World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

SWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy's national identity campaign boosts the National Front

பிரான்ஸ்: சார்க்கோசியின் தேசிய அடையாளப் பிரச்சாரம் தேசிய முன்னணிக்கு ஏற்றம் கொடுக்கிறது

By Antoine Lerougetel
21 December 2009

Use this version to print | Send feedback

பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, டிசம்பர் 9 Le Monde கருத்துக்கள் பிரிவு கட்டுரையில் பிரெஞ்சு சமுதாயத்திற்குள்ளேயான மிகப் பிற்போக்குக் கூறுபாடுகளிடம் மிகத் தீவிர தேசியவாத, அதிகம் மறைக்கப்படாத இஸ்லாமிய எதிர்ப்பு முறையீட்டை விடுத்தார்.

இதன் நோக்கம் பொருளாதார நெருக்கடி மற்றும் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பிணை எடுப்புக்களில் ஏற்பட்ட பரந்த அளவிலான அரச கடன்களை தொழிலாள வர்க்கம் செலுத்தும்படி செய்யவேண்டி ஒரு சர்வாதிகார ஆட்சியை திணிப்பதற்கான ஒரு சமூகத் தளத்தை வென்றெடுப்பதற்காகும். போட்டியிடும் ஏகாதிபத்திய சக்திகளால் உலகின் மூலோபாய இருப்புக்களுக்கு, குறிப்பாக எண்ணெய், எரிபொருள் ஆகியவற்றிற்கான போராட்டத்தில் ஆப்கானிஸ்தானில் மக்களிடையே செல்வாக்கு இல்லாத இராணுவ குறுக்கீடு சம்பந்தப்பட்ட, பிரான்சின் ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையை நியாயப்படுத்துவதற்கான ஒரு சிந்தனைச் சூழலைத் தோற்றுவிக்கவும் கூட இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

இக்கட்டுரை சமீபத்திய சுவிஸ் வாக்கெடுப்பை, அதாவது மசூதிக் கோபுரங்கள் கட்டப்படுவது சட்டவிரோதம் என்று கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தை தீவிரமாய் ஆதரிக்கிறது. சுவிஸ் வாக்கெடுப்பை தாக்குபவர்கள் "சுவிஸ் மக்கள் மீது" தாக்குதல் நடத்துகின்றனர் என்றும் "அம்மக்கள் பற்றிய ஒரு பொது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர்" என்றும், "மக்களிடம் இருந்து வரும் கருத்துக்களை எதையும் இயல்பாக நம்பாதவர்கள்" என்றும் சார்க்கோசி உறுதிபடக் கூறினார். இந்த வாக்கு "மத சுதந்திரம், மனசாட்சியின் உரிமை ஆகியவற்றிற்கு எந்தப்பாதிப்பையும் கொண்டிருக்க்வில்லை என்றும் அவர் மறுத்தார்.

சுவிஸ் மக்களின் வாக்கெடுப்பிற்கு சார்க்கோசி பகிரங்கமாக ஒப்புதல் அளித்துள்ளது அவரை ஐரோப்பிய அரசியலில் தீவிர வலதிற்கு மாறியுள்ள தலைவராக இருத்தியுள்ளது. உண்மையில், சார்க்கோசி சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஆளும் அரசியல் கட்சிகளுக்கு வலதில்தான் தன்னை வைத்துக் கொண்டுள்ளார். அவை தடைக்கான வாக்களிப்பை எதிர்த்துள்ளன. ஏனெனில் நாட்டின் வங்கி, வணிக, சுற்றுலா நலன்களுக்கு ஒருவேளை சேதம் விளைவிக்கக்கூடும் என்ற அச்சத்தை அவை கொண்டிருக்கக்கூடும்இச்சட்டம் முஸ்லிம் குழுக்களால் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; ஐரோப்பிய மனித உரிமைகள் மரபுகளுக்கு இது எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மதத்திற்கு எதிராக முற்றிலும் இயக்கப்படுவதால் பாகுபாட்டுத் தன்மை கொண்டுள்ளது என்று முஸ்லிம் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன

