World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands protest in Paris and Berlin against war in Sri Lanka

இலங்கையில் நடக்கும் போருக்கு எதிராக பாரிசிலும் பேர்லினிலும் ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

By our correspondents
5 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

நாட்டின் வடக்கே பெரும்பாலும் பாதுகாப்பற்ற தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திவரும் படுகொலைத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதனன்று ஜேர்மனியிலும் பிரான்சிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இரு ஆர்ப்பாட்டங்களிலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்குவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

"இலங்கையில் சாட்சியங்கள் இல்லாமல் ஒரு இனப்படுகொலை" என்னும் பதாகையை பேர்லின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியுள்ளனர்.

Berlin protesters hold banner reading: A genocide without witnesses in Sri Lanka

இலங்கையின் சுதந்திரதின 61வது ஆண்டு நிறைவைக் குறித்த தினத்தன்று, கிட்டத்தட்ட 8,000 தமிழர்கள், தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் தொடர்ந்து நடத்திவரும் இராணுவத் தாக்குதலுக்கு எதிராக பேர்லின் மத்திய பகுதியில் அணிவகுத்துத் திரண்டனர். அனைத்து வயதினர், குடும்பங்கள் உட்பட இதில் பங்கு பெறுவதற்கு வந்திருந்தனர். ஜேர்மனியில் பிறந்து வளர்ந்து வரும் பல இளவயது தமிழர்கள் பங்கு பெற்றதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

வடக்கே ஹம்பேர்க்கில் இருந்து தெற்கு மூனிச் வரை ஜேர்மனியில் பல பகுதிகளில் இருந்து பஸ்களும் பிற வாகனங்களும் பங்கு பெற்றவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் (CDU) தலைமை அலுவலகத்தில் அணிவகுப்பு தொடங்கியது; இது ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலின் கட்சியாகும்; அணிவகுப்பு ஜேர்மனிய தலைநகரின் நடுப்பகுதி வழியே இருக்கும் இந்திய தூதரகம் வழியேயும் சென்றது.

பல ஆர்ப்பாட்டக்காரர்களும் சாதாரண குடிமக்களின் இன்னல்களை சித்தரிக்கும், குறிப்பாக குழந்தைகளின் அவதிகளை காட்டும், பதாகைகளை ஏந்தியவண்ணம் சென்றனர். காசாப் பகுதியில் இஸ்ரேல் சமீபத்தில் நடத்தி வந்த கொலைகாரத் தாக்குதல்களுக்கும் இலங்கை நிகழ்ச்சிகளுக்கும் இடையே நேரடி இணைத் தொடர்பை சித்தரித்துக் காட்டினர். ஒரு பதாகையில் கூறப்பட்டது: "காசாவும் இலங்கை வன்னியும் ஒரே கிரகத்தில்தான் உள்ளன." மற்றொரு அட்டை இலங்கை அரசாங்கம் சமீபத்தில் நடத்தி வரும் செய்தியாளர் மீதான தாக்குதல்கள், ஊடகத் தணிக்கை பற்றி, "சாட்சியங்கள் இல்லாத இனப்படுகொலை" என்று கூறிப்பிட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் அநேகமாக முற்றிலும் தமிழர்களாலேயே நடத்தப்பட்டது; இது அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் பற்றித் தகவலை தமிழ் சமூகத்திற்குள் சுற்றறிக்கை விட்டனரே தவிர இன்னும் பரந்த பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளும் முயற்சியைக் காட்டவில்லை என்பதைக் குறிக்கிறது.

சிந்தா டுஸல்ட்டோவில் படிக்கும் இளவயது மாணவியாவார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இலங்கையின் வடபகுதியில் உள்ளனர் என்று இவர் WSWS இடம் கூறினார்; அவர்கள் உடனடித் தாக்குதல் என்ற அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்தார். "என்னுடைய பாட்டி, அத்தை உட்பட மற்ற உறவினர்களும் நண்பர்களும் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் உள்ளனர்." என்று இவர் கூறினார்.

"சில நாட்களுக்கு முன்பு என்னுடைய தோழி அவருடைய பாட்டி மற்றும் பாட்டனார் அவர்கள் வீடு தாக்கப்பட்டபோது கொல்லப்பட்டனர் என்று தகவல் தெரிவித்தார்." என்று சிந்தா எம்மிடம் தெரிவித்தார். "இயல்பாகவே என்னுடைய உறவினர்களை பற்றியும் கவலைப்படுகிறேன். உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும்; இல்லாவிடின் அங்கு வாழும் நூறாயிரக்கணக்கான தமிழர்களுடைய உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்."

