World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

A socialist answer to the Gaza crisis

காசா நெருக்கடிக்கான ஒரு சோசலிச பதில்
The World Socialist Web Site editorial board
10 January 2009
 

Use this version to print | Send this link by email | Email the author

காசாவிற்கு எதிரான இஸ்ரேலின் திடீர் தாக்குதலின் சட்டவிரோதமான போக்கு நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது. ஐக்கிய நாடுகளின் கருத்துப்படி, இதுவரை சுமார் 800 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லப்பட்டுள்ளனர்; 3200க்கும் மேம்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், வீடுகள், பாலங்கள் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்புகள் 500 பவுண்டு வெடிகுண்டுகளால் நாசமாக்கப்பட்டுள்ளன. காசா பகுதியின் நீடித்துவரும் இந்த மனிதாபிமற்ற பேரழிவின் அளவு மனிதனால் கற்பனைசெய்யக்கூட முடியாதுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து இந்த யுத்தத்தை தீவிரப்படுத்தி வருகிறது. வியாழனன்று, காசாவில் அதன் பணியாளர்கள் இஸ்ரேல் தரைப்படையால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகள் சபை காசா மக்களுக்கான முக்கிய உணவு பொருட்கள் வினியோகத்தையும் நிறுத்தியது.

பாதுகாப்பற்ற பாலஸ்தீன மக்கள் மீதான நவீன இஸ்ரேல் இராணுவ இயந்திரங்களின் தாக்குதலுக்கு உலகில் உள்ள அனைத்து மக்களும் தங்களின் அதிர்ச்சியையும், கோபத்தையும் பிரதிபலித்துள்ளனர். சர்வதேச எதிர்ப்புகள் வலுத்துவருவதை போன்றே, அதில் பங்கெடுத்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று அமெரிக்காவிலும், பாரீஸ், லண்டன் மற்றும் பேர்லின் உட்பட பல ஐரோப்பிய நகரங்களிலும் பேரணி மற்றும் போராட்டத்துடன் கூடிய பல ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் இந்த பயங்கரத்தை எவ்வாறு தடுக்க முடியும்? நீண்ட காலமாக துன்பத்திற்குள்ளாக்கப்பட்டு வரும் பாலஸ்தீனர்களின் எதிர்காலத்திற்கு எவ்வாறு உறுதியளிப்பது?

ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் இன்றைய அமைப்புகளிடம் இதற்கு எந்த தீர்வும் இல்லை. அவர்களின் முக்கிய கோரிக்கை, மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை தலையிட கோருவதும், அவற்றை இஸ்ரேல் மீது அழுத்தம் அளிக்க செய்வதும் தான். இந்த மாற்றமற்ற போக்கு ஒரு வழியில்லாத முடிவுக்கு தான் இட்டு செல்கிறது. உண்மையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச எதிர்ப்பு மட்டும் தான் மத்திய கிழக்கில் அமைதியையும், அதன் மக்களான பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு ஒரு நிலைத்த பாதுகாப்பான எதிர்காலத்தைக் கொண்டு வர முடியும்.

இஸ்ரேல் அரசாங்கத்தால் தொடரப்பட்டுள்ள இந்த இனப்படுகொலை ஒடுக்குமுறையானது, உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளது. பல தசாப்தங்களாக கட்டுப்பாடில்லாமல் வளங்கள் வழங்கப்பட்ட பின்னரும் கூட, உலகிலுள்ள அனைத்து ஆளும் வர்க்கங்களும் தொழிலாளர்களுக்கு வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையும், அவர்கள் மீதான சுரண்டலையும், ஒடுக்குமுறையையும், யுத்தத்தையும் தவிர வேறெதையும் அவர்களுக்கு அளிக்கவில்லை.

இஸ்ரேல் இதை மனித உயிர்களின் அபிவிருத்திகளாக எடுத்துக்காட்டுகிறது. இஸ்ரேலிய சமுதாயம் அளவிட முடியாத சமூக பிரிவினைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அரசாங்கம் முழுமையாக ஊழலில் சிக்கிக் கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், இஸ்ரேலுக்குள் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களில் இருந்து திசைதிருப்புவதும், காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான நோக்கங்களில் ஒன்றாகும்.

