World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மருத்துவமும் சுகாதாரமும்

Swine flu infections spread to 160 countries

பன்றிக் காய்ச்சல் தொற்றுதல்கள் 160 நாடுகளுக்கு பரவியுள்ளன

By Perla Astudillo
13 August 2009

Use this version to print | Send feedback

உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி பன்றிக் காய்ச்சல் A(H1N1) தொற்றுக் கிருமி 160 நாடுகளுக்கு நான்கு மாதங்களுக்கள் பரவியுள்ளது. ஆய்வுக்கூடத்தில் உறுதி செய்யப்பட்ட தொற்று நோய்கள் ஜூலை 6ல் இருந்து ஜூலை 27க்குள் 94,512 ல் இருந்து 134,503 என்று 70 சதவிகிதமாக உயர்ந்துவிட்டன. ஆகஸ்ட் 4ம் தேதி வரை உத்தியோகபூர்வ உலகம் முழுவதுமான தொற்றுநோய் பரவல் எண்ணிக்கை 184,435 ஆகவும் இறப்புக்கள் 1,247 ஆகவும் இருந்தன.

அடுத்த இரு ஆண்டுகளுக்குள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான இரண்டு பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு மூத்த உலக சுகாதார அமைப்பு அதிகாரியான கெய்ஜி புகுடா கிருமி இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருப்பதாகவும் சிலகாலத்திற்கு தொடர்ந்து பரவும் என்றும் கூறியுள்ளார். "நாம் பல நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் நோய்வாய்ப்பட்டவர்களை பார்த்தாலும், ஒப்புமையில் பெரும் தொற்றுவியாதிதன்மையின் தொடக்கக் கட்டத்தில்தான் உள்ளோம்" என்று அவர் விளக்கியுள்ளார்.

பெரும்பாலான இறப்புக்கள் அமெரிக்க கண்டங்களில்தான் அதிகமாக உள்ளன. அங்கு 707 பதிவானது; தென் கிழக்கு ஆசியாவில் 88 இறப்புக்கள் நேர்ந்துள்ளன; இவற்றுள் 65 தாய்லாந்தில் நடந்தன. அமெரிக்காதான் மிக அதிக இறப்பு எண்ணிக்கையான 263 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 165 இறப்புக்களில் ஆர்ஜென்டினா உள்ளது. நான்காம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான ஆஸ்திரேலியாவில் 12,048 நோயாளிகள், 31 இறப்புக்கள் இருந்தன. ஐரோப்பாவில் மோசமான பாதிப்பிற்கு உட்பட்ட இங்கிலாந்தில் 100,000 புது நோய்வாய்ப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்டனர் 26 இறப்புக்கள் இருந்தன.

சீனா இன்னும் இறப்புக்கள் எதையும் பதிவு செய்யவில்லை. ஆனால் உத்தியோகபூர்வமாக 1,800 நோயாளிகளை கொண்டுள்ளது. சவுதி அரேபியாவில் அடுத்த ஐந்து மாதங்களில் மெக்கா புனிதப் பயணத்திற்கு இரு மில்லியனுக்கும் மேலான மக்கள் எதிர்பார்க்கப்படுகையில் மத்திய கிழக்கில் இப்பெரும் தொற்றுநோய் பரவுதல் பற்றிய கவலைகள் வெளிப்பட்டுள்ளன.

பல புள்ளிவிவரங்கள் ஐயத்திற்கு இடமின்றி துல்லியமாக இல்லாததுடன், குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் நாடுகள் இப்பொழுது உலக சுகாதார அமைப்பிற்கு விவரங்கள் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தகவல் கொடுப்பதை நிறுத்தும் உலக சுகாதார அமைப்பின் முடிவு பெரும் தொற்று நோயை எதிர்கொள்ளத் தேவையான முறையான உலகளாவிய பிரதிபலிப்பு இல்லாததை காட்டுகின்றது. ஜூலை 16ம் தேதி உலக சுகாதார அமைப்பு கொடுத்த தகவலில்: "கண்டறிதல், ஆய்வுக்கூடத்தில் உறுதி செய்யப்படுதல், மற்றும் தீவிரமில்லாத வியாதிகளாயினும் கூட எல்லா நோய்களை பற்றிய மூலோபாயத்திற்கு மிகஅதிக தகவல்கள் இருந்தால்தான் முடியும்." என குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தொற்றுநோய் பரிசோதனையை நிறுத்தியுள்ளன. ஏழை நாடுகளை காட்டிலும் சிறந்த சுகாதார தரங்களைக் கொண்டிருந்தாலும், அங்குள்ள மருத்துவமனைகளும் ஆய்வுக்கூட பணிகளும் ஏராளமான தொற்றுநோய் பரவியதால் எண்ணிக்கையை அதிகமாக எதிர்கொண்டன. சில இடங்களில் பன்றிக் காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு வந்த மக்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டு பின்னர் இறந்து போயினர். ஓரிடத்தில் பன்றிக்காய்ச்சல் சந்தேகத்துடன் மருத்துவமனைக்கு வந்த கர்ப்பம் அடைந்த இளம் பெண் வீட்டிற்கு அனுப்பப்பட்டபோது தனக்கு பிறக்க இருக்கும் குழந்தையை கிட்டத்தட்ட இழந்துவிட்டார்.

