World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The case for nationalizing the banks

வங்கிகளைத் தேசியமயமாக்குவதற்கான வாதம்

By Barry Grey
19 January 2009

Use this version to print | Send this link by email | Email the author


பிரச்சனைக்குரிய சொத்துக்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம் (Troubled Asset Relief Program- TARP) என்னும் நிதி அமைச்சரகத்தை $700 பில்லியன் மக்கள் வரிப்பணத்தை வங்கிகளைப் பிணை எடுக்க செலவழிக்குமாறு காங்கிரஸில் புஷ் நிர்வாகம் சட்டம் இயற்றிய நான்கு மாதங்களுக்குள் அரசாங்கத்திடம் இருந்து உதவி பெற்ற அதே வங்கிகள் பாரிய இழப்புக்களை அறிவித்த வண்ணம் உள்ளன; ஒபாமா நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட்டிற்கு இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் கூடுதலான நிதியை வழங்கும் திட்டங்களைத் தயாரித்து வருகிறது.

இதற்கிடையில், நிதிய நெருக்கடி மிகவும் ஆழ்ந்துள்ளதுடன் ஒரு உலக மந்த நிலைக்கு இட்டுச்சென்றுள்ளதுடன், இது 1930 களின் பெரு மந்த நிலைக்குப்பின் மிக மோசமாக நெருக்கடி என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த இலையுதிர்காலத்தில் புஷ் மற்றும் ஒபாமாவினால் "வோல் ஸ்ட்ரீற்கு" அல்லாமல் "முக்கிய தெருவில்" உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், நிதியக் கரைப்பினாலும் பெரும் வேலையின்மையினாலும் பாதிக்கப்படாமல் பயனடைவார்கள் என்று உத்தரவாதம் கூறப்பட்டவர்கள் இபொழுது தங்கள் வேலைகள், வீடுகள், வாழ்நாள் சேமிப்புக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். இதற்கிடையில் வங்கியாளர்கள் தங்களுக்கு கிடைத்த பெரும் அளிப்பை வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் கடன் கொடுக்க மறுத்துவிட்டு, மாறாக அரசாங்கம் கொடுத்த பணத்தை சிறு நிறுவனங்களை வாங்குவதற்கு அல்லது சேமிப்பிற்கு எனப் பதுக்கி வைத்துள்ளனர்.

எந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊகக்காரர்களின் ஊழல் நிறைந்த, பொறுப்பற்ற கொள்கைகள் அவர்களுடைய நிறுவனங்களையும் உலகப் பொருளாதாரத்தையும் அழிவிற்கு கொண்டுவந்தனவோ, ஆனால் தங்களுக்கு ஏழு அல்லது எட்டு இலக்க ஊதியப் பொதியை அளித்துக் கொண்டனரோ, அல்லது அரசாங்கம் நியமித்திருந்த கட்டுப்பாட்டு அதிகாரிகளோ, இந்தப் பொருளாதார சூறையாடலில் பங்கு பெற்றவர்களோ, பொறுப்பு ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தின் உடைந்தையுடன் வங்கியாளர்கள் கருவூலத்தில் இருந்து பெற்ற பணத்தை என்ன செய்ததாகவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

வியாழனன்று ஒபாமா மாறுகைக் குழுவின் அதிக செல்வாக்கு பயன்படுத்தப்பட்ட பின், அமெரிக்க செனட்டில் $700 பில்லியன் உதவிப் பொதியில் இரண்டாம் பகுதியான $350 பில்லியன் கொடுக்கப்படுவதற்கு, இன்னும் பாரியமுறையில் பிணை எடுப்பிற்கு அரங்கு அமைக்கும் வகையில் வாக்களிக்கப்பட்டது. வரவிருக்கும் விஷயங்களுக்கு முன்னோடி போல், செனட் வாக்களித்த மறுநாள், கருவூலம் மற்றும் ஒரு $20 பில்லியன் பணத்தை ஒரு புதிய ஊக்கப் பொதியின் பகுதியாக கொடுக்க முன்வந்துள்ளது; இதையொட்டி அரசாங்கம் வங்கிகளின் இழப்பில் $118 பில்லியன் வரை எடுத்துக் கொள்ளும். பொருளாதார வல்லுனர்களும் மத்திய வங்கி கூட்டமைப்பு அதிகாரிகளும் வெளிப்படையாக TARP இன்னும் பல அத்தகைய பிணை எடுப்பு நிதிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளன.

அமெரிக்க மக்கள்மீது நடத்தப்படும் பாரிய மோசடியைத்தான் இவையனைத்தும் குறிக்கின்றன; அவர்கள் பெரும்பான்மையில் பிணை எடுப்பை எதிர்க்கின்றனர்; இது முற்றிலும் நிதிய பிரபுத்துவத்தின் நலன்களை காக்கத்தான் உதவுகிறது. நிதிய நெருக்கடியை தீர்க்கவோ, சமூக பேரழிவை தவிர்க்கவோ ஒரு முறையாக பரிசீலிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட முறை இருந்ததும் இல்லை, இப்பொழுதும் இல்லை.