சியோனிசம் தான் யூத மக்களுக்கான பொறி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையில் ஒரு முதலாளித்துவ தேசிய அரசை நிலை நாட்டுவதன் மூலம் யூதர்களுக்கான கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று சோசலிசவாதிகள் எப்போதும் எச்சரித்து வருகிறார்கள். யூத எதிர்ப்பு மற்றும் யூதர்களைச் அடக்கி ஒடுக்குவத்ைற்கான தீர்வுகாண்பது என்பது முதலாளித்துவ வர்க்க சமூகத்தை ஒழிப்பதுடனும், சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதியுடனும் பிரிக்க முடியாமல் இணைந்துள்ளது. நாசிகளால் ஜேர்மன் தொழிலாளர் இயக்கம் முன்னர் அழிக்கப்பட்டதால் தான் பாரிய படுகொலை (Holocaust) அன்று சாத்தியமானது.

பாலஸ்தீனியர்கள் மீதான அதன் பயங்கர தாக்குதலால், இஸ்ரேல் எவ்வித சட்டப்பூர்வ நியாயத்தையும் இழந்துவிட்டிருக்கிறது. இது இஸ்ரேலுக்குள்ளேயே பிரதிபலிக்கிறது. அங்கு அரசியல் சூழலானது மதவாத தீவிரவாதிகளாலும், இஸ்ரேலியர்களை மிரட்டி அடக்கும் வலதுசாரி வெறிபிடித்தவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல், நாசிக்களால் வார்சோ குடியேற்றத்தின் சுத்திகரிப்பிற்கு இணையாக இருப்பது தான் மிகவும் வருந்தத்தக்கதாகும்.

அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு மற்றும் ஐரோப்பா, அராபிய முதலாளித்துவத்தின் பின்பாதுகாப்புடன் மட்டும் தான் இஸ்ரேல் அதன் யுத்தத்தைத் தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் இராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவதன் மூலம் அமெரிக்கா ஆண்டுதோறும் அதற்கு $3 பில்லியன் செலவிட்டு வருகிறது. ஜனாதிபதி புஷ் மற்றும் குடியரசு கட்சியினர் மட்டுமின்றி, செனட்டில் உள்ள ஜனநாயக கட்சியினரும் இஸ்ரேலிற்கு சம அளவில் ஆதரவளித்துள்ளனர். புஷ்ஷை அடுத்து ஜனாதிபதி பதவிக்கு வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா மெளனமாக இருப்பதும், அவரின் ஒப்புதலை அளிப்பதாகவே உள்ளது.

இதில் ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்கள் மிகவும் வேறுபட்டு, ஆனால் சம அளவில் நம்பிக்கை துரோகமான பாத்திரத்தையே வகிக்கின்றன. இஸ்ரேலிய தாக்குதலை அவற்றில் ஒன்றுகூட கண்டிக்கவில்லை. அதற்கு மாறாக, அவை இஸ்ரேலின் தாக்குதலை சுய-பாதுகாப்பிற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை என்று நியாயப்படுத்தி இருப்பதுடன், பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு ஹமாஸ் தான் பொறுப்பு என்றும் அறிவித்துள்ளன. ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கேலின் கருத்துப்படி, தெளிவாக ஹமாஸ் தான் இதற்கு முழு பொறுப்பாகும்.

எவ்வாறிருப்பினும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கையால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஐரோப்பியர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆகவே அவர்கள் ஒரு போர்நிறுத்தத்தைக் கோரி வருகின்றனர். அந்த யுத்தம் அரேபிய முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரமின்மைக்கு கொண்டு செல்லும் என்றும், அப்பிராந்தியத்தில் உள்ள தங்களின் செல்வாக்கிற்கு அது குழி பறித்துவிடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். மேலும் தங்களின் சொந்த நாடுகளிலும், குறிப்பாக, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த பல மில்லியன் புலம்பெயர்ந்தோர் வாழும் நாடான பிரான்சில் பதட்டங்கள் அதிகரிக்க கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் அதன் பயங்கரவாதத்தைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோசி தலைமையிலான ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டும் ஏற்கும் வகையிலான போர் நிறுத்தத்திற்காக முயன்று வருகிறது.

