World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama issues order for escalation in Afghanistan

ஆப்கானிஸ்தானில் போர் விரிவாக்கத்திற்கு ஒபாமா உத்தரவிடுகிறார்

Barry Grey
1 December 2009

use this version to print | Send feedback

ஞாயிறன்று இராணுவத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுக்கள் நடத்தியபே,ாது, ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆப்கானிஸ்தானிற்கு இன்னும் குறைந்தது 30,000 துருப்புக்களாவது அனுப்பப்பட வேண்டும் என்று முறையாக உத்தரவிட்டார். போருக்கு மக்கள் எதிர்ப்பு அல்லது ஜனநாயக நெறிவகைகள் பற்றிய தன்னுடைய இகழ்வான அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இன்று இரவு தேசிய அளவில் ஒளிபரப்ப இருக்கும் தன்னுடைய அமெரிக்க மக்களுக்கான உரை வரும் வரை கூட அவர் இதை அறிவிக்க காத்திருக்கவில்லை.

தன்னுடைய நிர்வாகத்தின் முதல் வாரங்களில் ஒபாமா ஆப்கானிஸ்தானிற்கு அனுப்ப உத்தரவிட்டிருந்த கூடுதலான 21,000 துருப்புக்களை தவிர இந்தப் புதிய "அதிகரிப்பு" வந்துள்ளது. இது அமெரிக்கா அங்கு நிறுத்தியிருக்கும் துருப்புக்களை 100,000 க்கு --எட்டு ஆண்டுகளுக்கு முன் படையெடுப்பு ஏற்பட்டதில் இருந்து-- மிக அதிகமான எண்ணிக்கை ஆக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வன்முறையை பெருக்கி, பாக்கிஸ்தானில் இன்னும் அதிக நேரடியான இராணுவ ஈடுபட்டை அச்சுறுத்தியுள்ள விதத்தில் நிர்வாகம் இரு நாடுகளிலும் இருக்கும் பொதுமக்கள் கருத்தை மீறுகிறது; அந்நாடுகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு எங்கும் படர்ந்துள்ளது; அமெரிக்காவிலேயே கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான அமெரிக்கர்கள் போரை எதிர்க்கின்றனர் என்பதைத்தான் காட்டுகின்றன.

மக்களுடைய விருப்பம் பற்றி அது கொண்டுள்ள இழிவு, பொருளாதாரம், அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவை பற்றிய அதன் இகழ்வுத் தன்மையில், ஒபாமா நிர்வாகம் எந்தத் தடங்கலும் இல்லாமல் புஷ் நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், வழிவகைகளையும் தொடர்கிறது; இக்கொள்கைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டவை ஆகும். தான் "மாறுதலுக்கான" வேட்பாளர் என்று ஒபாமா பிரச்சாரத்தின்போது கூறியிருந்த அடிப்படையில் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

தனக்கு முன்பு பதவியில் இருந்தவர் போலவே, ஒபாமாவும் இன்று தேசிய அளவில் ஒளிபரப்பப்பட இருக்கும் உரைக்கு வெஸ்ட் பாயின்டில் இருக்கும் அமெரிக்க இராணுவ உயர் கல்விக்கூடத்தை இடமாக தேர்ந்து எடுத்திருப்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது ஆகும். ஓவல் அலுவலகத்தில் இருந்து ஒரு சிவிலிய ஜனதிபதியாக அவர் பேசவில்லை; அவ்வாறு பேசுவதுதான் முக்கிய ஜனாதிபதி கொள்கை அறிவிப்புக்களுக்கு ஒரு மரபார்ந்த செயல் ஆகும் --அல்லது காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன் அறிவித்திருக்க வேண்டும்.

இதற்குப் பதிலாக அவர் தன்னுடைய உத்தரவை செயல்படுத்த பொறுப்புக் கொடுக்கப்பட இருக்கும் அதிகாரிகள் பிரிவில் பேசுவதற்கு விரும்பியுள்ளார். ஒரு இராணுவ நபராக அவர் பேசுவார்--படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில்; ஒரு வட்டத்திற்குள் இருக்கும் உரையைக் கேட்பவர்களுக்கு. உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் கொண்டுள்ள கொள்கைகளைக் கோடிட்டுக் காட்டுவார்.