பன்றிக் காய்ச்சலில் அவதியுறுவோர் மீது சரியான சோதனை நடத்தப்படாத நிலையில், விஷக்கிருமி போதுமான நடவடிக்கை இல்லோத போது பெரும் வளர்ச்சி அடைந்துவிட முடியும். பல சமீபத்திய அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டியதின் முக்கியத்துவம் பற்றி கோடிட்டுக் காட்டியுள்ளன. Lancet ன் ஆகஸ்ட் பதிப்பில் Hong Zhang எழுதியது; "பெரும் தொற்று நோய்க் காய்ச்சல் உலகம் முழுவதும் தடுக்கப்பட வேண்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு கூடுதலான முறையில் விலங்குகள், மனிதர்கள் மீதான முன்னேற்றகரமான கண்காணிப்பு, முதலிலேயே கண்டுபிடித்தல் மற்றும் காரணமாயிருக்கும் கிருமிகளை பிரித்துக் காண்தல் ஆகியவை தேவைப்படும்."

இதுவரை இன்னும் பெரிதாக மாறிய முறையில் வளர்ந்துவிட்டதற்கான அடையாளம் இல்லை. ஆனால் விஷக் கிருமி ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு மாறிய முறையில் தொற்றிக் கொள்ளும் தன்மை அதை உலகம் முழுவதும் பரவுவதற்கு உதவியுள்ளது; அதையொட்டி மாற்றுப் பெருக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. (See: "Danger of major swine flu outbreak continues").

Terrence Tumpey நடத்திய ஆய்வு, ஜூலை 2 Science இதழின் பதிப்பில் வெளியிடப்பட்டது, இன்னும் 100 சதவிகிதம் பரவுதல் ஏற்படவில்லை. "மனிதர்களுக்கு ஏற்ப இன்னும் முழுமையாக கிருமி மாற்றிக் கொள்ளவில்லை" என்று Tumpey விளக்கினர். உலகின் வடபகுதியில் குளிர்காலத்தில் இந்நிலை மாறக்கூடும் என்று அவர் கூறினார். "விஷக்கிருமி அதன் நோய் ஏற்படுத்தும் திறனை அதிகரிக்க கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான நாடுகளில் பெரும்பாலான நோய் தோன்றல்கள் இளவயதினரிடையே ஏற்பட்டுள்ளன. சராசரி வயது இதில் 12 முதல் 17 என்று உள்ளது. வயதானவர்களில் முன்பே H1N1 தொற்றுநோய் வெடிப்பு 1957-68ல் ஏற்பட்டது, மற்றும் 1968-69ல் Hong Kong காய்ச்சல் இவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்பதால் இந்நிலை என கருதுகின்றனர். பெரும் தொற்றுநோய்கள் கடந்த காலத்தில் தாக்கியபோது அவை பொதுவாக தடுப்பு அனுபவம் இல்லாததால் இளைஞர்களைத்தான் பொதுவாக அதிகம் தாக்கியுள்ளன.

ஜூலை 29 அன்று Lancet ல் வெளிவந்த ஆய்வு ஒன்று கர்ப்பிணிகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து பற்றி கூறியுள்ளது. ஒருவர் கர்ப்பிணியாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடிய தன்மை நான்கு மடங்கு அதிகரித்துவிடும். இதுவும் முந்தைய பெரும் தொற்று நோய்களுக்கு இணையாகத்தான் உள்ளது; அப்பொழுதும் மகளிர் மூன்று மாத காலம் கர்ப்பமாக இருந்தது, குறைப்பிரசவம்/முன்கூட்டி பிரசவித்தல் ஆகிய ஆபத்துகளை அதிகரிக்கும் வகையில் மூச்சுத்திணறலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உடல் பருமனும் கூடுதலாக பன்றிக் காய்ச்சலால் மரணம் அடையும் நிலையை உயர்த்திவிடும். அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் அமெரிக்காவில் தொற்றுவியாதியின் தொடக்கக் கட்டங்களில் இருந்த 99 பேரில், 45 பேர் மிகவும் பருமனாக இருந்தனர் என்று கூறுகிறது. உடல் பருமன் தடுப்புதன்மையை குறைத்துவிடுவதால் அதிக ஆபத்தை அளிக்கிறது.

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் போட்டியில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் Sanofi-Aventis, GalxoSmithline(GSK), Novartis, Baxter, AstraZeneca, Commonwealth Serum Laboratories (CSL) ஆகியவை அடங்கும். மனிதர்களுக்கான தடுப்பூசி சோதனைகள் சீனாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தொடங்கிவிட்டன. சில நிறுவனங்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி கொடுக்க முடியும்.