ஒரு சிறைச்சாலை என்ற நிலையிலிருந்து ஓர் உயர்மட்ட பாதுகாப்பு பகுதியாக காசா மாற்றப்பட வேண்டும். இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரேயொரு பகுதியான, காசாவிற்கும் எகிப்திற்கும் இடைப்பட்ட எல்லைப்புற பகுதி மூடப்பட்டு, ஒரு சர்வதேச பாதுகாப்பு படையால் கண்காணிக்கப்பட வேண்டும். காசாவிற்கான காவல் மற்றும் கண்காணிப்பு பணிகள், எகிப்திய ஆட்சியின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிடமும், அமெரிக்காவின் பின்புலத்தில் இருக்கும் பாலஸ்தீனிய அதிகாரி மெஹ்முது அப்பாஸிடமும் அளிக்கப்படும். இதன் மூலம் காசாவின் 1 மில்லியன் குடிமக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் இருந்து இஸ்ரேல் விடுவிக்கப்படும் என்பதுடன், இந்த சிறைச்சாலையின் மேற்பார்வையாளராக முபாரக் செயல்படுவார்.

ஆனால், இதுபோன்றதொரு நடவடிக்கை உள்நாட்டில் எதிர்விளைவை ஏற்படுத்தும் என அஞ்சி இதுவரை முபாரக் இந்நடவடிக்கைக்கு தயங்கி வருகிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்படும் லஞ்சம் போதிய அளவில் இருந்தால், அவர் இதை ஏற்றுக் கொள்வார். அவரின் அரசாங்கம் பெருமளவில் சர்வதேச நிதி உதவியைத் தான் நம்பி இருக்கிறது.

யுத்த தயாரிப்பின் போது முபாரக் ஒரு முக்கிய பங்கு வகித்தார். ஹமாஸை அழிப்பதற்கான இஸ்ரேலின் இலட்சியத்தை பிரதிபலிக்கும் அவர், எகிப்திய முஸ்லீம் சகோதரர்கள் என்ற அமைப்புடன் ஹமாஸுக்கு உள்ள தொடர்பு குறித்து அவர் அஞ்சுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர், இஸ்ரேல் யுத்தத்தை தொடங்கியது. இஸ்ரேலின் திட்டங்களை அறிவிக்க இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி Tzipi Livni கெய்ரோவிற்கு விஜயம் செய்திருந்தார். யுத்தம் தொடங்கிய போது, காசா உடனான அதன் எல்லைகள் மூடி இருப்பதை எகிப்து உறுதி செய்து கொண்டது. இதன் மூலம் சுற்றி வளைக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தப்பித்து செல்வதற்கான ஒரேயொரு வழியும் தடுக்கப்பட்டது.

ஹமாஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எதிராகவும், உள்நாட்டு மக்களுக்கு எதிராக நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்துவதன் மூலம், அதன் ஆதரவாளர்களை "பயங்கரவாதிகள்" என்று முத்திரை குத்துவதற்கு எதிராகவும் ஹமாஸைப் பாதுகாப்பது அவசியமென்ற போதினும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு இடையிலான சதியைத் தோல்வி அடைய செய்யவதற்கும், எதிர்ப்பதற்குமான எந்த முன்னோக்கையும் இந்த இயக்கம் கொண்டிருக்கவில்லை. ஓர் இஸ்லாமிய அமைப்பான அது, வர்க்கப் போராட்டங்களை நிராகரிக்கிறது. அரேபிய, இஸ்ரேலிய மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவிற்காக திரும்புவதற்கு பதிலாக அது, அரேபிய ஆட்சிகளுடனும், ஏகாதிபத்திய அதிகாரங்களுடனும் ஓர் உடன்பாட்டை எட்ட முயன்று வருகிறது. இஸ்ரேல் கிராமங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் அளிப்பதற்கான அதன் முன்னோக்கின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.

ஹமாஸ் பெரியளவில் சிரியாவை நம்பியுள்ளது. ஆனால், இஸ்ரேல் போதியளவு விலை கொடுத்தால் ஹமாஸிற்கான தனது ஆதரவை விட்டுவிடுவதில் சிரியாவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த நிலையில் தான் சார்க்கோசியும், துருக்கிய பிரதம மந்திரி எர்டோகனும் (ஒரு முன்னாள் இஸ்லாமியவாதி) இதில் தலையிடுகிறார்கள். இவர்கள் இருவரும் இஸ்ரேல் மற்றும் சிரியாவுடன் மிக நெருங்கிய உறவு கொண்டவர்கள் என்பதுடன் ஹமாஸ் அதன் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டு வர அதை கட்டாயப்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சிரியாவிற்கு அழுத்தம் அளித்து வருகிறார்கள்.

