World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thousands line up at Los Angeles free clinic
Healthcare and the social crisis in America

லாஸ் ஏஞ்சல்ஸ் இலவச மருத்துவமனைக்கு முன் ஆயிரக்கணக்கானவர்கள் நிற்கின்றனர்

சுகாதார சேவையும் அமெரிக்காவில் சமூக நெருக்கடியும்

Patrick Martin
17 August 2009

Use this version to print | Send feedback

லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு மருத்துவமனைக்குள் இவ்வாரம் கஷ்டப்படும் மனிதாபிமான தேவை பெரும் அலையென காணப்பட்டது. 2005ல் காத்தரீனா புயலால் விளைந்த அகதிகளால் நியூ ஓர்லீயன்ஸ் சூபர்டோம் உலக அதிர்ச்சிக்கு உட்படுத்தியது போல், கலிபோர்னியோ இங்கிள்வுட்டில் காணப்படுவது அமெரிக்காவை பேரழிவிற்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் சமூக நெருக்கடி பற்றிய காட்சியை அளிக்கிறது. பெருகும் வேலையின்மையும் பரவும் வீடற்ற நிலையும் ஏற்கனவே பரந்தளவில் தீர்க்கப்படாதுள்ள சுகாதார பாதுகாப்பு சேவைகளை அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும், புறநகரத்திலும், கிராமப்புற பகுதிளிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக்கக் கூடும்.

ஆயிரக்கணக்கான காப்பீடு அற்ற தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து இங்கிள்வுட் அரங்கத்திற்கு இலவச மருத்து மற்றும் சுகாதார பாதுகாப்பை சேவையடிப்படையில் வழங்கும் வைத்தியர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் இருந்து பெறுவதற்கு வந்து கொண்டிருக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் கூடைப்பந்து அணியில் புறநகர இல்லமாக முன்பு இருந்த இந்த அரங்கம் இந்தவாரம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய மருத்துவ சேவை நிலையமாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த டென்னிசியை தளமாக கொண்ட அறக்கட்டளையின் முக்கியமாக நன்கொடைகள், மருத்துவப் பொருள்கள் மற்றும் சேவையடிப்படையிலான மருத்தவப் பிரிவு ஊழியர்களையும் நம்பியிருக்கும் Remote Area Meidcal Foundation, 8,000 பேருக்கும் மேலானவர்கள் நிகழ்ச்சி முடிவதற்குள் அரங்கில் இருந்து உதவியை பெறுவர் என்று கூறினார். முதல் மூன்று நாட்களில் மட்டும் 706 பற்கள் பிடுங்கப்பட்டன, 1640 பல் துவாரங்கங்கள் நிரப்பப்பட்டன. 141 mammograms எடுக்கப்பட்டன, 550 அணியும் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சோதனைகள் கசரோகத்திற்காக மேற்கொள்ளப்பட்டன. சில நோயாளிகள் காத்திருந்த முதலுதவி வண்டிகளில் ஏற்றப்பட்டு உள்ளூர் அவசர சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

பல நோயாளிகள் பல மணி நேரம் சிகிச்சைக்காக காத்திருந்தனர் அல்லது இரவு முதலே தங்கள் கார்களில் காத்திருந்து வரிசையில் தங்கள் இடம் போய்விடாமல் இருக்குமாறு கவனத்துடன் இருந்தனர். கிடைத்த சேவையடிப்படையிலான தொண்டர்கள் சமாளிக்கக்கூடியதைவிட நோயாளிகளின் தேவைகள் கூடுதலான இருந்தன. அறக்கட்டளைத் தலைவர் Stan Brock மருத்துவ சோதனைக்கு 100 பல் மருத்துவர்களும் 20 கண் மருத்துவர்களுக்கும் வேலை இருந்தது என்றும் இது திரட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறினார்.

RemoteArea Medical அறக்கட்டளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரேசில் அமேசன் காட்டுப் பகுதிகளில் மருத்துவமனை நிறுவியதில் ஆரம்பித்து பல வறிய மூன்றாம் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் காட்டியுள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அது காத்தரீனாவிற்குப் பின்னர் நியூ ஓர்லியன்ஸ் உட்பட அமெரிக்காவிற்குள்ளும் பணியை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முன்னதாக வேர்ஜீனியாவில் உள்ள அப்பளாச்சியன் மலையடிவாரத்தில் பணிபுரிந்தது. அங்கு பல் மருத்துவர்கள் இரு நாட்களில் 4,300 க்கும் மேற்பட்ட பற்களைப் பிடுங்கினர்.

