World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

China-India border talks highlight rising tensions

சீன-இந்திய எல்லைப் பேச்சுக்கள் எழும் பதட்டங்களை உயர்த்திக்காட்டுகின்றன

By John Chan
15 August 2009

Use this version to print | Send feedback

ஆகஸ்ட் 7,8 தேதிகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே புது தில்லியில் நடந்த 13வது சுற்று எல்லைப் பேச்சுக்கள் இரு பிராந்திய போட்டி நாடுகளுக்கும் இடையே பெருகிய பதட்டங்களின் குவிப்பாயிற்று.

சீனா அதன் சிறப்பு பிரதிநிதி மாநில அவை உறுப்பினர் Dai Bingguo வை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் இருந்த பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்க அனுப்பியது. பேச்சுக்களின் உடனடி நோக்கம் பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்திற்கான கோடிட்டுக்காட்டுதலை ஒப்புக் கொள்ளும் வகையில் செய்தலும், அதில் "இரு பக்கங்களும் முழுப் பிரச்சினைகளின் தன்மைகளையும் நன்கு ஆராயும் வகையில் இருக்க வேண்டும் என்றும், எல்லை குறித்தல், தெளிவாக்குதல் பற்றி பேச்சுவார்த்தைகள் முடிவுறும் வகையில் இருக்க வேண்டும்" என்றும் , "தகவலளிக்கப்பட்ட ஆதாரங்களை" மேற்கோள்காட்டி, இந்து நாளேடு கூறியுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், 2003ல் பேச்சுக்கள் தொடங்கியதில் இருந்து எத்தகைய உறுதிப்பாடான முடிவும் இதுவரை ஏற்படவில்லை. சமீபத்திய சுற்றின் ஒரு அறிவிக்கப்பட்ட சாதனை இரு பிரதம மந்திரிகளுக்கும் இடையே "ஒரு அவசரத் தொலைத் தொடர்பு" வசதியை நிறுவுவதற்கான உடன்பாடுதான். அத்தகைய அவசரத் தொலைத் தொடர்பு வசதியை இந்தியா ரஷ்யாவுடன்தான் ஏற்படுத்தி இருந்தது; எனவே இது சீனாவிற்கு ஒரு நட்பு அடையாளமாக கருதப்படுகிறது.

சீனா 1959ல் இருந்து இந்தியாவுடன் "உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு" என்று 4,000 மைல் நீள அடையாளத்தை காஷ்மீரின் வடமேற்கில் இருந்து பர்மா வரை கொண்டுள்ளது. 1914ல் பிரிட்டன் "மக்மோகன் கோடு" என்பதை இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே வரைந்தது; அது இரு நாடுகளுக்கும் இடையே வருங்கால பூசல்களுக்கான விதைகளை நட்டது. சீனா வடகிழக்கு இந்தியாவில் 90,000 சதுர மைல் பகுதியை தன்னுடையது எனக் கூறுகிறது; இது முக்கியமாக அருணாச்சல பிரதேசம் என்னும் மாநிலத்தில் உள்ளது; பெய்ஜிங் இதை "தெற்கு திபெத்" என்றே கருதுகிறது. இந்தியா சீனாவின் ஆகாசி சின் என்னும் கிழக்கு காஷ்மீரில் இருக்கும் பகுதியில் 43,180 சதுர மைல்கள் தன்னுடையது எனக் கூறுகிறது.

திபெத் பற்றி பூசல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளும் 1962ல் எல்லைப் போர் ஒன்றை நடத்தின; இதில் இந்திய படைகள் பெரும் தோல்வியைக் கண்டன. ஆயினும், சீன இராணுவம் பின்வாங்கி, ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது. இந்தியாவிற்கு ஆதரவாக குறுக்கீடு செய்ய இருப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியிருந்தது. சீன-சோவியத் பதட்டங்கள் பெருகியிருந்த நேரத்தில், மாஸ்கோ இந்தியாவிற்கு எதிராக சீனாவிற்கு ஆதரவு கொடுக்க மறுத்தது; பெய்ஜிங் ஒரு முழுப் போரில் இந்தியாவுடன் ஈடுபடும் நிலையில் இல்லை.