ஒபாமா தேர்ந்தெடுத்திருக்கும் இடம் அவர் அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கும் முக்கிய தளம் இராணுவம் என்பதை நிரூபிக்கிறது. நிர்வாகம் கூடுதலாக வலதுசாரி, மக்கள் செல்வாக்கு இல்லாத கொள்கைகளை தொடர்கையில் --வங்கிப் பிணை எடுப்பானாலும் சரி, குடி உரிமைகளைத் தாக்குவதானாலும் அல்லது போரை விரிவாக்கினாலும்-- அது இன்னும் அதிகமாக இராணுவத்தையும் தேசிய பாதுகாப்புக் கருவிகளையும் தளமாகக் கொள்ள முற்படுகிறது.

பெருகிய முறையில் அமெரிக்க அரசியல் வாழ்வில் வெளிப்படையான, சக்தி வாய்ந்த பங்கை இராணுவம் கொண்டிருப்பது ஜனநாயகம் கிட்டத்தட்ட பொருத்தமற்றது என்ற விதத்திலான பொறிகளைக் கொண்ட கட்டத்தைத்தான் அடைந்துள்ளது. இராணுவம் ஒரு சுயாதீனத் தளத்தை பிரதிபலிக்கிறது, மக்களிடம் இருந்து ஒதுங்கி, தனியே இருக்கும், மக்கள் உணர்வு எப்படி இருந்தாலும், அதன் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதை ஒபாமா அடையாளம் காட்டுகிறார்.

சிவிலிய-இராணுவ உறவுகளில் மாற்றம் என்பது நீண்டகாலமாகவே நடைபெற்று வருகிறது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இராணுவம் அரசியல் விவகாரங்களில் கொண்டிருக்கும் கனம் முன்னோடியில்லாத விகிதங்களை அடைந்துள்ளது. தன்னுடைய விடைபெறும் உரையில் ஜனாதிபதி ஐசனோவர் "இராணுவ தொழில்துறை இணக்கம்" என்று அவர் அழைத்ததின் பெருகிய அதிகாரம் பற்றி எச்சரித்து, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இந்த இடைப்பட்ட ஆண்டுகள் அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்புத் தன்மையை கண்டுள்ளன; இது அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் உலகப் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட மூலோபாய நோக்கங்களை தொடர அதன் இராணுவ மேன்மையை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதில் இருந்து இன்னும் அதிக தீவிரத்தைக் கொண்டு பெருகிவிட்டது. இராணுவம் சிவிலிய அதிகாரத்திற்கு கட்டாயமாக தாழ்ந்திருக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு நெறி அரிக்கப்பட்டுள்ளது அமெரிக்க ஜனநாயகத்தின் இழிசரிவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

உதாரணமாக கியூபா ஏவுகணை நெருக்கடி பற்றிய தன்னுடைய உரையை ஒரு இராணுவப் பார்வையாளர் கூட்டத்திற்கு முன் ஜோன் எப். கென்னடி நிகழ்த்துவது என்பது சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாததாகும். அந்த நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் குறைந்த பட்சம் பகிரங்கமாகவேனும் இராணுவம் சிவிலிய ஆட்சிக்கு காட்ட வேண்டிய மதிப்பின் அரசியலமைப்பு நெறிகளுக்கு உட்பட்டு நிற்கும் கட்டாயத்தில் இருந்தது.

ஒரு நட்பு மிகுந்த, இராணுவத்தினர் நிறைந்த கூட்டம், இராணுவச் சூழல்கள் நிறைந்த நிலை, ஜனாதிபதி இராணுவத் தளபதிகள் சூழ இருத்தல் என்ற விதத்தில் தலைமைத் தளபதியாக உரையாற்றுவது நாட்டுப் பற்றித் தூண்டும், போரை எதிர்ப்பவர்களை மிரட்டும் வகையில் இருக்கும் என்று ஐயத்திற்கு இடமின்றி வெள்ளை மாளிகை கணக்குப் போட்டுள்ளது.

