World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Over 100,000 demonstrate in London against Sri Lankan war

இலங்கை யுத்தத்திற்கு எதிராக இலட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

By Ajay Prakash and Paul Mitchell
2 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் யுத்தத்திற்கும் மற்றும் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் அட்டூழியங்களுக்கும் முடிவுகட்டக் கோரி சனிக்கிழமை மத்திய லண்டனில் ஊர்வலம் செல்வதற்காக ஐக்கிய இராச்சியம் முழுவதிலும் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் தமிழர்கள் வந்திருந்தனர். ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது கூட, குளூஸ்டர் குண்டுத் தாக்குதலில் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 128 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.

Demoசனிக்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெப்போதுமில்லாத அளவு பெரியதாக இருந்ததோடு சில ஆயிரம் பேரை மட்டுமே எதிர்பார்த்திருந்த ஏற்பாட்டாளர்களுக்கே முற்றிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுபோல் பொலிசாரும் தயாராக இருந்திராததோடு, டாட் பிரட்டன் கலரியில் தொடங்கிய ஊர்வலம் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரெளனின் வாசஸ்தலம் உள்ள டவுனிங் வீதியை கடந்து டெம்பள் ஸ்டேஷனை அடைந்த போது மத்திய லண்டன் ஸ்தம்பிதம் அடைந்தது. டெம்பள் ஸ்டேஷனில் பேச்சாளர்கள் பெருந்தொகையான மக்கள் முன் உரையாற்றினர். பொதுமக்கள் கூட்டமொன்றில் உரை நிகழ்த்துவதற்கான அனுமதியை ஏற்பாட்டாளர்கள் பெறவில்லை எனக் கூறி கூட்டத்தை நிறுத்துமாறு பொலிசார் கோருவதற்கு முன்னதாக ஒரு சிலரால் மட்டுமே அங்கு உரையாற்ற முடிந்தது.

ஆர்ப்பாட்டம் முன்னெப்போதும் இல்லாத பண்பைக் கொண்டிருந்த போதிலும், இது போன்று 50,000 பேர் டொரன்டோவிலும் மற்றும் ஐரோப்பா பூராவும் மேலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும், பிரிட்டிஷ் அல்லது சர்வதேச தொலைக் காட்சி செய்திச் சேவைகள் அல்லது ஞாயிற்றுக் கிழமை பத்திரிகைகள் எதுவும் இது பற்றி செய்தி வெளியிடவில்லை.

இலங்கை இராணுவத்தால் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டனம் செய்து வீடுகளில் செய்துகொள்ளப்பட்ட பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகள் ஆர்ப்பாட்டத்தில் நிறைந்திருந்தன. ஏனையவை துருப்புக்களை அனுப்புவதற்காக இந்தியாவையும், வளர்ச்சி கண்டுவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக "சர்வதேச சமூகம்" அமைதி காப்பதையும் கண்டனம் செய்தன. கொலைகள் பற்றி செய்தி வெளியிடத் தவறியமைக்காக பி.பி.சி. யும் மற்றும் இலங்கை வரலாற்றில் அதன் பாத்திரத்துக்காக பிரித்தானிய அரசாங்கமும் விமர்சனத்துக்குள்ளாயின. "தமிழர்களைக் கொல்வதை நிறுத்து", "யுத்தத்தை இப்போதே நிறுத்து"! "உணவுகளையும் மருந்துகளையும் போடு குண்டுகளைப் போடாதே" போன்ற சுலோகங்களை இளைஞர்களும் முதியவர்களும் கோஷித்தனர்.

Demo2தமிழ் ஈழத்துக்கான சுய நிர்ணய உரிமைக்கான அழைப்புகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சத்தங்களும் இருந்த போதிலும், சிவப்பு மற்றம் மஞ்சல் நிற தமிழீழ கொடிகள் ஒரு சிலவே இருந்ததோடு தமிழ் புலிகளின் கொடிகள் அங்கு இருக்கவில்லை.

