World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

The government is not reducing the gap between the communities but increasing it"

Indian students in Australia speak to WSWS about recent racist attacks

"சமூகங்களுக்கு இடையே உள்ள இடைவெளியே அரசாங்கம் குறைக்காமல் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது"

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் சமீபத்திய இனவழித் தாக்குதல்கள் பற்றி உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசுகின்றனர்

By our reporters
20 August 2009

Use this version to print | Send feedback

இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்த இனவெறித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறை தொடர்ச்சியான பெருந்திகைப்பில் தவிர்ப்புக்களை கொண்டு அரசில் பிரச்சினைகளை மறைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளதுடன், அதே நேரத்தில் சர்வதேச மாணவர் சந்தையில் இருந்து கிடைக்கும் இலாபகரமான வருவாயையும் தக்க வைத்துக் கொள்ள முற்படுகின்றன. இந்தியர்களும் மற்ற சர்வதேச மாணவர்களும் அனுபவிக்கும் முறையான இயக்கப்படும் பாகுபாடு பற்றிய உண்மையான ஆய்வை மேற்கொள்ளுவதையும் முனைப்புடன் தவிர்க்கிறது.

விக்டோரியாவில் தொழிற் கட்சி பிரதமர் John Brumby மாநிலத்தின் தலைநகரான மெல்போர்னில் ஜூலை 12ம் தேதி வன்முறைத் தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் "நல்லிணக்க நடை" ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். நிகழ்வை நடத்தும் வகையில், Brumby, "நாம் அனைவரும் சமம்" என்று வலியுறுத்தினார். ஆனால் இதைவிட உண்மையில் இருந்து தொலைவான கருத்து வேறு ஏதும் கிடையாது. அவருடைய உண்மையான அணுகுமுறை பற்றி விவரிக்கும் விதத்தில் மாநில பிரதம மந்திரி இந்திய மாணவர்களை கூட்டத்தில் பேச அனுமதிக்க மறுத்துவிட்டார்.

பெரும்பலான ஆஸ்திரேலிய மாணவர்கள் செலுத்தும் பயிற்சிக் கட்டணத்தை விட சர்வதேச மாணவர்கள் பல மடங்கு அதிகம் செலுத்துகின்றனர். வருமான ஆதரவிற்கு அவர்கள் தகுதி பெற்றிருக்கவில்லை; அதேபோல் பொது போக்குவரத்து கட்டணத்தில் மாணவர் சலுகையும் அவர்களுக்கு கிடையாது; சுகாதாரப் பாதுகாப்பு, பிற சமூகப் பணிகளைப் பெறும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படிக்கையில் அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடும் அரசாங்கத்தாலும் பல்கலைக்கழக அதிகாரிகள் உயர்ந்த இலாப நோக்கை அடைய வேண்டும் என்ற உந்துதலாலும் நிர்ணயிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி அளிப்பது என்பது இப்பொழுது எஃகு, இரும்பு தாதுப் பொருள் ஏற்றுமதிக்கு அடுத்த மூன்றாம் பெரும் ஏற்றுமதியாக உள்ளது.

சர்வதேச மாணவர்களுடைய கல்வி இன்னும் பிற கட்டணங்கள் 1992ல் 200 மில்லியன் டாலரில் இருந்து 2000த்தில் 1.8 பில்லியன் டாலர் என்றும், இன்று வியத்தகு 15 பில்லியன் டாலர் என்றும் உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டு சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களிலும் 26 சதவிகிதத்தினராக இருந்தனர்--இது வேறு எந்த முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளிலும் இல்லாத உயர் விகிதம் ஆகும்.

உலக சோசலிச வலைத் தளம் சமீபத்தில் மெல்போர்னில் மூன்று இந்திய மாணவர்களுடன் உரையாடியது:

கணேஷ் சுந்தரமூர்த்தி வணிக முதுகலைப் பட்டப்படிப்பை முழு நேரமாகக் கொண்டிருப்பதுடன் RMIT பல்கலைக் கழகத்தின் Bourke Street வளாகத்தின் மாணவர் சங்கத்தின் தொடர்பு அதிகாரியாகவும் உள்ளார். வளாகம் முக்கியமாக நிதி மற்றும் வணிக பாடத்திட்டங்களை அளிக்கிறது; தற்பொழுது ஏராளமான சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர் இப்பொழுது நாட்டில் தங்கும் உரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து ஜூலை 2006 ன் போது வந்ததில் இருந்து தன்னுடைய அனுபவங்கள் பற்றி கணேஷ் பேசினார்; அங்கு அவர் பொறியியல் பட்டத்தை முடித்துள்ளார். "என்னுடைய முழுநேரப் படிப்பை தவிர, இங்கு நான் வாரத்திற்கு 12 மணி நேரம் (பல்கலைக்கழகத்தில்) வேலை பார்க்கிறேன் என்று அவர் கூறினார். இதைத்தவிர கணேஷ் வணிக மையங்களில் ஒரு நிறுவனத்திற்காக ஐந்தில் இருந்து பத்து மணி நேரம் கடன் அட்டை விற்கும் வேலையையும் செய்கிறார்.

