World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Washington praises Afghan election fiasco to justify war escalation

போரை விரிவாக்குதை நியாயப்படுத்த ஆப்கானிஸ்தானிய தேர்தலின் சிக்கலான முடிவை வாஷிங்டன் பாராட்டுகிறது

Bill Van Auken
22 August 2009

Use this version to print | Send feedback

வெள்ளை மாளிகை புல் தரையில் இருந்து நிருபர்களுக்கு வெள்ளியன்று பேசிய ஜனாதிபதி ஒபாமா அமெரிக்க ஆக்கிரமிப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20 அன்று நடந்த தேர்தல் "ஆப்கானிய மக்கள் தங்கள் வருங்காலத்தை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றப்படி" என்று அறிவித்தார்.

வியாழனன்று ஒரு வானொலிப் பேட்டியில் "தலிபான் இதைத் தடை செய்ய முற்பட்ட போதிலும் ஆப்கானிஸ்தானத்தில் நடந்த தேர்தல் ஒரு வெற்றியாகும்" என்று பாராட்டினார். அதே நேரத்தில் அவருடைய நிர்வாகம் "ஆப்கானிஸ்தானில் பணியை முடிப்பதில் கவனம் செலுத்தும்" என்று உறுதியளித்தார்.

ஒபாமாவிற்கு தெரிந்தோ, தெரியாமலோ, அவருடைய கருத்துக்கள் அவருக்கு முன்பு பதவியில் இருந்தவரில் ஒருவருடைய கருத்தை எதிரொலித்தன. அவர்களும் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளியிருந்த நாட்டில் நடைபெற்ற வாக்கு பற்றி இதே போன்ற பாராட்டை தெரிவித்து அங்கு உள்ள அமெரிக்கத் துருப்புக்கள் விரைவில் "வேலையை முடிக்கும்" என்றும் உறுதியளித்திருந்தார்.

அது 1967ம் ஆண்டு, அப்போது ஜனாதிபதி லிண்டன் பி. ஜோன்சன் ஆவார், தேர்தல் வியட்நாமில் நடைபெற்றது. வியட்நாமிய மக்கள் தேர்தலுக்கு செல்லுவதை "வியத்தகு முன்னேற்றத்தின்" சாட்சியம் என்று ஜோன்சன் விவரித்து அமெரிக்கப் போர் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டு அப்பொழுது "ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு" ஆதரவாக நியாயப்படுத்துவதற்கு அதை எடுத்துக் கொண்டார். ஒரு சில மாதங்களுக்குள் வியட்நாமிய விடுதலை இயக்கம் Tet Offensive ஐ தொடங்கியவுடன் ஜோன்சனுக்கு இரண்டாம் பதவிக்காலம் இல்லாமற் போயிற்று.

42 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வியட்நாம் போருக்கும் இன்றைய ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் போருக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளது தெளிவு. ஆனால் இரு தேர்தல்களின் தன்மை மற்றும் காலனித்துவ ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஒரு ஜனநாயக முகமூடி கொடுப்பதற்கு அவை திரிக்கப்படும் முறையிலும் வியத்தகு ஒற்றுமைகள் உள்ளன.

இரு தேர்தல்களும் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளால் நடத்தப்பட்டன. இரு நாடுகளிலும் அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை எதிர்க்கும் வேட்பாளார்கள் தேர்தலில் நிற்பதற்கு தடைக்குள்ளாயினர். இரு இடங்களிலும் முக்கிய வேட்பாளர்கள் முழுமையாக வாக்குச் சீட்டுகளை பெட்டியில் போடுபவர்கள், தேர்தல் மோசடி செய்பவர்கள் என்ற ஊழல் மிகுந்த கைப்பாவைகள் ஆவர்.

அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் பிரதிபலிப்பு, குறிப்பாக நாட்டிலுள்ள இரு மிகுந்த செல்வாக்குடைய ஏடுகளின் பிரதிபலிப்பு நான்கு தசாப்தங்களுக்கு முன்பு வியட்நாமில் காட்டியதைவிட ஆப்கானிய தேர்தல்களுக்கு காட்டியவை மிகுந்த அடிமைத்தனமாக உள்ளன.

"மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள், தங்கள் வருங்காலத்தை உருவாக்கும் உறுதியைக் கொண்டு, தலிபான் அச்சுறுத்தல்களை மீறி வியாழனன்று வாக்களித்தனர்..."