1990களின் ஆரம்பத்தில் இருந்து தீர்க்கப்படாத எல்லைப் பூசல்கள் மீண்டும் இரு பெரும் சக்திகளாக விழையும் நாடுகளுக்கு இடையே வெடிப்புத் தன்மை திறனுடன் தலைதூக்கியது. சீனா இப்பொழுது இந்தியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளி என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் உலக நிதிய நெருக்கடியினால் இன்னும் தீவிரமாகியுள்ளன. இந்தியா தொடர்ச்சியாக பல சீனப் பொருட்களை தடை செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கையில் பெய்ஜிங் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இந்தியாவிற்கு கொடுக்க முன்வந்த, அருணாச்சல பிரதேசத்திற்கான வெள்ளக் கட்டுப்பாட்டுத்திட்ட கடன் $US 60 மில்லியன் உள்ளடங்கலான, 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தடுக்க முற்பட்டது. இந்தியாவில் இருந்த சீனத் தூதர் "அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் சீனப் பகுதிதான்" என்று அறிவித்த பொழுது இந்தியாவின் செயற்திட்டம் 2006ல் வெடித்த பூசலை மீண்டும் தூண்டியது.

ஜூன் மாதத்தில் ADB நிதியை இந்தியா பெற்றுக் கொண்டது இது அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வெளிப்படையான ஆதரவுடன் ஒரு ADB குழு வாக்கெடுப்பின்படி, நடந்திருக்க வேண்டும். சீனா ADB யின் ஒப்புதலுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஜூன் மாதத்திலேயே, புது தில்லி இன்னும் கூடுதலான 60,000 துருப்புகளை டாங்குகளுடனும் இரு ஸ்க்வாட்ரூன்கள் நவீன SU-30MK1 தாக்குதல் விமானங்களுடனும் அஸ்ஸாம் மாநிலத்தின் வடகிழக்கே (அருணாச்சல பிரதேசத்திற்கு அருகே) நிறுத்தியது, இதையொட்டி அங்கு மொத்த எண்ணிக்கை 100,00 என்று ஆயிற்று.

இதற்கு விடையிறுப்பாக சீனாவின் உத்தியோகபூர்வ Global Times ஜூன் 9 அன்று, "சீனாவுடன் மோதல் திறனை அளிக்கக்கூடிய செயல்களை தான் செய்யலாமா என்று இந்தியா சிந்திக்க வேண்டும்" என்ற எச்சரிக்கையை கொண்டிருந்த தலையங்கத்தை வெளியிட்டது. இத்தலையங்கம் சீனா நெருக்கமான உறவுகளை பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் நேப்பாளத்துடன் நிறுவியிருப்பதை நினைவுறுத்தி, புது தில்லிக்கு நினைவூட்டி, "இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளில் சீனா எந்த சமரசத்தையும் ஏற்காது" என்று அறிவித்தது.

பெயரிடப்படாத ஒரு சீன அதிகாரி South China Maorning Post இடம் ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியா சீனாவுடனான எல்லை பூசலை தீவிரப்படுத்தும் வகையில் ADB நிதியை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடைய ஆதரவுடன் பெற்றுள்ளது என்றார். "இந்தியாவிடம் அருணாச்சல பிரதேசத்தை வளர்க்கப் போதுமான பணம் உள்ளது. ஆனால் சீனாவை சோதிக்க வேண்டும் என்று விரும்புகிறது. சீனா கடன் விண்ணப்பத்தை கடுமையாக எதிர்த்தது; ஆனால் இந்தியா தன் விருப்பத்தை பெற்றுள்ளது. நாம் மதிப்பை இழந்தோம். நாம் மதிப்பை இழக்கத் தயாராக இல்லை. எங்களை இழிவுபடுத்துபவர்களை நாங்களும் இழிவுபடுத்துவோம்."

இதற்கிடையில் இந்திய அதிகாரிகள் பெய்ஜிங் இந்தியாவின் திட்டமான சீனா ஆகாசி சின் பகுதி மீது கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை ஏற்பதற்கு ஈடாக இந்தியா அருணாச்சல பிரதேசத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பதை நிராகரித்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சரக அதிகாரி ஒருவர் South China Morning Post இடம் கூறினார்: "சீனா ஒரு பெரியமனித தோரணையை கொண்டுள்ளது. இந்தியாவிடம் கொடுத்து வாங்கும் எந்தப் பரிமாற்றமும் அது தானே தோற்றுவித்துக் கொண்டிருக்கும் ஆசியாவில் பெரும் சக்தி என்பதற்கு மாசு விளையும் என்று அது நினைக்கிறது."

