World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's ex-military chief announces presidential candidacy

இலங்கையின் முன்னாள் இராணுவ தலைவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கின்றார்

By Panini Wijesiriwardena
2 December 2009

Use this version to print | Send feedback

இலங்கையின் முன்னாள் உயர் மட்ட ஜெனரலான சரத் பொன்சேகா, எதிர்க் கட்சிகளுடன் பல வராங்களாக திரைக்குப் பின்னால் திட்டமிட்ட பின்னர், ஜனவரி 26 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஞாயிற்றுக் கிழமை அறிவித்தார். பொன்சேகா போட்டியிடுவதானது தீவின் அரசியல் வாழ்க்கையில் இராணுவம் நேரடியாக நுழைவதை குறிக்கின்றது.

இராணுவத் தளபதி என்ற வகையில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு வழிவகுத்த கொடூர யுத்தத்தை பொன்சேகா மேற்பார்வை செய்தார். அரசியலமைப்பையும் அலட்சியம் செய்து பாராளுமன்றத்தையும் நிராகரித்து அடிப்படை ஜனநாயக உரிமைகளை இரும்பு கால்களால் நசுக்கிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை சூழ இருந்த ஆளும் அரசியல்-இராணுவ கும்பலின் ஒரு முன்னணி புள்ளியாகவே பொன்சேகா இருந்தார்.

எவ்வாறெனினும், ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசும் போது, ஜனாதிபதியால் பாதிக்கப்பட்ட மற்றும் இப்போது "தரக்குறைவான சர்வாதிகாரியை" சவால் செய்யும் ஜனநாயகத்தின் பாதுகாவலராக தன்னை காட்டிக்கொள்ள இந்த முன்னாள் ஜெனரல் முயற்சித்தார். இந்த தோரணை நகைப்புக்கிடமானதாகும். யுத்தத்தின் போது, இராஜபக்ஷவை உச்சிவரை ஆதரித்ததோடு மேலும் மேலும் தீவிரமான அரசியல் பாத்திரத்தை இட்டு நிரப்பிய பொன்சேகா, யுத்த முயற்சிகளை கீழறுப்பதாக ஊடகங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தவராவார்.

புலிகளின் தோல்வியை அடுத்தே இந்த கசப்பான வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கின. அவை குற்றவியல் யுத்தத்தை முன்னெடுத்தது பற்றியவை அல்ல, மாறாக, அந்த வெற்றியின் புகழ் அனைத்தையும் தானே எடுத்துக்கொள்ள இராஜபக்ஷ எடுத்த முடிவு சம்பந்தமாக தோன்றியதாகும். மூன்று படைப் பிரிவுகளையும் இயக்கும் அதிகாரம் இல்லாத, விசேடமாக உருவாக்கப்பட்ட, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற நிலைக்கு பதவி உயர்த்தப்படும் போது, தான் விளைபயனுள்ள விதத்தில் ஓரங்கட்டப்பட்டதாக தனது பத்திரிகையாளர் மாநாட்டில் பொன்சேகா தெரிவித்தார். அவர் நவம்பர் 16ம் திகதி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

பொன்சேகா வேட்பாளரானமை, புலிகளின் இராணுவத் தோல்வியில் நன்மை பெறுவதன் பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்த இராஜபக்ஷ மீது, ஏற்கனவே எதிர்கொண்டிருந்த அரசியல் பிரச்சினைகளை மேலும் குவித்துள்ளது. யுத்தத்தின் முடிவில் இருந்து, நாட்டின் மோசமடைந்துவரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து கவனத்தை திருப்ப இந்த வெற்றியை பயன்படுத்திக்கொண்ட ஆளும் கூட்டணி, தொடர்ச்சியாக நடந்த மாகாண சபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. யுத்தத்தை ஆதரித்த பிரதான எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) எந்தவொரு மாற்றீட்டையும் வழங்கவில்லை.