வாக்காளர்களில் பெரும்பான்மையினர் எனக்கூறக்கூடிய மில்லியன் கணக்கானவர்கள் முழு தேர்தல் வழிவகையிலும் பங்கு பெறவில்லை என்பதை தலையங்கம் எடுத்துக் கூற மறந்துவிட்டது. "தங்கள் வருங்காலத்தை உருவாக்க" உறுதி பூண்டவர்கள் வாக்களித்தார்கள் என்ற கூற்று ஒன்றும் வெளிப்படையாக இல்லை. பல விதங்களிலும், குறிப்பாக மக்களில் நான்கில் மூன்று பகுதியினர் இருக்கும் கிராமப்புறப் பகுதிகளில் வாக்காளர்கள் உள்ளூர் போர்ப்பிரபுக்களால் கடுமையான இனரீதியான அடிப்படையில் வாக்குகளை அளிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ஆப்கானிய தேர்தல் முறை பற்றிய இன்னும் துல்லியான மதிப்பீடு எதிர்த்தரப்பு வேட்பாளர்களில் ஒருவரும் முன்னாள் திட்ட மந்திரியுமான ரமஜான் பஷர்தோஸ்த்தினால் துல்லியமாக கூறப்பட்டது: "இது ஒரு தேர்தல் அல்ல; இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி" என்றார் அவர்.

தேர்தலின் முக்கிய நோக்கம் பற்றி டைம்ஸ் தலையங்கம் சடுதியில் எழுதுகிறது: "ஜனாதிபதி ஒபாமா ஆப்கானிஸ்தானில் வெற்றி என்பது அல்குவேடாவிற்கு எதிரான அமெரிக்க போராட்டத்திற்கு முக்கியமானது என்று சரியாக விளக்கியுள்ளார். அதற்கு அவர் கூடுதலாத துருப்புக்களை வழங்கியதன் மூலம் ஆதரவு கொடுத்துள்ளார் (இப்பொழுது 60,000 உள்ளனர் இன்னும் 6,000 படையினர் செல்ல உள்ளனர்)...... "ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டலை, "போர் எவ்வளவு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் கூறியும், விடயங்களை திருப்புவதற்கு ஆரம்பிக்க எவ்வளவு கடினமாகவும் செலவு தரக்கூடியதாகவும் இருக்கும்" என்று கூறியதற்கும் நாளேடு பாராட்டுகிறது.

இதன் பொருள் மிகத் தெளிவு. நடைமுறை தாராளவாதத்தின் குரல் ஆப்கானிய போருக்கு ஆதரவாக இருப்பதுடன் அது விரிவாக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது. இப்போர் "இன்னும் கடினமாகவும் செலவு தரக்கூடியதாகவும்" இருக்கும் மக்கிரிஸ்டல் 20,000த்தில் இருந்து 60,000 துருப்புகள் வரை இன்னும் கூடுதலான அமெரிக்கத் துருப்புக்களை கேட்க தயாரிப்புக்கள் நடத்துகிறார். இதைத்தவிர ஆப்கானிய கைப்பாவை படைகளை இருமடங்காக்க இன்னும் பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும்.

அமெரிக்க படையினர் "அவர்கள் சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் கைப்பற்றியுள்ள மூலோபாய மலைக் கணவாய்களில் இருந்தும் நகரங்கள் இருந்தும் தலிபான் கெரில்லாக்களை அகற்றும் வகையில் (பொறுப்பற்ற முறையில் உள்ளூர்வாசிகள் மோதல்களுக்கு இடையே வராமல் இருக்கும் வகையில்) அமெரிக்க இராணுவ நடவடிக்கையை டைம்ஸ் வலியுறுத்தியுள்ளது. இப்படி அடைப்புக்குள் "மனிதாபிமான" வகையில் எழுச்சிக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான முறையீடுகள் எளிதில் ஏமாந்துபோகும் வாசகர்களுடைய மனச்சாட்சியை சமாதானப்படுத்தும் முயற்சிதான். அமெரிக்க குறுக்கீட்டின் விரிவாக்கம் ஏற்கனவே நிரபராதியான ஆடவர், பெண்டிர் குழந்தைகள் ஆகியோர் முறையாக கொல்லப்படுவதை பெருக்கியுள்ளது. வெளியார் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தங்கள் தாய்நாட்டை பாதுகாப்பதற்கு போராடும் எழுச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதில் தவிர்க்கமுடியாமல் வரும் விளைவு இது.

தேர்தலில் வெற்றியடையக்கூடியவரையும் தலையங்கம் சற்றே கடிந்து கொள்ளுகிறது.-இப்பொழுது பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஹமித் கர்சாயி என்றாலும் அவருடைய முக்கிய எதிர்ப்பாளரான முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா ஆயினும், இருவரும் வெற்றி தனக்கே எனக் கூறுகின்றனர். இவர்கள் "நிறைய ஊழல் மலிந்த அரசாங்கத்திற்கு தலைமை வகித்துள்ளனர். அது அரசாங்கத்தின் நம்பகத்தன்மையையும் நாட்டின் குறைந்த நிதிய இருப்புக்களையும் தீர்த்துவிட்டது." கைப்பாவை அரசாங்கம் போர்ப்பிரபுக்களை ஆதரவிற்கு நம்பியிருக்கும் தன்மையை டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது; அதே போல் அரசாங்க அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அபின் உற்பத்தி மற்றும் கர்சாயியுடைய சொந்த சகோதரர் பாதுகாப்பில் போதை மருந்துகள் கடந்தல் நடப்பதையும் சாடியுள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்று வெளிப்பட்டுவரும் அரசாங்கம் "இந்தப் பேரழிவுப் போக்குகளை மாற்ற வேண்டும்" என்று அது கோருகிறது. அதன் பின், "போர்ப்பிரபுக்களுடன் கொண்டுள்ள விரும்பத்தக்க உடன்பாடுகள் அனைத்தும் உடனடியாக தகர்க்கப்பட முடியாது" என்றும் அப்படிச் செய்தால் "நாட்டை ஆளமுடியாது" என்றும் உணர்ந்த முறையில் சேர்த்துக் கொள்கிறது.