இந்தியாவில் சீன தூதராக இருக்கும் ழாங் யான் இரு பக்கங்களும் தம் பூசல்களை "மிகுந்த அரசியல் ஞானத்துடன் தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார். புது டெல்லியை தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான மையம் (Centre for Policy Research)- ல் ஒரு மூலோபாய பகுப்பாய்வாளராக இருக்கும் Brahma Chellaney இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறினார்: "சீனாவின் அரசாங்கம் நடத்தும் செய்தி ஊடகத்தில் இந்தியா பற்றிக் கடுமையான தாக்குதல்களை நடத்தியதால் எல்லைப் பேச்சுக்களுக்கு விளைந்த சேதங்களை சற்றுத் தீர்க்கும் வகையில்தான் திரு ழாங்கின் தேனொழுகும் சொற்கள் வடிவமைப்புக் கொண்டுள்ளன. சீனாவின் நோக்கம் இந்தியாவை முடிவில்லாத, பயனற்ற எல்லைப் பேச்சுக்களில் ஈடுபடுத்தவேண்டும், அதையொட்டி சீனா இமாலய சமசீர்நிலையை தனக்கு ஆதரவாக அதற்கிடையில் மாற்றிக் கொள்ள வேணடும், அதற்கு இராணுவ சக்தி, உள்கட்டுமானம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளது."

2006 ல் சீனா திபெத்திய பீடபூமியில் ஒரு பெரிய இரயில் திட்டத்தை கட்டமைத்தது; இத்திட்டம் இந்திய அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்களால் தேவையானால் இந்தியாவை விரைவாக தாக்குவதற்கு துருப்புக்களை கொண்டுவர வடிவமைக்கப்பட்டுள்ளது. "முத்து மாலை" துறைமுகங்கள் கட்டுதல் மற்றும் இந்திய பெருங்கடலில் போர்க்கப்பல்களை நிறுத்துவதற்கான ஏனைய வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்துதல் உள்பட, சீனா பல தெற்கு ஆசிய நாடுகளுடனும் தன் செல்வாக்கை பெருக்கியுள்ளது. இந்தகைய வளர்ச்சிகள் புது தில்லியில் இந்தியாவின் "கொல்லைப்புறம்" என அழைக்கப்படும் பகுதியில் சீன ஊடுருவல் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.

நாட்டுவெறி பிடித்த China International Stragegy Net என்னும் இணைய தளம் இந்தியாவில் வகுப்புவாத பிரிவினைகளை ஊக்குவிக்கும் வகையில் நாடு 20 அல்லது 30 சிறு நாடுகளாக பிரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. "வானில் இரு சூரியன்கள் இருக்க முடியாது" என்று வலைத் தளம் குறிப்பிட்டது; ஆசியாவில் ஒரு மேலாதிக்க சக்திதான் இருக்க முடியும் என்று வாதிட்டது. இந்த வலைத் தளம், "1999ல் பெல்கிரேடில் சீன தூதரகம் அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு ஆளானதை அடுத்து அமெரிக்க அரசாங்க வலைத் தளங்களை சேதப்படுத்தியதில் பங்கெடுத்த, Kang Lingyi யால் நடத்தப்படுகிறது, என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. அவருடைய தளங்கள், அரசியல் நெறியை வலுப்படுத்திக் கொள்ள தேசியவாதத்தை அனுமதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலோபாய நிலைப்பாட்டை, ஒரு பகுதியாக கொண்டவை."