பல தமிழ் தேசியவாத அமைப்புகளால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட போதிலும், அவற்றின் முன்நோக்கு பலவித அரசாங்கங்களை தலையீடு செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதாகவே இருந்தது. எடுத்துக் காட்டாக, தமிழர் பேரவையின் பிரதான அமைப்பாளரால் முன்வைக்கப்பட்ட கருத்து, "இனப் படுகொலையை நிறுத்த இலங்கை அரசாங்கத்தை நெருக்குமாறு ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்" என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதவும் என மக்களுக்கு அழைப்பு விடுத்தது. புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் இருந்து அகற்றுமாறு பிரெளனுக்கு கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றும் அங்கு விநியோகிக்கப்பட்டது.

"வடக்கு கிழக்கில் இருந்து துருப்புக்களை வெளியேற்று!" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் ஜனவரி 25 வெளியான முன்நோக்கு கட்டுரை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆயிரக்கணக்கில் பிரதியெடுக்கப்பட்டு சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் விநியோகிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டுள்ள குற்றவியல் தாக்குதல்களை கண்டனம் செய்த அந்த முன்நோக்கு, புலிகளின் வங்குரோத்து முன்நோக்கை விமர்சித்ததுடன் தமிழ், சிங்கள மற்றும் உலகத் தொழிலாளர்களதும் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தது. துண்டுப் பிரசுரத்தை பெற்றுக்கொள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்டியடித்ததோடு அதை வாசித்த பின்னர் சிலர் மீண்டும் வந்து மேலும் அதிகமாக பெற்றுச் சென்று தாங்களாகவே விநியோகித்தனர்.

பலர் உலக சோசலிச வலைத் தளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தோடு தமது எண்ணங்களை வெளிப்படுத்த முனைந்தனர். வி. விஜய் என்பவர் தெரிவித்தாவது: "தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த முதல் தடவையாக நாம் இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம். இது இனப் படுகொலையாகும். பின்னர் நாம் சமாதான முன்னெடுப்புகள் மற்றும் தீர்வுகள் பற்றி பேசலாம்.

"இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக நீண்டகாலமாக யுத்தத்தை முன்னெடுக்க சிங்களப் பேரினவாதத்தை பயன்படுத்தி வந்துள்ளது. 'பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை' பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளை அழிக்க அது முயற்சிக்கின்றது.

"எந்தவொரு ஏகாதிபத்திய நாடும் யுத்தத்தை நிறுத்த முனையவில்லை. குறிப்பாக இந்தியா, தனது சொந்தத் தேவைக்காக எமது இன முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டதோடு நீண்ட காலமாக தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மோதல்களை தூண்டிவிட்டு வந்துள்ளது. தனது சொந்த பிராந்திய சக்தியையும் சந்தைகளையும் ஸ்தாபிப்பதே இந்தியாவின் தேவையாகும்.

"சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தேசியப் பிரச்சினையை தீர்க்க வேண்டும், ஏகாதிபத்தியத்தின் தலையீடு இன்றி நிரந்தர சமாதானத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் மக்கள் நனவாக உள்ளனர்.

"எங்களுடைய மக்களுக்கு நாம் எமது ஒத்துழைப்பை காட்ட வேண்டும் எமது ஆத்திரத்தையும் வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறெனினும், இந்த சூழ்நிலை யுத்தத்தை நிறுத்தும் என நான் நினைக்கவில்லை. ஈராக்குக்கு எதிரான யுத்தத்தை எதிர்த்து 2003ல் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும் அமெரிக்கா அதை நிறுத்தவில்லை.

"யுத்தத்துக்கு முடிவுகட்ட போராடுமாறு நான் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்", என வி. விஜய் கூறி முடித்தார்.

யுத்தத்தை கண்டனம் செய்து உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ள மன்செஸ்டரில் இருந்து லண்டனுக்கு வந்த, ஒரு தமிழ் இளைஞர் அமைப்பின் உறுப்பினரான கோவிந்தராஜ் [இந்திய தமிழர்] தெரிவித்தாவது: "உலக வல்லரசுகள் மீதான எங்களது கோபத்தை வெளிக்காட்ட வேண்டும். இது வெறுமனே இனப் படுகொலை அல்ல; அது முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்ட கட்டமைப்பாகும். மற்றும் உலக வல்லரசுகளால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சரீர ரீதியான இன அழிப்பாகும்.