சார்க்கோசியின் கட்டுரை தேசிய அடையாள பிரச்சினையின் ஒரு பகுதியாகும்; இது பெருகிய முறையில் குடியேற்ற, தேசிய அடையாள மந்திரி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பொருளாதார செய்தித் தொடர்பாளர், எரிக் பெசோனால் தீவிரமாக்கப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் பள்ளிகளில் தலைமறைப்பை அணிதலை தடைக்கு உட்படுத்திய சட்டம் மற்றும் பொது இடங்களில் பர்க்காக்களை தடை செய்யும் சட்டத்தயாரிப்பிற்கு பாராளுமன்ற குழு ஏற்பாடு செய்யப்பட்டதில் வெளிப்பட்ட அரசு இனவெறி, இஸ்லாமிய எதிர்ப்புத் தன்மையின் பெருக்கம் ஆகும். பர்க்கா குழுவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி Andre Gerin தலைமை தாங்குகிறார்; அதில் சோசலிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளனர்.

பாதுகாப்பு பெரும் சந்தேகத்திற்குரிய நிலையில் இருந்த ஒன்பது ஆப்கானியர்களை ஆப்கானிய அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தில் காபூலிற்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்ப புதனன்று பெசோன் உத்தரவிட்டார்.

சார்க்கோசியின் மக்களைத் திருப்தி செய்வதற்கான வலதுசாரிக் கொள்கையில், மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் "மக்களிடையே" வர்க்கப் பிரிவுகள் உள்ளன என்பதை முற்றிலும் ஏற்காத தன்மை ஆகும்; அதைத்தவிர மதத்தை அவர் சமூகப் பிரிவுகளாக, ("எத்தகைய மதம், எத்தகைய நம்பிக்கைகள் இருந்தாலும் கிறிஸ்துவர், யூதர், முஸ்ல்லிம், மத உணர்வுடையவர், .....") வரையறுப்பது ஆகும்.

அடிப்படையில் பிரான்சின் "கிறிஸ்துவ நாகரிகமும்", "குடியரசின் மதிப்புக்களையும்" வலியுறுத்தும் சார்க்கோசி, புதிதாக நாட்டிற்கு வருபவர்களை, குறிப்பாக முஸ்லிம்களை இத்தகைய மதிப்புக்களை அறைகூவலுக்கு அழைப்பது பற்றி எச்சரிக்கிறார்: "மதிப்புக்கள் சவாலுக்கு உட்படுத்தப்படுவது.... ஒரு இஸ்லாமிய பிரெஞ்சு நிறுவப்படுவதற்குத் தேவையானவற்றை கண்டிக்கும்."

"தன்னுடைய முஸ்லிம் சகநாட்டினருக்கு" கொடுத்துள்ள அழைப்பில் எந்தக் குடியேறுபவரும், ஆணானாலும், பெண்ணானாலும், "வெளிப்பகட்டு, தூண்டுதலைத் தவிர்த்து ஒரு சுதந்திர நாட்டில் வாழும் பேறு பெற்றது பற்றி நவுடன் இருந்து, தன்னுடைய மதநெறிகளை அடக்கமான விதத்தில் பின்பற்ற வேண்டும்", "நம் சமூக, அரசியல் உடன்படிக்கையுடன் சுமுகமாக இணங்கி நடக்க வேண்டும்" என்று சார்க்கோசி கூறியுள்ளார்.

"தேசிய அடையாளம்தான் பழங்குடித்தனம், வகுப்புவாதம் இவற்றிற்கு எதிரான மாற்று ஆகும்" என்றும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு முற்றிலும் தாழ்ந்து நடத்தல் வேண்டும் என்றும் குடியேறுபவர்கள் பலர் சமூக விரோதிகளாக உள்ளனர் என்றும் சார்க்கோசி கூறியுள்ளார்.

