World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Vice President Biden in Munich signals continuation of US aggression

அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடரும் என்று துணை ஜனாதிபதி பிடென் மூனிச்சில் சைகை காட்டுகிறார்

By Ulrich Rippert
9 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

இந்த வார இறுதியில் சனிக்கிழமையன்று 45 வது மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் முக்கிய பகுதியாக புதிய அமெரிக்க துணை ஜனதிபதி ஜோ பிடென் கொடுத்த உரை இருந்தது. 13 அரசாங்க, நாட்டுத் தலைவர்கள், 50 மந்திரிகள் உட்னபட 300 முக்கிய அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் கூடியிருந்த அரங்கில் அவருடைய உரை ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் கீழ் புதிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் உள்ளடக்கம் எப்படி இருக்கும் என்பதைக் கேட்க அவர்கள் ஆர்வத்துடன் இருந்ததுடன், அட்லான்டிக் இடையிலான ஒத்துழைப்பு புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் காட்டினர்.

மாநாட்டிற்கு தான் ஆற்றிய உரையில் பிடென் சற்று கூடுதலான சமாதானப்படுத்தும் தொனியில் கூட்டு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் தேவை பற்றி அதிகமாகவே பேசினார். எட்டு ஆண்டுகள் ஒருதலைப்பட்ச நடவடிக்கை புஷ் ஜனாதிபதி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டபின், அவரின் உரையைக் கேட்க விரும்பியவர்கள் இதைத்தான் விரும்பினர் என்பதை பிடென் அறிந்திருந்தார்.

ஆனால் உள்ளடக்கத்தை பொறுத்தவரையில், புஷ் நிர்வாகம் தொடர்ந்திருந்த அடிப்படைக் கொள்களைகளில் இருந்து மாற்றம் வரும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. உண்மையில் முற்றிலும் மாறான கருத்துத்தான் வெளிப்பட்டது; Süddeutsche Zeitung பத்திரிகை குறிப்பிட்டுள்ளபடி இவருடைய "வசீகரம் வாய்ந்த தாக்குதல்" இன்னும் நெருக்கமான அமெரிக்காவுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ளுமாறு ஐரோப்பியர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ஆகும்; அதே நேரத்தில் வாஷிங்டன் வெளிநாடுகளில் செய்யும் தலையீடுகளுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அழைப்பும் இருந்தது.

பேர்லினில் கடந்த கோடையில் அவர் ஆற்றிய உரையில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் தங்கள் "அமைதிவாத சிந்தனைகளை" ஒதுக்கி வைத்துவிட்டு ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலான படைகளை அனுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

மூனிச்சில் தன்னுடைய உரையின் ஆரம்பத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி வாஷிங்டனுக்கும் உலகின் மற்ற நாடுகளுக்கும் இடைய ஒத்துழைப்பில் ஒரு புதிய சகாப்தம் இருக்கும் என்று அறிவித்தார். "ஒரு புதிய நிர்வாகத்தின் சார்பில் நான் ஐரோப்பாவிற்கு வந்துள்ளேன்.... அது வாஷிங்டனில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவர முடிவெடுத்துள்ளது மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் அமெரிக்க உறவுகளிலும் மாறுதலைக் கொண்டுவர விரும்புகிறது" என்று அவர் கூறினார். இந்தப் புதிய கருத்து "ஆடம்பரம் அல்ல" என்றும், ஒரு வலுவான கூட்டின் அடிப்படையில் இணைந்து அறைகூவலைகளை சமாளிப்பதற்கான ஒரு "முக்கியமான தேவை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து நாடுகளையும் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளின் பின்னணியில், உலக நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு, "தங்கள் அற்ப, அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்து, பயனற்ற மனப்பான்மையை நிராகரித்து, கடுமையான கொள்கை அடிப்படைகளையும் அகற்றிவிட்டு, ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்க வேண்டும் என்ற கருத்தாய்வை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.

பல ஐரோப்பிய செய்தி ஏடுகள் பிடெனின் சொற்களை பாராட்டியிருக்கையில், பல சிந்தனை நிறைந்த வர்ணனையாளர்கள் இப்பேச்சு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் உள்ளடக்கத்தில் அதிக மாற்றத்தைக் காட்டவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளனர். உதாரணமாக சனிக்கிழமை தன் வலைத்தள பதிப்பில் நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி அவருடைய அரசாங்கம் ஒரு "ரஷ்ய செல்வாக்கு மண்டலம்" என்ற கருத்தை அங்கீகரிக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ளதாக எழுதியுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், உலகம் முழுவதையும் தன்னுடைய செல்வாக்கு மண்டலமாக கருதும் உரிமையைத்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும் அதற்காக தன்னுடைய நலன்களை மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், காஸ்பியன் பகுதி ஆகியவற்றில் ஆயுத வலிமை மூலம் தொடரும் என்றும், மற்ற நாடுகள் "செல்வாக்கு மண்டலம்" கொள்ளுவதை ஏற்கத் தயாராக இல்லை என்றும் பொருளாகும் என அது எழுதியுள்ளது.