"நாம் யுத்தத்தை உடனடியாக நிறுத்தவேண்டும். ஏனெனில் 'பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை' பயன்படுத்தி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். ஏகாதிபத்திய நாடுகள், பின்னால் உள்ள உண்மையான விடயங்களை மூடி மறைப்பதன் பேரில் 'விடுதலைப் போராட்டத்தை' வெறுமனே பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமாக மாற்றிவிட்டார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்கள் கொல்லப்படுவதோடு அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றது.

"இந்தியாவுக்கு யுத்தத்தை நிறுத்த வேண்டுமெனில் அதனால் அதை செய்ய முடியும். ஆனால், தனது சொந்த பூகோள-மூலோபாய நலன்களின் காரணமாக அது அவ்வாறு செய்வதில்லை. தன்னை இந்தியாவுக்கு விற்பதற்காக [இந்தியாவுக்கு நெருக்கமாக] இலங்கையில் உள்ள பகுதிகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது. ஆனால் இந்திய மக்கள் இந்த யுத்தத்தை ஆதரிக்கவில்லை. அரசாங்கம் மட்டுமே ஆதரிக்கின்றது.

"இலங்கையில் சமாதானத்தை அமுல்படுத்த நாம் எமது [இந்திய] அரசாங்கத்தை நெருக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பதே எமது தேவை," என கோவிந்தராஜ் மேலும் கூறினார்.

Demo3எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்படக் கூடும் என்ற பீதியால் தனது முழு பெயரைக் கூற விரும்பாத கே என்ற தமிழ் இளைஞன், இலங்கையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் சில மாதங்களுக்கு முன்னர்தான் பிரித்தானியாவுக்கு வந்ததாக தெரிவித்தார். சிறையில் அவர் மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். தான் ஒரு அகதியாகவும் புலம்பெயர்ந்த தொழிலாளியாகவும் இருந்த போதிலும், ஆர்ப்பாட்டத்திற்கு வர நேரம் கிடைக்கவில்லை என அவர் கூறினார். "இந்த யுத்தத்திற்கு எதிரான எனது ஆத்திரத்தை காட்டுவதின் பேரில் நான் எனது தொழிலை அர்ப்பணிக்கத் தயார்."

"இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதையும் கொடுக்கப் போவதில்லை. தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பதே அதன் தேவை" என கே. விளக்கினார்.

"கொழும்பில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கின்றனர். எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நடக்கலாம். அவர்களை காக்க அங்கு யாரும் கிடையாது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உறவினர்கள் இருந்தால், அரசாங்கத்தால் அடையாளங் காணப்பட்டு இலக்குவைக்கப்படுவார்கள் என்ற பீதி மக்களிடம் உள்ளது", என அவர் தொடர்ந்து கூறினார்.

"இந்தக் குண்டுத் தாக்குதலில் நான் எனது உறவினர்களை இழந்துவிட்டேன். கொழும்பிலும் வவுனியாவிலும் உள்ள எனது உறவினர்கள் அவர்களுக்காக அழ அல்லது அஞ்சலி செலுத்தவே முடியாதவர்களாக உள்ளனர். இது தமிழர்களுக்கு எதிரான கொடூரமான கிரிமினல் யுத்தமாகும்.

"அரசாங்கத்தால் குண்டு வீசப்பட்ட பின்னர், 'பாதுகாப்பு வலயம்' என சொல்லப்படுவதற்கு வந்து சேர தமிழ் மக்கள் விரும்பாததற்குக் காரணம், அவர்கள் குற்றவாளிகள் போல் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்கள். அரசாங்கம் முன்னரும் அவ்வாறு செய்துள்ளது, மீண்டும் அவ்வாறு செய்யப் போகின்றது. பலருக்கு புலிகளில் உறவினர்கள் உள்ளனர். அவர்களே அரசாங்கத்தின் முதல் இலக்காக இருக்கப் போகின்றனர். இலங்கை இராணுவம் இருக்கும் பகுதிக்கு நகர்ந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும்.

