World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India ratchets up tensions with Pakistan over Mumbai attack

மும்பை தாக்குதல் மீது இந்தியா பாகிஸ்தானுடன் ஒருதலைப்பட்சமாக பதட்டங்களை அதிகரிக்கிறது

By Peter Symonds
9 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்பான லஸ்கர்-ஈ-தொய்பாவைத் தொடர்படுத்தும் ஆதாரங்களுடன், இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த வாரம் ஓர் இராஜாங்கரீதியான ஒடுக்குமுறையை அறிவித்தது. அந்த நடவடிக்கையுடன் பாகிஸ்தான் அரசாங்கத்தையோ அல்லது அதன் முகமைகளையோ எந்த ஆதாரமும் தொடர்புபடுத்தவில்லை என்ற போதினும், இஸ்லாமாபாத்தின் ஈடுபாடு குறித்து குற்றஞ்சாட்டிய இந்திய தலைவர்கள், பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்கள்.

பாகிஸ்தானிடம் ஆதாரங்களை புதுதில்லி ஒப்படைத்திருக்கிறது என்ற திங்களன்று வெளியிடப்பட்ட அறிவிப்புடன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவ சங்கர மேனன் ஊடகத்திடம் கூறுகையில், மும்பை தாக்குதல்களுக்கான தயாரிப்புகள் குறித்து பாகிஸ்தான் அமைப்புகளில் யாருக்கும் தெரியாது என்ற "கதையை இந்தியாவால் நம்ப முடியாது" என்று தெரிவித்தார். பாகிஸ்தான் முழுமையாக விசாரணை நடத்தி இந்தியாவில் நடந்த தாக்குதலில் சந்தேகத்திற்குரியவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று புதுதில்லி கோரி வருகிறது.

அதற்கு அடுத்த நாள், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் பின்வரும் அறிவிப்புடன் அதை விட கடுமையான ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்: "தாக்குதல்களுக்கான வசதிகள் மற்றும் இராணுவ உதவிகள் அளிக்கப்பட்டதை எடுத்துக்காட்ட போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானின் சில உத்தியோகப்பூர்வ முகமைகளின் உதவியையும் அது பெற்றுள்ளது." அவர் எந்த முகமையின் பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் இந்திய அரசியல் மற்றும் ஊடக அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பை (ISI) குற்றஞ்சாட்டி வருகின்றன.

ஆதார ஆவணங்களின் கசிந்த நகல் முழுவதும் Hindu வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த ஆவணத்தில் "நிச்சயமாக... இந்த [சிங்கின்] நம்பிக்கையை உறுதிப்படுத்தும் எந்த தகவலும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்த அந்த பத்திரிக்கையின் மூலோபாய விவகாரத்துறை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், இந்தியா தன் வரம்பு மீறி பாகிஸ்தானை மாட்டி விட முயல்வதாக எச்சரித்திருந்தார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களின் புகைப்படங்கள், GPS சாதனத்தில் இருந்து எடுக்கப்பட்ட விபரங்கள், தொலைபேசி உரையாடல்களின் சில குறிப்பிட்ட ஒலிபெயர்ப்புகள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களில் உயிரோடு பிடிக்கப்பட்ட முகமது அஜ்மல் கசாப்பின் விசாரணையில் இருந்து சில விபரங்கள் இந்த ஆதார ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. மும்பை தாக்குதலில் லஸ்கர்-ஈ-தொய்பா சம்பந்தப்பட்டிருப்பதை இவை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம், இராணுவம் அல்லது அந்நாட்டு ஏகாதிபத்தியத்தைக் குறிப்பிடும் எந்த ஆதாரமும் இதில் இல்லை.

இந்தியா, அப்பிராந்தியத்தில் அதன் நீண்ட கால போட்டியாளரின் மீதான அழுத்தத்தைத் தீவிரப்படுத்தவும், அதன் கோரிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவை, குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவை பெறவும் தெளிவாக மும்பை தாக்குதலைப் பயன்படுத்த விரும்புகிறது. "நட்பு அரசாங்களுக்கு" மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஆதாரங்களின் விபரங்கள், ஊடகங்கள் மத்தியிலும் கசிந்தன. இரண்டு நாடுகளுமே யுத்த அச்சுறுத்தலில் ஈடுபட்டிருந்த போதினும், 2001ல் இந்திய பாராளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டது போன்ற பதட்டங்கள் விரைவாக அதிகரிப்பதற்கான அபாயங்கள் இருக்கின்றன.