இந்தியச் செய்தி ஊடகத்தில் எழுப்பப்பட்ட கூக்குரல் இந்திய வெளியுறவு அமைச்சரகத்தை ஆகஸ்ட் 10 அன்று ஒரு அறிக்கையை வெளியிடச் செய்தது. "இக்கட்டுரை ஒரு தனிநபர் கருத்தின் வெளிப்பாடு என்றும், கடந்த வார பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் தெரிவிக்கப்படுவது போன்ற, இந்திய-சீன உறவுகள் பற்றி உத்தியோகபூர்வமாக சீனாவால் அவ்வப்பொழுது நமக்கு பலமுறை தெரிவிக்கப்படும் நிலைப்பாட்டுடன் தொடர்புடையாக தோன்றவில்லை" என்று கூறியுள்ளது.

அமெரிக்காவுடன் நட்பு கொண்டுள்ள முறையில் இந்தியா ஒரு "உலக சக்தியாக" வரவேண்டும் என்று விரும்புகிறது; அமெரிக்காவோ அணுசக்தி, பொருளாதார, இராணுவ உடன்பாடுகள் மூலம் தீவிரமாக புது தில்லியுடன் ஊடாட விரும்புகிறது. முன்னாள் புஷ் நிர்வாகம் பெய்ஜிங்கிற்கு எதிர் கனமாக இந்தியா வரவேண்டும் என்பதற்காக இந்தியாவுடன் ஒரு சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர், இந்தியா அணுசக்தி பொருட்கள் குழுவிடம் இருந்து வாங்கும் வாய்ப்பு பெறுவதை தடை செய்ய சீனா முற்பட்டது. இந்தியாவின் போட்டி நாடான பாக்கிஸ்தான் அணு உலைகளை கட்டமைக்க சீனா உதவியதுடன் அதற்கு ஆயுதங்களையும் கொடுத்துள்ளது.

சீன-இந்திய போட்டி இந்திய பெருங்கடலிற்குள்ளும் விரிவடைந்துள்ளது. கடல் கொள்ளைக்கு எதிராக போரிடுவதாகக் கூறிக் கொண்டு, சீனா சமீபத்தில் சோமாலி நீர்நிலைகளுக்கு போர்க்கப்பல்களை அதன் வணிக கப்பல்களுக்கு காவலாக அனுப்பியது; வணிகமோ சீனப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது ஆகும். இப்படி கடற்படையை பயன்படுத்துவது பெய்ஜிங்கின் நீல நிற நீர் கடற்படையின் வளர்ச்சியின் ஒரு பகுதி ஆகும். இதையும் விட சீனா இலங்கையில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருப்பது இந்தியாவிற்கு கவலை அளிக்கிறது. பெய்ஜிங் கொழும்பிற்கு ஆயுதங்களையும் தூதரக ஆதரவையும் மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான இராணுவ நசுக்குதலின் போது கொடுத்து உதவியது.

சீன-இந்திய பேச்சுக்களுக்கு ஒரு வாரம் முன்பு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கடற்படைத் திட்டமிடுநர், ஆலோக் பட்நாகர், இந்தியா அடுத்த தசாப்தத்தில் 107 போர்க் கப்பல்களை கட்மைக்கும் என்றும் அவற்றுள், விமானந் தாங்குபவை, தகர்ப்பவை, பிரிகேட்டுக்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் என கடற்படையுடன் போட்டியிடும் வகையில் பல இருக்கும் என்றார். "சீனா அதன் கடற்படையைப் பெரும் வேகத்தில் வளர்த்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் அதன் விழைவுகள் தெளிவாகத் தெரிகின்றன" என்றார் பட்நாகர்.

தற்பொழுது இந்தியா சீனாவைவிட குறைந்த சக்திதான். இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா கருத்தின்படி, ஜூலை 29 பைனான்சியல் டைம்ஸில் வெளிவந்த கட்டுரையின்படி, சீனப்பொருளாதாரம் இந்தியாவுடையதை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது, தலா நபர் வருமானம் இந்தியாவை விட இருமடங்கு உள்ளது. உலகின் வணிக ஏற்றுமதிகளில் சீனாவின் பங்கு இந்தியாவுடையதைவிட 9 மடங்கு அதிகமானது. "இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் விரைவான வளர்ச்சி இருந்தபோதிலும்கூட--1995ல் இருந்து பணிகள் ஏற்றுமதியை தளமாக உடையது. "2007ல் சீனாவின் மொத்த பணிகள் ஏற்றுமதிகள் இந்தியாவுடையதை விட 40 சதவிகிதம் அதிகரித்தது" என்று ஆச்சார்யா கூறியுள்ளார்.