ஒரு யுத்த வீரனாக காட்டிக்கொள்வதன் மூலம் வெற்றிபெறலாம் என கணித்த இராஜபக்ஷ, இப்போது எதிர்க் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜெனரலை சந்திக்கின்றார். யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் தமது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு, அவர்களது சொந்த அரசியல் வங்குரோத்தையும் ஆதரவு வீழ்ச்சியடைவதையும் பிரதிபலிக்கின்றது. அரசாங்கத்துடன் பெருமளவில் அடிப்படை வேறுபாடுகள் இல்லாத எதிர்க் கட்சிகள், இராஜபக்ஷவை சவால் செய்ய ஒரு மாற்று "யுத்த வீரனை" கூட்டாக ஆதரிக்க முடிவு செய்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) மற்றும் தமிழர்களை தளமாகக் கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உட்பட பல சிறிய கட்சிகளுடன் யூ.என்.பி. ஒரு தேர்தல் கூட்டை அமைத்துக்கொண்டுள்ளது. இந்தக் கட்சிகள், ஜெனரலை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலராகவும் நாட்டின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரின் நண்பனாகவும் சித்தரிக்கும் கடினமான பணியை எடுத்துக்கொண்டுள்ளன. பொன்சேகா கனடாவை தளமாகக் கொண்ட நெஷனல் போஸ்ட் என்ற ஊடகத்துக்கு, "இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது" என தான் பலமாக நம்புவதாக கடந்த ஆண்டு தெரிவித்ததன் மூலம் தனது சொந்த இனவாத நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

பொன்சேகா ஞாயிற்றுக் கிழமை மத்திய கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் உள்ள நடன மண்டபத்தில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார். தான் இராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் "பொது வேட்பாளராக" போட்டியிடுவதை அறிவிப்பதற்காக, சிங்கள அரசியல்வாதிகளின் எடுத்துக்காட்டான ஆடையான முழுக்கை மேலாடையுடன் வெள்ளையாக உடுத்தியிருந்தார். எந்த அரசியல் கட்சியின் கீழ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வது என்பது பற்றி இன்னமும் அவர் முடிவு செய்யவில்லை.

பொன்சேகா ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் அல்ல, அதனால் அவர் ஒரு கட்சியின் கொள்கைகள் மற்றும் ஒழுக்கங்களுக்கு கட்டுப்பட்டவர் அல்ல என்ற உண்மை, கணிசமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவரது உண்மையான அதிகார தளம் இராணுவ அதிகாரிகள் தட்டாகும். அவர் அவர்களது சீற்றம் மற்றும் அதிருப்தியின் சார்பில் குரல் எழுப்புகிறார். ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், அவர் ஒரு எதேச்சதிகார இராணுவ புள்ளியாக வெளிப்படுகின்றார். பாராளுமன்றத்தின் ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கிக்கொண்டு, வயிற்றலடிக்கும் நடவடிக்கைகள் ஊடாக ஆட்சி செய்ய, சக்திவாய்ந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை சுரண்டிக்கொள்வதன் பேரில் ஆளும் கும்பலின் சில பகுதிகள் பொன்சேகாவை ஆதரிக்கின்றன.

கொடூரமான இரக்கமின்மை பொன்சேகாவிடம் நிச்சயம் உண்டு. இராணுவத் தளபதி என்ற வகையில் தனது வாக்குறுதியை பூரணமாக இட்டு நிரப்பியுள்ளதாக அந்த நிருபர்கள் மாநாட்டில் அவர் மார் தட்டிக்கொண்டார். தான் "புலிகளுக்கு எதிராக போராடும் வேலையை" தனக்கு அடுத்து வருபவருக்கு விட்டு வைக்கப்போவதில்லை மற்றும் இந்த நவம்பரில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை அவரது "மாவீரர் தின உரையை நிகழ்த்த" அனுமதிக்கப் போவதில்லை என பொன்சேகா பகிரங்கமாக பிரகடனம் செய்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில், இராணுவம் பிரபாகரன் உட்பட புலிகளின் உயர் மட்ட தலைமைத்துவத்தை படுகொலை செய்தது. ஐ.நா. மதிப்பீட்டின்படி, ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான குண்டு வீச்சில் குறைந்தபட்சம் 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

''மன்னர் குடும்பத்தினதும் மன்னரதும், உறவுகளின் நலன்களை" இராஜபக்ஷ பாதுகாப்பதோடு, ஒரு சர்வாதியாகவும் செயற்படுகிறார் என பொன்சேகா அவரை கண்டனம் செய்கின்றார். அவர் ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தூக்கிவீசுவதாகவும் "பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாகவும்" வாக்குறுதி அளித்து ஜே.வி.பி. யிலும் யூ.என்.பி. யிலும் இணைந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜெனரலின் வார்த்தைகளை எவரும் நம்பக் கூடாது. ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்வதன் பேரில், எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தூக்கிவீசுவதற்கு அழைப்பு விடுப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர். அதிகாரத்துக்கு சென்ற உடனேயே தமது வாக்குறுதியை அவர்கள் மீறி வந்துள்ளனர்.