பதவிக்கு வந்து ஓராண்டிற்குள்ளேயே, இந்த "மாற்றத்தின்" வேட்பாளர் தனக்கு முன் பதவியில் இருந்தவர் செய்ததையே செய்கிறார்; அவரும் முக்கிய கொள்கை உரைகளை அநேகமாக இராணுவ, தேசியப் பாதுகாப்புப் பிரிவுகள் கூட்டத்திலேயே கூறும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

2007 ஜூலையில் மக்கள் விருப்பத்திற்கு எதிரான ஈராக் போரைத் தொடர்கையில் தான் பல தளங்களின் விருப்பத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் புஷ் கூறிய நிலைப்பாட்டைத்தான் ஒபாமாவும் அடிப்படையில் கொண்டுள்ளார். அமெரிக்க மக்கள் பல தளங்களில் ஒன்றாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர்; முக்கியமான தளமோ இராணுவமும் இராணுவக் குடும்பங்களும்தான்.

வாஷிங்டன் போஸ்ட்டின் Dana Milbank இன்று ஒரு கட்டுரையில் இராணுவத்துடன் ஒபாமா பெருகிய முறையில் கொண்டுள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் எழுதுவதாவது: "ஏற்கனவே இந்தக் குறுகிய ஜனாதிபதிப் பதவிக் காலத்தில், நோபல் சமாதானப் பரிசு வாங்கிய இவர் தென் கொரியாவில் Osan விமானத் தளம், அலாஸ்காவில் Elmendorf விமானப்படைத் தளம், புளோரிடாவிலுள்ள ஜாக்சன்வில்லேயின் கடற்படை விமானப் பிரிவு, அன்னாபோலீஸில் அமெரிக்க கடற்படை உயர்கல்விக்கூடம் மற்றும் நெவடாவில் உள்ள நெல்லிஸ் விமானப் படைத் தளம் ஆகியவற்றில் பேசியுள்ளார். (வேறு காரணங்களுக்காக அவர் Fort Hood ல் சுட்டுக் கொல்லப்பட்ட பாதிப்பு அடைந்தவர்களுடைய நினைவுக் கூட்டத்தில் பேசியதோடு, டோவர் விமானத் தளத்தில் இருந்து தாயகம் திரும்பியவர்களையும் வரவேற்றார்.) துணை ஜனாதிபதியும், முதல் சீமாட்டியும் தங்கள் பங்கிற்கு வேறு பல இராணுவ நிலையங்களுக்குச் சென்றனர்.

"ஜனாதிபதியின் உரைகள் இராணுவத்திற்கு என்பது புஷ் காலத்திற்கு முன்பு ஒப்புமையில் அபூர்வமாகத்தான் இருந்தன. ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி ஜனாதிபதிகள் சில சமயம் இராணுவக் குழுக்களிடம் ஒரே ஒரு முறைதான் பேசினர் (1993ல் பில் கிளின்டன், 1969ல் ரிச்சர்ட் நிக்சன்), சிலர் இருமுறை (கெரால்ட் போர்ட் 1974), அல்லது பேசியதே இல்லை. (1985 ல் ரோனால்ட் ரேகன்). ஆனால் புஷ் இத்தகைய உரைகளை "மிக அதிகமாக நடத்தினார்", 2005ல் மட்டும் 13 முறை நிகழ்த்தினார்.

"இந்த அதிகரிப்பு 2002ல் முன்னரே தாக்கித் தனதாக்கிக்கொள்ளும் போர்க் கொள்கைநெறியை விளக்குவதற்காக West Point க்கு ஜூன் 1 வீரர்களிடம் விவரிக்க சென்றிருந்தபோது தொடங்கியது.... ஆனால் அவர்கள் [துருப்புக்கள்] விசுவாசமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அது புஷ்ஷானாலும், ஒபாமாவானாலும், அவர்கள் சல்யூட் அடிப்பர். அல்லது கைதட்டிப் பாராட்டுவர். அல்லது 'ஹூ-ஹா' என முழக்கமிடுவர். செவ்வாய் இரவு இந்த இராணுவ அலங்காரமும் ஒபாமா தாங்கள் முன் நினைத்த மனிதர் இல்லை என்ற எண்ணத்தை இடதிடம் அதிகரிக்கத்தான் செய்யும்.

அமெரிக்க அரசியல் வாழ்வை இராணுவமயமாக்குதல் பெருகிய முறையில் ஏகாதிபத்தியக் கொள்கையுடன் பிணைந்துள்ளது; இது ஒபாமாவால் தொடரப்பட்டு, தீவிரமாகியுள்ளது; இடைவிடாத காலனித்துவ முறைப் போர்கள், இறுதியில் ரஷ்யா, சீனா போன்ற வல்லரசுகளை இலக்கு கொள்ளும்.