செய்தி ஊடக மற்றும் அரசியல் கருத்துரைப்பவர்கள் தேசிய அடையாளப் பிரச்சினை Jean-Marie Le Pen உடய தேசிய முன்னணி (FN) ன் தீவிர வலது சாரி வாக்காளர்களின் ஆதரவை வரும் மார்ச் 2010 வட்டாரத் தேர்தல்களில் தக்க வைக்கும் ஒரு சாகச நடவடிக்கை என்று நினைத்தால் அது பெரும் தவறாகிவிடும். பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியை தக்க வைக்கும் அரசியல் இயக்க வகையின் நோக்கம், 1944 விடுதலையில் இருந்து, "இடது" அரசாங்கங்கள் மற்றும் கோலிஸ்டுகள் மற்ற கன்சர்வேடிவ் கட்சிகளை மாற்றி, மாற்றி பதவியில் இருத்துதல், அதுவும் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அடக்கி வைக்கும் அடிப்படையில் என்பதை சார்க்கோசி நன்கு அறிந்துள்ளார். இதன் முக்கிய திருப்புமுனை 2002ல் வந்தது; அப்பொழுது ஜனாதிபதித் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு கோலிச ஜாக் சிராக்குடன் இரண்டாம் சுற்றில் போட்டியிட முடியாமல் செய்யப்பட்டதுதான்.

மே 2007ல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து சார்க்கோசி, பணிநிலைமைகள், சமூக உரிமைகள் (குறிப்பாக ஓய்வூதியங்கள்) மற்றும் சமூக நலன்கள் குறிப்பாக சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மீது தொடர்ந்து தான் தாக்குதல் செய்யக்கூடிய வகையில், தொழிலாளர்கள் போராட்டங்களை தனிமைப்படுத்தவும், அவர்கள் சீற்றத்தை வெளியேற்ற வைக்கும் வகையில் இடைவெளியுள்ள ஒரு நாள் போராட்டங்களாக நடத்தவும் தொழிற்சங்கங்களை நம்பியுள்ளார்.

சார்க்கோசியின் வெற்றிகளுக்கு முக்கியமானது பிரான்சின் முக்கிய தொழிற்சங்கமான National Confederation of Labour (CGT - கம்யூனிஸ்ட் கட்சி PCF க்கு நெருக்கமானது) உடைய தலைவர் பேர்னார்ட் தீபோவின் ஒத்துழைப்பு என்பது இப்பொழுது வெளிப்படையான உண்மையாயிற்று.

பரந்த அளவில் படிக்கப்படும் வாராந்திர ஏடு Marianne தன்னுடைய நவம்பர் 28ம் தேதி பதிப்பில் குறிப்பிட்டதாவது: "நெருக்கடி நேரத்தில், அரசாங்கமும், பிரான்சின் முக்கிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஒரு விந்தையான களிப்பில் வாழ்கின்றனர்". ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரை மேற்கோளிட்டு அது கூறுவது: "இது ஒரு அற்புதமான இலையுதிர்காலம்; ஒரு முதலாளி கூட கடத்தப்படவில்லை, ஒரு மாணவர் கூட தெருவிற்கு வரவில்லை, ஒரு ஆர்ப்பாட்டம் கூட இல்லை!....சார்க்கோசியும் தீபோவும் அதிருப்தியை திசைதிருப்பி, நெருப்பை ஒன்றாக அணைத்து விட்டனர்; எனவே நாம் அச்சுறுத்தும் காலத்தை அமைதியாக கடந்துள்ளோம்."

