World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French NPA covers for military escalation in Afghanistan

பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆப்கானிஸ்தானில் இராணுவ விரிவாக்கத்திற்கு மூடிமறைப்பு கொடுக்கிறது

By Kumaran Ira
28 December 2009

Use this version to print | Send feedback

பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) தொழிலாளர்களை எப்படி குழப்பத்திற்கும் சீர்குலைவிற்கும் உட்படுத்துகிறது என்பதற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ திட்டங்களான இராணுவ விரிவாக்கத்திற்கு அது கொடுக்கும் பதிலுள்ளதை விட வேறு தெளிவான நிரூபணம் தேவையில்லை.

பிரான்சில் இராணுவ விரிவாக்கம் மிகக் கடுமையான மக்கள் எதிர்ப்பைக் கொண்டுள்ளது. Ifop கருத்துக் கணிப்பு ஒன்று 82 சதவிகிதத்தினர் கூடுதல் துருப்புக்கள் அனுப்புவதற்கு நிலைநிறுத்தி வைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை காட்டுகிறது; 65 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தானிற்கு இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது பற்றி எதிர்க்கின்றனர். ஆனால் போருக்கு அரசியல் அமைப்பின் முதலாளித்துவ இடது கட்சிகளான சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி

(PCF) போன்றவற்றின் முழு ஆதரவும் உள்ளது. PS மற்றும் PCF இரண்டும் 2001ல் அதிகாரத்தில் இருந்தபோது ஆப்கானிஸ்தானில் அந்த நேரத்தில் பிரான்சின் ஆரம்பப் படை அனுப்பலை மேற்பார்வையிட்டன.

எண்ணெய் வளம்மிக்கதும் புவிசார் அரசியல் மூலோபாயம் நிறைந்த பகுதியில் பிரான்சின் மூலோபாய, பெருநிறுவன செல்வாக்கிற்காக ஆப்கானிஸ்தானில் படைகளை நிறுத்தியிருப்பது மிகவும் முக்கியம் என்பதுடன், நேட்டோ நட்பு நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன் பிரான்சின் உறவுகளுக்கும் அது முக்கியமானது ஆகும். டிசம்பர் 16ம் தேதி பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் ஆப்கானிஸ்தான் பற்றிய விவாதத்தில், பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி Hervé Morin பிரான்சின் விரிவாக்கம் என்பது மட்டும்தான் விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கும் என்றார். அவர் மூன்று விருப்புரிமைகளை கூறினார்: "எமது வளர்ச்சிக்கான உதவியை அதிகரித்தல்", "போலீஸ், இராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதில் உதவுதல்", மற்றும் "இன்னும் கூடுதலான இராணுவப் படைகளை அனுப்புதல்". அடுத்த ஜனவரியில் லண்டனில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டிற்குப் பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் பிரெஞ்சுப் படைகள் அமெரிக்க, ஆப்கானிய துருப்புக்களுடன் ஒருங்கிணைந்து காபூலிற்கு கிழக்கே உஸ்பின் பள்ளத்தாக்கில், பாக்கிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு முக்கிய தாக்குதலை நடத்தியது. இப்பகுதியில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 பிரெஞ்சு துருப்புகள் கொல்லப்பட்டிருந்தனர். இதுவரை சிவிலிய அல்லது இராணுவ இறப்புக்களை பற்றிய மதிப்பீடுகள் பகிரங்கமாக கொடுக்கப்படவில்லை.

இச்சூழ்நிலையில் NPA ஆனது வெளிப்படையாக போருக்கு ஆதரவு கொடுத்தாலோ அல்லது அதன் PCF கூட்டுக்கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தாலோ தன்னை இழிவுபடுத்திக் கொண்டுவிடும்; அதையொட்டி ஆளும் வர்க்கத்திலுள்ள அதன் எஜமானர்களுக்கான எல்லாப் பயன்பாட்டையும் இழந்துவிடும். இதன் விளைவாக, போரைப் பற்றி கூர்மையற்ற குறைபாடுகளை அது கூறுகிறது; போர் தெரு ஆர்ப்பாட்டங்கள் மூலம் நிறுத்தப்பட்டுவிடும் என்பதைப் போல்.

டிசம்பர் 17ம் தேதி பாராளுமன்ற விவாதம் முடிந்த உடனே வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், NPA எழுதியுள்ளது: "[ஆப்கானிஸ்தான் போர் மூலோபாயம்] எனப்படுவதில் எப்படி நாம் சிறிதும் நம்பிக்கை வைக்க முடியும், ஏனெனில் இந்த ஆப்கானிஸ்தான் மூலோபாயம் துல்லியமாக தோற்றுள்ளதால்தான் அமெரிக்கா மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் முடிவிலா இராணுவ விரிவாக்கத்திற்கு பாடுபடுகின்றன?"