"இங்குள்ள மற்ற பல தமிழர்களை போலவே நானும் ஜேர்மனியில் பிறந்து, வளர்ந்தவள். இலங்கையில் பிறந்து, அங்கு வேர்களை கொண்டிருக்கும் எங்கள் தாய் தந்தையருக்கு நிலைமை பெரும் மன உளைச்சலைக் கொடுக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 பேர் அங்கு இறந்த வண்ணம் உள்ளனர்; இன்னும் பலர் காயமுறுகின்றனர். போர் நிறுத்தப்படாவிட்டால், முழுத் தமிழ் மக்களுக்கும் பேராபத்து விளையும்."

ஜேர்மனிய செய்தியாளர்கள் மற்றும் பிற ஊடக ஆதாராங்கள் போர் பற்றி தகவல் கொடுக்க இலங்கை அரசாங்கம் தடைவிதித்துள்ளமை பற்றி சிந்தா குறைகூறினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தமிழர்கள் நிலை பற்றி வெளிப்படுத்துவது, மற்றும் ஜேர்மனி உட்பட ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்றார்.

அதே நேரம், இலங்கை இராணுவம் நடத்திவரும் அப்பட்ட தாக்குதல் பற்றித் தெளிவாக கண்டிக்காததற்காக அவர் ஐரோப்பிய அரசாங்கங்கள் மீதும் குறைகூறினார். "நடந்து கொண்டிருப்பதற்கு எதிராக தனது கருத்து தெரிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தோற்றுள்ளது; அதே நேரம் ஐரோப்பிய அரசாங்கங்கள் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்குகின்றன. தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடத்தும் தாக்குதலில் இவையும் உடந்தையாக உள்ளன."

31 வயதான ரமேஷ் ஜேர்மனிய நகரமான நொய்சில் ஒரு உணவகம் நடத்திவருகின்றார். "என்னுடைய உணவு விடுதியை இன்று மூடியுள்ளேன். இங்கு வருவது அதைவிட முக்கியமாகும்" என்று அவர் கூறினார். தமிழர்களுடைய நிலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது முக்கியம் என்றும் அவர் கூறினார்; "நிரபராதிகள் அதிகரித்தளவில் கொல்லப்படுகின்றனர். அப்பகுதியில் இருந்து மக்கள் தப்பி வெளியேறவும் முடியவில்லை; இராணுவம் நடத்தும் பெரும் குண்டுவீச்சுக்களில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை." தீவிரப் போர் நடக்கும் அப்பகுதியில் ரமேஷின் உறவினர்கள் உள்ளனர்; அவர்களிடம் இருந்து செய்தி ஏதும் இல்லாத நிலையில் மிகவும் கவலைப்படுகிறார்.

ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit- PSG) ஆதரவாளர்கள் "இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சோசலிச முன்னோக்கு - இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!" என்ற அறிக்கைகளின் பிரதிகளை விநியோகித்தனர்.

இத்துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "ஜனாதிபதி இராஜபக்க்ஷ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்க்குற்றங்கள் ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் அவர்களின் தேசிய முதலாளித்துவ பிரதிநிதிகளாலும் புவிசார் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் காசாவில் நடந்துவருவதைப் போன்று அதிகரித்த அளவில் கொடூரமான வழிமுறைகளுக்கு திரும்பும் போக்கின் வெளிப்பாடாகும்''.

மேற்கு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலங்கை இராணுவதத்திற்கு ஆதரவை தெளிவுபடுத்தியுள்ள போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இதே அரசாங்கங்கள் மீது அழுத்தத்தை குவிக்க வேண்டும் எனத் தொடரும் முன்னோக்கை கொண்டுள்ளது. துண்டுப் பிரசுரம் மேலும் கூறுவது: "இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் ஏதாவது ஒன்றின் ஆதரவுடன் ஒரு சிறிய முதலாளித்துவ அரசு அமைக்க வேண்டும் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கை, தமிழ் முதலாளித்துவ தட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே உள்ளது."

"இலங்கையில் உள்ள தமிழ் மக்களினதும் ஏகாதிபத்திய நாடுகளில் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் நேசசக்தி தொழிலாள வர்க்கமேயாகும். அதுதான், இலங்கை முதலாளித்துவ அரசை தூக்கி வீசி, ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பாகமாக இலங்கை முதலாளித்துவ அரசை தூக்கிவீசி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உத்திரவாதப்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரேயொரு சமூக சக்தியாகும்."