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து நிறுத்துவதற்கு தொழிற்சங்கங்களால் முடியாது என்பதை சார்க்கோசியும் அவருடைய ஆலோசகர்களும் நன்கு அறிவர். முக்கியமான அதிகாரத்துவ அமைப்புக்களாக இருக்கும் அவை அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் உதவியைப்பெற்று அவற்றினால் தக்க வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் தொகுப்பில் மொத்தத்தில் 8 சதவிகிதம் கூட இவற்றில் உறுப்பினர்கள் அல்ல; இது OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு)-ன் தொழில்துறை நாடுகளில் மிகக் குறைவானது ஆகும். ஏற்கனவே 800,000 வேலையில்லாத தொழிலாளர்கள் 2010ல் நலன்களை இழந்துவிடுவர், வேலையின்மை விகிதம் புது ஆண்டில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளையும் தொழில்களையும் பிணை எடுக்க அரசாங்கம் வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுப்பதற்குத் தேவையான பரந்த நிதியத்தை திரட்டுவதற்கு சார்க்கோசியின் ஐந்து ஆண்டு பதவிகாலத்தில் சுமத்தப்பட்ட செலவு குறைப்புக்களின் மொத்தம் மிகக் குறைந்ததுதான்.

இந்த ஆழ்ந்த நெருக்கடியில் முதலாளித்துவம் ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை PS/PCF ன் கூட்டணிப் பங்காளியாக உயர்த்தியுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் பொருளாதார நெருக்கடியின் சுமையை ஏற்றுவதால் தவிர்க்க முடியாமல் வரக்கூடிய வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட மிகப் பிற்போக்கு சக்திகளைத்தான் அது கட்டமைத்தாக வேண்டும்.

சார்க்கோசி தேசிய முன்னணி திட்டத்தின் பெரும் பகுதிகள், சிந்தனைகள் இவற்றைத் தீவிரமாக எடுத்துக் கொண்டது தீவிர வலது வாக்குகளை ஈர்ப்பதற்குப் பதிலாக புதிய பாசிஸ்டுக்களுக்கு ஆக்கம் தருகிறது என்பதற்கான அடையாளங்கள் வந்துள்ளன. லூ பென்னின் மகளும், அவருக்குப் பின்னா தலைவராகக்கூடியவருமான Marine Le Pen தொலைக் காட்சிகளில் சந்தைகளில் "தேசிய அடையாளம்" என்ற தலைப்புடைய துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பது காட்டப்படுகிறது. கருத்துக் கணிப்புக்கள் வட்டார தேர்தல்களில் FN க்கு 10 சதவிகிதத்தினர் வாக்களிக்கக்கூடும் என்று காட்டுகின்றன. இது ஆளும் UMP (Union for a Popular Movement)ன் வருங்காலத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். சார்க்கோசிக்கான ஒப்புதல் தர வாக்குகள் 40 சதவிகிதத்திற்கும் குறைவாகப் போய்விட்டன.

ஊழல் நிறைந்த இடது முதலாளித்துவ கட்சிகள் மற்றும் UMP ன் முதலாளித்துவ சார்பு உடைய கொள்கைகளை தொழிலாளர்கள் நிராகரித்தது இந்த ஆண்டு Henin-Beaumont ல் நடந்த இடைத் தேர்தலில் FN கிட்டத்தட்ட வெற்றி அடையும் நிலையைக் காட்டியது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, PS, PCF, பசுமைவாதிகள், மற்றும் UMP ஆகியவற்றின் கூட்டணி, சுதந்திர "இடது" பட்டியலின் ஆதரவைப் பெற்றது, அது FN பட்டியலை விட சற்றே முன்னணியில் இருந்தது.

குடும்ப நல செயலரான Nadine Morano, "இந்நாட்டில் வாழும் ஒரு இளம் முஸ்லிம் பிரான்சை நேசிக்க வேண்டும்....அவருக்கு வேலை கிடைக்க வேண்டும்....சேரி மொழியை அவர் பேசக்கூடாது, தலைத் தொப்பியை வேறுபுறமாக அணியக்கூடாது என்று" தான் எதிர்பார்ப்பதாகக் அறிவித்தபோது ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

அவருடைய கருத்துக்கள் பிரெஞ்சு இளைஞர்கள் அனைவராலுமே ஒரு இழிவு என்று காணப்பட்டுள்ளது; அதுவும் கிட்டத்தட்ட மொத்த மக்களில் கால் பகுதியினரின் ஒரு பாட்டனார் அல்லது பாட்டியோ குடியேறியவர் என்ற நிலை இருக்கும்போது, இனவழிப் பேச்சுக்கள் அதைக் கூறுபவர்கள்மீது திரும்பிப் பாயக்கூடும். இத்தகைய வனப்புரைக்கு எதிர்ப்புக்கள் நகர்ப்புறச் சேரிகளுக்கும் அப்பால் செல்கின்றன.