காசா மக்களின் தலைவிதி பிரிக்க முடியாத வகையில் சர்வதேச உழைக்கும் வர்க்கத்துடன் தொடர்புபட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் ஐக்கிய நாடுகளிடம் இருந்தோ, அரேபிய ஆட்சிகள் அல்லது ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்தோ எவ்வித உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அவை காலத்திற்கு காலம் அவர்களை காட்டிக் கொடுத்துள்ளன என்பதுடன் அவர்களின் நெருக்கடி காலத்திலும் அவை அதில் பங்கெடுத்துக் கொண்டுள்ளன.

இந்த சர்வதேச பொருளாதார நெருக்கடி சந்தேகத்திற்கு இடமின்றி மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வர்க்க போராட்டங்களை தூண்டிவிடும். இவை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தை அளிக்கும். இதுபோன்றதொரு போராட்டத்தின் முன்னிபந்தனையாக, தேசிய முதலாளித்துவ நலன்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்யும் கட்சிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து உடைவு உள்ளது. ஆகவே ஒரு சுயாதீனமான சோசலிச முன்னோக்கு தேவைப்படுகிறது.

அது இன்றைய ஆர்ப்பாட்டங்களை ஆக்கிரமித்திருக்கும் நிலைநோக்காக இருக்காது. அதற்கு மாறாக, தங்களைத் தாங்களே "இடது" அல்லது "முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள்" என்று அழைத்துக்கொள்ளும் பல அமைப்புகள், அவை சார்ந்துள்ள அரசாங்கங்களுக்கு சாதகமாக போராட்டங்களை திசை திருப்ப முயன்று வருகின்றன.

ஜேர்மனியில், இடது கட்சியால் எடுக்கப்பட்ட நிலைப்பாடிற்கும், மேர்க்கெல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கிரகோர் கீசி போன்ற இடது கட்சி தலைவர்கள், யுத்தத்தைத் தொடங்கியதற்கு ஹமாஸ் தான் பொறுப்பு என்கின்றனர். இடது கட்சியின் மற்றொரு தலைவரான நோர்மென் பீய்ச், காசாவிற்கு அனுப்பப்படும் ஆயுதங்களைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் துருப்புகளை அனுப்ப வலியுறுத்துகிறார். வொல்வ்காங் கேரிக்க போன்ற பிறர், பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோசியின் முனைவுகளை வரவேற்கிறார்கள். "எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் முனைவுகளை" ஆதரிக்க மொனிக்கா குனோஷ ஜேர்மன் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.

பிரான்சில், புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அதாவது, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு அது அழைப்பு விடுக்கிறது. "உடனடியாக ஒரு சர்வதேச தலையீட்டை வலியுறுத்தி" இருப்பதுடன், சர்வதேச துருப்புக்களை அனுப்ப "மேற்கத்திய அரசாங்கங்களுக்கு அழுத்தம் அளிக்க" அழைப்பு விடுத்து வரும் இஸ்ரேலிய அமைதி தூதராக செயலாற்றி வரும் மைக்கேல் வார்ச்சாவிஸ்கியின் கோரிக்கையை, LCRஆல் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, அதன் வலைத் தளத்தில், வெளிப்படையாக பதிப்பித்திருந்தது.

அதிகளவிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களின் சொந்த அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்புடன் முரண்பட்டுள்ளபோது, இதுபோன்ற அமைப்புகள் அந்த முதலாளித்துவ ஆட்சிகள் மற்றும் அவர்களின் கொள்கைகளுக்கு ஆதரவாக ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான ஆதரவிற்கு அவர்களைத் திசைதிருப்ப விரும்புகின்றன.

அமெரிக்காவில், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் ஜனநாயக கட்சியை சார்ந்திருக்கிறார்கள். அவர்கள், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் முக்கியமான அனைத்து வெளியுறவு கொள்கைகளையே தாமும் பின்பற்ற இருப்பதாக நீண்ட காலத்திற்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டிருக்கும் வரவிருக்கும் ஜனாதிபதியான பராக் ஒபாவிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

இந்த நிலைநோக்கை நிராகரிக்குமாறு, போராட்டங்களில் பங்கு பெறும் அனைவர்களுக்கும் உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அழைப்பு விடுக்கிறது. காசாவில் நடக்கும் சம்பவங்கள், மத்திய கிழக்கில் ஒரு சோசலிச ஒன்றியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில் யூத மற்றும் அரேபிய தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்கான தேவையை உடனடியாக ஏற்படுத்தி உள்ளது. இந்த முன்னோக்கு, உலகம் முழுவதிலிருந்தும் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்துள்ளது.