World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Europe turns to protectionism as industry plummets

தொழில்துறை பெரும் வீழ்ச்சியடைகையில் ஐரோப்பா பாதுகாப்புவாதத்தை நோக்கி திரும்புகின்றது

By Ulrich Rippert
14 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோஸ்டாட் (Eurostat) நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் 2008 முடிவில் ஐரோப்பா முழுவதும் உற்பத்தி பெரும் வீழ்ச்சியடைவதை வெளிப்படுத்துகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள இப்புள்ளி விவரங்கள் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்தைவிட மோசமான நிலைமையைக் காட்டுகின்றன. டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி ஐரோப்பா முழுவதும் 2.6 சதவிகிதம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சரிந்தது. ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில், ஐரோப்பிய உற்பத்தி 12 சதவிகிதம் குறைந்து விட்டது.

சில காலமாகவே முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஐரோப்பிய உற்பத்தி வீழ்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களை பூசி மெழுகி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்; ஆனால் வியாழனன்று வெளிவந்துள்ள முடிவுகள் புதிய வார்த்தைகளை வெளிப்பட செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறை ஆணையர் Günter Verheugen, Financial Times Deutschland இடம், "நெருக்கடியின் அளவு மற்றும் வேகம் ஆகியவை முற்றிலும் புதிதானவை" என்றார்.

ஒரு நாள் முன்னதாக பொருளாதார ஆய்வுக்கான நிறுவனம் (Ifo-Institute for Economic Research) நடத்திய ஆய்வு ஒன்று 16 நாடுகள் கொண்ட, பொது நாணய முறையைக் கொண்டுள்ள யூரோப் பகுதிக்குள் வணிக உணர்வு தொடர்ந்த ஆறாம் காலாண்டில் சரிந்துள்ளது என்பதை காட்டியுள்ளது. இது 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மதிப்பீடு தொடங்கியதில் இருந்து மிகக் குறைவான அளவாகும். ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank- ECB) ஐரோப்பாவை பற்றியுள்ள மந்த நிலை ஒன்றும் குறுகிய காலத்தது அல்ல என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மாறாக இது "சற்று நீடித்த, தெளிவான கீழ்நோக்கிய சரிவைக் கொண்டதாக இருக்கும்" என்று ஐரோப்பிய மத்திய வங்கி கூறியுள்ளது.

பெருகியுள்ள நெருக்கடியை ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டுள்ள விதம் கூடுதலான பாதுகாப்புவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உள்ளது. இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி சமீபத்தில் கருவிகள் தயாரிக்கும் Indesit SpA அமைப்பை உற்பத்தி மற்றும் வேலைகளை போலந்திற்கு மாற்றக்கூடாது என்று எச்சரித்தார். பிரிட்டனில் தொழிற்சங்கங்களும் அரசியல் வாதிகளும் "பிரிட்டிஷ் தொழில்கள் பிரிட்டிஷ் தொழிலாளருக்கே" என்று கோரியுள்ளனர்.

புதனன்று ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் இடைக்காலத் தலைவரான செக் பிரதம மந்திரி மிராக் ரோப்போலாநெக் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர் கூட்டத்தில் தோன்றி ஐரோப்பாவில் "பாதுகாப்புவரிப் போட்டி" நடக்கிறது என்று எச்சரித்தார்; அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தேசியப் பொருளாதாரங்கள் மிகக் கடினமாக சர்வதேச நெருக்கடியினல் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் எதிர்பாராத வேகத்தில் அடித்தளத்தை இழக்கின்றன என்றும் கூறினார்.

ரோபோலாநெக் கூறினார்: "பொருளாதார மற்றும் நிதிய நெருக்கடியை அடுத்து கடந்த நூற்றாண்டின் சின்னங்கள் என்றும் நீண்ட காலத்திற்கு முன்பு தீர்க்கப்பட்டதாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கருதிய பிரச்சினைகள் வெளிப்பட்டுள்ளன."

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோசே மன்னுவேல் பாரோசோ உடன் பேசியபின் ரோபோலாநெக் ஐரோப்பாவில் இருக்கும் நிலைமை "இதுகாறும் இல்லத அளவிற்கு மோசமாக உள்ளது" என்று விளக்கினார். பொருளாதார, அரசியல் முறையின்மீது குடிமக்களுடைய நம்பிக்கை அதிர்ச்சிக்கு உட்பட்டுள்ளது என்றும் தேசிய சந்தைகளின் சரிவு ஐரோப்பிய உள்நாட்டுச் சந்தைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தை ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது என்றும் எச்சரித்தார்.

