World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Congressional hearings set stage for escalation of Afghanistan war

காங்கிரஸ் குழு விசாரணைகள் ஆப்கானியப் போர் விரிவாக்கத்திற்கு அரங்கு அமைக்கின்றன

By Bill Van Auken
9 December 2009

Use this version to print | Send feedback

செவ்வாயன்று மூத்த இராணுவத் தளபதி மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதர் ஆகியோர் மன்ற, மற்றும் செனட் இராணுவக் குழுக்களின் முன் கொடுத்த சாட்சியங்கள் ஆப்கானிஸ்தானில் பெரிய அளவிற்குப் போரை தீவிரப்படுத்தவும், எல்லை கடந்து பாக்கிஸ்தானுக்குள் அதன் மேலும் கூடிய விரிவாக்கத்திற்கும் அரங்கு அமைத்துள்ளன.

தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டலும், ஆப்கானிஸ்தானில் முன்பு அமெரிக்கப் படைகளுக்கு தளபதியாக இருந்த ஓய்வு பெற்ற ஜெனரல், தூதர் கார் ஐக்கன்பெரியும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் முடிவிற்கு --டிசம்பர் 1ம் தேதி வெஸ்ட் பாயின்டில் அறிவிக்கப்பட்டது-- அந்நாட்டிற்கு இன்னும் 30,000 அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதற்கு தங்கள் உடன்பாட்டை உறுதிப்படுத்தினர்.

இந்த மறு ஆய்வு வழிவகை, ஒபாமா மற்றும் அவருடைய உயர்மட்ட ஆலோசகர்களால் கணக்கிலடங்கா நேரத்திற்கு விவாதிக்கப்பட்டது இறுதியில் மக்கிரிஸ்டலுக்கு அவர் கோரிய அனைத்தையும் அடிப்படையில் அளிக்கும் கொள்கையை கொடுத்துள்ளதுடன், ஆப்கானிஸ்தானத்தில் அவர் தொடரும் மூலோபாயத்தை மாற்றாமலும் விட்டுள்ளது.

மக்கிரிஸ்டலுடன் பல முறையும் இருவருடைய பகிர்ந்து கொள்ளப்பட்ட இராணுவப் போக்கை குறிப்பிட்ட தூதர் ஐக்கன்பெர்ரி மன்ற குழுவிடம் கூறினார், "எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி இந்த அணுகுமுறைக்கு நான் முழு ஆதரவும் கொடுக்கிறேன்." "தான் மக்கிரிஸ்டலுடன் முழுமையாக இணைந்திருப்பதாகவும்" அவர் சேர்த்துக் கொண்டார்.

இக்குறிப்பு அவர் காபூலில் இருந்து அனுப்பிய கேபிள் செய்தி ஒன்றில் இருந்து அவரே தன்னை ஒதுக்கிக் கொண்ட வகையில் இருந்தது; அதுவோ கடந்த மாதம் செய்தி ஊடகத்திற்கு கசிய விடப்பட்டிருந்தது; அதில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகள் ஈடுபடுத்தப்படுவது அமெரிக்க இலக்குகளைச் சாதிக்காது என்றும் அதற்குக் காரணம் ஆப்கானிஸ்தானில் உள்ள கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஆட்சியின் செயலற்ற தன்மையும் ஊழலும் என்று கூறப்பட்டிருந்தது.

தன்னுடைய ஆரம்ப அறிக்கையில் மக்கிரிஸ்டல் அமெரிக்கப் போருக்கான வாடிக்கையான நியாயப்படுத்துதலை பழையபடி கூறி, "அல் கொய்தாவைத் தோற்கடித்தல் என்ற மைய இலக்கு, அவர்கள் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைவதைத் தடுத்தல் இவற்றைச் சாதிப்பதற்கு நாம் தாலிபனுடைய திறனைத் தடுத்து, குறைத்துவிட வேண்டும், அவர்கள் ஆப்கானிய மக்களை நெருங்குவதை மறுக்க வேண்டும் மற்றும் ஆப்கானிய பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட அல் குவைதா உறுப்பினர்கள் இல்லை என்று மதிப்பிட்டு, தலிபான் ஆதரவின்கீழ் அந்த அமைப்பு இயங்குகிறது என்ற பல முறை கூறி வருவதற்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