பிடென் வலியுறுத்தினர்: "ரஷ்யாவுடன் அனைத்திற்கும் நாங்கள் உடன்படமாட்டோம். உதாரணமாக அப்காசியா மற்றும் தெற்கு ஓசேஷியாவை சுதந்திர நாடுகள் என்று அமெரிக்கா அங்கீகரிக்காது". இப்பிரச்சினையில் பிடென் ஜோர்ஜியாவிற்கு ஆதரவை அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இவருடைய அரசாங்கம் ஜோர்ஜியா நேட்டோவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் உடையதா என ஒரு செய்தியாளரால் கேட்கப்பட்டதற்கு பிடென் இப்பிரச்சினைக்கு ஜோர்ஜிய அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்; இதன் பொருள் ஒபாமா நிர்வாகம் நேட்டோ அங்கத்தவத்தை இதற்கு கொடுக்கவேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தாது என்பதும் அதே நேரத்தில் அத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு உரிமை உண்டு என்பதும் ஆகும்.

அமெரிக்க கிழக்கு ஐரோப்பாவில் அமைக்க விரும்பும் பிரச்சனைக்குரிய ஏவுகணைத் திட்ட முறையை பொறுத்தவரையில், பிடென் சற்று தெளிவற்று இருந்தார்; ஆனால் அவருடைய அரசாங்கம் தொழில்நுட்ப முறையில் சாத்தியமாக இருந்து, அதிக செலவற்றதாக இருந்தால் அத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

ஈரான் பிரச்சினையை பொறுத்தவரையில், பிடேன் ஒரு கடினப் போக்கை தொடர்ந்தார். புஷ் போல் இல்லாமல், பிடென் ஒபாமா நிர்வாகம் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறினார்; ஆனால் அத்தகைய பேச்சு வார்த்தைகள் அமெரிக்கா முன்வைத்துள்ள நன்கறியப்பட்ட காலக்கேட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பிணைத்தார். ''ஈரானில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தற்போதுள்ள கொள்கைகளை தொடருவார்களானால், தொடர்ந்து அழுத்தம், ஒதுக்கப்படல் ஆகியவை இருக்கும்; தவறான அணுசக்தி திட்டத்தை கைவிடுங்கள், பயங்கரவாதத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவைக் கைவிடுங்கள், பின் பலவழிகளில் உதவிகளும், ஊக்கங்கள் கிடைக்கும்." என்றார். இவருடைய கருத்துக்கள் உடனடியாக மாநாட்டிற்கு வந்த ஈரானிய தூதுக்குழுவால் கண்டிக்கப்பட்டது; அவர்கள் அமெரிக்க நிலையில் மாறுதல் ஏதும் இல்லை என்று கூறினர்.

மத்திய கிழக்கு மோதல்கள் பற்றிய கருத்துக்களில், பிடென் காசா பகுதியில் இஸ்ரேலியர் நடத்திய படுகொலை பற்றி குறிப்பு ஏதும் கூறவில்லை; இதனால் முன்னர் ஒபாமாவே வெளிப்படுத்தியிருந்த மக்கள் படுகொலைக்கு மறைமுகமான ஆதரவுக் கொள்கை தொடரும் என்றுதான் பொருளாகிறது. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக சமீபத்திய இஸ்ரேலிய பயங்கரவாதப் பின்னணியில், இப்பகுதியில் இரு நாடுகள் தீர்விற்கு பிடென் அழைப்பு விடுத்துள்ளது முற்றிலும் இழிந்த தன்மையைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் பிடென் காசாவின் மறு கட்டமைப்பு முயற்சி என்பது பாலஸ்தீனிய அதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சியாக இருக்கவேண்டுமே தவிர ஹமாஸை பலப்படுத்துவதாக இருக்ககூடாது என்றும் கூறினார்.

பல முறையும் ஒத்துழைப்பிற்காக பிடென் விடுத்த அழைப்புக்கள் மாநாட்டில் பங்கு பெற்றவர்களால் கிட்டத்தட்ட பெருமிதத்துடன் வரவேற்கப்பட்டது; சர்வதேச அரங்கில் ஒபாமா அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை இவை மறைக்க முற்பட்டுள்ளன.

தன்னுடைய நட்பு நாடுகள் எதையும் கலந்து ஆலோசிக்காமல், அமெரிக்க அரசாங்கம் சீனாவிற்கு எதிரான கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது; தன்னுடைய பொருளாதார ஊக்கத் திட்டத்தை பாதுகாப்புவரி நடவடிக்கைகளுடன் பிணைத்துள்ளது; ஆப்கானிஸ்தானில் இருக்கும் தன் துருப்புக்களை இரட்டிப்பது பாக்கிஸ்தானில் இராணுவத் தலையீடுகளை புதிதாக செய்வதற்கான தயாரிப்பாகும்.

