World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government supports Obama's Afghan escalation

ஒபாமா ஆப்கான் போர் விரிவாக்கத்திற்கு பிரெஞ்சு அரசாங்கம் ஆதரவு

By Kumaran Ira
11 December 2009

Use this version to print | Send feedback

பரந்த மக்களின் எதிர்ப்பையும் மீறி பிரெஞ்சு அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் போர் விரிவாக்கம் செய்வதற்கு ஆர்வத்துடன் ஆதரவைக் கொடுத்துள்ளது.

டிசம்பர் 2ல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஒபாமாவின் டிசம்பர் 1 விரிவாக்க அறிவிப்பு, "சர்வதேச உறுதிப்பாட்டிற்கு ஒரு புதிய உந்ததுலை அளித்து வருங்காலத்திற்கு புதிய எதிர்ப்பார்ப்புக்களை கொடுக்கிறது" என்று அறிவித்தார். லண்டனில் அடுத்த ஜனவரி நடக்க இருக்கும் ஆப்கானிஸ்தான் பற்றிய கூட்டத்திற்கு பின்னர் பிரான்சின் துருப்புக்கள் பங்களிப்பு பற்றி பரிசீலிக்க உள்ளதாகவும் சார்க்கோசி கூறினார்.

சமீபத்தில் ஒரு Ifop கருத்துக் கணிப்பு, பிரான்சில் ஆப்கானிஸ்தானிற்கு பிரெஞ்சு துருப்புக்களை அனுப்புவதற்கு 82 சதவிகிதம் எதிர்ப்பு இருந்ததாகக் கண்டறிந்துள்ளது. மேலும் மக்களில் 65 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலையீட்டை எதிர்ப்பதாகவும் தெரிகிறது.

2007 ல் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, பிரான்ஸ் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பில் தன் பங்கை விரைவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தன்னுடைய துருப்பு எண்ணிக்கையை பிரான்ஸ் இரு மடங்காக ஆக்கியது. இன்று பிரான்ஸ் நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளில் நான்காம் அதிக அளவு துருப்புக்களை உடைய நான்காவது படை ஆகும்; 3,700 சிப்பாய்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள்3,400 பேர் ஆப்கானிஸ்தானில் தளம் கொண்டுள்ளனர். சமீபத்தில் பிரான்ஸ் 150 போலீசாரை ஆப்கன் போலீஸுக்கு பயிற்சி அளிக்க அங்கு அனுப்பியுள்ளது.

ஒபாமாவின் உரைக்கு முன்னதாக, வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் ஆப்கானிய ஆக்கிரமிப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் தன் உறுதியைத் தெளிவாக்கினார். நவம்பர் 13 Le Monde க்கு கொடுத்த பேட்டி ஒன்றில், அவர் கூறினார்: "இந்த ஆப்கானிய பிரச்சினை பற்றி ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்னும் அதிகமாகக் கூடிப் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உடனடியாக ஆப்கானிஸ்தானைவிட்டு நீங்க வேண்டும் என்று எவரும் நினைக்கவில்லை --அது இந்த அணுகுமுறைக்கு உதவும்... ஆப்கானிஸ்தானில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய பங்காளிகளுடன் இப்பொருள் பற்றி நாங்கள் ஒரு அறிக்கை தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்.'

முதலாளித்துவ எதிர்க்கட்சிகளான Parti Socialiste (PS) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF)தங்கள் ஆதரவை ஆக்கிரமிப்பிற்கு நிரூபித்துள்ளன; அதே நேரத்தில் சார்க்கோசி கொள்கை பற்றி தந்திரோபாயமாக குறைகளும் கூறியுள்ளன-- படைகள் நிலைப்பாட்டை எதிர்ப்பது போல். பிரான்ஸ் 2 தொலைக்காட்சியில் முன்னாள் PS முதல் செயலாளர் Francois Hollande கூறினார்: "நாம் ஒன்றும் கூடுதலாக படைகளை அனுப்பக் கூடாது, எல்லாவற்றிற்கும் மேலாக, பணியின் தன்மையை நாம் மாற்ற வேண்டும்."

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பின்னர், இந்தக் கட்சிகள் ஆரம்பத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சுப் பணியை ஆதரிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. அந்த நேரத்தில் பிரெஞ்சுத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிற்கு பன்முக இடது அரசாங்கத்தால் (PS-PCF-பசுமைவாதிகள்) பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் (PS) தலைமையின்கீழ், பழமைவாத ஜனாதிபதி ஜாக் சிராக்கின் ஒத்துழைப்புடன் அனுப்பப்பட்டன.

