World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Socialist Equality Party holds meeting on 20 years since fall of Berlin Wall

பேர்லின் சுவர் வீழ்ச்சியின் 20 ஆண்டு நிறைவை ஒட்டி ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி கூட்டம் நடத்துகிறது

By our correspondent
10 December 2009

Use this version to print | Send feedback

நவம்பர் 29ம் தேதி ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit) லைப்சிக்கில் "சுவர் வீழ்ச்சியில் இருந்து 20 ஆண்டுகள்: ஸ்ராலிசத்தில் இருந்து முதலாளித்துவம்" என்ற தலைப்பில் நிறைய மக்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றை நடத்தியது.

லைப்சிக் பழைய நிக்கோலாய் தேவாலயத்திற்கு (Nikolaikirche) எதிரே பழைய நிக்கோலாய் பாடசாலை (Alte Nikolaischule) என்னும் வரலாற்றுப் புகழ் நிறைந்த இடத்தில் கூட்டம் நடைபெற்றது. Alte Nikolaischule 1512ல் ஒரு தாராளவாத பயிலக மையமாக நிறுவப்பட்டது; அதன் புகழ் பெற்ற மாணவர்களுள் மெய்யியாளுரும், விஞ்ஞானியுமான கொட்பிராட் வில்லியம் லைப்னிஸ், இசை அமைப்பாளர் றிச்சார்ட் வாக்னர், புரட்சிகர சமூக ஜனநாயகவாதி கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் இருந்தனர்.

1989ல் இது "திங்கள் ஆர்ப்பாட்டஙகள்" என்று அழைக்கப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்ட இடம் ஆகும்; இங்கு பல்லாயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனிய குடிமக்கள் கூடி சமூக அநீதி, அரசாங்கத் தகமையின்மை, மற்றும் அரசாங்க அடக்குமுறை என்று ஸ்ராலினிச ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசு (GDR) க்கு எதிராக எதிர்ப்புக்களை நடத்தினர்.

கூட்டத்தைத் ஆரம்பித்து வைத்த கிறிஸ்தோப் வன்ட்ரயர் தற்போதைய சமூக நிலைமைக் குறிப்பிட்டு பல கருத்துக் கணிப்புக்கள் எவ்வாறு அவற்றைப் பிரதிபலிக்கின்றன என்றும் கூறினார். BBC நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று, பேர்லின் சுவர் தகர்ப்பிற்கு 20 ஆண்டுகளுக்கு பின்னரும் உலகெங்கிலும் கேள்விகோட்கப்பட்டவர்களில் 89 சதவிகிதத்தினர் முதலாளித்துவ முறை செயலற்று விட்டது என்ற கருத்தைத்தான் வெளியிட்டனர்.

கிழக்கு ஜேர்மனியர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு 23 சதவிகிதத்தினர் தங்களை சுவர் வீழ்ச்சிக்கு பின்னர் மோசமான நிலையில்தான் காண்பதாகக் கூறினர். இன்னும் 30 சதவிகிதத்தினர் தங்கள் தனி வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் இருப்பதாகவும் அதே நேரத்தில் சமூகப் பிரச்சினைகள் பற்றி கவலை கொண்டுள்ளதாகவும் கூறினர்.

கடந்தகால சமூக நலன்கள் தகர்க்கப்பட்டது மற்றும் பெருகிய முறையில் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பது, இராணுவவாதத்தில் வளர்ச்சி ஆகியவை ஜேர்மனிக்குரிய தன்மை அல்லாது முதலாளித்தவ முறை முழுவதிலுமே உள்ளன என்று வன்ட்ரயர் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவினதும் மற்றும் PSG யின் மத்திய குழு உறுப்பினரான பீட்டர் சுவார்ட்ஸ் அடுத்துப் பேசினார். 1989 இலையுதிர்கால நிகழ்வுகளை ஒரு புரட்சி என்று குறிப்பிடுவது சரிதானா என்ற பிரச்சினை பற்றி அவர் பேசினார். அவருடைய கருத்துக்கள் தனியே பிரசுரிக்கப்பட்டுள்ளன. பேர்லின் சுவர் வீழ்ச்சியின் 20 ஆண்டுகளுக்கு பின்னர்