மாணவர் தொடர்பு அதிகாரி என்ற முறையில் கணேஷ் நேரடியாக பல வெளிநாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்துள்ளார். "இங்கு நாங்கள் மூவர்தான் வேலைபுரிகிறோம். போன பருவத்தில் எங்களுக்கு நகர வளாகத்தில் மட்டும் மாணவர்கள் உதவி கோரும் 500 பிரச்சினைகள் வந்தன.... கடந்த ஆண்டை விட இப்பொழுது இது பெரிய அதிகரிப்பை கண்டுள்ளது.... பல மாணவர்கள் நிதிய இடர்பாட்டில் இருப்பதை நான் காண்கிறேன்."

முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, இயலும் தன்மைக்கு ஏற்ப இருக்கும் இடம் கிடைப்பதாகும் என்று கணேஷ் கூறினார். ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்கு பிரதிநிதிகளை அனுப்பி, நடப்பு குறிப்புக்களை வழங்குகின்றனர்; அவை ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இருக்கும் வசதிகள் பற்றி வரக்கூடிய மாணவர்களுக்கு தவறான சித்திரத்தை அளிக்கின்றன என்று அவர் கூறினார்.

"நீங்கள் RMIT கிராமத்தில் வசிக்கலாம், அது வசதியாக இருக்கும். நகரத்திலும் இருக்கலாம்" என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் மாதம் 1,200 டாலர்கள், ஒரு படுக்கையறை, படிப்பறை உள்ள வீட்டிற்கு நகரத்தில் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மாணவர்களுக்கு தெரிவிப்பது இல்லை." உண்மையில் மாணவர் சங்கம் வளாகத்திலேயே கடந்த ஆண்டு சூப் சமையலறை ஒன்றைத் தொடங்கி ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உணவளிக்கிறது.

மற்ற பிரச்சினைகளையும் கணேஷ் சுட்டிக்காட்டினார். "சர்வதேச மாணவர்கள் ஆண்டு ஒன்றிற்கு 300 டாலர் தனியார் சுகாதாரக் காப்பீட்டிற்கு கொடுக்க வேண்டும்; அவர்களுக்கு இலவச மருத்துவ வாய்ப்பு கிடையாது. எனவே நீங்கள் மருத்துவரிடம் சென்றால், அனைத்திற்கும், ஆலோசனைக் கட்டணம் உட்பட கொடுக்க வேண்டும்."

பல்கலைக்கழகத்தில் அதிக மருத்துவ வசதிகள் இல்லை. மாணவர் சங்கத்தில் இருந்து பணிகளுக்காக கொடுக்கப்பட்ட பணம் இப்பொழுது குறைக்கப்பட்டுவிட்டது, அல்லது VSU எனப்படும் மாணர்வகளின் சுயவிருப்பு சங்கம் முன்னாள் ஹோவர்ட் அரசாங்கம் அறிமுகப்படுத்திய விததில் வெளியாரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பல மாணவர்களும் மிகக் குறைந்த ஊதியத்தில் உணவு விடுதிகளில் வேலைபார்க்கின்றனர்; மாணவர்கள், மணிக்கு $5ல் இருந்து $8 வரை என்று வேலைபார்க்கும் நிலைமையை கண்டுள்ளதாக அவர் கூறினார். மிக வறிய புறநகர்ப் பகுதிகளில் அவர்கள் வசிக்கின்றனர் என்றும் இரவு மிகவும் தாமாதமாக பொது போக்குவரத்தில் வேலை முடிந்தவுடன் அறைக்கு செல்கின்றனர் என்றும் கூறினார்.

"இதனால் அவர்கள் எப்பொழுதும் இரவில் இரயில்களில் எளிதாகத் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். போலீஸ் கூறுவதெல்லாம் தங்கள் சொத்துக்களை காப்பது தனிநபரின் பொறுப்பு, அல்லது வேறு புறநகருக்கு செல்ல வேண்டும் என்பது; ஆனால் மாணவர்களுக்கு அது கட்டுபடியாகாது."

பங்களூரில் இருந்து வந்துள்ள சச்சின் ஆஸ்திரேலியாவில் 16 மாதங்களாக உள்ளார்; வணிக நிர்வாக முதுலைப் பட்டத்திற்கு விக்டோரியா பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். அவர் ஒவ்வொரு செமஸ்டரிலும் (பருவத்திற்கும்) அண்ணளவாக $10,000 பயிற்சிக் கட்டணமாகக் கொடுக்கிறார்.