முன்னாள் கோல்ட்மன் சாஷ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான நிதியமைச்சர் ஹென்றி போல்சன் மற்றும் மத்திய வங்கி கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னன்கேயும் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் காங்கிரஸின் தலைவர்களை அழைத்து அவர்கள் $700 பில்லியன் பொதுப்பணத்தை வங்கிகளை காப்பாற்றக் கொடுக்க அனுமதி தரவேண்டும் என்று கோரியபோது, அந்த ஆவணத்தில் இருந்த மொத்த பங்கங்களே மூன்று பக்கத்திற்கும் குறைவுதான்.

காங்கிரஸ் TARP சட்டத்தை இயற்றிய மூன்று வாரங்களுக்குள், போல்சன் தானும் பெர்னன்கேயும் நெருக்கடிக்காக கொடுத்திருந்த திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவித்தார். "பிரச்சனைக்குரிய" குறைந்த பிணையுள்ள மற்றும் சொத்துக்கள் ஆதரவு இருந்த வங்கிப் பாதுகாப்புப் பத்திரங்களை வாங்குவதற்கு பணத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக தான் வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் ரொக்கத்தை அளிப்பதாகவும், அது நிபந்தனையற்று இருக்கும் என்றும் அறிவித்தார்.

பல தசாப்தங்களாக சமூகப் பிரச்சினைகளுக்கு உதவ "பணத்தை வீசி எறிவதை" பெரிதும் சாடியதும், சந்தையில் அரசாங்கம் எவ்வித குறுக்கீடு செய்வதையும் எதிர்த்த ஒரு அரசியல் மற்றும் செய்தி ஊடக அமைப்புமுறை திடீரென, ஒரே குரலில் பாரிய அரசாங்க நடவடிக்கை எடுத்து, மக்களுடைய இருப்புக்களை வோல்ஸ்ட்ரீட் உயரடுக்கை காப்பாற்ற அளிக்க வேண்டும் என்று கோரியது. வங்கியாளர்கள் மற்றும் பெரும் பங்குதாரர்களின் செல்வங்களை காத்தல் என்று வரும்போது, "எதுவும் செய்யலாம்" என்ற சொற்றொடர்தான் செயலாக்கத்திற்கு கூறப்பட்டது.

அமெரிக்காவில் வர்க்க உறவுகளின் யதார்த்தமான தன்மை இரக்கமற்ற முறையில் அம்பலப்படுத்தப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட்டிற்கு பல டில்லியன் டாலர்களை கொடுத்தல் என்பது தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் நடைபெறுகிறது. வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அரசாங்கக் கடன் பெரிதாகும் என்றும் கூறும் ஒபாமா, பிணை எடுப்பை ஒட்டி சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகிய சமூகச் செலவினங்களில் பெரும் குறைப்பு நியாயப்படுத்தப்படுத்துகிறார். இவற்றைத்தான் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் ஓய்வு பெற்றவர்களும் நம்பியிருக்கின்றனர்.

வங்கிப் பிணை எடுப்புக்கள் என்ற புதிய அலை கடந்த திட்டத்தைவிட எதையும் கூடுதலாக செய்து நெருக்கடியை தீர்க்கப்போவது இல்லை. திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் எதுவுமே ஆழ்ந்த பொருளாதார பேரழிவைத் தீவிரமாக தகர்க்கப் போவது இல்லை. ஏனெனில் அவை ஆளும் வர்க்கத்தின் தனிச்சொத்துடமை மற்றும் நிதிய அமைப்புமுறையின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றில் வேர்களை கொண்டுள்ள ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நலன்களை சிறிதும் பாதிக்காதவகையில் உள்ளது.

இதே காரணத்திற்காகத்தான், வோல் ஸ்ட்ரீட்டில், கல்விக்கூடத்தினரிடையேயும் அல்லது அரசாங்கத்தில் இருக்கும் நிதிய மேதைகள் எவரும், நெருக்கடி பற்றி நேர்த்தியான விளக்கத்தை கொடுக்க முடியவில்லை. முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தில் அவர்கள் உலக நிதிய கரைவு என்பது முதலாளித்துவமுறையின் நிலைமுறிவின் வெளிப்பாடு என்பதை ஒப்புக்கொள்ள தைரியம் அற்றவர்கள் ஆவர்.

தற்போதைய நெருக்கடி ஒன்றுடன் ஒன்றுதொடர்புடைய இருநிகழ்போக்குகளின் விளைவு ஆகும். அமெரிக்க முதலாளித்துவ முறையின் நீடித்த சரிவு மற்றும் முதலாளித்துவ முறையின் அடிப்படை முரண்பாடுகளில் வேர்களைக் கொண்டுள்ள அடிப்படை பொருட்களில் இலாபத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவைதான் அவை. தன்னுடைய முறையின் பெருகிய முரண்பாடுகளை கடப்பதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு முதலீட்டை உற்பத்தியில் இருந்து இலாபமளிக்கும் வடிவமைப்பான நிதிய ஊகத்திற்கு செலுத்திய முறையில்தான் நிதிய ஒட்டுண்ணித்தனம் மற்றும் அதன் பாரிய குற்றம் சார்ந்த தன்மை உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக அரசாங்க உதவியுடன் பலம்வாய்ந்த நிதிய தரகர்கள், பலவிதமான நிதிய திருகுதாளங்களூடாக அதிக இலாபத்தை பெறுவதற்காக அமெரிக்காவின் தொழிற்துறை அடித்தளத்தை இல்லாதொழித்துவிட்டனர். ஆளும்வர்க்கத்திற்கான செல்வத்தின் உருவாக்கமானது, உற்பத்தி நிகழ்போக்கினூடாக உருவாக்கப்படும் உண்மையான பெறுமதியிலிருந்து பாரியளவில் பிரிக்கப்பட்டுவிட்டது.