Süddeutsche Zeitung பத்திரிகை ஐரோப்பிய ஒன்றியக் குழுத் தலைவரின் அறிக்கைகளை எதிரொலிக்கும் வகையில் "பொருளாதார நெருக்கடியை பாதுகாப்புவரி நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முற்படும் எந்த அரசியல்வாதியும் நிலைமையை மோசமாக்கத்தான் செய்வர்." என எழுதியது.

தனித்தனியே நாடுகள் இதைத் தீர்க்க முயல்வது பற்றியும் பாரோசோ எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்கள் "தேசிய அளவில் தம்மை மட்டுமே கவனிக்கும்" முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். இல்லாவிடின், நெருக்கடி "சக்திவாய்ந்த முறையில் கீழ்நோக்கிச் செல்லும்" ஆபத்து அதிகமாகியுள்ளது என்றார் அவர்.

ஐரோப்பிய கார்த் தொழில் குறிப்பிடத்தக்க வகையில் கடன் வசதி இல்லாததால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஆய்வாளர் "கடன் பெறுவதற்கு பரந்த அளவில் வாய்ப்பு இருப்பது கார்த்தொழிலில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது; 60 முதல் 80 சதவிகித தனியார் கார் விற்பனைகள் ஐரோப்பாவில் கடன் அடிப்படையில்தான் நடைபெறுகிறது." எஃகுத் தொழிலில் ஐரோப்பிய குழு வல்லுனர்கள் 43 முதல் 57 சதவிகிதம் கேள்விப்பத்திரங்களின் (Orders) சரிவு என்று தெரிவித்துள்ளனர்'' என கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைமை வரவிருக்கும் மாதங்களில் வேலையற்றோர் எண்ணிக்கையில் தீவிர ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறது. ஐரோப்பிய ஒன்றிய தொழில்துறை ஆணையர் Verheugen உடைய கருத்தின்படி, கடந்த நான்கு மாதங்களில் நிறுவனங்கள் 158,000 வேலைகளை இல்லாதொழித்துள்ளன; 25,000 புதிய வேலைகளைத்தான் தோற்றுவித்துள்ளன. இது 2008 முதல் மூன்று காலாண்டுகளில் நடந்ததின் தலைகீழ் மாற்றம் ஆகும்; அப்பொழுது கூடுதலான வேலை வாய்ப்புக்களுக்கான போக்கு இருந்தது.

கடந்த புதனன்று பிரெஞ்சுக் கார்த் தயாரிப்பு நிறுவனம் Peugeot தான் குறைந்தது 11,000 வேலைகளையாவது அகற்ற உள்ளது என்று அறிவித்தது; மறு நாள் Renault அதன் திட்டமான தொழிலாளர் பிரிவில் 9,000 பணிநீக்கங்களை அறிவித்தது. இத்தகைய வேலைக் குறைப்புக்கள் பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உள்நாட்டுக் கார்த் தயாரிப்பாளர்களுக்கு 6 பில்லியன் யூரோக்கள் உதவித் தொகை கொடுக்க இருப்பதாகத் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த அறிக்கையுடன் பிணைந்தவை ஆகும்.

தன்னுடைய கருத்தில் "செக் குடியரசில் பிரெஞ்சுக் கார்களை தொடர்ந்து உற்பத்தி செய்வது" பொறுப்பற்ற தனம் என்று சார்க்கோசி அறிவித்தார். மற்ற நாடுகளுக்கு உற்பத்தி மாற்றப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கோரினார். "கார்த்தொழிலுக்கு நிதி உதவி நாம் கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் தங்கள் ஆலைகளை செக் குடியரசில் நிறுவுவதை நாம் விரும்பவில்லை" என்றார் அவர். கார்த்தயாரிப்பாளர்கள் உதிரிப்பாகங்கள் மற்றும் பிற பணிகளை வழங்கும் பிரெஞ்சு தொழிற்துறைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். செக் பிரதம மந்திரி ரோபோலநெக் இதற்குத் தீவிர எதிர்ப்புக்காட்டி இத்தகைய வெளிப்படையாக பாதுகாப்புவரிக் கொள்கைகள் கூடாது என்றும் இதையும் இதே போன்ற கொள்கைகளை தடுக்கவும் ஒரு சிறப்பு ஐரோப்பிய உச்சிமாநாடு வேண்டும் என்றும் கூறினார்.

ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் (Christian Democratic Union-CDU) யும் பிரெஞ்சு நடவடிக்கை பற்றிக் குறைகூறினார். தடையற்ற வணிகத்தின் பாதுகாப்பு மற்றும் ஐரோப்பிய உள்நாட்டுச் சந்தையின் பாதுகாப்பு முக்கியமான தன்மை உடையது என்று மேர்க்கெல் கூறினார்.

ஜேர்மனியப் பொருளாதாரம், அதன் ஏற்றுமதித் தொழிலை பெரிதும் நம்பியுள்ள நிலையில், ஐரோப்பாவில் எவ்வித பாதுகாப்புவரிக் கொள்கை அதிகரிப்பாலும் அது குறிப்பாகப் பாதிக்கப்படும்

தன்னுடைய முடிவிற்கு ஆதரவாக சார்க்கோசி நின்று ஒரு கூட்டு ஐரோப்பிய ஊக்கத் திட்டத்தை சில வாரங்களுக்கு முன்பு ஜேர்மனிய அதிபர் நிராகரித்தை கவனத்திற்கு கொண்டுவந்தார். இப்பொழுது ஒவ்வொரு அரசாங்கமும் நெருக்கடியை சமாளிக்க அதன் நடவடிக்கைகளை எடுக்கும் கட்டாயத்தில் உள்ளது என்று அவர் கூறினார். மேலும் சமீபத்திய ஜேர்மனிய ஊக்கப் பொதித் திட்டங்கள் ஜேர்மனிய நிறுவனங்களுக்கு உதவியளிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளன என்றும் கூறினார்.

பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையே உள்ள மோதல் ஆழ்ந்த தன்மை உடையது ஆகும். ஐரோப்பிய ஒன்றியக் குழுத் தலைவர் என்ற முறையில் கடந்த ஆண்டு சார்க்கோசி "பொருளாதார நிர்வாகம்" ஒன்று யூரோப்பகுதிக்கு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியிருந்தார். அத்தகைய நிர்வாகத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்கவும் தான்தான் மிகுந்த தகுதி படைத்தவர் என்பதையும் தெளிவாக்கியிருந்தார்.

16 யூரோப்பகுதி நாடுகள் பெரும்பாலானவற்றின் ஆதரவைக் கொண்ட நிலையில், சார்க்கோசி ஜேர்மனிய அரசாங்க நிதியக் கொள்கைக்கு இன்னும் கூடுதலான பொறுப்பை ஏற்க கட்டாயப்படுத்த முயல்கிறார். Elysee Palace கருத்தின்படி, கண்டத்தின் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற முறையில் ஜேர்மனி நெருக்கடியை சமாளிக்க இன்னும் அதிகமான பங்களிப்பு தரவேண்டும் என்று கோருகிறது.

ஜேர்மனிய அரசாங்கம் இத்தகைய வளர்ச்சியைத்தான் துல்லியமாக தடுக்க விரும்புகிறது. மற்ற யூரோ நாடுகளைவிட நெருக்கடியைத் தான் சிறந்த முறையில் சமாளித்துவிட முடியும் என அது நம்புகிறது. இதற்குக் காரணம் முந்தைய சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள்தான்; அவை பொதுநல உதவித் தொகைகளை குறைந்து ஜேர்மனியை மிகப் பெரிய குறைவூதியப் பிரிவாக்க வழிவகுத்தன.

நாட்டின் வணிக கூட்டமைப்புக்களின் ஆதரவுடன், மேர்க்கெலின் அரசாங்கம் நெருக்கடியை பயன்படுத்தி ஐரோப்பாவில் ஜேர்மனியின் மேலாதிக்க நிலையை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பாவின் "பலவீனமான நாடுகளுக்கு" --அதாவது இதுவரை சமூக மற்றும் பொதுநல செலவினங்களை கடுமையாகக் குறைப்பதில் தோல்வியுற்றுள்ள நாடுகளுக்காக பொறுப்பு ஏற்பதை பேர்லின் கடுமையாக எதிர்கின்றது.

