World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian bushfires: the tragic outcome of government neglect

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: அரசாங்க உதாசீனத்தின் பயங்கர விளைவு

By Richard Phillips
13 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வார இறுதியில் விக்டோரியாவை தாக்கிய காட்டுத்தீ ஒவ்வொரு நாளும் மனித இழப்பை குறித்த கொடுமையான புதிய விபரங்களைக் கொண்டு வரும் நிலையில், கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அரசாங்கத்தின் உதாசீனத்தைக் குறிப்பிட்டு காட்டுகின்றன. இந்த கொடுமையான உயிரிழப்புகளுக்கு உடனடி அவசர சேவைகள் மற்றும் எவ்வித விரிவான திட்டமும் இல்லாததே நேரடி முக்கிய காரணமாக இருந்தன.

தற்போது உத்தியோகபூர்வமான இறப்பு எண்ணிக்கை 181 ஆகும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி எண்ணிக்கை 300க்கும் மேலாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எரிந்து விட்ட சுமார் 1,800 வீடுகளின் இடுபாடுகளுக்கு இடையில் போலீஸ், படையினரும் மற்றும் இராணுவ துருப்புகளும் உடல்களை தேடி வருகிறார்கள்.

பள்ளிகள், சிறு வியாபாரங்கள் மற்றும் உள்ளூர் வசதிகளுடன் 450,000 கிலோமீட்டருக்கும் மேலாக எரித்து விட்டிருக்கும் இந்த பாதிப்பால், இது வரை 5,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல வீட்டு உரிமையாளர்கள் நிதி நெருக்கடியை முகங்கொடுத்துள்ளனர். சொத்து இழப்புகள் $2பில்லியன் டாலருக்கும் மேலாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் காப்பீட்டு கழக தகவலின்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் ஒருவர் காப்பீட்டு உதவி அற்றவர்களாக இருக்கிறார்.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையில் இருந்த மிதமான வானிலை நிலைமைகளும் மற்றும் மழையும் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சற்றே நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால் அங்கு இன்னும் ஒரு டஜனுக்கும் மேலான நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் பல சிறுநகரங்கள் ஆபத்தில் உள்ளன. 6,700 பேர் மக்கள்தொகை கொண்ட ஹீலெஸ்வெல்லி சிறுநகரம் அதன் அருகில் உள்ள நெருப்பினால் மிகவும் ஆபத்தில் இருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு துறை இன்று எச்சரித்தது. இந்த வாரயிறுதியில் வெப்பமான வானிலை நிலவுக்கூடும் என்ற கணிப்பு இருப்பதால், அது மாகாணத்தில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

தொடக்க அதிர்ச்சிக்கு பின்னர், இந்த துயர சம்பவத்தின் மீது மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது. செய்திதாள்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் அரசாங்கத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளதுடன் முந்தைய காட்டுத்தீ சம்பங்களின் அனுபவ பாடங்களைக் கொண்டு செயல்பட தவறியதற்காக கேள்வி எழுப்பி இருந்தன.

கோபர்கில் இருந்து பெளல் இக்லீசனால் The Age பத்திரிகைக்கு எழுதப்பட்ட கடிதம் குறிப்பிடுவதாவது: "ஒவ்வொரு நாள் காலையிலும், காட்டுத்தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை நாங்கள் கேட்டு வருகிறோம். பாதுகாப்பு செலவுகளை டஜன்கணக்கான தீ-எதிர்ப்பு ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் திருப்ப வேண்டும் என்று கோருவதற்கு இதுவே சரியான நேரமாகும். போர் விமானங்களுக்கான கேட்போலைகளை இரத்து செய்யுங்கள், நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்காதீர்கள்-காட்டுத்தீ பாதுகாப்புகளை உருவாக்குங்கள்."

