சியுடன் சேர்ந்து கூடுதலான நிதிக்கான வேண்டுகோளுக்கு ஆதரவாக விடையிறுக்குமாறு கோரியுள்ளார். "ஆப்கானிஸ்தானை நாம் "ரம்ஸ்பெல்ட்" ஆக்கிவிட வேண்டாம்" என்று அவர் அறிவித்தார். இது புஷ் நிர்வாகத்தின் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்டை குறிக்கிறது. அவர் இழிந்த முறையில் ஈராக்கிய ஆக்கிரமிப்பு மூத்த தளபதிகள் பரிந்துரை செய்யதில் பாதிபேரைக் காட்டிலும் குறைவான படைகள் மூலம் செயற்படுத்த முடியும் என்று வலியுறுத்தியிருந்தார்.

ஜனநாயகக் கட்சியினருக்கு கிரஹாம் அழைப்புவிட்டார்: "நாம் ஒன்றும் இச்செயலை பலவீன முறையில் செய்யக்கூடாது. நம்மிடம் போதுமான போரிடும் சக்தியும், தேர்ந்த செயற்பாடும் இருந்து நாம் வெற்றி அடைதல் உறுதியாக வேண்டும். வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது."

மக்கிரிஸ்டல் அறிக்கையை முறையாக கசியவிட்டிருப்பதற்கு முக்கிய விடையிறுப்பு ஒபாமாவின் நிர்வாகத்திடம் இருந்து வந்துள்ளது. பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸும் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸும் பல முறை ஜனாதிபதி கூடுதலான படைகள் அனுப்பப்படுவதை "இல்லை எனக் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

அதிக படைகளை அனுப்பும் திட்டம் பற்றிய ஊகங்களை அடக்க வேண்டும் என்று ஒபாமா எந்தவித முயற்சியையும் எடுக்காத தன்மையே, ஏற்கனவே ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதற்கு வலுவான அடையாளம் ஆகும். அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முக்கிய பிரிவுகளால் ஒபாமா பதவிக்கு கொண்டு வரப்பட்டதே எவ்வளவு இரத்தம் சிந்தினாலும், டாலர்கள் செலவழிக்கப்பட்டாலும் கவலை இல்லாமல் ஆப்கானிய போரில் முக்கியத்துவத்தை காட்டுவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள-அரசியல் நலன்களை எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் செழிக்கும் மத்திய ஆசியப்பகுதியில் அதிகரிப்பதற்கும்தான்.