ஆயினும்கூட, பிடென் "நட்பு நாடுகள்" தங்கள் கருத்துக்களின் பங்களிப்பு செய்வது மட்டுமல்லாது, தங்கள் கொள்கைகள் பற்றி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்றும் திமிர்த்தனமாகக் கோரினார்... "மற்ற நடவடிக்கைகள் தோல்வி அடையும்போது வன்முறையை பயன்படுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும்." ஆப்கானிஸ்தான் போரில் ஒரு புதிய கருத்தாய்வு பரந்த மூலோபாயத்தை நாடுகின்றது; தீர்வை காண்பதற்கு அது அனைத்து கூட்டினரினதும் பொது மற்றும் இராணுவத் திறனை ஒன்றிணைப்பதுடன், அனைவரும் அதற்காக பொறுப்பேற்கவும் வேண்டும். பாக்கிஸ்தான் எல்லைப் பகுதி தீவிரவாதிகளுக்கு ஒரு புகலிடமாக மாறி வருவதைத் தடுப்பதற்கு பாக்கிஸ்தானும் மூலோபாய திட்டமிடலில் சேர்க்கப்பட வேண்டும் என்று பிடென் கூறினார்.

மாநாட்டில் நேட்டோவின் பொதுச் செயலாளர் Jaap de Hoop Scheffer ம் கூட்டில் ஐரோப்பிய சக்திகளின் பங்கு கூடுதல் தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கோரினார். புதிய அமெரிக்க அரசாங்கம் நல்ல ஆலோசனையை மட்டும் எதிர்பார்க்கவில்லை என்றும் இன்னும் நியாயமான முறையில் சுமைப் பகிர்வை எதிர்பார்க்கிறது என்றும் கூறினார். அட்லான்டிக் இடையிலான ஒப்பந்தம் அனைவரின் ஒத்துழைப்பின் அடிப்படையை தளமாகக் கொண்டது என்றும் வெறும் "இரு வழிப் பாதை அல்ல" என்றும் கூறினார்.

குறிப்பாக பொதுச் செயலாளர் ஆப்கானிஸ்தானின் தலையீடு பற்றிக் குறிப்பிட்டார்; இது நேட்டோவின் முக்கிய முன்னுரிமை என்றார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தலையீட்டை அதிகப்படுத்த திட்டம் கொண்டுள்ளது பற்றி கவலை தெரிவித்தார்; அதே நேரத்தில் "மற்ற நாடுகள் கூடுதலாகச் செய்யத் தயாராக இல்லை" என்றும் கூறினார். இது கூட்டுக்கு நல்லதில்லை என்றும் தவிர்க்க முடியாமல் வாஷிங்டனிடத்தில் ஐரோப்பிய செல்வாக்கு குறைய வழிவகுக்கும் என்றும் கூறுனார். கடந்த வெள்ளியன்று நடத்திய பேச்சுக்களில் ஆப்கானிஸ்தானிற்கான புதிய அமெரிக்க சிறப்பு ஆலோசகர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங் வால்டர் ஸ்ரைன்மெயரிடம் கூடுதலான ஜேர்மனிய தலையீடு ஆப்கானிஸ்தானில் வேண்டும் என்று ஏற்கனவே அழைப்புவிடுத்துள்ளார்.

புதிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் இராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் இருக்க இந்த ஆண்டின் மூனிச் பாதுகாப்பு மாநாடு உலகெங்கிலும் பல பகுதிகளில் வளர்ந்துள்ள பெருகிய அழுத்தங்களின் பின்னணியில் நடந்தது.

மாநாட்டிற்கு சில தினங்கள் முன்பு முன்னாள் சோவியத் குடியரசான கிர்கிஸ்தானின் அரசாங்கம் தன் நாட்டில் உள்ள ஒரு மூலோபாய முக்கியமான அமெரிக்கத் தளத்தை மூடும் திட்டத்தை அறிவித்தது. கிர்கிஸ் தலைநகரமான பிஷ்கிக்கிற்கு அருகே இந்த அமெரிக்கத் தளம் அமைந்துள்ளது; ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையில் இருக்கும் படைகளுக்கு விநியோகம் செய்வதில் இது அதிக முக்கியத்துவம் கொண்டதாகும். செய்தி ஊடக தகவல்களின்படி ரஷ்யா தளத்தை மூட அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அதற்காக கிர்கிஸ்தானுக்கு இரண்டு பில்லியன் டாலர் கடன்கள் மற்றும் மூலதன வாய்ப்புக்கள் தரத்தயார் எனக் கூறியதாகவும் தெரிகிறது.