இனவெறிப் பாதிப்பு அனுபவங்கள் தனக்கு இருந்ததாக சச்சின் கூறுகிறார். "ஆனால் செய்தியில் கேட்கும் அளவிற்கு இல்லை." "சில நேரம் திட்டுக்கள் கிடைக்கும், அதுவும் கீழ்மட்ட சமூகப் பொருளாதார பின்னணியில் இருப்பவர்களிடம் இருந்து; அல்லது குடி, போதைப் பழக்கம் உடையவர்களிடம் இருந்து. தங்கள் உணர்வில் மக்கள் இல்லாதபோது இப்படி நடக்கிறது. இதுவரை என்னை எவரும் தாக்கியதில்லை." தாக்குதல்கள் இனவழித் தூண்டுதலில் நடக்கவில்லை என்றாலும், "ஓரளவு இன உணர்வும் உள்ளது" என்றார் அவர்.

விக்டோரியா அரசாங்கத்தின் நல்லிணக்க நடை என்று அழைக்கப்படுவதில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பின் (ISSE) துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பதில் சச்சினும் உதவினார்.

"இது வெறும் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிதான் என்று நான் உணர்ந்தேன். ஒரு திருவிழா போல்." என்றார் அவர்; இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் வாழ்க்கையை அச்சுறுத்தும் தாக்குதல்களை பற்றி அதிகம் அறியப்படவில்லை. "[இதற்கு ஏற்பாடு செய்தவர்கள்] அந்த பொருளுரையில் இருந்து ஒதுங்கியே இருக்க முற்படுகின்றனர்."

இந்திய மாணவர்கள், நிகழ்வில் பேசுவதற்கு தடைசெய்த அரசாங்கத்தின் முடிவை சச்சின் குறைகூறி, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் மாணவர்கள் இதைப் புறக்கணிப்பதாக எடுத்த முடிவிற்கு ஆதரவு கொடுத்தார்.

"முக்கிய பிரச்சினை இந்திய மாணவர்களின் வருந்தத்தக்க நிலை பற்றி என்றால், அவர்கள் ஏன் இந்திய மாணவர்களை பேச அனுமதிக்கவில்லை. அவர்களை பேச அனுமதிக்காததின் மூலம், நிலைமை தொடரும் என்ற செய்தியைத்தான் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்." என்று அவர் கூறினார்.

பிரதம மந்திரி கெவின் ரூட்டின், இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது "உலகெங்கிலும் நகரங்களிலும் நடக்கும் வன்முறை சம்பவம்தான்" என்று ஜூன் 10ல் கூறப்பட்ட கூற்றுடன் சச்சின் உடன்படவில்லை. இத்தகைய கருத்துக்கள் "நடக்கும் நிகழ்வுகளுக்கு ஊக்கம் கொடுக்கின்றன. பிரச்சினையை அவர் உதறித்தள்ளப் பார்க்கிறார்; ஒரு சிறிய பிரச்சினை பெரிதாக கூறப்படுவது போல் கருதுகிறார். எனக்கு இதில் உடன்பாடு இல்லை."

"பலரும் இப்பொழுது உரத்த குரல் கொடுக்கும்போது மட்டும், இது நடைபெறவில்லை--இது ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. நான் இங்கு வந்ததில் இருந்து இந்தியர்கள் தாக்கப்படுவது பற்றி கேள்விப்பட்டுத்தான் வருகிறேன்; அதற்கு முன்னேயே இருந்திருக்க வேண்டும் என்றும் கருத்தைக் கொண்டுள்ளேன்."

பல்கலைக்கழகம் இயலும் தன்மைக்கேற்ப உறைவிடமோ மற்ற வசதிகளை பெறவோ உதவவில்லை என்று சச்சின் விளக்கினார். "இவ்வளவு பணம் கட்டும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் சிறு உதவி கிடைக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள்--குறைந்தபட்சம் எதற்காக, எவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றாவது தெரிந்து கொள்ள."

முதல் சில வாரங்கள் நண்பர்களுடன் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சச்சின் "வீடு தேடும் வேட்டை அனைத்தையும் நானே செய்தேன்" என்றார். பின்னர் Pascoe Vale இல் அவருக்கு இடம் கிடைத்தது; இதில் எட்டு அறைகள் இருக்கும் ஒரு வீட்டில் 15 பேர் வசிக்கின்றனர்."

வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கற்பிக்கப்படும் முறையை ஏற்பதில் இடர்பாடுகளை காண்பதாகவும் சச்சின் கூறினார். "இதைப் பற்றி இந்தியாவில் கூறும்போது மாணவர்களிடம் ஆசிரியர் வெறும் ஆசிரியர்கள் அல்ல, அனைத்திலும் உதவுபவர்கள் என்றுகூறப்பட்டது; ஆனால் அனைத்தையும் நாங்களே செய்ய வேண்டியுள்ளது; ஆசிரியர்கள் சிறதேனும் உதவி அளிப்பர் என்று நான் நினைத்தேன்" என்றார்.