இந்திய கூட்டுப்படைகளின் தலைவரான அட்மைரல் சுரீஷ் மேத்தா, ஆகஸ்ட் 10ம் தேதி இராணுவ வகையில் இந்தியா ஒன்றும் சீனாவுடன் ஒப்பிடப்பட முடியாதது என்றார். "இராணுவரீதியாக, மரபார்ந்த, மாறுபட்ட முறை இரண்டிலும், நமக்கு திறனும் இல்லை, சீன வலிமைக்கு ஈடாக வலிமை கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் இல்லை." என்று அவர் கூறினார். இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு வரவு-செலவு திட்டம் US$30 பில்லியன் என்பது சீனாவின் $70 பில்லியனைவிட மிகக் குறைவு என்றார். "இந்தியாவையும் சீனாவையும் சமமான வலிமை உடைய நாடுகள் என்று கூறுவது மடத்தனமாகும்" என்பதால் சீனாவுடன் மோதலைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

ஆனால் அமெரிக்கா சமசீர்நிலையை இந்தியாவிற்கு ஆதரவாக தள்ளுகிறது; ரஷ்யா, சீனாவிடம் இருந்து இந்தியாவை ஊடாடி தன்வயம் ஈர்க்கப் பார்க்கிறது. இது யூரேசிய கண்டத்தின் விசைச் செழிப்புடைய பகுதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தை கொண்ட, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், மத்திய ஆசியப் பகுதிகளைச் சுற்றி இருக்கும் நாடுகளின் மீதான போர் என்ற ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயத்துடன் பிணைந்துள்ளது . ஜூலை மாதம் இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி வருகை புரிந்தபோது அவர் ஒரு முக்கிய பாதுகாப்புப் பிரிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்; அது ஏற்கனவே மலரத் தொடங்கியிருக்கும் இந்தியாவிற்கு அமெரிக்க ஆயுத விற்பனைகள் என்பதை பெருக்கும் அடித்தளத்தைக் கொண்டுள்ளது; இதில் போர் விமானங்களும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களும் அடங்கும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது: "அவற்றின் பெருநிறுவனங்கள் வெளிநாட்டில் சந்தைப் பங்கிற்கு அலைகையிலும், அவற்றின் இராணுவங்கள் உள்நாட்டில் நவீனப்படுத்துவதற்கு அலைகையிலும், சீனாவும் இந்தியாவும் ஒன்றையொன்று நட்பான அண்டை நாடுகள் என்பதைவிட கூடுதலான முறையில் வருங்காலப் போட்டி நாடுகள் என்றுதான் கருதுகின்றன. "சீனாவுடன் முந்தைய எல்லை பேச்சுக்களுக்கு தலைமை வகித்த ஒரு முன்னாள் இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை செய்தித்தாள் மேற்கோளிட்டது. அவர் இந்தியாவை அமெரிக்காவுடனும் மற்ற நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்துமாறு வலியுறுத்தினார்: "சீனர்கள் தாங்கள் எல்லையில் ஏதேனும் செய்தால், 1962ல் நடந்ததைவிட மிக மிக அதிகமான உடனடி விளைவு இருக்கும் என்று அறிய வேண்டும்" என்றார் அவர்.

இந்தியாவுடனான அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் புது தில்லிக்கு அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பத்தை கொடுப்பது மட்டும் இல்லாமல் இந்தியாவை ஒரு அணுசக்தி நாடென திறமையுடன் ஏற்கிறது. ஜூலை மாதத்தில் இந்தியா அதன் முதல் அணுசக்தி இயக்கத்தால் செல்லும் நீர்மூழ்கிக் கப்பலை இயக்கியது; அதில் அணுசக்தி ஏவுகளைகள் உள்ளன; இது இந்தியாவை உலகில் அத்தகைய ஆயுத முறைகள் உடைய ஆறாவது நாடாக செய்துள்ளது. இது வாஷிங்டனால் ஊக்குவிக்கப்படுகின்ற இரு வட்டார சக்திகளுக்கு இடையே தீவிரமாகும் போட்டியில் உள்ள ஆபத்துக்களைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.