இன்னும் நயமற்ற முறையில் டிசம்பர் 1ம் தேதி Le Meuse வின் நிர்வாக அதிகாரி, UMP யின்

Gussaiville உடைய மேயர் André Valentin, "நாம் மூழ்கடிக்கப்பட உள்ளோம்....ஏற்கனவே அவர்களில் பத்து மில்லியன் பேர் உள்ளனர்...அவர்கள் ஒன்றும் செய்யாததற்கு நாம் பணம் கொடுக்கிறோம்" என்று தேசிய அடையாளக் கூட்டம் ஒன்றில் பேசியதாக Mediapart தகவல் கொடுத்துள்ளது.

Valentin கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என்று Le Meuse, UMP யின் பிரதிநிதி Bertrand Pancher கோரியபோது, பெசோன் அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கும் விதத்தில் "அது ஒரு துரதிருஷ்ட வசமாக வெளிவந்த கருத்து" என்றார்.

பெருகிய முறையில் அரசியல் உயரடுக்கின் பிரிவுகள் இப்பொழுது சார்க்கோசி மற்றும் பெசோனால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அடையாளப் பிரச்சாரம் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருகற்கிறது என்று கவலைப்படுகின்றனர். UMP பிரதிநிதி Jean Pierre Grand, சார்க்கோசியின் போட்டியாளர் டொமினிக் டி வில்ப்பனுக்கு ஆதரவு தருபவர், தேசிய அடையாளப் பிரச்சாரத்தை "தேசிய முன்னணிக்கு மாபெரும் ஏற்றம் கொடுக்கும். அதைப்பற்றி நான் ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளேன்" என்று விவரித்தார்.

முன்னாள் UMP பிரதம மந்திரிகள் de Villepin, Jean Pierre Raffarin, Alain Juppé ஆகியோர் சார்க்கோசியின் கட்டுரைக்கும் தேசிய அடையாளப் பிரச்சினைக்கும் பகிரங்கமாக தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

சார்க்கோசியின் தேசிய அடையாளப் பிரச்சாரத்திற்கு சோசலிசக் கட்சியின் எதிர்ப்பு தேசிய ஒழுங்கை காத்தல் என்ற அடிப்படையை தளமாகக் கொண்டுள்ளது; அதாவது தேசிய, இன எல்லைகள் கடந்து தொழிலாள வர்க்கம் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதற்கு விரோதத்தை காட்டுகிறது.

முஸ்லிம் தலை மறைப்பை பள்ளிளில் தடை செய்வது, பர்க்கா எதிர்ப்பு பணிக்கு மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் குடியேற்றக் கொள்களைகளுக்கு, அவர்களுடைய ஆதரவு மற்றும் அவர்களுடைய பன்முக இடது கட்சிகளில் ஆதரவு ஆகியவை, மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பிற இடங்களிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இராணுவ சாகசத்திற்கு ஆதரவு ஆகியவை சார்க்கோசி வெளிப்படையான இனவெறித் தன்மைக்கு திரும்புவதற்கான அவரது திறனின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். அதே விதத்தில்தான் தொழிற்சங்கங்கள், குறிப்பாக CGT வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக தேசிய அடையாளத்திற்கு கொடுக்கும் ஆதரவும், ஒத்துழைப்பும் உள்ளன.

பிரான்ஸ், ஐரோப்பா, மற்றும் சர்வதேச அளவில் வந்துள்ள நெருக்கடிக்கு ஒரு சோசலிசத் தீர்விற்காக தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களது சுயாதீனமான வர்க்க நலன்களை காப்பதில் அனைத்துவித தேசியவாத வெளிப்பாடுகளுக்கும் எதிராக போராட வேண்டும்.