இராஜப்கஷவும் அவரது முன்னோடியான சந்திரிகா குமாரதுங்கவும், ஜே.வி.பி. யின் ஆதரவுடன், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்த போதிலும், ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டனர். ஜனாதிபதியாக இருப்பதற்கு மேலதிகமாக, இராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு போன்ற பிரதான பதவிகளையும் தன்வசம் வைத்துள்ளார். தற்போதைய அவசரகால நிலைமையின் கீழ், வேலை நிறுத்தங்களை தடை செய்யவும், ஊடகங்களுக்கு தணிக்கையை திணிக்கவும் மற்றும் குற்றச்சாட்டுக்கள் இன்றி தனி நபர்களை தடுத்து வைக்கவும் பெரும் அதிகாரங்களை அவர் கொண்டுள்ளார்.

தற்போதைய "சர்வாதிகாரியை" எதிர்க்கும் அவரது சகல கூற்றுக்களையும் பொறுத்தளவில், பொன்சேகாவின் பிரதான செய்தியானது இராஜபக்ஷ அமுல்படுத்தத் தவறுகின்ற கடுமையான "சட்டம் ஒழுங்கு" கொள்கையை அமுல்படுத்த பலமான, பொருத்தமான மற்றும் தேவையான மனிதன் தானே என்பதாகும். தான் மோசடிகளை துடைத்தெறிவதாகவும் பாதாள உலகத்தை துப்புரவு செய்வதாகவும் மற்றும் சமுதாயத்தில் "ஒழுக்கத்தை" ஸ்தாபிப்பதாகவும் சகுனமாக பிரகடனம் செய்தார். இராணுவத் தளபதி என்ற வகையில், அவர் "பாதாக உலகத்தினர் மீதான யுத்தத்தில்" இராஜபக்ஷவுடன் ஒத்துழைத்தார். அதன் விளைவாக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் குற்றவாளிகள் என சொல்லப்பட்ட பலர் சட்டத்துக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர்.

அவரது பொருளாதார கொள்கைகள் தொடர்பாக எமது உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கேட்ட போது, தான் யூ.என்.பி. யின் சந்தை சார்பு கொள்கைகளை ஆதரிப்பதாக பொன்சேகா சுட்டிக் காட்டினார். "யூ.என்.பி. யின் பொருளாதார கொள்கை நாட்டை சுபீட்சத்துக்கு கொண்டுவரும் என நான் நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார். 1978ல் இலங்கையை மலிவு உழைப்பு களமாக முதன் முதலில் திறந்து விட்டது வலதுசாரி யூ.என்.பி. அரசாங்கமேயாகும். பொன்சேகா ஆதரிப்பதாக கூறும் இந்த வேலைத் திட்டத்தையே இப்போது இலங்கையின் பிரதான கட்சிகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. 2001 மதல் 2004 வரை ஆட்சியில் இருந்த போது, தீவை பிராந்தியத்தின் முதலீட்டு மையமாக மாற்றி, அரசாங்க தொழில்கள், மானியங்கள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மோசமாக வெட்டிக் குறைக்கும் "இலங்கையின் புத்தியிர்ப்பு" என்ற சொல்லப்பட்ட பரந்த மறு கட்டமைப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த யூ.என்.பி. முயற்சித்தது.

தொடரும் பூகோள பொருளாதார நெருக்கடியின் மத்தியில், இலங்கை இன்று மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இராஜபக்ஷ அரசாங்கம் அந்நிய செலாவனி நெருக்கடியை தவிர்த்துக்கொள்ள கடந்த ஜூன் மாதம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற சர்வதேச நாணய நிதியத்தை நாடத் தள்ளப்பட்டது. வாழ்க்கைத் தரம் சீரழிந்து வேலையின்மை அதிகரித்துவரும் நிலைமையின் கீழ், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளில், மேலும் தனியார்மயப்படுத்தல்களும் அரசாங்க செலவில் மேலும் மோசமான வெட்டுக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆட்டங்கண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம் தேவையான வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்த இலாயக்கானது என்பதில் நம்பிக்கையிழந்துள்ள பெரும் வர்த்தகர்களின் சில பகுதியினர், அவற்றை நடைமுறைபடுத்தும் பலமான மனிதனாக பொன்சேகாவை ஆதரிக்கின்றனர்.