"மக்கள் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் புலிகளுடன் இணைவதாக கூறிக்கொண்டு தமிழர்களை பீதிக்குள்ளாக்க அந்தப் பிரதேசத்தில் அரசாங்கம் குண்டுகளை வீசுகின்றது. ஆக்கிரமிப்பு, ஷெல் வீச்சு மற்றும் படுகொலைகள் மூலம் அரசாங்கம் தமிழர் போராட்டத்தை அழிக்க எதிர்பார்க்கின்ற போதிலும், அவ்வாறு நடக்கப் போவதில்லை. மேலும் தமிழர்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்துவார்கள், ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு நாளும் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை காண்கின்றார்கள்," என கே தெரிவித்தார்.

பாரிஸ் ஆர்ப்பாட்டம்

பாரிஸில் தமது பிரச்சாரத்தின் போது, சோசலிச அனைத்துலகவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இன பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் முன்நோக்கிற்கு பலமான ஆதரவு இருப்பதை பிரான்சில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கண்டனர்.

யுத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய லா சப்பெல் என்ற இடத்துக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடினர். இது புலிகளின் முன்னணி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், தமிழ் இளைஞர் அமைப்புகள் மற்றும் தமிழ் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்களில் பலரும் சுயாதீனமாக பங்கெடுத்திருந்தனர். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி மட்டுமன்றி, இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவளிக்கும் இந்திய அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தையிட்டும் ஆத்திரமடைந்திருந்தனர்.

"இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்து துருப்புக்களை வெளியேற்று" என்ற தலைப்பிலான அறிக்கையை சோ.ச.க. உறுப்பினர்கள் விநியோகித்ததோடு, அவர்கள் பல தமிழ் இளைஞர்களுடன் உரையாடினர். பல்குழல் ஏவுகனைகள், எறிகணைகள் மற்றும் விமானங்கள் போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்தும் இராணுவத்தினாலும் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தினாலும் தமது உயிரை இழந்துகொண்டிருக்கின்ற அப்பாவி தமிழ் மக்கள் தொடர்பாக அந்த இளைஞர்கள் கவலை தெரிவித்தனர்.

"ஐக்கிய நாடுகள் சபை எங்கே? சர்வதேச சமூகம் எங்கே? அவர்களால் ஏன் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை? என ஒருவர் கேட்டார்.

ரவி என்ற இளைஞர் தெரிவித்ததாவது: "நான் யுத்தத்தை எதிர்ப்பதற்காக எமது விளையாட்டு கழகத்துடன் வந்தேன். நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல. ஆனால், ஒவ்வொரு நாளும் இராணுவத்தின் காட்டுமிராண்டி தாக்குதல்களால் கொல்லப்பட்டுவரும் எமது மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவே இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

"அவர்கள் வன்னியில் உணவு, மருந்து மற்றும் தங்குமிடங்கள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். சுமார் 3,000 இந்திய இராணுவம் முல்லைத் தீவில் இறங்கியதாக நான் கேள்விப்பட்டேன். இராஜபக்ஷ மிகவும் வஞ்சகமானவர். அவர் இரண்டு நாள் யுத்த நிறுத்ததை அறிவித்த போதிலும், உண்மையில் அவர் வன்னியில் உள்ள மக்கள் மீதும் புலிகள் மீதும் இன்னுமொரு தாக்குதலுக்கு தயாராவதற்கு இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் தனது இராணுவத்தை அனுப்பியுள்ளார்," என ரவி கூறினார்.

காண்டீபன் என்பவர் பேசுகையில், "முன்னர் நான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் (இப்போது இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ் தேசிய இயக்கங்களில் ஒன்று) ஆதரவாளராக இருந்தேன். ஆனால், இப்போது நான் அவர்களை ஆதரிக்கவில்லை. கடந்த காலத்தில் நான் எனது குடும்ப உறுப்பினர்களில் பலரை இழந்துவிட்டேன். இந்த யுத்தம் இலங்கையில் பல தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கின்றது," என்றார்.