மற்றொரு கடிதத்தில், கிங்லேக்கில் இருந்து அலெக்ஸ் மற்றும் மார்சியா லியோனார்டு குறிப்பிடுகையில், அவர்களின் தெருவில் இருந்த ஒவ்வொரு வீடும் தீயில் அழிந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தனர்: "எங்கள் சமூகம் கவனிக்கப்படாமல் விடப்பட்டது. இந்த தீ ஏற்படுவதற்கு முன்னரே போதிய தீ எதிர்ப்பு நிர்வாகம் போதுமானதாக இருக்கவில்லை. சுற்றியிருந்த காடுகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எரியூட்டுவதாக உருவாகி இருந்தது, 10 ஆண்டுகளாக வறட்சியும் அத்துடன் இருந்தது, குறைவான ஆதார வளங்கள் கொண்ட அந்த சமூகம் தீயினால் உயிரிழக்கும் நிலைக்கு ஒட்டுமொத்தமாக விட்டு வைக்கப்பட்டிருந்தன."

அரசாங்கத்தின் "எதிர்த்து நின்று போராடு அல்லது வெளியேறு" கொள்கையின் மீது பொது விவாதங்கள் முளைத்திருந்தது. எவ்வாறு காட்டுத்தீயை சமாளிப்பது என்பதை முடிவு செய்ய அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் மக்களிடமே அனைத்து பொறுப்புகளையும் அந்த கொள்கை திணிக்கிறது. 1983 பெப்ரவரியில் ஏற்பட்ட Ash Wednesday காட்டுத்தீ சம்பவத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்ட அந்த கொள்கை, ஆஸ்திரேலிய கோடைகாலங்களின் போது எப்போது இருக்கும் அபாயமான காட்டுத்தீ சம்பவங்களில் அரசாங்க செலவின குறைப்புகளை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது.

பத்திரிகையாளர்களின் மற்றும் முதல் கட்டத்தில் தப்பியவர்களின் மற்றும் அவசர உதவி தொழிலாளர்களின் அறிக்கைகள், வீடுகளை காப்பாற்றுவதில் கடந்த வாரயிறுதியில் இருந்த அசாத்திய நிலைமைகளைக் குறிப்பிட்டு காட்டின. பல மக்கள் தங்கள் வீடுகளைக் காப்பாற்ற முயன்ற போது இறந்தனர். மற்றும் பலர் அந்த 12 வருட வறட்சியிலிருந்தும், 46 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையிலிருந்தும் தப்பிக்க முயன்ற போது காரில் சிக்கி உயிரிழந்தனர்.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கவனித்து வரும் ஆஸ்திரேலியாவின் நெருப்பு அபாய விகித குறியீட்டின்படி, 50க்கு மேற்பட்ட விகிதம் மிக தீவிரமானதாகும். கடந்த சனியன்று, இந்த குறியீட்டு ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

அரசாங்கத்தின் மூடிமறைப்பு

பொதுமக்களின் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், முறையான திட்டமின்மை அல்லது முறையான எச்சரிக்கை அமைப்புமுறையின்மை மற்றும் போதிய நெருப்பு அணைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவற்றின் மீதான தங்களின் குறைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மூர்க்கத்தனமாக மறைக்க விரும்புகின்றன.

இந்த காட்டுத்தீயை, ஆஸ்திரேலியாவின் மிக மோசமான இயற்கை பேரழிவு என்று அறிவித்திருக்கும் பிரதம மந்திரி கெவின் ரூத், இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு "துக்க நாளை" அறிவித்தார். விக்டோரிய முதலமைச்சர் ஜோன் புரூம்பே ஒரு அரச ஆணைக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும் எந்த அடிப்படை மாற்றமும் நடக்க போவதில்லை என்பது ஏற்கனவே தெளிவாக தெரிகிறது. அரச ஆணைக்குழு கூட்டப்படுவதற்கு முன்னரே கூட, முதலமைச்சர் புரூம்பே புதனன்று ஊடகத்திடம், ஒரு மத்தியப்படுத்தப்பட்ட வெளியகற்றும் கொள்கை சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