ஜேர்மனிய அதிபரின் "தடையற்ற வணிகத்தை" தொடர்ந்து பின்பற்றல் மற்றும் பாதுகாப்புவரி முறையை நிராகரித்தல் ஆகியவற்றிற்கான அழைப்புகளுக்கு பின்னணியில் இருப்பது ஐரோப்பிய உள்நாட்டு சந்தையில் இருந்து அதிக இலாபம் பெறும் ஜேர்மனிய வணிக உயரடுக்கின் தன்னலப் போக்குகள் ஆகும்.

மாறுபட்ட விதத்தில் தனித்தனி யூரோ நாடுகளின் பொருளாதார செயற்பாடுகள் உள்ள முறையும், சீரான நிதிய பொருளாதாரக் கொள்கை இல்லாத நிலையும் பெருகிய முறையில் யூரோ நாடுகளில் அரசாங்கக் கடன்களின் அதிகரித்துவரும் வித்தியாசங்களுக்கு (Spreads) காரணமாக இருக்கின்றன. ஜனவரி மாத நடுவில், கிரேக்கம் ஒரு புதிய அரசாங்கக் கடனை ஜேர்மனிய அரசாங்கப் பத்திரங்கள் கொடுக்கும் வட்டிவிகிதத்தைவிட 3 சதவிகிதம் அதிகம் கொடுத்து வெளியிட்டுத்தான் பெற முடிந்தது. நிதிய வல்லுனர்கள் இத்தகைய உயர்வான வித்தியாசங்கள் "உறுதியாக நின்றுவிடவில்லை" என்றும் இது யூரோ ஒரு பொது நாணயம் என்ற நிலையில் வெடிப்புத் தன்மை நிறைந்த விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

யூரோக்குழுவின் தலைவர் லக்சம்பேர்க்கின் நிதி மந்திரியும் மற்றும் பிரதம மந்திரி Jean-Claude Juncker யூரோப்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பலவீனமான அங்கத்துவ நாடுகளுக்கான கடன் ஐரோப்பிய அளவிலான தீர்வின் அடிப்படையில் இருக்கும் என்று கூறியபோது, அவருடைய திட்டம் உடனடியாக ஜேர்மனிய நிதி மந்திரி Peer Steinbruch (SPD) இனால் நிராகரிக்கப்பட்டது. மாறாக ஜேர்மனிய அரசாங்கம் அதன் ஐரோப்பிய தொழில்துறை ஆணையர் Günter Verheugen ஐ பயன்படுத்தி அங்கத்துவ நாடுகள் வரவுசெலவுத் திட்ட குறைப்புக்களை செயல்படுத்தவும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எடுக்கவும் அழுத்தம் கொடுக்கிறது.

அதிகரித்துவரும் அழுத்தங்களை ஒட்டி ஐரோப்பிய ஒன்றிய தலைமை மற்றும் ஐரோப்பியக் குழு ஆகியவை வரும் மூன்று மாதங்களில் மூன்று தனித்தனி உச்சி மாநாடுகளாவது நடத்துவது என ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன. மார்ச் 1ம் தேதி நாடு, அரசாங்கத் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில், "தேசிய ஊக்கப் பொதிகளை ஒருங்கிணைப்பதற்கான" கூட்டத்தில் கூடுவர். இதன் செயற்பட்டியலில் பாதுகாப்புவரிப் போக்குகளுக்கு எதிரான போராட்டம் இருக்கும் என்றும், கடன் கொடுப்பது புதுப்பிக்கப்படுவதவற்கான நடவடிக்கைகள், "மதிப்பற்ற" பத்திரங்களை சமாளிக்கும் முறை மற்றும் வேலையின்மை பெருகுவதற்கு எதிரான கொள்கைகள் ஆகியவை அடங்கியுள்ளன. மூன்று வாரங்களுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாடிக்கையான வசந்தகால உச்சிமாடு பிரஸ்ஸல்ஸில் நடைபெறுகிறது; இதுவும் பொருளாதார, நிதிய நெருக்கடி பற்றி கவனத்தை செலுத்த உள்ளது. மே மாதத்தில் செக் குழு தலைவர் உறுப்பு நாடுகளை தொழில்கள் பற்றிய ஒரு உச்சிமாநாட்டிற்காக பிராக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த உச்சி மாநாடுகளின் பரபரப்பின் பின்னணியில் ஒருவேளை ஐரோப்பிய ஒன்றியம் சிதைந்துவிடுமோ என்ற அச்சமும், பாரிய வேலையின்மை மற்றும் பெருகும் வறுமையை ஒட்டி தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு தீவிரமாகக் கூடுமோ என்ற அச்சங்களும் உள்ளன.