"ஒரு 60 நிமிஷங்கள்" நிகழ்வைப் பார்த்து, அறக்கட்டளையின் செயற்பாடுகளை அறிந்த திரைப்பட, பாடல் தயாரிப்பாளர்கள் குழு ஒன்று அதையொட்டி Brock இடம் தொடர்பு கொண்டு செய்த உதவியால் லாஸ் ஏஞ்சல்ஸ் முகாம் நடந்தது. உள்ளுர் திருச்சபைக்கு சொந்தமான Forum என்னும் அரங்கு மத்திய இடத்தில் இருந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டது; இது லாஸ் ஏஞ்சல்ஸ் தெற்குப்பகுதியில் அதிக மக்கள் கூட்டம் வாழும் பகுதிக்கு அருகே உள்ளது.

உள்ளூர் செய்தி ஊடகத்திடம் பேசிய ஒரு சேவையடிப்படையிலான பல் மருத்துவர் இதற்கு ஒப்பான சேவையை அவர் செய்திருந்த பிரேசிலை காட்டிலும் நிலைமை லாஸ் ஏஞ்சல்ஸில் மோசமாக இருக்கிறது என்று கூறினார். பிரேசிலைப் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர்கள் சிறந்த பொது மருத்துவமனை, சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்டுள்ளனர்" என்றார் அவர். மற்றொரு சேவை மருத்துவர், மூன்றாம் உலக நாடுகளின் நிலைமைக்கும் லாஸ் ஏஞ்ஞல்ஸில் உள்ள நிலைமைக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றிக் கேட்கப்பட்டபோது, "இங்கு மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்." என்றார்.

உள்ளூர் செய்தி ஊடகத் தகவல்கள்படி, மருத்து முகாமின் உதவியை நாடியவர்களுள் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர்:

* கண்ணிற்கு கண்ணாடி பெறுவதற்காக ஒரு வீடற்ற மனிதர் மருத்துவமுகாமிற்கு வெளியே முகாமிட்டிருந்தார்.

* வேலையை இழந்த மளிகைக் கடை எழுத்தருக்கு பல் வேர் வைத்தியம் தேவைப்பட்டிருந்தது.

* வேலையை இழந்திருந்த கார் திருத்துபவர் ஒருவர் முதுகு வலியால் அவதியுற்றிருந்தார்.

* அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஒருவர் இரு ஆண்டுகளாக காப்பீட்டு வசதி இல்லாமல் இருந்தார்.

* HMO திட்டத்தின் கீழ் தனது நலன்களை தீர்த்துவிட்ட ஒரு புற்று நோய் பாதிப்பாளர்

* சமூகக் கல்லூரி மாணவர், மூக்கடைப்பு, சிதறிய பார்வை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்.

* ஒரு வேலையில் இருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பு ஊழியருக்கு கண்ணாடி தேவைப்பட்டது.

* பல்வலியுடன் ஒரு வேலையிழந்த மளிகைக்கடை கணக்காளர்.

* தனக்கே காப்பீடு இல்லாத நிலையில் மாநில மருத்துவத்திட்டத்தின்கீழ் உள்ள இரு குழந்தைகளை கொண்ட பெண்மணி.

* உள்ளூராட்சி அலுவலர், அவருடைய கணவர் மற்றும் மூன்று வயது மகளுக்கான சிகிச்சைக்கு அதிக பணம் ஆகும் என்பதால் அவருடைய பல் காப்பீட்டில் இருந்து எடுத்துச் செலவு செய்ய முடியாமல் இருப்பவர்.

* பற்கள் கட்டுவதில் பாதி நிலையில் இருக்கும்போது காப்பீட்டை இழந்த ஒரு பட்டறைத் தொழிலாளர்.

* வேலைப்பார்க்கும் தம்பதிகள், இருவருக்கும் பற்கள் கட்டுதல் தேவைப்பட்டது, ஒரு பொது மருத்துவ உதவி மற்றும் மார்பக பரிசோதனை, பெருங்குடல் சோதனை செய்யப்பட வேண்டும்

* நீரிழிவு நோயினால் உடல் உறுப்பை இழந்தவர், தேவைப்படும் மருந்துகளை வாங்க முடியாத நிலையில் உள்ளவர்.