அங்கு ஒரு நடுத்தர அல்லது உயர்ந்த நெருப்பு அபாயம் இருக்கும் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொருவரையும் நீங்கள் வெளியேற்ற வேண்டுமானால், நீங்கள் வெளிப்படையாக சுமார் அரை மில்லியன் மக்கள் குறித்து பேசுகிறீர்கள். நேர்மையாக கூறுவதானால், உங்களால் அரை மில்லியன் மக்களை வெளியேற்ற முடியாது, அது நடைமுறை சாத்தியமும் இல்லை," என்று அவர் கூறினார்.

முடியாது என்பதற்கு அப்பாற்பட்டு, நவீன எச்சரிக்கை கருவிகளுடன் ஒரு தெளிவான வெளியகற்றும் திட்டம் மற்றும் அவசரகால சேவைகள் நேரத்தையும் மற்றும் பணத்தை இழுப்பதால் அதை செய்ய மத்திய அல்லது மாநில அரசாங்கங்கள் தயாராக இல்லை.

நேரில் பார்த்த பலரின் கருத்துப்படி, கடந்த சனியன்று நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. நெருப்பு அபாயம் நிறைந்த பகுதிகளில் இருந்த வீட்டுக்காரர்கள் திடீர்பாதிப்புகள் குறித்த உடனடி செய்திகளுக்காகவும், அவசர எச்சரிக்கைகளுக்காகவும் உள்ளூர் ஏபிசி ரேடியோ சேவையை தொடர்புகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

மேலும் பலர் நெருப்புக்கு முன்னரும், பின்னரும் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். உதாரணமாக, நார்பெத்தொங்கிற்கு அருகிலுள்ள மேரீஸ்வில்லியிலிருந்த 150 மக்களின் வீடுகள் தரைமட்டமாகியதால், நார்பெத்தொங்கிற்கு வந்திருந்த அந்த மக்களுக்கு அங்கிருந்த உள்ளூர் விடுதி தங்குவதற்கு இடமும், முகாமும் அளித்திருந்த போதினும், அந்நகரம் இரண்டு நாட்களாக வெளிஉலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. செவ்வாயன்று ஓர் ஊடக குழு தான் அவர்களை முதலில் தொடர்பு கொண்டது.

விக்டோரியாவின் அவசர உதவி தொலைபேசி இணைப்பு சனிக்கிழமையின் காட்டுத்தீயின் உச்சகட்டத்தின்போது 4,000த்திற்கும் மேலான அழைப்புகளால் நிரம்பி வழிந்தது. அந்த நாள் (மொத்த பணியாளர்களில்) வெறும் 14 இயக்குனர்களுடன் மட்டுமே இந்த சேவை நடந்து வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் கார்களில் இருந்து அழைத்த பல அழைப்புகளை இவர்களால் சாதாரணமாக சமாளிக்க முடியவில்லை.

2003ல் விக்டோரியாவின் மதிப்பீட்டு அதிகாரியின் ஓர் அறிக்கை, காட்டுத்தீ ஏற்படக்கூடிய பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட எரிப்பை மாநில அரசாங்கங்கள் "முறையாக செய்யவில்லை" என்று விமர்சித்திருந்தது. காட்டுத்தீ ஏற்பட கூடிய பகுதிகளில் அரசு தீயணைப்பு ஆணையத்தால் கவனிக்கப்பட்ட வெகு சில ஊராட்சிகளில் மட்டுமே சுய திட்ட கண்காணிப்புகள் நடத்தப்பட்டிருந்தன; அந்த தீயணைப்பு கல்வி திட்டங்களும் "போதியதாக இல்லை" என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