தலிபானைப் பொறுத்தவரையில், இந்த சொல் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஆயுதமேந்திய எதிர்ப்பை விளக்கும் விதத்தில் விருப்பப்படி பயன்படுத்தப்பட்டு வருகிறது; எதிர்ப்போ ஆப்கானிய மக்களில் குறைந்தது 80 சதவிகிதத்தினரால் கொள்ளப்பட்டுள்ளது; அமெரிக்க வான்தாக்குதல்கள், தரைப்படை நடவடிக்கைகள் ஆகியவற்றால் சாதாரண மக்கள் கொலை செய்யப்படுவதில் அதிகம் எரியூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க விரிவாக்கத்தின் உண்மை நோக்கம், அந்நாட்டில் அமெரிக்க தரைப்படை மற்றும் கடற்படை வீரர்களின் எண்ணிக்கையை 100,000 க்கு உயர்த்துவதின் நோக்கம், பெரும் படையைக் கொண்டு எழுச்சியை அடக்குவதாகும்.

மக்கிரிஸ்டலை வினாவிற்கு உட்படுத்தியது, ஒரு சில விதிவிலக்குகளை தவிர, பொதுவாக ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று வேறுபாடு இல்லாமல், வாடிக்கையாக அமெரிக்க இராணுவத்திற்கு தலைமைதாங்கும் தளபதிகளிடம் அரசியல்வாதிகள் கெஞ்சிநிற்கும் மனோபாவம்தான். ஜனாதிபதி ஒபாமாவைப் பற்றிக் குறைகூறும் விதத்தில் மக்கிரிஸ்டலை அறிக்கை விடுக்குமாறு செய்ய குடியரசுக் கட்சியினர் சூழ்ச்சிக்கையாளலை முயற்சித்தனர்; குறிப்பாக ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்படும் எண்ணிக்கை குறைவோ போன்ற வினாக்களை எழுப்பினர். செய்தி ஊடகத் தகவல்கள் அவர் 40,000 துருப்புக்களைக் கேட்டதாக கூறியிருந்தன.

ஜூலை 2011 ல் ஆப்கானிய "விரிவாக்கம்" குறையத் தொடங்கி, படிப்படியாக அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுதல் தொடங்கும் என்று வெஸ்ட் பாயின்டில் ஒபாமா கொடுத்த உரையில் இருந்த உறுதிமொழி பற்றியும் இவை குவிப்புக் காட்டின. குடியரசுக் கட்சியினர் இந்த உறுதிமொழி பணியின் தன்மையை குறைமதிப்பிடவில்லையா, அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறும் வரை கிளர்ச்சிக்காரர்களை காத்திருக்கச் செய்துவிடாதா என்று கேட்டனர்.

ஒபாமாவின் முடிவிற்கு முன்னதாக வெள்ளை மாளிகையை தன்னுடைய துருப்பு கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருந்த மக்கிரிஸ்டல், குறிப்புக் கசிவுகள் மற்றும் லண்டனில் பகிரங்க உரை என்பதைப் பயன்படுத்தியும்கூட, இந்தத் தூண்டிலில் பிடிபடவில்லை.

துருப்பு எண்ணிக்கை பற்றி தனக்கு திருப்தி என்று கூறிய தளபதி, இன்னும் "கூடுதலான படைகளின் தேவையை தான் எதிர்பார்க்கவில்லை" என்றும் தெரிவித்தார். 40,000 துருப்புக்களுக்கும் ஒபாமாவின் முடிவான 30,000 துருப்புக்களை அனுப்பல் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு, "துணை ஆதரவு" துருப்புக்கள் கூடுதலாக வருவதிலும், தனி இராணுவ ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தப்படுவதிலும் மறைந்துவிடும் என்றார்.

புஷ் நிர்வாகத்தின் ஈராக் "விரிவாக்கத்தில்" அறிவிக்கப்பட்ட கூடுதலான 21,000 துருப்புக்கள் கள்ளத்தனமாக கிட்டத்தட்ட 30,000 என்று உயர்த்தப்பட்டன; பென்டகன் கூடுதல் துருப்புக்களை ஆதரவுப் பிரிவுகள் என்று அனுப்பி வைத்தது. இந்த வழிவகை ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தொடங்கிவிட்டது; பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் கடந்த வாரம் ஒரு செனட் குழுக் கூட்டத்தில் தான் ஒபாமா நிர்ணயித்திருக்கும் 30,000 துருப்புக்களுக்கு உதவ இன்னும் 3,000 துருப்புக்களை அனுப்பக்கூடும் என்று அறிவித்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 10,000 இராணுவ ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர்; இந்த எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகமாகியுள்ளது. மொத்தத்தில் பாதுகாப்புத் துறை அந்நாட்டில் 100,000க்கும் மேலான ஒப்பந்தக்காரர்களை அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு தரும் வகையில், முன்பு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடிப்படைப் பணிகளை கொடுக்கும் வகையில் வேலைக்கு அமர்த்தியுள்ளது.