தன்னுடைய அரசாங்கம் ஒரு "ரஷ்ய செல்வாக்கு மண்டலத்தை" ஏற்காது, அங்கீகரிக்காது என்னும் பிடெனின் கருத்துக்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒரு விடையிறுப்பாகும்; மேலும் மாஸ்கோவிற்கு இது ஒரு நேரடி அச்சுறுத்தலையும் கொடுக்கிறது. பொருளாதார, நிதிய நெருக்கடிப் பின்னணியில், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இராணுவப் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஒபாமா நிர்வாகம் பெரும் அழுத்தத்தின்கீழ் உள்ளது. ஆனால் வலுவிழக்கும் அரசாங்கங்கள் பொதுவாக கடுமையான, எதிர்பாரா நடவடிக்கைகளை எடுக்கும். இவ்விதத்தில் தற்போதைய வாஷிங்டனால் நடத்தப்பட்டுள்ள இராஜதந்திர தாக்குதல்கள் எதிர்காலத்திலான புதிய, வன்முறை நடவடிக்கைகளுக்கான ஒரு திரைமறைப்பாகும்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் வாஷிங்டனின் வலுவிழந்த நிலைமையை ஏளனமான நிம்மதியுடனும் அச்சத்துடனும் எதிர்கொண்டுள்ளன. முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகள் உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம் முடிந்துவிட்டது என வலியுறுத்துகின்றனர், ஐரோப்பா இப்பொழுது அதிக பங்கைக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் ஜேர்மனிய அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) கட்டுரை ஒன்றை Spigel இன் தற்போதைய பதிப்பில் "ஜேர்மனி ஆப்கானிஸ்தானில் நிறுத்தியிருக்கும் படைகள் பற்றிய வருங்காலம்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அக்கட்டுரையில், ஷ்ரோடர் நேட்டோ ஊடாக ஆப்கானிஸ்தானில் தனது ஈடுபாட்டினால், ஜேர்மனி தன்னுடைய கடமைகளை செய்துள்ளது மட்டும் அல்லாமல், உரிமைகளையும் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவத்தின் தலையீடு "வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் ஜேர்மனியின் முழு உரிமையின் வெளிப்பாடு" என்றும் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை தெளிவாக கடந்த ஆண்டுகளில் மோசமாகிவிட்டது என்றும் வாஷிங்டனின் போர்க் கொள்கைதான் இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஷ்ரோடரின் கருத்தின்படி, ஆப்கானிஸ்தானிய பிரச்சினை இஸ்ரேலிய பாலஸ்தீனிய நிலைமை, ஈராக்கிய நிலைமை மற்றும் ஈரான் அணுசக்தி திட்டம் ஆகியவற்றுடன் தொடர்புபட்டுத்தான் தீர்க்கப்பட முடியும். "இப்பூசல்கள் எதுவுமே தனிப்பட்ட முறையில் ஆராயப்பட முடியாதது" என்று அவர் எழுதுகிறார். ஒரு தீர்விற்கு வரவேண்டும் என்றால் பிராந்திய பேச்சுவார்த்தை தேவை; அதில் சிரியா, ஈரான் போன்ற நாடுகள் அடங்கியிருக்க வேண்டும் என்றார்.

வேறுவிதமாகக் கூறினால் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவம் அதிகரித்தளவில் பங்கு பெறுவதற்கு ஷ்ரோடர் மத்திய கிழக்கு, ஈரனில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்திற்கு பெருகிய பங்கைக் கோருகிறார். ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவிற்கு குழாய்த்திட்ட பெருநிறுவனம் மூலம் மாபெரும் எரிபொருள் விநியோகிக்கும் அமைப்பின் தலைவர் என்ற முறையில் ஷ்ரோடர் நீண்டகாலமாக புதிய முன்னேற்றமான உறவுகள் ரஷ்யாவுடன் வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இப்பிரச்சினைகள் அனைத்திலும் ஷ்ரோடர் ஆளும் உயரடுக்கிற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு கூடுதல் விட்டுக்கொடுப்புகளை செய்வது என்பது ஐரோப்பாவிற்கு ஒரு "புதிய உடன்பாடு" என்ற கோரிக்கையின் அடிப்படையில்தான் --குறிப்பாக ஜேர்மனிக்கு-- இருக்கும் என்று கூறியுள்ளார்; சர்வதேசப் பிரச்சினையில் பல முக்கியமானவற்றிற்கு ஐரோப்பாவிற்கு நலன்கள் வேண்டும் என்றார் அவர்.

இத்தகைய ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுதல், இராஜதந்திர களிப்பு என்பவை மூனிச்சில் நடக்கையில் பெரிய சக்திகளுக்கு இடையே மோதல்கள் விரைவாகப் பெருகி வருகின்றன.