செய்திகளின்படி, மெல்பேர்னிற்கு தென்கிழக்கில் மரங்கள் அடர்த்தியான காடுகள் சூழ்ந்த மலைதொடரான டேன்டினாங்ஸில் அவதானிக்கப்பட்ட அண்ணளவாக பாதி மக்கள் நெருப்பு எச்சரிக்கை ஒலிஎழுப்பிகள் மூலம் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பியிருந்தனர். கடந்த ஆண்டுகளில் நெருப்பு சூழ்ந்த நகரங்களிலும், சிற்றூர்களிலும் குடியிருப்போரை எச்சரிக்க நெருப்பு எச்சரிக்கை ஒலிஎழுப்பிகள் மற்றும் எச்சரிக்கை மணிகள் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை தற்போது அங்கு காணவில்லை.

காட்டுத்தீ ஏற்படக்கூடிய விக்டோரியா பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான தீயணைப்பு கட்டிட வரைமுறைகள் தற்போதைய நிலைமைகளில் போதியதாக இல்லை என்று தீயணைப்பு வல்லுனர்களும் குறிப்பிட்டு காட்டியுள்ளனர்.

புரூம்பே மற்றும் ரூத் இருவரும், அடுத்த 12 மாதங்களில் தேசிய அவசர அறிவிப்பு சேவை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் செலவுக்காரணங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் இதுபோன்ற திட்டங்கள் சமீபத்திய ஆண்டுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

2005ல் விக்டோரியாவின் நெருப்பு சூழக்கூடிய பகுதிகளில் விக்டோரியா மாகாண அவசர உதவி சேவைகள், ஒரு தொலைபேசியையும், எழுத்து அடிப்படையிலான அவசரகால அறிவிப்பு முறையையும் வெற்றிகரமாக சோதித்திருந்தது. ஆனால் அதற்கான $20 மில்லியன் செலவை யார் செலவிடுவது என்பதன் மீது மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குகளால் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

நெருப்பூட்டுவோர் மீதான ஐயுறவு வேட்டை

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் கண்டனங்களைத் திசைதிருப்பும் முயற்சியில், காட்டுத்தீக்கான பழியை "நெருப்பூட்டிகளின்" மீது சுமத்த ஊடகங்கள் வேண்டுமென்றே ஓர் பயமூட்டும் சூழலை கட்டவிழ்த்து விடுகின்றன.

செவ்வாயன்று, முர்டோக்கின் ஆஸ்திரேலிய செய்திதாள் ''நெருப்பின் வலி, நெருப்பூட்டுவோரின் பயங்கரச்செயல்'' என்று தலைப்பிட்ட ஒரு ஆத்தரமூட்டம் தலையங்கத்தில் அப்பட்டமாக பின்வருமாறு குறிப்பிட்டது: "எச்சரிக்கை போதியளவில் இல்லையோ அல்லது ஆதாரங்கள் மோசமாக இருந்தனவோ எதுவானாலும், ஏன் பல உயிர்கள் இழக்கப்பட்டன என்று கேட்பதற்கு இது நேரமில்லை". நெருப்பு திட்டமிட்டு பற்றவைக்கப்பட்டதா, "மிக கடுமையான தண்டனைகளின்" தேவை உள்ளதா என்பது தான் உண்மையான பிரச்சனை என்றும் அது குறிப்பிட்டது.

மற்றவர்களும் இந்த கருத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதம மந்திரி ரூத், நெருப்பு வைத்தவர்களை "பெரும் கொலையாளிகள்" என்று குற்றஞ்சாட்டி உள்ளார். புரூம்பேயும், தெற்கு ஆஸ்திரேலிய முதலமைச்சர் மைக் ரான்னும் ஒருபடி மேலாக, நெருப்புமூட்டியவர்களை "பயங்கரவாதிகள்" என்று அறிவித்தார்கள். மத்திய நீதி மந்திரி ரோபர்ட் மெக்செல்லண்டு, நெருப்பு வைத்த எவரும் பல கொலை வழக்குகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். மேலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களின் வாழ்வின் மீதி காலத்தை கம்பிகளுக்கு பின்னால் தான் செலவிட வேண்டியதிருக்கும் என்று அறிவித்தார்.