தமிழ் சிறுபான்மையினர் தொடர்பான அவரது கொள்கையை பற்றி கேட்ட போது, யூ.என்.பி. யின் வழியில் பாதம் பதித்த பொன்சேகா, இனப் பிரச்சினைக்கு அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தில் அடங்கியுள்ள மாகாண சுயாட்சி என்ற மட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கும் அப்பால் செல்லக்கூடிய ஒரு "அரசியல் தீர்வை" தான் ஆதரிப்பதாக தெரிவித்தார். யூ.என்.பி. தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் வழி ஏற்படுத்துவதன் பேரில், தீவின் தமிழ் மற்றும் சிங்கள முதலாளித்துவ தட்டுகளுக்கு இடையில் ஒரு அதிகாரப் பகிர்வுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த கொடுக்கல் வாங்கலை, இராஜபக்ஷவை விமர்சிக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளும், பிராந்திய நெருக்கடியை, குறிப்பாக தென்னிந்தியாவில் நெருக்கடியை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்ட இனவாத பதட்டங்களை இலகுவாக்கும் ஒரு வழிமுறையாக எண்ணி ஆதரிக்கின்றன.

கடந்த ஆண்டு கனடாவை தளமாகக் கொண்ட நஷனல் போஸ்ட்டுக்கு தெரிவித்த இனவாத கருத்தைப் பற்றி கேட்ட போது, அவரை "தவறாக மேற்கோள் காட்டிவிட்டதாக" கூறி பொன்சேகா தன்னை விலக்கிக்கொள்ள முயற்சித்தார். புலிகளின் தோல்வியை அடுத்து 250,000 தமிழ் பொது மக்களை தடுப்பு முகாங்களில் அடைத்து வைப்பதில் முக்கிய கருவியாக செயற்பட்ட முன்னாள் ஜெனரல், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கருணை காட்டுபவராக காட்டிக்கொள்ள முயற்சித்தர். அதே சமயம், "தக்க பாதுகாப்பு இன்றி" அவர்களை விடுதலை செய்வதை தான் எதிர்ப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். தேர்தலுக்கு முன்னதாக முகாங்கள் தொடர்பான விமர்சனத்துக்கு முடிவுகட்டுவதில் அக்கறை காட்டும் இராஜபக்ஷ அரசாங்கமும் சரியாக அதையே செய்கின்றது. அதாவது கைதிகளை பொன்சேகாவின் உதவியுடன் ஸ்தாபித்த நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பு நிலைமைக்கு திரும்பிச் செல்ல வைப்பதற்காக தடுப்பு முகாங்களை விட்டு வெளியேற அனுமதித்துள்ளது.

முன்னாள் உயர் மட்ட ஜெனரலுக்கும் "சர்வாதிகாரிக்கும்" இடையிலான போட்டி, தேர்தல் முடிந்தவுடன் உழைக்கும் மக்களுக்கு கையிருப்பில் இருந்து கிடைக்கவுள்ளது என்ன என்பது பற்றிய தெளிவான எச்சரிக்கையாகும். கால் நூற்றாண்டு கால யுத்தத்தின் போது, இலங்கை இராணுவமானது மேலும் மேலும் அரசியல் பாத்திரத்தை வகிக்கும் சக்திவாய்ந்த அதிகாரிகளுடன், தலைக்கு ஒன்று என்ற விதத்தில் உலகிலேயே மிக பிரமாண்டமான இராணுவமாக பரந்தளவில் விரிவாக்கப்பட்டுள்ளது. இராஜபக்ஷ பெருமளவு இராணுவத்தில் தங்கியிருப்பதைப் போலவே, பொன்சேகா பாதுகாப்பு ஸ்தாபனத்தை நேரடியாக பிரதிநிதித்துவம் செய்கின்றார். ஜனவரி 26 தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விடுத்துவரும் கோரிக்கைகளை தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக அமுல்படுத்த யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச இயந்திரத்தை பயன்படுத்தத் பொன்சேகா தயங்கப்போவதில்லை.