அதில் மேலும் கூறப்பட்டுள்ளது; "இந்தக் கறைபடிந்த போர் மேலே செல்ல வழியில்லாத பாதையாகும். இராணுவச் செலவுகளில் பில்லியன்கள் விழுங்கப்படும்; இவை ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்குத்தான் இலாபத்தை கொடுக்கும். மிக அதிகமான சாத்தியமான பொது வெளிப்பாடு தேவை, குறிப்பாக தெருக்களுக்கு வந்து, பெரும்பான்மையான மக்கள் இராணுவ சாகச நடவடிக்கையை கண்டிக்க வேண்டும்."

ஒருவர் இதை வெளிப்படையாகக் கூறப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் போர் ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொன்றிற்கும் முக்கிய மூலோபாய நலனைக் கொண்டுள்ளது; இது ஒன்றும் ஒரு சில தெருக்கள் எதிர்ப்புக்களால் நிறுத்தப்பட முடியாது. ஆப்கானிய போரை நிறுத்த முயல்பவர்கள் ஒரு வெகுஜன, சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான வருங்காலத்தை விவாதிக்க வேண்டும்; அந்த இயக்கம் நேட்டோ நாடுகளின் அரசாங்கங்கள், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உட்பட அனைவரையும் வீழ்த்துவதற்காக அமைக்கப்பட வேண்டும்.

"தெருக்களுக்கு வந்து" எதிர்ப்பு என்று கூறும்போது சார்க்கோசியின் மகத்தான ஓய்வூதிய குறைப்புக்களுக்கு 2007-2008ல் நடத்தப்பட்ட, தோல்வியுற்ற, செயலற்ற தொழிற்சங்க எதிர்ப்புக்களை NPA குறிப்பிடுகிறது என்றுதான் பொருள். இந்த எதிர்ப்புக்கள் மிகக் கவனத்துடன் சார்க்கோசியுடன் கலந்து பேசப்பட்டே அமைக்கப்பட்டன; தன்னுடைய பிற்போக்குத்தன வெட்டுக்குறைப்புக்களை இயற்றியபோது சார்க்கோசி மக்கள் எதிர்ப்பை கருத்தில் கொண்டிருந்தார் என்ற தோற்றத்தை கொடுப்பதற்காக இவை நடந்தன. இந்த எதிர்ப்புக்களின்போது NPA மிகக் கவனமாக தொழிற்சங்கங்கள் முழு நனவுடன் செய்த துரோகத்தை பற்றிக் குறைகூறாமல் இருந்துவிட்டது. குறிப்பாக CGT பற்றி; அதுவோ வரலாற்றளவில் ஸ்ராலினிச PCF உடன் தொடர்பு கொண்டது.

இந்தச் சூழ்நிலையில், NPA ஆப்கானிய போரை "கறைபடிந்த", "ஆயுதத் தயாரிப்பாளர்களுக்கு இலாபம் கொடுக்கும் ஆதாரம்" என்று கண்டித்திருப்பது வெற்றுத்தனம், பாசாங்குத்தனம் ஆகும். இவற்றில் போரின் வர்க்கத் தன்மை பற்றிய மார்க்சிச அறிதல் சிறிதளவும் இல்லை; சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு இது கொடுக்கும் ஆபத்து பற்றியும் சிறிதும் கருத்து இல்லை.

போர், பிரான்சின் இராணுவ-தொழில்துறைப் பிரிவிற்கு கணிசமாக வரும் இலாபத்தைக் காக்கும் என்பதில் ஐயமில்லை; அதேபோல் மத்திய ஆசியாவிலுள்ள பிரான்சின் எரிசக்தி நிறுவனங்களுடைய இலாபங்களையும் காக்கும். ஆனால் போரின் பரந்த இலக்கு யூரேசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை தக்க வைத்துக் கொள்ளுவது ஆகும்; அத்துடன் ஐரோப்பிய முதலாளித்துவம் அமெரிக்காவுடன் நேட்டோ மூலம் கொண்ட கூட்டின் தன்மையைக் காத்தலும் ஆகும்; மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உள்ள சூழலிலும் இது தொடரப்படுகிறது. பிரெஞ்சு தொழிற்துறையில் ஏதோ ஒரு பிரிவின் நிதிய நலன் மட்டும் அல்ல இது; முழு பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மூலோபாய நலன்தான் இது.

ஆப்கானிஸ்தானிற்கு பிரான்சின் இராணுவ தயார் நிலைநிறுத்தல் அரசியல் அமைப்புமுறையில் ஒருமித்த ஆதரவு இருப்பதற்கு இது காரணத்தை கொடுக்கிறது. இதில் NPA சற்றுக் கூடுதலான சிக்கல் வாய்ந்த, பாசாங்குத்தன பங்கை நடைமுறையில் இடது புறப்பக்கத்தை பாதுகாக்கக் கையாள்கிறது.

