World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka kidnaps LTTE leader

இலங்கை, புலிகளின் தலைவரை கடத்தியது

By Sarath Kumara
15 August 2009

Use this version to print | Send feedback

இலங்கை புலனாய்வுத் துறை ஒற்றர்கள், கடந்த வாரம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புதிதாக நியமிகப்பட்ட தலைவர் செல்வராசா பத்மநாதனை தென் கிழக்கு ஆசியாவில் கைதுசெய்து அவரை கொழும்புக்கு விமானத்தில் கொண்டுவந்தனர். விபரங்கள் தெளிவற்றதாக உள்ள அதே வேளை, இந்த இரகசிய நடவடிக்கையின் மூலம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதோடு சர்வதேச மற்றம் உள்நாட்டு சட்டமும் அவமதிக்கப்பட்டுள்ளது. கே.பி. என்றழைக்கப்படும் பத்மநாதன், பல ஆண்டுகள் புலிகளின் முக்கிய நிதி சேகரிப்பாளராகவும் ஆயுதத் தரகராகவும் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மே மாத நடுப்பகுதியில் இலங்கை இராணுவம் புலிகளை தோற்கடித்து, வே. பிரபாகரன் உட்பட அதன் பிரதான தலைவர்களை கொன்ற பின்னர், பத்மநாதன் தலைமைத்துவத்துக்கு உரிமை கோரியதோடு வெளிநாட்டில் நாடுகடந்த அரசாங்கம் என சொல்லப்படுவதையும் ஸ்தாபிப்பதாக அறிவித்தார்.

இலங்கை அரசாங்கம், குறிப்பாக பத்மநாதனையும் வெளிநாட்டில் உள்ள ஏனைய தலைவர்களையும் இலக்குவைத்து, புலி "பயங்கரவாதிகளை" நசுக்க உலகம் பூராவும் உள்ள நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துவருகிறது. புலிகளின் மிச்சசொச்சங்களையும் அழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும் என்பதையே கடந்த வார கைது நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பத்மநாதன் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டதாக முதலில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த போதிலும், தாய் பிரதமர் அப்ஹிசிட் வெஜஜிவா அதனை நிராகரித்தார். அதைத் தொடர்ந்து வந்த ஊடக அறிக்கைகள், புலிகளின் தலைவர் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உள்ள டியூன் ஹோட்டலில் பிடிக்கப்பட்டு இலங்கை புலணாய்வுத்துறை ஒற்றர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஊகம் தெரிவித்தன. பத்மநாதன் 2007ல் தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட போதிலும் சிறையில் இருந்து தப்பிய பின்னர் மலேசியாவுக்கு சென்றிருந்தது வெளிப்படையானதாகும்.

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முனையாத மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக், "இந்த விவகாரம் தொடர்பாக தன்னிடம் எந்தத் தகவலுமில்லை" எனக் கூறி உத்தியோகபூர்வ விசாரணைக்கு பணித்துள்ளார். பத்மநாதன் கைது செய்யப்பட்டதை பாதுகாப்பு கமெராக்கள் பதிவு செய்திருக்கவில்லை என டியூன் ஹோட்டல் நிர்வாகம் பின்னர் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் மலேசிய அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை அல்லது அதற்கு எதுவும் தெரியாது என மறுப்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இலங்கையுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்த அல்லது மலேசியாவில் உள்ள கனிசமான இந்திய சிறுபான்மையினத்தவர் மத்தியில் உணர்வுகளை தூண்டிவிட நஜீப் விரும்பவில்லை. மே மாதம், இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது மலேசிய பொலிஸ் தாக்குதல் நடத்தியது.

பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டார் என்ற செய்திகளை கொழும்பு மறுக்கவில்லை. ஆசிய நாட்டில் உள்ள அலுவலர்களின் உதவியுடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல ஆகஸ்ட் 7 ஊடகங்களுக்கு தெரிவித்தார். பத்மநாதனை கடத்துவதில் மலேசிய அரசாங்கம் அல்லது அதன் பாதுகாப்பு இயந்திரத்தின் பகுதிகள் தமது இலங்கை சமதரப்பினருடன் ஒத்துழைத்திருப்பதற்கான சாத்தியங்கள் நிச்சயம் உள்ளன.

புலிகளின் "நாடு கடந்த அரசாங்கத்தை" தயார் செய்ய பத்மநாதனால் நியமிக்கப்பட்ட விஸ்வநாதன் ருத்ரகுமாரனும், மலேசிய பாதுகாப்பு அல்லது புலனாய்வுத் துறையின் குறிப்பிட்ட பகுதிகளின் ஆதரவு இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்குக் கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து, அதன் வெளிநாட்டு தலைமைத்துத்தில் கசப்பான பிளவுகள் ஏற்பட்டன. புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை அறிவித்தது தொடர்பாகவும் மிதமான அணுகுமுறையை பரிந்துரைத்தமைக்காகவும் பத்மநாதன் தாக்குதலுக்கு உள்ளானார். டெயிலி மிரர் பத்திரிகையின் பக்க எழுத்தாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் தெரிவித்ததாவது: "வெளிநாட்டில் புலிகள் சார்பு ஊடகப் பகுதிகளில் கே.பி. மீதான நச்சுத்தனமான தாக்குதல்கள், கே.பி. தொடர்பான பகைமை மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது... கே.பி. யின் நடமாட்டங்கள் தொடர்பான பெறுமதியான 'அந்தரங்க' தகவல்கள் கசிந்துள்ளமை தொடர்பான பலமான சந்தேகங்கள் இருக்கின்றன."