துண்டுப் பிரசுரம் கீழ்க்கண்ட கருத்துடன் நிறைவு பெறுகிறது: "நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை அவர்களின் இனவழி மூலத்திலிருந்து சுயாதீனமாக ஒன்றிணைப்பதற்காக போராடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே வடக்கு, கிழக்கிலிருந்து ஆயுதப்படைகளை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேறுமாறு கோருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியானது தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பகுதியாக சிறீலங்கா ஈழ சோசலிச குடியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வழி மட்டுமே ஐம்பது வருடங்களுக்கு மேலாக முழுப்பிராந்தியத்திலும் கொள்ளை நோயாக பரவியிருக்கும் இனவாத, இனவழிரீதியான, சாதி அரசியலுக்கு ஒரு முடிவுகட்டும்."

இத்துண்டுப்பிரசுரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. அவர்களில் பலர் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். ஆனால் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் வேறுவிதமாக இதை எதிர்கொண்டனர். தங்களுடைய துண்டுப் பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர்; அதில் ஐரோப்பிய அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பது வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டில் இருக்கும் அமைப்பான தமிழ் ஒருங்கிணைப்பு குழு (Tamil Coordination Committee) வெளியிட்ட துண்டுப்பிரசுரம் "ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஜேர்மனிய அரசாங்கம் இலங்கை மீது உடனடியாகப் போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு பொருளாதார, இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என குறிப்பிட்டது.

தங்கள் முன்னோக்கின் அடிப்படையில் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சி துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியவர்கள் பலர் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் துண்டுப்பிரசுரத்தை வழங்க முடியாமல் தடுத்தினர். "நீங்கள் எழுதியிருப்பது எங்களுக்கு விரோதமானது. இதை நாங்கள் அனுமதியோம்" என்று கூறிய அவர்கள், "ஒரு சிங்கள ஆர்ப்பாட்டத்திற்கு சென்று இதை ஏன் நீங்கள் வினியோகிக்கக்கூடாது?" என்றும் வினவினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் போருக்கும், நாட்டின் அரசாங்கத்திற்கும் பெரும் சக்திகள் கொடுக்கும் ஆதரவு பற்றிய அவர்களின் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களை எதையும் விரும்பவில்லை. இவ்விதத்தில் அவர்கள் தேசியவாதம், குறுகிய நாட்டு வெறி ஆகியவற்றிற்குத்தான் ஊக்கம் கொடுப்பதுடன், சிங்கள மக்களை நாட்டின் அரசியல் உயரடுக்குடன் ஒன்றாக வைத்துக் காண்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி தங்கள் துண்டுப் பிரசுரத்தை வழங்கும் உரிமையை காக்க ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் முயன்றபோது, அமைப்பாளர்கள் போலீசை அழைத்தனர். சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் குறைந்தபட்சம் ஆர்ப்பாட்டத்திற்கு வெளிப்புறத்தேயாயினும் தங்கள் பிரசுரத்தை வழங்குவது பற்றிய போலீசாரிடம் தங்கள் உரிமையை தெளிவுபடுத்தினர். ஆனால் போலீசார் அகன்றவுடன் மீண்டும் அமைப்பாளர்கள் குறுக்கிட்டு துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தவர்களின் கைகளில் இருந்து பறித்தெடுத்து கிழித்துப் போட்டனர். மற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமது செயல்கள் பிற ஆர்ப்பாட்டக்கார்களால் பாதிக்கப்படா வகையில் பார்த்துக் கொண்டனர். இத்தகைய குறுக்கீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் திவால்தன்மையை நிரூபிக்கின்றது. அது அச்சுறுத்தல் வன்முறை தவிர அரசியல்ரீதியாக அதன் முன்னோக்கு பற்றிய விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாதுள்ளது.

பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பதாகை "ஐரோப்பாவில் செய்தித் தாட்களின் முதல் பக்கத்தில் ஒரு சொல்கூட இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி குறிப்பிடுவது இல்லை." என கூறியது:

தீவின் வடக்கில் இலங்கை அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல், கொடூரங்களுக்கு எதிராக Champs de Mars இல் ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; அதே போல் புதனன்று Eiffel Tower க்கு எதிரேயும் நடைபெற்றது. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கும் பல தமிழ் தேசிய அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன. பாரிசில் முந்தைய புதனன்று நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இது நடந்தது; அங்கு 50,000 மக்கள் பங்கு பெற்றிருந்தனர்; ஆனால் இடது அமைப்புக்களில் இருந்து குழுக்கள் ஏதும் வரவில்லை; அவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

பல சிறுமியர், மகளிர் உட்பட பலவயதினரும் வந்திருந்தனர். பதாகைகள் இராஜபக்க்ஷ ஆட்சியை இனக்கொலை செய்வதாக குற்றம் சாட்டின; இத்தகைய கொலைகளுக்கு எதிரான தங்கள் பீதியையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தின. பிற்பகல் மூன்று மணிக்கு பின்னர் அலையலையாக பங்கு பெற்றவர்கள் வந்தனர்; இதில் உணவு விடுதிகள், உல்லாச விடுதிகளில் தங்கள் வேலைகளை முடித்துத் திரும்பிய தொழிலாளர்களும் மாணவர்களும் இருந்தனர்.

வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை காட்டிய விதத்தில் பதாகைகள் இருந்தன; இதில் பஞ்சத்தை எதிர்க்கும் ஒரு குழு, இலங்கைவின் வடக்குப் புறத்தில் இருப்பதின் 17 உறுப்பினர்களும் அடங்கும். இந்தக் குழு இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட பின்னர் சாலை ஒரத்தில் கிடத்தப்பட்டதை படங்கள் காட்டின. பதாகை கூறியது: "பிரெஞ்சு அரசாங்கத்திடம் நீதி கோருகிறோம்! இவர்கள் தமிழர்கள் என்பதால் மறக்கப்பட்டுவிட வேண்டுமா?'

Demonstrators in Paris, banner reads: In Europe, not a word on the front pages of the newspaper--In Sri Lanka, thousands of dead unreported

பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பதாகை; "இலங்கைவில் தமிழ்மக்கள் மீது நடத்தும் இனப்படுகொலையை நிறுத்துக." என்றது.

ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி புகைப்படத்துடன் கூடிய நூற்றுக்கணக்கான அட்டைகளை வினியோகித்தனர்; தமிழ் மக்களுடைய உதவிக்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது. ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆகியோரின் புகைப்படங்களும் இத்தகைய வேண்டுகோளுடன் வெளியிடப்பட்டன.

The Sri Lankan and Indian governments are committing genocide against the Tamils in Sri Lanka

இலங்கை கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு் (Federation of Former Pupils of Sri Lankan Colleges) சார்க்கோசிக்கு கொடுத்துள்ள கடிதம் ஒன்றில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியிடம் மிகவும் மரியாதையுடன் ''மத்திய கிழக்கில் நியாயமான சமாதானத்தை தோற்றுவிக்கும் உங்களுடைய அயரா முயற்சிகள் பற்றி நாங்கள் அறிவோம். உங்களுடைய ஆக்கத்தன்மையும் உலக மோதல்களுக்கு சமாதானத் தீர்வு காணவேண்டும் என்னும் தீவிர உணர்வும் இந்த இரத்தம் சிந்தும் போரை நிறுத்த இலங்கை அதிகாரிகளிடம் நீங்கள் குறுக்கிடலாம் என எங்களை நினைக்க ஊக்குவிக்கிறது." என எழுதியிருந்தது.

"இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலை புரிந்து வருகின்றன."

அணிவகுப்பில் கலந்துகொண்ட பேச்சாளர்கள், வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் ஒரு இராஜதந்திர தீர்வைக் காணமுடியும் என நம்பிக்கை தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு ஆதரவு கொடுக்குமாறு அழைப்புவிடுத்தனர்.

"இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சோசலிச முன்னோக்கு - இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று" என்னும் இரு அறிக்கைகளின் 7,500 பிரதிகளை தமிழிலும் பிரெஞ்சு மொழியிலுமாக WSWS ஆதரவாளர்கள் வினியோகித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரத்திற்கு ஆதரவாக கருத்தைத் தெரிவித்தனர்; மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக அதிக பிரதிகளை கேட்டனர்; அதே போல் பிரெஞ்சு சக ஊழியர்களுக்கு வழங்குவதற்கும் பிரதிகளை கேட்டனர். துண்டுப் பிரசுர பிரதிகளை வாங்கிக் கொள்ள விரும்பிய கூட்டம் WSWS குழுவை சூழ்ந்தது; அதைப் பற்றி விவாதிக்க முற்பட்டது; குறிப்பாக சிறிய தனித் தமிழ் அரசு அமைக்கும் திட்டத்தின் பேரழிவு தரும் தோல்வி பற்றி விவாதிக்க விரும்பியது.

இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் WSWS குழுவை துண்டுப் பிரசுரங்கள் வழங்குவதில் இருந்து தடுக்க முற்பட்டனர். WSWS கொடுத்திருந்த பிரசுரத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டிய உயர்ந்த ஆர்வத்தினால், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களால் தங்கள் தணிக்கை முறையைச் செயல்படுத்த முடியாமல் போயிற்று.

WSWS ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் உரையாற்ற முற்பட்டனர்; ஆனால் அவர்கள் வழங்கிய துண்டுப்பிரசுரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துகின்றன என்ற காரணம் காட்டி அவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தவர்கள் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சிகளின் நகரசபை தலைவர்கள் ஆகியோர் பேசுவதற்கு தடையேதும் கூறவில்லை.