NPA இன் ஏகாதிபத்திய சார்புடைய கொள்கை ஜூன் 2009ல் ஈரானிய தேர்தலில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது; அப்பொழுது பதவியில் இருந்த ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஈரானிய தேர்தல் முடிவுகள் மோசடித்தனமானவை என்பதை அப்படியே NPA ஆனது ஏற்றுக் கொண்டது. தோல்வியுற்ற வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவிக்கு அது ஆதரவு கொடுத்தது. அவரோ நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தை ஆர்ப்பாட்டங்களுக்கு திரட்டினார்; பெரும் சமூக நலச் செலவுக் குறைப்புக்கள், அரசாங்க நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுதல், ஈரானை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்து விடுதல் ஆகிய திட்டங்களை அவர் முன் வைத்திருந்தார்.

NPA இன் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள பாசாங்குத்தனம் முதலாளித்துவ இடது கட்சிகளுடன் அது கொண்டுள்ள ஒத்துழைப்பில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது; இந்த பெப்ருவரியில் அதன் நிறுவன மாநாட்டில் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறையான தொடர்பை நிராகரித்தபின், NPA அதன் உறவுகளை PS மற்றும் PG (இடது கட்சி, PS இடமிருந்து முறிந்தது) மற்றும் PCF உடன் தீவிரப்படுத்தியுள்ளது. மார்ச் 2010 பிராந்திய தேர்தல்களில் NPA ஏற்கனவே தான் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் PSக்கு வாக்கு வேண்டும் என்ற கோர இருப்பதாகவும், PS பங்கு கொண்டுள்ள பிராந்திய நிர்வாகங்களில் பங்கு பெறத் தயார் என்றும் சமிக்கை காட்டியுள்ளது.

தேசிய சட்டமன்றத்தில் PS மற்றும் PCF குழுக்கள் பாசாங்குத்தனமாக "நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று அழைப்பு விடுத்தன. இது லண்டன் மாநாட்டிற்கு முன் அமெரிக்க தலைமையிலான போருக்கு மக்களின் பொது எதிர்ப்பை திசைதிருப்பும் முயற்சிதான். அம்மாநாடு ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு தொடரப்படுதவதற்கு ஐ.நா. ஒரு சிறிய அத்தி இலையால் மறைப்பை ஏற்படுத்துவதுபோல நோக்கத்தைக் கொண்டுள்ளது. இவ்விதத்தில் PCF ன் உறுப்பினர் Jean Paul Lecoq ஐ.நா.வின் பங்கு வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் போருக்கு புதிய உத்தரவிற்கான வரையறை வேண்டும் என்ற விதத்தில் பிரான்ஸ், "ஆப்கானிஸ்தானில் அமைதி நிலைமை பற்றி வரையறுப்பதற்கு ஒரு மாநாட்டைக் கூட்டும் தொடக்க முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்றார்.

இக்கட்சிகளின் அதிக வெளிப்படையான கருத்துக்கள் இராணுவ விரிவாக்கத்திற்கு ஆதரவாக கூறப்பட்டன. டிசம்பர் 15ல் அவருடைய blog TM PS உடைய Manuel Valls எழுதினார்: "என்னுடைய நிலைமை தெளிவாகத்தான் உள்ளது: இன்னும் கூடுதலான துருப்புகளை அனுப்புவது தேவையாகும்." அவர் மேலும் கூறினார்; "ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் அமெரிக்காவின் போர் அல்ல; பயங்கரவாதத்தின் முக்கிய மையங்கள் ஒன்றிற்கு எதிராக சர்வதேச சமூகம் நடத்தும் போர் ஆகும். எதிர்கொள்ளும் தடைகளுக்காக மற்றும் மக்கள் கருத்து அமைதியற்று உள்ளதற்காக ஆப்கானிஸ்தானை விட்டு இப்பொழுது விலகினால், அது பேரழிவைக் கொடுக்கும்." ஒபாமாவின் நோபல் பரிசு உரையை எதிரொலிக்கும் வகையில் அவர் எழுதியிருப்பது: "அடிப்படைக் கருத்து போரில் நாம் வெற்றி பெற வேண்டும்; அப்பொழுதுதான் சமாதானத்தை வெற்றி கொள்ள முடியும்."

பிரான்சின் முதலாளித்துவ இடது கட்சிகளுடன் NPA சார்பு கொண்டுள்ளது அதன் இத்தாலிய சக சிந்தனை அமைப்புக்களில் ஒன்றான பப்லோவாத அமைப்பான Sinistra Critica வின் பங்கைத்தான் காட்டுகிறது. இத்தாலிய ஸ்ராலினிச Rifondazione Communista வில் அவை பங்கு பெற்றன; அது பிரோடி அரசாங்கத்தின் முக்கிய அங்கமாக 2006ல் இருந்து 2008 வரை இருந்தது. Rifondazione ஆனது பிரோடி கடுமையான சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள வர்கத்திற்கு எதிராக செயல்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் துருப்புக்கள் அதிகப்படுத்துவது, அமெரிக்க இராணுவத் தளங்கள் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் ஆகியவைகளுக்கு உதவியது.