* நுரையீரல் பிரச்சினைக்கு எக்ஸ்ரே எடுக்கும் தேவையுள்ள ஒரு ஓய்வு பெற்றவர்.

* இரு ஆண்டுகளுக்கு முன் முன்னாள் படையினர் மருத்துவமனையில் இதைவிட அவசர சிகிச்சைகள் இருந்ததால் பல் வேர் வைத்தியத்தை ஒத்திப் போடும் நிலையில் இருந்த 70 வயதான வியட்நாம் போரில் பங்கு பெற்ற இராணுவத்தினர்.

* ஐந்து ஆண்டுகளில் முதல் தடவயாக புதிய கண்ணாடியை பெற்ற ஒரு 63 வயது பெண்மணி.

* கடந்த ஆண்டு அசாதாரண கருப்பை சோதனை செய்துகொண்ட ஒரு 46 வயதுப் பெண்மணி. Medi-Cal செலவுகளை மறுத்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் இருந்தவர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகராட்சி சுகாதாரப் பணிகளில் உயர்மட்ட அதிகாரி அரங்கிற்கு வருகை புரிந்து வெளிப்படையான படிப்பினையை உணர்ந்து, செய்தியாளர்களிடம் "அமெரிக்காவில் தற்பொழுதைய சுகாதாரப் பாதுகாப்பு முறை முறிந்துவிட்டது." எனக்கூறினார். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் கட்டுரையாளர் ஸ்டீவ் லோபெஸ் அரங்கின் வெளியே தெளிவாக "சமூகத்தின் தீமைமிக்க தோல்வியின் சரியான வடிகட்டிய தன்மை." எனக்கூறினார்.

இலவச மருத்துவ வசதிக்கு வந்த மிகப் பெரிய கூட்டம் குறிப்பிடத்தக்க வகையில் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் முக்கிய செய்திதாட்களின் ஊடக கவனத்தை ஈர்த்தது. ஆனால் உத்தியோகபூர்வ "சுகாதாரப்பாதுகாப்பு விவாதத்தினை" பற்றி இருதிறத்தினரும் எதுவும் குறிப்பிடவில்லை.

குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், அமெரிக்காவின் சமூக நெருக்கடியின் மகத்தான பரிமாணம் அதன் தீவிர வலது, பாசிச சிந்தனைப் போக்குடைய கூறுபாடுகளை ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராக திரட்டும் முயற்சிகளில் வசதியற்ற திசைதிருப்பல் ஆகும். Newt Gingrich, Sarah Palin, Fox News & Co., ஆகியோர் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு காப்பீடு அல்லது பணம் இல்லாததால் சுகாதாரப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்கு பதிலாக "இறப்பு விசாரணைக் குழுக்கள்" மற்றும் பிற கற்பனைத் தோற்றங்கள் பற்றி வெறியூட்டுகின்றனர்.

ஆனால் ஒபாமாவிற்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இந்த அரங்க நிகழ்வு இதேபோன்ற முறையில் வரவேற்கத்தக்கதாக இல்லை. மோன்டனா மற்றும் கொலோரடோவில் வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில் ஜனாதிபதி நகர அரங்குக் கூட்டங்களில் பேசினார். ஆனால் தொலைக்காட்சியிலும், கேபிள் தொலைக்காட்சியிலும் அதிகம் விளம்பரப்படுத்த இந்த இரு நிகழ்வுகளிலும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த மனத்தை உருக்கும் அசாதாரண நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஞாயிறன்று சுகாதாரப் பாதுகாப்பு பற்றி நியூயோர் டைம்ஸில் ஆசிரியர் தலையங்கத்திற்கு எதிர்ப்புறம் வந்த கட்டுரையும் அரங்கத்தில் நடந்த இலவச மருத்துவ வசதி பற்றி எந்தக் குறிப்பையும் காட்டவில்லை.

இவ்விதத்தில் வேண்டுமென்றே மெளனம் சாதிப்பது ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் குறைந்தபட்சம் தொழிலாள வர்க்கத்திற்கு சுகாதார வசதியை கொடுக்கும் திறன் அளிப்பது என்ற பொருளில் "சீர்திருத்தம்" என்பதுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதற்கு போதுமான நிரூபணம் ஆகும்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்பு ஜோன் எப். கென்னடியும் லிண்டன் ஜோன்சனும் 1960களில் வறுமைக்கு எதிராக இயற்றப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெறும் வகையின் ஒரு பகுதியாக வறுமை மிகுந்த Appalachia அடிவாரப்பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஒரு குறைந்த பட்ச சமூகச் சீர்திருத்தத்தையேனும் ஒபாமா வாதிட்டு இருந்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் நிகழ்வு தீவிர சமூகத் தேவையின் நிரூபணம் என்று கூற அவர் வாய்ப்பை பயன்படுத்தியிருந்திருப்பார்

ஆனால் ஒபாமாவின் பெருவணிக சுகாதாரப் பாதுகாப்பு மறு கட்டமைப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் நிதிய நலன்களை அதிகரிப்பதாக இருக்கிறதே அன்றி அமெரிக்க மக்களின் உடல் நலத்தை முன்னேற்றுவதாக இல்லை. எனவேதான் சுகாதாரப் பாதுகாப்பு செலவினத்தை குறைப்பது பற்றிய அவருடைய தீவிர வலியுறுத்தல் உள்ளது. அப்பொழுதுதான் தொழிலாளர் பிரிவு செலவினைக் குறைத்து பெருநிறுவனங்களின் போட்டித் தன்மையில் முன்னேற்றம் காட்ட முடியும்.

எனவேதான் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் பெரு வணிகத்தின் முக்கிய பிரிவுகளால் ஆதரிக்கப்படுகிறது. அதில் பெறுநிறுவனத்தின் பெரும் பகுதிகளான மருந்து தயாரிப்பவர்கள், சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள், பெரும் மருத்துவமனைத் தொடர்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றின் இலாப உந்துதல்தான் சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடிக்கு அடிப்படைப் பொறுப்பு ஆகும்.

ஒபாமா நிர்வாகம் பெருவணிக நலன்களுடன் நெருக்கமான ஆலோசனையுடன் திட்டத்தை தயாரித்துள்ளது. அவற்றிற்கு அவற்றின் இலாபங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என்ற வெளிப்படையான உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது முழு அமெரிக்க மக்கள் தொகையான நோயாளிகள்தான் இந்த இருவர்க்க சுகாதாரப் பாதுகாப்பு முறை நிறுவப்படுவதை ஒட்டி-செலவினங்களை ஏற்கும். பணம் கொடுக்க முடிந்தவர்களுக்கு சிறப்பான வசதி, பெரும்பாலான மக்களுக்குக் குறைந்த பாதுகாப்பு என்ற விதத்தில்.

ஒபாமா நிர்வாகம் அளிக்கும் போலித்தன மாற்றீடுகளை எதிர்த்த விதத்தில் --அவருடைய பிற்போக்குத்தன சுகாதாரப் பாதுகாப்புத்திட்டம் அல்லது இருக்கும் நிலையைத் தொடர்வது-- தொழிலாள வர்க்கம் இலாபத்திற்காக மருந்து என்ற முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இலவச சுகாதார பாதுகாப்பை அனைவருக்கும் வேண்டும் என்றும் கோர வேண்டும் --இது பொதுச் செலவில் ஒரு அடிப்படை மனித உரிமையாகக் கொடுக்கப்பட வேண்டும்.

சுகாதாரப் பாதுகாப்பு ஆதாரங்கள் பொருளாதார வாழ்வின் கூறுபாடுகள் அனைத்தையும் சோசலிச மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக செயற்படுத்தப்பட வேண்டும். இதன் பொருள் மாபெரும் நிறுவனங்களும் வங்கிகளும் தேசியமயமாக்கப்படுதல், வோல்ஸ்ட்ரீட் மற்றும் பெரும் செல்வம் கொழித்தவர்களுடைய செல்வம் பறிமுதல் செய்யப்படுதல், சுகாதாரப் பாதுகாப்பு தொழில் ஒரு பொது மக்கள் பயன்பாட்டு அமைப்பாக மாற்றப்பட்டு மனிதத் தேவைகளுக்காக உபயோகிக்கப்படல், தொழிலாளர்களின் உடைமையாக, ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுதல் என்பவை ஆகும்.