புதனன்று, இந்திய பாதுகாப்பு மந்திரி ஏ.கே. அந்தோனி மற்றும் வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி இருவரும், "அனைத்து உத்தேசங்களும்" (இராணுவ நடவடிக்கை உட்பட) கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக மீண்டும் தெரிவித்தனர். பயங்கரவாத குழுக்களைக் கலைக்க தவறி வரும் பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டிய அந்தோணி, "நாங்கள் இருக்கும் அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்." என்று தெரிவித்தார். இந்த வார்த்தைகள், பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு எதிராக இராணுவம் தாக்குதல்களை தொடங்குவதன் மீது, இந்திய அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகளின் பின்புலத்தில் நடக்கும் விவாதங்களைத் தான் வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றன. இந்த நடவடிக்கை விரைவிலேயே அவ்விரு நாடுகளுக்கு இடையே யுத்தத்திற்கு தான் இட்டு செல்லும்.

இந்த ஆண்டு தேசிய தேர்தல்களைச் சந்திக்க இருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க, இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியினால் புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. திங்களன்று, பிஜேபி செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், அரசாங்கத்தின் பிரதிபலிப்பை பாகிஸ்தானுக்கான "ஓர் அரசியல் பிணையெடுப்பு திட்டம்" என்று முத்திரை குத்தினார். இரண்டு நாட்களுக்கு பின்னர், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ராம்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ ஒடுக்குமுறைக்கு கட்சியின் ஆதரவை வெளியிட்டிருந்தார்.

முக்கியமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும் என்று சமாஜ்வாதி கட்சி வியாழனன்று அச்சுறுத்தி இருந்தது. "நாங்கள் பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை, ஆனால் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டே ஆக வேண்டும். இதில் அரசாங்கம் எங்களைக் கட்டாயம் திருப்தி செய்தே ஆக வேண்டும்." என்று பொது செயலாளர் அமர் சிங் தெரிவித்தார். கடந்த ஜூலையில் நடந்த ஒரு முக்கிய பாராளுமன்ற வாக்கெடுப்பில் இருந்து தப்பிக்க, சமாஜ்வாதி கட்சியை அரசாங்கம் சார்ந்திருந்தது.

அதே நேரத்தில், இஸ்லாமாபாத்துடன் பதட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டாம் என்ற வாஷிங்டன்னின் அழுத்தத்தின் கீழ் புதுதில்லி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் போதினும், அமெரிக்கா, அதற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு போராளிகளை ஒடுக்கவும், அந்நாட்டில் உள்ள அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பை ஸ்திரப்படுத்த உதவும் வகையில், ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் இராணுவம் அதன் எல்லையில் நடவடிக்கைகளைத் தொடர செய்வதில் தான் அது குறியாக உள்ளது. கூட்டுறவை ஊக்குவிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் ரிச்சர்டு போச்சர் இந்த வாரம் இரு நாடுகளுக்கும் விஜயம் செய்திருந்தார். லஸ்கர்-ஈ-தொய்பாவின் முக்கிய நபர்களைக் கைது செய்ததற்காக இஸ்லாமாபாத்தை மிக கவனத்துடன் பாராட்டிய அவர், இப்பயணத்தில் இன்னும் " நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது" என்று அறிவித்தார்.

புஷ் நிர்வாகத்தின் கீழ், இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் மூலோபாய கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும், பாகிஸ்தான் எல்லை பிரதேசங்களுக்குள் அமெரிக்கா அதன் சொந்த விமானத்தாக்குதலை நடத்தினாலும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அது ஒத்துழைப்பு அளித்தாலும் கூட, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு வாஷிங்டன் முட்டு கொடுக்க மறுப்பதானது, இந்திய ஆளும் வட்டாரங்களில் ஒரு மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதுடன், அது சுயசார்பற்ற நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு அதனை தள்ளிச் செல்கிறது.

பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதுவர் ஜி. பார்த்தசாரதி, டைம்ஸ் இதழுக்கு இந்த வாரம் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்: "உங்களுக்காக உங்கள் யுத்தத்தை வேறு எந்த நாடும் வந்து நடத்தாது. மும்பை மீதான இந்தியாவின் பிரதிபலிப்பையும், காசா மீதான இஸ்ரேலின் பிரதிபலிப்புக்கும் இடையிலான வேறுபாட்டை மட்டும் பாருங்கள். ஆப்கானிஸ்தானுக்குள் சரக்குகளைக் கொண்டு செல்ல அமெரிக்கா பாகிஸ்தானை முழுமையாக சார்ந்துள்ளது என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். மும்பை தாக்குதல்களில் ISI தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா உண்மையிலேயே கொண்டிருந்தால், அந்த வழியில் நாம் செல்வதற்கு அமெரிக்கா ஒருபோதும் நமக்கு உதவாது."