"பேரழிவுப் போக்குகளை" சுட்டிக்காட்டி, தேர்தல் விளைவுகள் வாக்காளர்களால் இல்லாமல் போர்ப்பிரபுக்களுடன் ஊழல் மிகுந்த உடன்பாடுகளினாலும் பாரிய மோசடியினாலும் தீர்மானிக்கப்பட்டது என்ற சான்றுகளைக் கொடுத்து புதனன்று Washington Post பின்வருமாறு அறிவித்தது: "இவ்வளவு இருந்தும், ஆப்கானியத் தேர்தல் மிகச் சிறிய முறையில்தான் மதிப்பிடப்பட வேண்டிய கட்டாயம் உள்ள நாட்டில் ஒரு முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது."

Post தலையங்கமும் விரைவில் முக்கியக் குறிப்பைக் கொடுக்கிறது: "வெற்றி என்பதற்கு கணிசமான நேரமும் பொறுமையும் தேவை. ஒபாமா நிர்வாகம் உறுதியளித்துள்ளதைவிட கிட்டத்தட்ட கூடுதலான துருப்புக்கள் மற்றும் இருப்புக்களும் கட்டாயம் தேவை."

ஆப்கானிஸ்தானில் நடந்த மோசடித்தன தேர்தலுக்கு இத்தகைய எதிர்கொள்ளலில் இருந்து வெளிப்படுவது அமெரிக்க ஆளும் உயருடுக்கு ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் போரை விரிவாக்குவதற்கு ஆதரவாக உள்ளது என்பதுதான். விரைவில் 9ம் ஆண்டு தொடக்கத்தை காண உள்ள இப்போர், அல் குவேடாவை தோற்கடித்தல் அல்லது அமெரிக்காவை பயங்கரவாதத்தில் இருந்து காப்பதற்காக எனக்கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். ஒசாமா பில் லாடனை வேட்டையாடி வீழ்த்துவதுதான் தலையீட்டின் நோக்கம் என்று முதலில் கூறப்பட்ட போலிவாதம் நீண்டநாள் முன்பே கைவிடப்பட்டுவிட்டது. முந்தைய முக்கிய பயங்கரவாதியும் CIA இன் சொத்துமான ஒசாமா உத்தியோகபூர்வ வாஷிங்டனின் விவகாரங்களில் பெயரற்ற நபராகி விட்டார்.

பல்லாயிரக்கணக்கான அமெரிக்க, நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்தும் உந்துதலின் ஒரு பகுதியாக உள்ளன. இப்பகுதி பூகோள-மூலோபாய வகையில் முக்கிய பகுதியும், உலகின் எரிபொருள் இருப்புக்களில் பெரும்பாலானவற்றை கொண்டுள்ளது. காலனித்துவ எதிர் கிளர்ச்சி நடவடிக்கைகளை தீயவகையில் அப்படியே செய்யும் விதத்தில், போரின் பரந்த நோக்கம் ஐரோப்பா, ஆசியாவில் உள்ள முக்கிய போட்டியாளர்களுக்கு எதிராக ஒப்புமையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மேன்மைக்கு ஈடுகட்டும் வகையில் அமெரிக்காவின் இராணுவ வலிமையைப் பயன்படுத்துவது ஆகும்.

பல கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினர் "நல்ல போர்", "தேவையான போர்" என்று விற்க முற்படும் கருத்தை எதிர்க்கும் நிலையில், அதுவும் இரண்டிற்கு ஒன்று என்ற விகிதத்தில் அதற்கு எதிர்ப்பைக் காட்டும் நிலையில், இப்போரை விரிவாக்கம் செய்யும் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

போருக்கு மக்கள் எதிர்ப்பை இருக்கும் நிலையை கொண்ட Lyndon Baines Johnson உடைய அடிச்சுவடுகளை தானும் பின்பற்றுகிறோம் என்று ஒபாமா காணக்கூடும். ஆனால் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவம் பெரு மந்த நிலைக்கு பின்னர் மிகவும் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும் சூழலில், இந்த எதிர்ப்பு இன்னும் சக்திவாய்ந்த முறையில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வெளிப்படும். அது தவிர்க்க முடியாமல் இராணுவவாதத்திற்கு ஆதாரமான இலாபமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புடன் இணையும்.