ஆளும் வர்க்கம் ஆப்கானிஸ்தானில் இருந்து பாக்கிஸ்தானுக்கும் அதற்கும் அப்பாலும் படர்ந்து வரும் ஒரு போருக்கு உறுதி அளிக்கையில், அப்பட்டமாகப் பேசுவது தேவையாகும்: இது மத்திய ஆசிய மக்களுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் எதிரான ஒரு வரலாற்றுத் தன்மை நிறைந்த குற்றம் ஆகும்; விரிவடைந்துவரும் இராணுவ புதைசேற்றில் பெருகும் ஒரு போருக்கு மகத்தான செலவு, குருதி கொட்டல், வளங்களை அளித்தல் ஆகியவை உறுதி செய்யப்பட்ட நிலையில் கொடுக்கப்படுவதானது, எல்லா முக்கிய யூரேசிய இராணுவ சக்திகளையும் இதில் இழுக்கும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது.

மேலும் வாஷிங்டனுடன் இணைந்து பாரிஸ் செயல்படும் பல பகுதிகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்றுதான்; சில நேரம் பாரிஸ் அமெரிக்க அரசாங்கத்தின் ஆக்கிரோஷ நிலைப்பாடுகளையும் மீறி அப்பகுதியில் செயல்படுகிறது.

செப்டம்பர் 2007ல் ஈரானுடனான போருக்கு பிரான்ஸ் தயாரிப்பு நடத்தி வருகிறது என்று குஷ்நெர் அறிவித்தார்; அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் அல்லது தாக்கப்படும் என்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். சமீபத்தில் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தபோது, அவர் உலக சக்திகள் அதன் யுரேனிய இருப்பு பற்றி கூறிய கருத்துக்களுக்கு ஈரான் விடையிறுக்கவில்லை என்றும் தெஹ்ரான் தன்னையே அழித்துக்கொள்ளும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினார். "ஈரான் அணுவாயுதம் ஒன்றை தயாரித்தால், நம்மால் அது ஏற்கப்பட முடியாதது. அப்பகுதியில் மற்றொரு அச்சுறுத்தலைச் சேர்க்கக்கூடாது."

சார்க்கோசி திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் சமிக்கையையும் செய்தார். ஆப்கானிஸ்தானிற்கு அருகே ஒரு கொந்தளிப்பு நிறைந்த சீனப்பகுதியாகும் இது. டிசம்பர் 2008ல் பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழலும் தலைமைப் பதவியைக் கொண்டிருந்த போது, சீனா ஐரோப்பாவுடனான அதன் உச்சிமாநாட்டை 11 ஆண்டுகளில் முதல் தடவையாக, போலந்தில் தலாய் லாமாவை சார்க்கோசி சந்திக்கும் முடிவை எதிர்த்து, இரத்து செய்தது.

தொழிலாள வர்க்கம் ஆப்கானிஸ்தானில் நேட்டோ நாடுகளின் பொறுப்பற்ற கொள்கைகளை எதிர்க்க வேண்டும்; ஆனால் இந்த எதிர்ப்பிற்கு போரின் மூலகாரணம் பற்றி அதாவது முதலாளித்துவம் பற்றி நன்கு அறிதல் வேண்டும். பிரான்ஸை பொறுத்தவரையில், சார்க்கோசியின் தேர்தலில் இருந்து அமெரிக்கப் போர்களுக்கு முழு ஆதரவு இருக்கும் நிலையில், முதலாளித்துவ வர்க்கத்தின் இலாப மற்றும் மூலோபாய நலன்களுடனான இதன் தொடர்பு குறிப்பாகத் தெளிவாகிறது.

சார்க்கோசிக்கு முன் பதவியில் இருந்த ஜாக் சிராக், ஆப்கானியப் போருக்கு ஆதரவு கொடுத்தாலும், ஈராக்கில் அமெரிக்கப் போர் உந்துதலை எதிர்த்திருந்தார். ஆனால் அவருடைய பதவிக்கால இறுதியில் அவரது கொள்கைகள் பெருகிய இடர்பாடுகளை எதிர்கொண்டன. 2005ல் பிரெஞ்சு, டச்சு வாக்காளர்கள் ஐரோப்பிய அரசியலமைப்பின் மீதான வாக்கெடுப்பில் நிராகரித்தது, வாஷிங்டனில் இருந்து ஒரு செயல்படக்கூடிய சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டு பிரான்ஸ் ஐரோப்பாவிற்கு தலைமை தாங்கக்கூடும் என்ற நம்பிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. சிராக் தொழிலாள வர்க்கத்தின்மீது சமூக சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவார் என்பதிலும் முதலாளித்துவம் நம்பிக்கையை இழந்துவிட்டது, ஏனெனில் 2006 CPE (முதல் வேலை ஒப்பந்தம்) பகுதி திரும்பப் பெறும் கட்டாயத்தை வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுத்திவிட்டன.