இப்பொழுது கணக்கிலடங்காத டிரில்லியன் காகித மதிப்புக்களும் சரிந்து, அவற்றைத் தொடர்ந்து சமூக, பொருளாதார பேரழிவு வரவுள்ளது. இந்த இழப்புக்களை ஈடு செய்யத் தொடங்குவதற்கும் ஆளும்வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை தீவிரப்படுத்தி, வேலையின்மை, வறுமை, சமூக இழிசரிவு ஆகியவற்றையும் பெருக்கும்.

பெரிய வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களை தனியார் கைகளில் இருந்து எடுத்துக் கொள்ளுவதை தவிர வேறு எந்த முற்போக்கான பொருளாதாரத்திட்டமும் நெருக்கடியை தீர்ப்பதற்குக் கிடையாது. அவை தேசியமயமாக்கப்பட்டு பொதுச் சொத்துக்களாக மாற்றப்படவேண்டும்; அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட வேண்டும். வங்கிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பரந்த இருப்புக்கள் கெளரவமான கல்வி, வீடுகள், சுகாதார பாதுகாப்பு, ஓய்வுகால நலன்கள், அனைவருக்கும் நல்ல ஊதியத்துடன் வேலைகள் ஆகியவற்றை கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

இது முன்னாள் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ஏதும் கொடுக்கப்படாமல் செய்யப்பட வேண்டும்; அதே நேரத்தில் உழைக்கும் மக்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களின் சேமிப்புக்கள், பாதுகாப்பு பத்திரங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.

பெரிய வங்கிகள், நிதிய நிறுவனங்கள், காப்பீட்டுக் கழக நிறுவனங்கள் மற்றும் தனியார்முதலீட்டு நிதிகள் ஆகியவை பொதுத் பரிசீலினைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; அப்பொழுதுதான் அவற்றில் இருக்கும் சட்டவிரோத, சமூக அழிவு செயல்கள் அம்பலப்படுத்தப்படும்.

மோசடி, ஊழல் என்று நெருக்கடிக்கு எரியூட்டிய செயல்கள் பற்றிய பொதுப் கணக்கெடுப்பு செய்யப்படவேண்டும்; இதற்குப் பொறுப்பானவர்கள் அதற்கு பொறுப்பேற்க செய்யப்பட வேண்டும்; தேவையானால் குற்றச்சாட்டு விசாரணைகள் அவர்கள்மீது கொண்டுவரப்பட வேண்டும்.

தனியார் ஊகக்காரர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு திருப்பப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் சமூகச் சொத்து மீட்கப்பட்டு, இவை சமூகநலத்திட்டங்கள் என்று மக்களுக்கு நலன்கள் கொடுக்கும் திட்டங்களை விரிவாக்க செலவழிக்கப்பட வேண்டும்.

இது ஒன்றும் தனியே அல்லது முதன்முதலாக ஒரு தொழில்நுட்ப நடவடிக்கை அல்ல. இது ஒரு அரசியல் மற்றும் புரட்சிகரச் செயல் ஆகும். நிதிய பிரபுத்துவத்தின் சக்தி முறிக்கப்பட வேண்டும். பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு பழைய அரசுமுறை செயல்பட்டது போல், அமெரிக்க நிதிய உயரடுக்கின் தொடர்ந்த செயல்பாடு சமூக முன்னேற்றம், பகுத்தறிவார்ந்த பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் தடையாக உள்ளது. அது சமூகம் பெரிதும் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. உண்மையில் அது அன்றாடம் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியில் இருக்கும் தான் இலஞ்சம் கொடுத்துள்ள முகவர்களுடன் இணைந்து செயல்பட்டு, தான் ஏற்படுத்திய நெருக்கடியைப் பயன்படுத்தி இன்னும் கூடுதலான அளவில் தேசிய செல்வத்தில் அதிக பங்கைக் கைப்பற்ற முற்படுகிறது.

வங்கிகள் தேசியமயமாக்கப்படுதல் மற்றும் சமூகத்தின் தேவைக்கு அவற்றைத் அடிபணியவைத்தல் என்பதற்கு ஒரு முன்னிபந்தனை சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை நிறுவதல் ஆகும். இது அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் பிரச்சினை ஆகும். எந்த முதலாளித்துவ அரசாங்கமும் இந்தப் பணியை செய்யாது, செய்யவும் முடியாது. தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்கான அரசியல் மற்றும் புரட்சிகர போராட்டம்தான் தேவைப்படுகிறது.