புதனன்று ABC தொலைகாட்சியின் "லேட்லைன்" நிகழ்ச்சியில் தோன்றிய விக்டோரியா போலீஸ் கமிஷனர் கிறிஸ்டைன் நிக்சன், சர்சில் மற்றும் மேரிஸ்வில்லி நெருப்புகள் திட்டமிட்டு பற்ற வைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் எந்த முக்கிய ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறினார். எந்த நெருப்பாவது திட்டமிட்டு பற்ற வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு சிறப்பு படையை அமைத்துள்ள விக்டோரியா போலீஸ், தொடர் நெருப்பு வைக்க கூடிய முக்கிய நபர்களின் அடையாள படங்களையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

எவ்வாறிருப்பினும், புதன்கிழமைக்கு முன்னதாக, அந்த சிறப்பு படைக்கு தலைமை தாங்கும் துணை போலீஸ் ஆணையாளர் டேனி மொலொனி, தான்தோன்றித்தனமான மனோபாவம் கொண்ட கும்பல் உருவாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்திருந்தார். மேலும் அமைதியாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். "பலர் சுட்டிக்காட்டப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் முற்றிலும் அப்பாவிகளாகவும் இருக்கலாம். நீங்கள் அப்பாவியாக இருந்தால், என்ன குற்றம் சுமத்தப்பட முடியும். குற்றம் நடந்திருந்தால், அதற்கான பொறுப்பாளிகளை நாங்கள் கண்டுபிடிக்கிறோம்." என்று எச்சரித்தார்.

ஊடகங்களின் மற்றும் அரசியல்வாதிகளின் விசமத்தனமான திசைதிருப்புதல்களும், குறைந்த அளவிலான அரசாங்க உதவிகளும் சாதாரண உழைக்கும் மக்களின் தாராள மனப்பான்மையுடன் முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது. பொது நிதிதிரட்டல்கள் மூலம் ஏற்கனவே $75 மில்லியனுக்கும் மேலான பணம் திரட்டப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் $53 மில்லியன் திரட்டப்பட்டது. காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, குழந்தைகள் பொம்மைகள், மருத்துவ வசதி மற்றும் பிற தேவைகளுக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் சுயமாக முன்வந்து தங்களின் உதவிகளை அளித்துள்ளனர்.

செஞ்சிலுவை சங்கத்தார், தங்களின் தொலைபேசி சேவையில் அதிக அழைப்புகள் வருவதால், தங்கள் அலுவலங்களுக்கு மக்கள் தொலைபேசியில் அழைக்க வேண்டாம் என்றும், இணையம் மூலமாக உதவிகளை அனுப்புமாறும் கேட்டுக் கொண்ட அறிவிப்பை செஞ்சிலுவை வெளியிடும் அளவிற்கு பொதுமக்களின் பிரதிபலிப்பு இருந்தது. இரண்டு வாரங்களாக சாலைகள் மற்றும் வீடுகள் தண்ணீரில் மூழ்கி இருந்த வடக்கு குவின்ஸ்லாந்தின் இன்ங்காம் நகரத்திலிருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முறையீட்டின் காரணமாக அதன் அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளுக்காக $1000 அளித்திருந்தது.

இந்த பெரும் நிதியுதவிகளால் காட்டப்படும் அடிப்படை சமூக சகோதரத்துவமானது ஒரு சமூக ஒழுங்கமைப்பினதும் மற்றும் தனியார் இலாபத்தை எல்லாவற்றிற்கும் முன்னே நிறுத்தும் அதன் பாதுகாவலர்களின் மனிதாபிமானமற்ற தன்மையையுமே எடுத்துக்காட்டுகிறது.