சார்க்கோசியின் ஜனாதிபதிக் காலத்தை ஒரு சமூகவேலைத்திட்ட "முறிவை" செயல்படுத்தும் வாய்ப்பாக முதலாளித்துவம் கருதியது; நலன்சார் அரசை அழித்து, பிரான்சின் மிகச் சக்தி வாய்ந்த நிறுவனங்களின் நலன்களுக்காக தொழில் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு அனுப்புவது எனவும் மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமாக உறுதியாகப் போவது எனவும் விரும்புகிறது.

பிரெஞ்சு ஆளும் வர்க்கம் பிரான்சின் உயர் ஊதியங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு, குறைவூதிய உற்பத்தியை பிரான்ஸ் அதிகம் பயன்படுத்தாதது, ஆகியவற்றால் போட்டித் தன்மை இழப்பது பற்றி கவலை கொண்டிருந்தது. சார்க்கோசி அதிகாரத்திற்கு வந்த பின்னர் CAE எனப்படும் அரசாங்கத்தின் பொருளாதாரப் பகுப்பாய்வுக்குழு "உலகமயமாக்கல்: பிரான்சின் வலிமைகள்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையைத் தயார் செய்தது. "தற்கால வணிகப் போட்டியில் ஒரு முக்கியமான காரணி, பல ஆய்வுகளிலும் உறுதியாகியுள்ளது, மதிப்புச் சங்கிலி பிரிக்கப்படுவது ஆகும், அதாவது, இடைநிலைப் பொருட்களை இறக்குமதி செய்து உற்பத்திச் செலவினங்களை உரிய இடத்தில் வைத்தல் ஆகும். ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை இவ்வழிவகையில் பிரான்சை விட முன்னேறியுள்ளன, வளரும் நாடுகளில் இருந்து அதிக பொருள் அளிப்போரைக் கொண்டுள்ளன."

ஆனால், பிரெஞ்சு முதலாளித்துவம் குறைவூதிய வெளிநாட்டுத் தொழிலாளரை நம்ப முற்பட்ட நேரத்தில், ஈராக்கில் அமெரிக்கா புதைசேற்றில் அகப்பட்டுக் கொண்டநிலையிலும், உலக ஒழுங்கை முக்கிய ஏகாதிபத்திய சக்தி கண்காணிக்கும் பிரச்சினையில் ஈடுபட்ட நிலையிலும், இடர்பாடுகளை எதிர்கொண்டது. இவ்விதத்தில் 2007 செப்டம்பரில் Le Figaro "புதிய பெட்ரோ-கெமிக்கல் யால்டா" என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதி, "பெரும் மேலை எண்ணெய் நிறுவனங்கள் உலகின்மீது மேலாதிக்கம் செலுத்திய காலம் முடிந்து கொண்டிருக்கிறது" என்று புலம்பியது. மூன்றாம் உலக நாடுகள் தங்கள் எண்ணெய்க்கு அதிக விலை நிர்ணயிப்பதை மேற்கோளிட்டு, அது "தொழில்வளமுற்ற ஜனநாயகங்கள் அவற்றிற்கு பெருகிய முறையில் பாதகம் கொடுக்கும் அச்சுறுத்தல் நிறைந்த உறவுகளை எதிர்கொள்ளுகின்றன" என்று எழுதியது.

இதற்கு தீர்வு அமெரிக்க, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களின் வளங்களை தொகுப்பாக்குவது ஆகும்: இது ஒடுக்கப்பட்ட, குறைவூதிய நாடுகள் மற்றும் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்திற்கு பாதகமாக இருக்கும். 2007 நவம்பர் மாதம் Bloomberg News ல் வந்த கட்டுரை ஒன்றில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்குழு உறுப்பினரான Frederick Kempe விளக்கினார்: "ஒப்புமையில் அமெரிக்க, ஐரோப்பிய கனம் குறைந்துள்ள சிக்கல் வாய்ந்த உலகில், பிரான்ஸ் அதன் இயற்கை நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து செயல்படாவிட்டால் ஒரு இரண்டாந்தர உலக சக்தியாகிவிடும்."

ஓய்வூதியங்களையும் தொழிலாளர்களின் உரிமைகளையும் பிரான்சில் பெரிதும் குறைத்த வகையில் சார்க்கோசி வெளியுறவுக் கொள்கையில் வாஷிங்டனுக்கு நெருக்கமாக உறுதியாக நகர்ந்துள்ளார். வெளிநாட்டில் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பைக் கண்டறிவதிலும் அவர் குவிப்புக் காட்டியுள்ளார்--குறிப்பாக மத்தியதரைக்கடல் ஒன்றியம் என்னும் முயற்சியின் மூலம் பால்கன்களிலும், முன்னாள் பிரெஞ்சு வட ஆபிரிக்க குடியேற்ற நாடுகளிலும் பிரான்ஸின் முக்கிய விசை நிறுவனங்கள், வான்வழிப் பாதுகாப்பு, தொழில்துறை கட்டமைப்பு ஆகியவற்றிற்காக சர்வதேச ஒப்பந்தங்களைப் பெற முயல்கிறார்.