பாகிஸ்தான் இந்தியாவின் சமீபத்திய குற்றச்சாட்டுக்களையும், கோரிக்கைகளையும் முற்றிலுமாக நிராகரித்து விட்டது. ஒரு வெளியுறவுத்துறை அமைச்சக அறிவிப்பு பின்வருமாறு அறிவிக்கிறது: "பாகிஸ்தான் அளிக்கும் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு நேர்மறையான பிரதிபலிப்பைக் காட்டுவதற்கு மாறாக, இந்தியா ஒடுக்குமுறை திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது... பாகிஸ்தானை இழிவுபடுத்துவதை அல்லது அதன் அமைப்புகளை இழிவுபடுத்துவதை அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதிகாரமும் கிடையாது." இந்த அணுகுமுறை மரண அபாயத்திற்கான மூலக்காரணங்களைக் கொண்டது என்று அவ்வறிக்கை எச்சரித்தது.

மும்பை அட்டூழியத்தைத் தொடர்ந்து, ஒரு கூட்டு விசாரணைக்கு (ஆனால் இதை இந்தியா நிராகரித்தது) அழைப்பு விடுத்த பாகிஸ்தான் அரசாங்கம், லஸ்கர்-ஈ-தொய்பாவின் பல முக்கிய நபர்களையும் கைது செய்தது. ஆனால், பாகிஸ்தானிய அதிகாரிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுகளை அது தொடர்ந்து நிராகரித்து வருகிறது. மேலும் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானியர்களும் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக இந்தியா ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

பரவலாக வெறுக்கப்படும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் தூண்டிவிடப்பட்டு, பாகிஸ்தானின் அரசியல் அமைப்புக்குள் நிலவி வரும் பதட்டங்கள், இந்த மும்பை தாக்குதல்களால் மேலும் அதிகரித்துள்ளது. எதிர்தரப்பில் உள்ள இந்தியர்களைப் போலவே, எவ்வித வேறுபாடும் இல்லாமல், பாகிஸ்தானிய ஆளும் மேற்தட்டுக்களும் மதவெறியை கட்டவிழ்த்து விடுவது மற்றும் அவற்றின் பிராந்திய போட்டியாளரால் முன்னிறுத்தப்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றால் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமூக பதட்டங்களுக்கு பிரதிபலிப்பு காட்டி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவிற்கு சாதகமாக ஏதேனும் நடந்தால், அது மிகப்பெரிய அரசியல் அபாயத்தைக் கொண்டிருக்கும்.

மும்பை தாக்குதல் நடத்தியவர்களில் பிடிபட்ட நபர் பாகிஸ்தான் குடிமகன் தான் என்பதை ஓர் இந்திய தொலைகாட்சிக்கு பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது துரானி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி யூசக் ரஜா கிலானி உடனடியாக அவரை பதவியில் இருந்து புதனன்று நீக்கிய போது, அரசாங்கத்திற்குள் இருந்த பூசல்கள் வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்தது. கிலானி அலுவலகத்தில் இருந்து வெளியான ஓர் அறிக்கை, பொறுப்பற்ற நடவடிக்கைக்காக துரானியைக் குற்றஞ்சாட்டியதுடன், அவரின் அறிவிப்பை அங்கீகரிக்கப்படாத அறிவிப்பாக்கியது. செய்தித்துறை மந்திரி மந்திரி ஷெர்ரி ரஸ்மானும் கூட முகமது அஜ்மல் கசாப் ஒரு பாகிஸ்தான் குடிமகன் என்று உறுதிபடுத்தி இருந்தார்.

இந்த பதவிநீக்கமானது, ஓர் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் மற்றும் வாஷிங்டனுக்கான முன்னாள் தூதுவரான துரானியை நியமித்த ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரிக்கும், கிலானிக்கும் இடையிலான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் விளைவு என்பதாக தோன்றுகிறது. சில விமர்சகர்களின் கருத்துப்படி, துரானி இந்தியா மற்றும் அமெரிக்காவின் பக்கம் மிகவும் இணக்கமாக இருந்ததாக கருதப்பட்டார். அத்துடன் அவரின் பதவிநீக்கத்திற்கு பாகிஸ்தான் இராணுவம் அழுத்தம் அளித்து வந்தது.

இரண்டு அரசாங்கத்தில் எதுவும் சமரசத்திற்கு வரும் நிலையில் இல்லாததால், இந்த இரு அணுஆயுத சக்திகளுக்கும் இடையே ஒரு மோதல் தொடங்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது.