World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy moves to control public television

பொதுத் தொலைக்கட்சியைக் கட்டுப்படுத்த சார்க்கோசி நடவடிக்கை

By Olivier Laurent
7 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி பிரெஞ்சு பொதுத் தொலைக்காட்சியை பாராளுமன்றத்தின் மூலம் கட்டுப்படுத்தும் தன்னுடைய சீர்திருத்தங்களை அளித்துள்ளார். இச்சீர்திருத்தங்கள் விளம்பரங்களை அகற்றுவதின்மூலம், இதையொட்டி பொதுத் தொலைக்காட்சி அரசு நிதியை முற்றிலும் சார்ந்திருக்குமாறு செய்யும் அதேவேளை, அதன் தலைமை அதிகாரியை, அரசாங்கம், உண்மையில் ஜனாதிபதி நியமிக்கும் அதிகாரத்தை அளிக்கவும் செய்யும், தொலைக்காட்சி மீதான அரசாங்க கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

டிசம்பர் 17 அன்று 293 முதல் 242 என்று பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதகால கடுமையான விவாதத்திற்கு பின், இயற்றப்பட்ட சட்ட வரைவுகள் ஜனவரி 7 புதனன்று தொடங்கி இரு வாரங்கள் செனட்டில் விவாதிக்கப்பட உள்ளன. ஆளும் UMP க்கு மேல் மன்றத்தில் பொதுமான பெரும்பான்மை இல்லை; எனவே சட்டம் இயற்றப்படுவது உறுதி என கூறுவதற்கு இல்லை. அதன் உறுப்பினர்களிடம் இருந்தே அரசாங்கம் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது; மற்றும் மையவாத செனட்டர்களும் சீர்திருத்தத்திற்கு நிதியளிப்பது பற்றி கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

தேசிய சட்டமன்றத்தில் சட்டவரைவை தாமதப்படுத்த எதிர்க்கட்சிகளான சோசலிஸ்ட் கட்சி, அதன் பசுமை, கம்யூனிஸ்ட் நட்புக் கட்சிகள் செய்த உத்திகள், அரசாங்கம் சீர்திருத்தம் திட்டமிட்டபடி, ஜனவரி 5ம் தேதி நடைமுறைக்கு வரும் அளவில், சட்ட நூல்களுக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தை கொண்டிருந்தன.

பொதுத் தொலைக்காட்சியின் சீர்திருத்தத்திற்காக காணல்-கேட்டல் சட்டம் (Audio-Visual Law for the Reform of Public Television) என்பதின்கீழ், அனைத்து வணிகப் பிரிவுகளும் 2011க்குள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டுவிடும். 2009ம் ஆண்டு விளம்பரம் மூலம் கிடைக்கும் 450 மில்லியன் யூரோக்கள் இழக்கப்படுவது அரசாங்கத்தின் மூலம் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு உரிமப் பண வருமானம் மற்றும் இரு புதிய வரிகளின் மூலம் ஈடு செய்யப்படும்: தனியார் தொலைக்காட்சி நிறுவன விளம்பர வருவாயில் இருந்து 1.5 முதல் 3 சதவிகித தீர்வை விதிக்கப்படும் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள், இணைய வசதி அளிக்கும் நிறுவனங்களிடம் இருந்தும் அதே போன்ற சதவிகிதப் பணம் வசூலிக்கப்படும்.

இது பொது தொலைக்காட்சி நிறுவனங்களின் சுதந்திரத்தின்மீதான ஒரு தாக்குதல் ஆகும்; ஏனெனில் வரி மூலம் கிடைக்கும் பணம் (இப்பொழுதுள்ள நிதிமுறைக்கு மாறாக) அவர்களுக்கு நேரடியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருமானமாக வராது; ஆனால் அது தேசிய வரவு செலவுத்திட்டத்தில் செலுத்தப்பட்டுவிடும். அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தொகை பொது தொலைக்காட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும்.

அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளபடி, இந்த வரிகள் மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 450 மில்லியன் யூரோக்கள்தான். எனவே பொதுத் தொலைக்காட்சியின் விளம்பர வருமான இழப்பின் மூலம் கிடைக்கும் இறுதித் தொகையும் --833 மில்லியன் யூரோக்கள் ஆகும் அல்லது நடைமுறை பட்ஜேட்டில் 36 சதவிகிதம்-- 2011 ஐ ஒட்டி சீர்திருத்தம் முழுமையாக செயல்படும்போது ஏற்படுவது, இதில் ஈடு செய்யப்பட முடியாது.

France Télévisions ன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பொதுவாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்; ஒளிபரப்பு கட்டுப்பாடு அமைப்பின் மூலம் இராது; அதுதான் இதுவரை CSA எனப்படும் உயர்மட்ட காணல்-கேட்டல் நிர்ணயக் குழுவாக இருந்தது. நியமனம் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும், ஆனால் ஜனாதிபதி எந்த நேரத்திலும் CSA இன் இசைவுடன் அதற்கு முடிவு கட்டலாம். தற்பொழுது தலைமை நிர்வாகிகள் CSA ஆல் மட்டும் நியமிக்கப்பட்டு, மிகத் தீவிர அத்துமீறல்களுக்காகத்தான் பதவியில் இருந்து நீக்கப்பட முடியும்.

சீர்திருத்தத்தை இயற்றுவதில் காட்டும் அவசரத்தில், அரசாங்கம் ஓரளவு பாராளுமன்றத்தை பொருட்படுத்தவில்லை எனலாம். France Télévisions CEO, Patrick de Carolis ஐ சீர்திருத்தத்தின் முதல் கட்டத்தை ஜனவரி 5ம் தேதிக்குள் செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. அதாவது விளம்பரங்களை இரவு 8 மணியில் இருந்து காலை 6 வரை காட்டுவதை நிறுத்துதல். ஆரம்பத்தில் இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியபின் கரோலிஸ், இதற்கு ஒப்புக் கொண்டு குழுவின் 49 உட்பிரிவுகளில் இணைப்பை கொண்டுவருவதின் மூலம் செலவினங்களை குறைக்கும் திட்டத்தையும் கூறியுள்ளார்; நிறுவனம் மொத்தம் 11,000 தொழிலாளர்களை கொண்டுள்ளது; இதையொட்டி செலவு 200 மில்லியன் யூரோக்களில் இருந்து 140 மில்லியன் யூரோக்கள் என்று குறையும்.

சார்க்கோசியின் முயற்சிகள் பலவற்றை போலவே, சீர்திருத்தம் ஒரு "இடது" நடவடிக்கையை ஒத்தது போல் அளிக்கப்படுகிறது: தொலைக்காட்சியின் விளம்பரம் கூடாது என்பது பிரெஞ்சு முதலாளித்துவ இடது அவ்வப்பொழுது எழுப்பும் கோரிக்கை ஆகும்; இது தொலைக்காட்சி நிறுவனங்களை தனியார் செல்வாக்கிற்கு உட்படுத்துகிறது என்று கூறப்பட்டது. ஆனால் அத்தகைய வாதங்கள் மறுப்பது, முதலாளித்துவ முறையில் விளம்பர வருமானம் அகற்றப்படுதல் என்பது பொது தொலைக்காட்சி நிதியத்தை நேரடியாக அரசாங்கத்தை நம்பியிருக்க வைத்துவிடும் என்பதும் இதன் முக்கிய நிர்வாகிகள் பெரிய பெருநிறுவன தலைவர்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவர்கள் என்பதும் ஆகும்.

சார்க்கோசியின் சீர்திருத்தம் மிகப் பரந்த அளவில் "பெர்லுஸ்கோனியமயமாக்குதல்" என்று குறிப்பிடப்படுகிறது; இது இத்தாலிய பிரதம மந்திரியும் வணிகப் பெரும்புள்ளியுமான சில்வியோ பெர்லுஸ்கோனியை குறிப்பிடுகிறது; அவர் இத்தாலியின் தனியார் செய்தி ஊடகத்தின் பெரும்பகுதிக்கு உடைமை கொண்டு நாட்டின் தலைவர் என்ற முறையில் பொது ஊடகத்தையும் கட்டுப்படுத்தி வருகிறார். சீர்திருத்தம் இயற்றப்பட்டுவிட்டால், சார்க்கோசி பிரான்சின் முக்கிய தனியார் செய்தி ஊடக CEO க்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொள்ளுவதுடன், பொது தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது கட்டுப்பாட்டையும் கொள்ளுவார்.

இச்சீர்திருத்தம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிர்பாராத நற்பேறு ஆகும்; அவை இப்பொழுது தொலைக்காட்சி விளம்பரத்தில் ஏகபோக உரிமை பெறும்--குறிப்பாக மிகப் பெரிய தனியார் தொலைக்காட்சி நிறுவனமான TF 1 ன் உரிமையாளரும், பில்லியனரும் கட்டமைப்பு துறையில் பெரும்புள்ளியுமான Martin Bouygues செல்வாக்கு அடைவார்; இவர் சார்க்கோசியின் நெருக்கமான நண்பரும் ஆவார். ஜனாதிபதித் தேர்தல்களுக்கு பின்னர் Bouygues சார்க்கோசியின் பிரச்சார மேலாளர் Laurent Solly ä TF 1 ன் துணை இயக்குனர் பதவிக்கு நியமித்தார்.

சார்க்கோசி தனியார் தொலைக்காட்சி நிலையங்களின் விளம்பர வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஒளிபரப்பு நேரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார்; இதையொட்டி கூடுதலான நேரம் விளம்பரத்திற்கு கிடைக்கும். இந்த ஆணைகள் இரு வணிக இடைவெளிகள் தனியார் நிலையங்கள் ஒளிபரப்பும் திரைப்படங்களில் இருக்காலம் என்று அனுமதிக்கின்றன; இப்பொழுது ஒரு இடைவெளிதான் இருக்கலாம் என்று உள்ளது; மேலும் விளம்பர நேரத்தையும் முக்கிய தனியார் தொலைக்காட்சிகளில் கூடுதலாக்கலாம்; அதாவது மணி ஒன்றுக்கு 9 நிமிஷங்கள் என்று இப்பொழுது உள்ள 6 நிமிஷத்தை அதிகரிக்கும் வகையில்.

TF1 தனியார் தொலைக்காட்சியின் CEO மட்டும் சார்க்கோசிக்கு நெருக்கமானவர் அல்ல. 1985ல் பாரிஸ் சிறப்பு புறநகரமான Neuilly ன் மேயர் என்ற முறையில் சார்க்கோசி Neuilly Communication Club என்பதை தோற்றுவித்தார்; இந்த சங்கத்தில் செய்தி ஊடக நிர்வாகிகள் நெருக்கமாக பழகினர்; அதில் Mondadori-France செய்தி ஊடகத் தொகுப்பின் CEO வான Arnaud de Puyfontaine, M6 தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் எஜமானரான Nicolas de Tavernost, சினிப் பிணைப்பான UGC யின் Guy Verrecchia, Alain Sussfeld, ்்FCB விளம்பர நிறுவனத்தின் Philippe Gaumont, (ஆசிரியர்களின் பதிவுப்பணத்தை வசூலிக்கும்) Sacem நிறுவனத்தின் தலைவரான Jean-Loup Tournier ஆகியோர் இருந்தனர்.

சார்க்கோசி தொலைக்காட்சி சீர்திருத்தத்தை தன் பெருநிறுவன ஆதரவாளர்களுடன் சேர்ந்து தயாரித்தார் என்பதற்கு கணிசமான குறிப்புக்கள் உள்ளன. 2007 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தில், சார்க்கோசி L'Express இடம் கூறினார்: "தரமான நிகழ்ச்சிகளை தயாரிக்க வளங்கள் இல்லை என்ற நிலையை விட பொது நிலையங்களுக்கு கூடுதலான விளம்பரங்களை நான் விரும்புவேன்." 2007 இலையுதிர்காலத்தில், TF1 அரசாங்கத்திற்கு ஒரு வெள்ளைத் தாள் அறிக்கை கொடுத்து அதே போன்ற நடவடிக்கைகள் வேண்டும் என்று கூறியது. ஜனவரி 2008ல் சார்க்கோசி முற்றிலும் எதிர்ப்பட்ட கருத்திற்கு சென்றுவிட்ட வகையில் கூறினார்: "பொதுத் தொலைக்காட்சியின் பெரும் பண்பாட்டு புரட்சியை.... நான் திட்டமிடுகிறேன்.... பொதுத் தொலைக்காட்சி நிறுவனங்களில் விளம்பரங்களை அகற்றுவது பற்றி நான் சிந்தித்து வருகிறேன்."

ஒரு ஜூலை மாதக் கருத்து கணிப்பு பிரெஞ்சு மக்களில் 71 சதவிகிதம் இதை எதிர்ப்பதாக காட்டியுள்ளன, இத்தகைய முற்றிலும் செல்வாக்கற்ற சீர்திருத்தம் சார்க்கோசி பற்றிய கூடுதலான புகழ்பெற்ற இணைய வீடியோக்களை கொடுத்துவிட்டது.

இக்கோடையில், இணையம் Rue 89 உத்தியோகபூர்வமற்ற காட்சி ஒன்றை, பொது நிலையம் France 3 TV யினால் பதிவு செய்யப்பட்டதை காட்டியது; அப்பொழுது ஜனாதிபதி தொலைக்காட்சி நிலையத்தின் அரங்கில் பேட்டிக்காக காத்திருந்தார். பல நூறு தொழிலாளர்கள் நடத்திய ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் வழியே சார்க்கோசி கடந்து வந்திருந்தார். சார்க்கோசி உட்கார்ந்தவுடன் அவர் தன்னுடைய வாழ்த்துக்களுக்கு விடையிறுக்காத ஒரு தொழில்நுட்ப தொழிலாளி பற்றிக் குறைகூறினார்.

"நாம் ஒன்றும் இங்கு பொதுப்பணியில் இல்லை, நாம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இருக்கிறோம் ... நம்பமுடியவில்லை... இது தீவிரமானது!' அதற்கு செய்தியாளர் விடையிறுத்தார்; "இது பிரான்ஸ்". சார்க்கோசி கூறினார்: "இப்பொழுது இனி மாறுதல் வரவிருக்கிறது." அதன்பின் அவர் Gérard Leclerc ஐ ஒதுக்குவது பற்றி ஒரு நகைச்சுவை குறிப்பு கொடுத்தார். Leclerc திட்டமிடப்பட்டிருந்த பொது செய்தி ஊடக சீர்திருத்தத்தை எதிர்த்து அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்.

பிரான்ஸ் 3 நிர்வாகம் முதலில் வீடியோ காட்சி அழிக்கப்பட வேண்டும் என்று கோரி Rue 89 செய்தியாளர்கள் எங்கிருந்து தகவலை பெற்றனர் என்றும் கோரினர். மக்களிடையே விவாதம் மற்றும் Rue89 வீடியோவின் செல்வாக்கு இவற்றை எதிர்கொண்ட நிலையில், France 3 இறுதியில் பின்வாங்க நேர்ந்தது.