2007ல் மொரோக்கோவிற்குச் சென்றிருந்தபோது, சார்க்கோசி பிரெஞ்சு நிறுவனங்களுக்காக பல பில்லியன் ஒப்பந்தங்களில், அணு உலைகள் விற்பனை, போக்கு வரத்து உள்கட்டுமானங்களை அமைத்தல் ஆகியவற்றிற்காக கையெழுத்திட்டார். பிரெஞ்சு நிறுவனங்களுக்காக மொரோக்கோ ஒரு முக்கிய குறைவூதியத் தொழிலாளர் அரங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது; குறிப்பாக கார்த்தயாரிப்பு நிறுவனமான Renault க்கு ஆகும். அதே மாதம் சார்க்கோசி வாஷிங்டனுக்குச் சென்று அமெரிக்க காங்கிரஸிலும் உரையாற்றினார். மேற்கு மத்தியதரைக்கடலில் கடற்படைப் பிரிவுகளை கட்டுப்படுத்தும் நேட்டோவின் தெற்குக் கட்டுப்பாட்டை நேபிள்ஸில் இருத்தும் முயற்சியில் சார்க்கோசி வெற்றிபெற முடியவில்லை என்றாலும், பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமன Total க்கு அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈராக் மாஜ்நோன் எண்ணெய் வயல்களை அடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மே 26, 2009ல் ஈரான் கடலோரப் பகுதியில் இருந்து 150 மைல்களில் உள்ள UAE ன் தலைநகரான அபு தாபியில் ஒரு பிரெஞ்சு இராணுவத் தளம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது, பிரெஞ்சு முதலாளித்துவம் ஒரு உலகச் செயல்பாட்டில் ஈடுபாடு உடைய நாடு என்ற விதத்தில் தன்னுடைய நலன்களை பாரசீக வளைகுடாவில் காப்பதற்கு முயல்வதை நிரூபித்துள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிற்கு பல முறை அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பயணித்தது மட்டும் இல்லாமல், சார்க்கோசியும் மற்ற அதிகாரிகளும் அணு உலைகள், இரயில்கள், விமானங்கள் இன்னும் பிரான்ஸின் பெரு நிறுவனங்களின் மற்ற பொருட்களையும் விற்க உயர்மட்ட பயணங்களை நீடித்த வகையில் மேற்கொண்டுள்ளனர். சீனா, மொரோக்கோ, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், தென் ஆப்பிரிக்கா மற்றும் வியட்நாம் ஆகியவை இந்த நீண்ட பெறும் நாடுகளின் பட்டியலில் உள்ளன.

பிரேசிலுக்கு சார்க்கோசி இந்த செப்டம்பரில் பயணித்தது இந்த வெளிநாடுகளுக்கு வணிக விற்பனையின் பின் இருக்கும் ஏகாதிபத்திய கணக்கீடுகளை உயர்த்திக் காட்டியுள்ளது. செப்டம்பரில் இரு நாட்கள் பிரேசிலுக்கு சென்றிருந்தபோது, பிரான்ஸும் பிரேசிலும் ஒரு பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 36 French Rafle போர் விமானங்களை கிட்டத்தட்ட 4 பில்லியன் யூரோவிற்கு வாங்க பிரேசில் ஒப்புக் கொண்டுள்ளது. மற்றும் ஒரு 8.5 பில்லியனுக்கு ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை (நான்கு மரபார்ந்தவை, ஒன்று அணுவாயுதத்திற்கு) வாங்குவது உட்பட ஆயுத விற்பனையையும் பிரான்ஸ் முடித்துள்ளது.

பிரெஞ்சு ஆயுத வணிகர்களுக்கு ஆதரவு தரும் பெருகிய சந்தையாக இலத்தீன் அமெரிக்கா உள்ளது என்று Le Monde மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது: "சமீப காலத்தில் ஹொண்டூராஸில் ஆட்சி மாற்றத்தை ஒட்டி அழுத்தம் எழுந்துள்ளது, இதை இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மீண்டும் அவற்றின் கண்டத்தில் ஆயுதப் பயன்பாடு இருக்கும் என்பதை நினைவுறுத்தியுள்ளது."

இத்தகைய கருத்துக்கள் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் கைக்கூலித்தனம் மற்றும் ஊழலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தி இதை வாஷிங்டனின் கரங்களை அச்சத்துடன் நாட வைத்துள்ளது.