தங்கள் ஆதாரங்களையெல்லும் இணைந்த உலகளாவிய முயற்சிக்கு ஒருங்கிணைப்பதற்கு பதிலாக இந்த நிறுவனங்கள் பெரும் தொற்றுநோயிலும் இலாபமடைய பார்க்கின்றன. உலகளாவிய பொருளாதார சரிவு இருந்தாலும்கூட, மருத்துத் தயாரிப்பு தொழில் பெரும் இலாபங்களை இந்த ஆண்டு தடுப்பூசி மற்றும் விஷக்காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் CSL நிறுவனம் 21 மில்லியன் அலகுகளுக்கு கூட்டாட்சி அரசாங்கத்திற்கு விற்க முயல்கிறது. அதேபோல் அமெரிக்காவில் இருந்து $180 மில்லியன் மதிப்புடைய Antigen கொடுக்குமாறு கோரிக்கை வந்துள்ளது. இது 20 முதல் 40 மில்லியன் தடுப்பு அலகுகளை கொண்டுள்ளது. CSL இந்த ஆண்டு அதன் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விற்பனையை ஒட்டி $300 மில்லியன் விற்பனையை காட்டும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தின் GSK நிறுவனம் தடுப்பூசி விற்பனை மூலம் $1.6 பில்லியனை வரவு செய்து கொள்ளும். 195 மில்லியன் தடுப்பூசி அலகுகளுக்கு (US $10 ஒவ்வொன்றின் விலை) என அது 16 அரசாங்கங்களுக்கு உலகம் முழுவதும் கொடுக்க உள்ளது. GSK யின் முதலீட்டாளர்கள் Relenzas என்னும் விஷக் கிருமிக்கு எதிரான மருந்து விற்பனை மூலம் இலாபம் அடைவர். இரண்டாம் காலாண்டின் விளைவுகள் விற்பனை 20 மடங்கு கடந்த ஆண்டை விட அதிகமாகி US$ 100 மில்லியனை எட்டியதாக காட்டின.

தடுப்பூசி முறை பிரதிபலிப்பும் தேசிய நலன்களின் மேலாதிக்கும் உள்ளது. கடந்த வாரம் அமெரிக்கா இன்னும் $1பில்லியனை தடுப்பூசி வாங்க ஒதுக்கியுள்ளது, பிரான்ஸ் கூடுதலான 28 மில்லியன் அலகு தடுப்பூசிகளை Sanofi-Aventis இடத்தில் இருந்து வாங்க உள்ளது.

செல்வம் படைத்த நாடுகளில் தடுப்பூசிகள் விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு பற்றிய கவலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் உலகின் அனைத்து ஆய்வுக்கூடங்களும் முழுவீச்சில் செயல்பட்டாலும் கிட்டத்தட்ட 900 மில்லியன் ஊசிகள்தான் உலகின் ஜனத் தொகையான 6.8 பில்லியனுக்கு அளிக்கப்பட முடியும் என்று மதிப்பிட்டுள்ளது. "இந்த மட்டுப்படுத்தப்பட்ட விநியோங்களில் பெரும்பங்கு செல்வம் படைத்த நாடுகளுக்கு செல்லும். மீண்டும் பணம் கொடுக்க இயலாததால் பெற முடியாத நிலை வரக்கூடியதை காண்கிறோம்." என்று உலக சுகாதார அமைப்பு இயக்குனரான Margaret Chan கடந்த வாரம் கூறினார்.

ஆர்ஜென்டினாவின் சுகாதார மந்திரி Juan Manzur கடந்த வாரம் இலத்தின் அமெரிக்க அரசாங்க பிரதிநிதிகள் கூட்டத்தின் தன் அரசாங்கம் தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு கிடைக்காமல் போகக்கூடும் என்று கொண்டுள்ள அச்சங்களை தெரிவித்தார். ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி Cristina Kirchner உரிமைப் பதிவுகள் தளைகளில் இருந்து நீக்கப்பட்டு அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை பயன்படுத்த இயலுமாறு உலக சுகாதார அமைப்பை கோரியுள்ளார்.

ஆனால் அத்தகைய பரிந்துரையை உலக சுகாதார அமைப்பு செய்யும் என்பது மிகவும் அபூர்வம் ஆகும். ஏனெனில் அது உலகச் சந்தையின்மீது மேலாதிக்கம் கொண்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும்.

இப்பெரும் தொற்றுநோய் சுகாதார பணிகளிலும் அறிவியல் ஆராய்ச்சியிலும் பில்லியன் கணக்கான டாலர்கள் உட்செலுத்தப்பட வேண்டும், அதுதான் உலக சுகாதார பிரச்சினைகளை சமாளிக்க உதவும் என்ற அடிப்படை உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. மருத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் பரந்த அளவில் விஞ்ஞானிகளிடையே மரபார்ந்த முறையில் நோய் எப்படி தோன்றி வளர்கிறது என்பது பற்றிய உணர்வை வளர்த்துள்ளது. ஆயினும் கூட இந்த முக்கிய திறன், இலாப நோக்கம் முக்கிய உந்ததுலாக இருக்கும்போதும் சமூகம் போட்டி தேசிய அரசுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் முழுமையாக பயன்படுத்தப்பட முடியவில்லை.