அமெரிக்கத் துருப்புக்கள் ஜூலை 11 ல் திரும்பத் தொடங்கும் என்ற ஒபாமாவின் உறுதிமொழி பற்றி மக்கிரிஸ்டல் அதை அதற்கு உரிய இகழ்வுடன் உதறித்தள்ளினார்; அமெரிக்கப் போருக்கு மக்கள் எதிர்ப்பை சமாளிக்கும் விதத்தில் அது கூறப்பட்டது, வெள்ளை மாளிகை அதைச் சமாளிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார்.

"ஜூலை 2011 ஒரு காலக்கெடு என்று நான் பார்க்கவில்லை என்று மக்கிரிஸ்டல் இராணுவக்குழுவிடம் கூறினார். "அந்த நேரத்தில் நாம் திரும்பிவரக்கூடியதைப் பற்றிய நேரம், செயற்பரப்பு ஆகியவை மற்றி மதிப்பீடு செய்வோம்."

கூடுதலான ஆக்கிரமிப்புத் துருப்புக்கள் திருப்ப அனுப்பப்பட வேண்டிய தேதி எதையேனும் அவர் பரிந்துரை செய்துள்ளாரா என்று கேட்கப்பட்டதற்கு மக்கிரிஸ்டல், "அது பற்றி நான் ஏதும் பரிந்துரைகள் செய்யவில்லை" என்று ஒப்புக் கொண்டார். ஒபாமாவின் அரசியல் சொற்கள் தன்னை கட்டுப்படுத்துவதாகவும் அவர் நினைக்கவில்லை.

இரு குழுக்களிலும் இருந்த ஜனநாயகக் கட்சியினர் ஏராளமான பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் போர் விரிவாக்கத்திற்கு தங்கள் ஆதரவை குறிப்பாகத் தெரிவித்தனர். ஆனால் அவர்களுள் பலரும் குவிப்பை மாற்றும் வகையில் பாக்கிஸ்தான் பற்றி வினா எழுப்பினர். நியூ ஜேர்சியின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ரோப் ஆண்ட்ரூ ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பும் முடிவு ஒரு "bank shot" என்றார்; இதன் குறிப்பு உண்மையான இலக்கு பாக்கிஸ்தானாக இருக்க வேண்டும் என்பதுதான்.

"படைப் பாதுகாப்பு" என்பது எல்லையைக் கடந்து பாக்கிஸ்தானுக்குள் படைகள் தொடர அனுமதிக்கப்படுமா என்று ஆண்ட்ரூஸ் மக்கிரிஸ்டலைக் கேட்டார்.

தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்துகொள்ளும் உரிமையை அமெரிக்கப் படைகள் கொள்ளும் என்று அமெரிக்கத் தளபதி கூறினாலும், தான் எல்லை கடந்த தாக்குதல்கள் பற்றி "மிக எச்சரிக்கையாக" இருக்கப் போவதாகக் கூறினார். "பாக்கிஸ்தானின் இறைமை மற்ற எந்த நாட்டைப் போலவும் புனிதமானதுதான்" என்று அவர் அறிவித்தார்.

இத்தகைய உணர்வுகள் செப்டம்பர் 2008ல் காணப்படவில்லை; அப்பொழுது மக்கிரிஸ்டலின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்பு செயற்பாடுகள் பிரிவுகள் ஒரு பாக்கிஸ்தானிய கிராமத்தில் தாக்குதல் நடத்தின. உள்ளூர் அதிகாரிகள் அத்தாக்குதல் 20 பேரைக் கொன்றது என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் மகளிர், குழந்தைகள் என்றும் கூறினர்.

மக்கிரிஸ்டல் மற்றும் ஐக்கன்பெர்ரி பாக்கிஸ்தான் பற்றி வினாக்களை மழுப்பும் விதத்தில் அது தங்கள் நேரடிப் பொறுப்பு இல்லை என்று வலியுறுத்தினாலும், ஒபாமா நிர்வாகத்தின் விரிவாக்கத்தின் மையக் கூறுபாடு அந்நாட்டிலும் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்பதை பெருகிய முறையில் தெளிவாகியுள்ளது.

செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்க, பாக்கிஸ்தானிய அதிகாரிகளை மேற்கோளிட்டு வாஷிங்டன் பாக்கிஸ்தான் அரசாங்கத்திடம், "இன்னும் ஆக்கிரோஷமாக அது செயல்படவில்லை என்றால், அமெரிக்கா இன்னும் அதிக ஆற்றலை பாக்கிஸ்தான் பகுதியில் செலுத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாலிபன் தாக்குதல்களை முடிவிற்குக் கொண்டுவரும்" என்று எச்சரித்தாக கூறியுள்ளது. கடந்த மாதம் ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் மற்றும் நிர்வாகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான முக்கிய ஆலோசகர் ஜோன் பிரெனன் ஆகியோர் இஸ்லாமாபாத்திற்கு சென்றபோது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கை பாக்கிஸ்தான் அதிகாரிகளால் அமெரிக்க சிறப்பு செயல் துருப்புக்கள் புதிய தாக்குதலை ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லை கடந்து தொடக்கும் மற்றும் பிரிடேட்டர் டிரோம் தாக்குதல், தாலிபன் தலைவர்கள் புகலிடம் கொண்டுள்ள பலூச்சிஸ்தான் தலைநகரான குவெட்டா உள்பட அதற்கு எதிராகவும் விரிவுபடுத்தப்படும் என்ற அச்சறுத்தலாக பொருள்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்றக் குழுவிற்கு கொடுத்த சாட்சியத்தில் மக்கிரிஸ்டல் அமெரிக்க இறப்புக்கள் அதிகமாக உயர்ந்துள்ளது பற்றிக் குறிப்பிட்டார்--அதைத்தவிர நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் அதிகச் செலவு பற்றியும்; ஆப்கானிய "அலை எழுச்சியில்" இவை தொடரும் என்றும் கூறினார். மேலும், "வெற்றிக்கு உறுதியான ஈடுபாடும் கணிசமான செலவும் தேவை" என்றும் கூறினார்.

இந்த எச்சரிக்கை முந்தைய தினம் இன்னும் வெளிப்படையாக கூட்டுப்படைகளின் தலைவர் கடற்படை அட்மைரல் மைக் முல்லனிலால் வட கரோலினாவில் Camp Lejeune ல் கடற்படை துருப்புகளுக்கு, விரிவாக்கத்திற்கு அனுப்பப்படும் படைகளின் முதல் பிரிவினருக்குக் கூறப்பட்டது.

"அதைப்பற்றி தெளிவற்ற முறையில் நான் கூறவிரும்பவில்லை. விரிவாக்கத்தின்போது இதுதான் ஈராக்கில் நடந்தது, அந்த சோகம் ஒருபுறம் இருக்க, இப்பொழுது நிலைமையை மாற்ற வேண்டும் என்றால், இந்த விரிவாக்கத்தின் நோக்கத்தின் ஒரு பகுதிதான் அதுவும்" என்று முல்லன் அமெரிக்கத் துருப்புக்கள் இறப்புக்கள், காயமுறுதல் தீவிரமாவது பற்றிக் கணித்துக் கூறினார்.

கடற்படை வீரர்களிடம் முல்லன் மேலும் கூறியது: "நாம் வென்று கொண்டிருக்கவில்லை, அதன் பொருள் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம், நாம் தோற்கையில் ஆப்கானிய எதிர்ப்பிற்கு ஆட்சேர்ப்பவர்களுக்கு சொல்லும் தகவல் அவர்களுக்கு சிறந்த முறையில் இருப்பதால் கூடுதலான ஆட்களை அவர்களால் தேர்ந்தெடுக்க முடிகிறது."

சாட்சிகளாலும் காங்கிரஸ் உறுப்பினர்களாலும், செய்தி ஊடகத்தாலும் கூறப்படாதது, ஆப்கானிய சாதாரண மக்கள் கொலை, உடல் உறுப்புக்களை இழத்தல் ஆகியன எந்த அளவிற்கு படைவிரிவாக்கத்தால் அதிகரிக்கும் என்பது பற்றித்தான். தலிபானை "இழிவுறச் செய்தல்", "அகன்றுவிடுமாறு செய்தல்" போன்ற மக்கிரிஸ்டலின் சொல் நயத்திற்கு பின்னணியில் தயாரிக்கப்படுவது மாபெரும், தொடர்ந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திட்டம் ஆகும்; இது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை அல்லது புரவலராக இருக்கும் குடிமக்களை நசுக்கிவிடும் வடிவைமைப்பைக் கொண்டது.