தான் பயிலாத வகுப்புக்களுக்கும் கட்டணம் எப்படி கட்டுகிறேன் என்பதையும் அவர் விளக்கினார். "RMIT யில் இருந்து விக்டோரியாவிற்கு மாறியபோது இங்கு அவர்களிடம் மொத்த கணக்கெடுப்பு தேதி என்று படிக்கும் முறை, பல்கலைக்கழகத்தில் அந்தஸ்து பற்றி விவரிக்க ஒரு நாள் உள்ளது. எனக்கு அது பற்றித் தெரியாது." RMIT யில் இவர் தேர்ச்சி பெற்றிருந்த பாடத்திட்டங்கள் பற்றி சான்றிதழை கேட்டறிந்த பின்னர் அவர் கணக்கெடுப்பு நாள் கடந்துவிட்டது என்றும் எனவே அதிகமாக 10,000 டாலர் பயிற்சிக் கட்டணம் கொடுக்க வேணடும் என்றும் கூறப்பட்டார்.

குஜராத்தில் இருந்து வரும் மைத்தரேயா RMIT யில் ஒரு நிதிப்பிரிவு மாணவர், ஒவ்வொரு பருவமும் 10,000 டாலர் பயிற்சிக் கட்டணம் கொடுப்பவர். ஆஸ்திரேலியாவில் நடக்கும் சமீபத்திய தாக்குதல்களை இந்திய செய்தி ஊடகம் தன் நலன்களுக்குப் பயன்படுத்துவதாக இவர் கூறினார். "இந்திய செய்தி ஊடகம் பற்றி நாங்கள் அறிவோம்...அது ஒரு இழிந்த செய்தி ஊடகம். அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை எரியூட்ட வேண்டும்; அதைத் தொடர்ந்து அது பற்றி எதுவும் எழுதும்."

ஆனால் நடப்பது பற்றிக் கவலை கொண்ட மைத்ரேயா போலீசாரின் செயலற்ற தன்மையை கண்டித்தார். Footscray ல் உள்ள இந்திய மாணவர் பற்றி தனக்குத் தெரியும் என்றும் அவர் குத்தப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றார். அவருடைய நண்பர்கள் நாள் முழுவதும் போலீஸ் நிலையத்தில் இருந்தனர்; போலிசாரின் பதிலோ, "இத்தாக்குதலை நடத்தியவரின் புகைப்படம் உங்களிடம் இருக்கிறதா?". "இது ஒரு கேலிக்கிடமான வினா. அதாவது நண்பர்கள் அம்புலன்சை கூப்பிடுவதற்கு பதிலாக தாக்கியவரைத் துரத்தி அவனுடைய புகைப்படத்தைக் கேட்க வேணடும் போலும்." என்றார் அவர். மைத்ரேயாவின் நண்பர்களிடம் போலீசார் "இப்பிரச்சினையை மறந்து விடுங்கள்; இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்--நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை" என்றனர்.

மற்றய பிரச்சினைகளைப் போல் உறைவிடம் கிடைப்பதற்கு ஏதேனும் உதவி கிடைத்ததா என்று கேட்கப்பட்டதற்கு மைத்ரேயா பதில் கூறியது: "பல்கலைக்கழகத்தில் இருந்து எதுவும் கிடையாது. எனக்கு சற்று அதிருஷ்டம். என்னுடைய சகோதரர் இங்கு இருக்கிறார்; அவரிடம் இருந்து நிறைய உதவிகள் கிடைக்கின்றன. மற்ற இந்தியர்களை போல் கஷ்டப்படவில்லை."

உயர்ந்த பயிற்சிக் கட்டணத்தை பற்றிக் கூறுகையில் அவர் தெரிவித்தது: "இது மிகவும் அதிகம், அசாதாரணமான முறையில் அதிகம்." இது மாணவர்கள்மீது அதிக அழுத்தத்தை கொடுக்கிறது; ஏனெனில் தோல்வியின் செலவு அதிகம் என்பது பற்றிய அச்சம் அவர்களிடையே வந்துள்ளது. "என்னுடைய நண்பர்களில் ஒருவர் 50,000 டாலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கினார். நான் பெற்ற ஒவ்வொரு குறிப்பிட்ட அலகுப் பணத்திற்கும் 2,800 டாலர் கொடுக்க வேண்டியிருந்தது."

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ரூட்டின் விடையிறுப்பையும் மைத்திரேயா குறைகூறினார். "சமூகங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை அரசாங்கம் இங்கு குறைக்கவில்லை, அதிகப்படுத்துகிறது." என்றார் அவர்.