அமெரிக்காவில் செப்டெம்பர் 11 நடந்த தாக்குதல்களை அடுத்து, அமெரிக்காவால் அமைக்கப்பட்ட உருமாதிரியை இலங்கை நடவடிக்கைகளும் பின்பற்றுகின்றன. உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அல்லது ஒத்துழைப்பு இன்றி உலகம் பூராவும் ஒரு தொகை "பயங்கரவாத சந்தேகநபர்களை" கைதுசெய்வதற்கு அமெரிக்க முகவர்கள் பொறுப்பாளிகளாக இருந்துள்ளனர். கைதிகள் குவன்டனமோ குடா போன்ற சிறை முகாங்களுக்கு அனுப்பட்டனர் அல்லது விசாரணைகளுக்கும் சித்திரவதைக்கும் மூன்றாம் நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுத கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இன்டர்போல் பத்மநாதனுக்கு ஒரு கைது ஆணையை பிறப்பித்திருந்தது. 1991ல் தற்கொலை குண்டுதாரியால் முந்நாள் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக இந்தியாவால் தேடப்படுபவர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். எவ்வாறெனினும், பத்மநாதன் பிடிக்கப்பட்டமை, கைது மற்றும் நாடுகடத்தல் தொடர்பான சாதாரண சட்ட முறைகளை அலட்சியம் செய்தலாகும். மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் அல்லது உதவியின்றி அவர் கைதுசெய்யப்பட்டு அவரது உதவியாளர் "அப்பு" என்பவருடன் நாடு கடத்தப்பட்டுள்ளார். இருவரும் சித்திரவதைகளுக்கு பேர் போன பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விரிவான பாய்ச்சலுக்கான தயாரிப்பில், புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் பற்றிய தகவல்களை கறப்பதற்காக பொலிசும் இராணுவமும் பத்மநாதனை விசாரித்து வருவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னெப்போதும் இடம்பெற்றிராத வகையில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, கடந்த வாரம் ஒரு மணித்தியாலம் பத்மநாதனை விசாரித்தார்.

இந்த கடத்தல் இலங்கை அரசாங்கத்தாலும் அரச இயந்திரத்தாலும் உயர் மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. நேஷன் பத்திரிகையின் பக்க எழுத்தாளர் திஸ்ஸ ரவிந்திர பெரேராவின் படி: "முழு தயாரிப்பும் பாதுகாப்பு செயலாளர் கோடாபய இராஜபக்ஷ மற்றும் தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹென்தவிதாரனவுக்கும் இடையில் இரகசியமாக திட்டமிடப்பட்டுள்ளது." "கே.பி. நடவடிக்கைக்கு" ஒத்துழைப்பதற்காக காபுலுக்கான துணை தூதராக பிரிகேடியர் உதய பெரேராவை அரசாங்கம் அண்மையில் நியமித்ததாக பக்க எழுத்தாளர் ஜெயராஜ் எழுதியுள்ளார்.

அரசாங்கமும் ஊடகமும் நடவடிக்கையின் வெற்றியை பற்றி பகிரங்கமாக பெருமை பேசிக்கொள்கின்றன. "இலங்கை: ஆசியாவின் இஸ்ரேல்?" என்ற தலைப்பில் டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம், பலவித பாலஸ்தீன குழுக்களின் தலைவர்களை வேட்டையாடுவதில் மற்றும் சில சமயங்களில் கொலை செய்வதில் பேர் போன இஸ்ரேலின் மொசாத்தின் சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளை இலங்கை புலனாய்வுத் துறையுடன் ஒப்பிட்டிருந்தது.

"உலகின் மிகவும் சிக்கலான பயங்கரவாத குழுவின் முழு உள்ளூர் தலைமைத்துவத்தையும் அழிக்கும் நகர்வு துல்லியமாக இருந்திருக்காவிட்டாலும், அது குறைந்த பட்சம் அதைப்பற்றி எண்ணிப்பார்பதற்கு ஒரு சக்தி இருப்பதையாவது உலக சக்திகளை புரிந்துகொள்ளச் செய்திருக்கும். தமது சொந்த எதிரிகள் மீது பாய இலங்கை புலனாய்வுத் துறையின் உதவியை நாட சில நாடுகள் முடிவு செய்தால் எவரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை," என அந்த ஆசிரியர் தலைப்பு தெரிவிக்கின்றது.

இந்த நவடிக்கையானது, அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மற்றும் இந்த விடயத்தில் சர்வதேச சட்டத்தை அலட்சியம் செய்துள்ளதை வெளிக்காட்டுகிறது. இந்த அரசாங்கம் கிட்டத்தட்ட 300,000 தமிழ் பொதுமக்களை அவர்களது உரிமைகளை மீறி தற்போது தடுத்துவைத்துள்ளது. இந்த முகாங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மேலும் கடுமையான விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இங்கு அவர்களை குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி காலவரையறை இல்லாமல் தடுத்து வைக்க முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்து செயற்படும் அரசாங்க சார்பு கொலைப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்."

கடந்த இரு தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதுகாப்புப் படைகளை குறைப்பற்கு மாறாக, இராஜபக்ஷவின் அரசாங்கம், இராணுவத்தையும் பொலிசையும் விரிவுபடுத்துகிறது. தொழில், சம்பளம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான கடுமையான தாக்குதல்களுக்கு எதிராக, தமது வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க தொழிலாளர்களும் கிராமப்புற வறியவர்களும் முன்வரும் நிலையில், மிக விரைவில் இந்த பொலிஸ் அரச நடவடிக்கைகள் அவர்களுக்கு எதிராக திருப்பப்படும். நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க இராஜபக்ஷ ஏற்கனவே "பொருளாதார யுத்தம்" ஒன்றை அறிவித்துள்ளார்.