இறுதியாக பேசிய வொல்ப்காங் வேபர், GDR போன்ற சக்தி வாய்ந்த அடக்கமுறையைக் கொண்டிருந்த அரசாங்கம் கூட எப்படி ஒரே இரவில் கவிழ்ந்தது என்பது உட்பட பல வரலாற்றுப் பிரச்சினைகளை பரிசீலித்தார். பொருளாதாரப் பிரச்சினைகளை பற்றிப் பேசியது மட்டுமல்லாது, அவர் அதற்கு முந்திய சோவியத் ஒன்றியத்தினுள்ளான போக்குகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் வலியுறுத்தினார்.

பேர்லின் சுவர் வீழ்ச்சி ஜேர்மன் ஜனநாயக குடியரசை கைவிடுவது என்ற சோவியத் ஒன்றியத்தின் தலைமையின் முடிவோடு நேரடியாகப் பிணைந்திருந்தது. இது 1989 மே மாதம் ஹங்கேரியின் எல்லைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்தது. அந்த நேரத்தில் தொழிலாளர்களிடம் ஒரு சுயாதீன முன்னோக்கு இருக்கிவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், PSG யின் முன்னோடி அமைப்பான Bund Sozialistischer Arbeiter (சோசலிஸ்ட் தொழிலாளர் கழகமும்) ஏற்கனவே இது பற்றி 1985ல் பகுப்பாய்ந்து சோவியத் தலைவர் மிகையில் கோர்ப்பஷேவ் ஏற்றுள்ள முதலாளித்துவ சார்புடைய கொள்கை பற்றி எச்சரித்திருந்தது என்பதை கூட்டத்தினருக்கு வேபர் நினைவுபடுத்தினார்.

ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து மாஸ்கோவில் சட்டம் படிக்கச் சென்றிருந்த கோர்பஷேவ் தன்னுடைய ஆரம்ப அரசியலை ஸ்ராலினிச இளைஞர் அமைப்பான Kosomol ல் கொண்டிருந்தார். ஸ்ராலினிச ஆட்சியில் பயிற்றுவிக்கப்பட்ட தலைமுறையை அவர் சேர்ந்திருந்தார். இதனால் புரட்சிகர மார்க்சிச மரபு பற்றி எதுவும் தெரியாதிருந்தார்.

தன்னுடைய ஆரம்ப அரசியல் கட்டத்திலேயே எப்படி ஸ்ராலினிச கொள்கைகளை செயல்படுத்துவது, அதற்காக பல அமைப்புக்களின் வழிவகைகளையும் கையாள்வது என்பது பற்றி அவர் கற்றார். மத்தியதர வகுப்பு உயர்பிரிவில் இருந்து வந்த ஸ்ராலினிச செயலர் ஆவார் அவர்; 1980 களில் சோவியத் ஒன்றியம் மேலை ஏகாதிபத்திய நாடுகளுக்கு திறந்துவிடப்பட்ட கொள்கைகளுக்கு தலைமை தாங்கி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவு புதிய முதலாளித்துவ வர்க்கமாக ரஷ்யாவில் வருவதற்கு உதவும் வகையில் செயல்பட்டார்.

முதலாளித்துவ மீட்பு சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டதைத் தொடர்ந்து விளைந்த சமூகப்பேரழிவிற்கு அவர்தான் அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டும். ஸ்ராலினிச அதிகாரத்துவம் அக்டோபர் புரட்சிக்கு புதைகுழி தோண்டிவிடும் என்று முன்கூட்டியே கூறிய ட்ரொட்ஸ்கியின் பண்பாக்கத்தை அது நிறைவேற்றியது.

இரண்டு உரைகளையும் தொடர்ந்து ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெற்றன; இதில் பல வினாக்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கம் பற்றியும் மற்றும் 1989 நிகழ்வுகளில் வேறுவிதமான விளைவுகள் ஏற்பட்டிருக்கக் கூடுமோ என்பது பற்றியும் கருத்துப் பறிமாற்றங்கள் இருந்தன.