World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

UAW accepts government ban on strikes

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் வேலைநிறுத்த தடையை ஏற்கிறது

By Jerry White
15 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த மாதம் புஷ் நிர்வாகம், வரவிருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பிணை எடுப்பிற்கு ஒப்புதல் கொடுத்தபோது கார் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் அல்லது உள்ளிருப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்ற ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் பாதுகாப்பு மற்றும் பரிமாற்றத்திற்கான ஆணைக்குழுவிற்கு (Security and Exchange Commission-SEC) கொடுத்த குறிப்பு ஒன்றில் ஜெனரல் மோட்டார்ஸால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த விதி பெப்ருவரி 17ம் தேதிக்குள் டெட்ரோயிட்டில் உள்ள கார்த் தயாரிப்பு நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பணி நீக்கங்கள், ஆலை மூடல்கள், ஊதிய பிற நலன்கள் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு 139,000 தொழிலாளர்களும் உடன்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதும் இணைந்து நிற்கிறது.

SEC க்குக் கொடுத்துள்ள குறிப்பில், நிதி அமைச்சரகம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரிடம், "எந்தத் தொழிற்சங்கம் அல்லது கூட்டு பேரப் பேச்சுவார்த்தைகள் வேலைநிறுத்தம் அல்லது வேறு ஏதாவது பணி நிறுத்தத்தில் ஈடுபட முயற்சித்தால்" வழங்கப்பட்ட $17.4 பில்லியன் கடனை உடனே திருப்பி செலுத்தவேண்டும் எனவும் இது கார் தயாரிப்பாளர்களை திவாலுக்குள்ளாக்கி விடும் என அறிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விதியின் விளைவு வேலைநிறுத்தம் என்னும் சட்டபூர்வ உரிமையை நிராகரிப்பதாகும்; அமெரிக்க தொழிலாள வர்க்கம் கடுமையான போராட்டங்களு பின்னர் 19ம் நூற்றாண்டில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக "குற்றம் சார்ந்த சதித்திட்டம்" என அழைக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்து நின்று பெற்ற சாதனையை நிராகரிப்பது ஆகும். பெருமந்த நிலையின் ஆழந்த நிலைக்கு பின்புதான், 1935ல் இயற்றப்பட்ட தேசிய தொழில் உறவு சட்டத்திற்கு (National Labour Relations Act) பின்னர் மத்திய அரசின் சட்டம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை அங்கீகரித்தது. இச்சலுகை ரூஸ்வெல்ட் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு இலவசமாக கொடுத்த அளிப்பு அல்ல. தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு, சட்டபூர்வமாக கூட்டு எதிர்ப்பிற்கு வழியின்றி மிக மிருகத்தனமான சுரண்டலை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்பட்டபின் வந்த 1934ம் ஆண்டு டோலிடோ, மின்னியாபோலிஸ் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ நகரங்களில் வெடித்த பொது வேலைநிறுத்தங்களுக்கு பின்னர் இது நடைமுறைக்கு வந்தது.

கார்த் தொழில்பிரிவு பிணை எடுப்புச் சட்டத்தில் வேலைநிறுத்த எதிர்ப்பு விதி இருப்பது பற்றிய சட்டபூர்வத்தன்மையை பல வர்ணனையாளர்கள் வினாவிற்கு உட்படுத்தியுள்ளனர். ஆயினும்கூட, பிணை எடுப்பு விதிகளின் கீழ் கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடன்களை திருப்பிக் கொடுக்கும் வரை வேலைநிறுத்தங்களின் மீதான தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்; இது 2011ல் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு அரங்கு அமைப்பதற்கு உதவுகிறது; அப்பொழுது தொழிலாளர்களுக்கு இன்னும் கடுமையான இழப்புக்களை ஏற்பதை நிராகரிக்க சிறிதும் வலிமை இருக்காது.

இது உலக சோசலிச வலைத் தள எச்சரிக்கையான, அமெரிக்க கார்த் தொழில் பிரிவில் இருக்கும் நெருக்கடி அமெரிக்க ஆளும் உயரடுக்கினால் பயன்படுத்தப்பட்டு தொழிலாள வர்க்கத்தை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் (UAW) மற்றும் பல தொழிற்சங்கங்கள் 1930 களில் நிறுவப்படுவதற்கு முன்பு இருந்த மோசமான நிலைமைக்கு தள்ளிவிடும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

1980ல் கிறைஸ்லர் பிணை எடுப்பின்போதும், PATCO விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் 1981ல் நடந்த போதும் ஊதியக் குறைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உடைக்கும் அலைகள் 1980, 1990களில் அலையென வந்ததுபோல், முதலாளித்துவ முறை உலகளவில் உடையும் தன்மை இருக்கையில், தற்போதைய கார் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க உறவுகளில் அடிப்படை மாற்றத்திற்கு உந்துதல் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.

ஜி.எம், கிறைஸ்லர் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அமைப்பான ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் (UAW) மூன்று பெரிய நிறுவனங்களுக்கும் அரசாங்கம் பிணை எடுப்பு கொடுத்தலுக்கு பிரச்சாரம் செய்கையில், பல ஆயிரக்கணக்கான வேலைகள் அகற்றப்படல், ஊதிய, பிற நலன்கள் குறைக்கப்படுதல் ஆகியவற்றை ஒப்புக்கொண்டு தொழிற்சங்க உரிமை பெற்ற தொழிலாளர்களை அவ்வுரிமை இல்லாத தொழிலாளர்களுக்கு சமமாக கொண்டு வந்துவிட்டது. வேலைநிறுத்தங்கள் தடை, பணி நிறுத்தம் ஆகியவை பற்றிக் கூறப்பட்டுள்ள விதி பற்றி இது ஒரு சொல்கூட எதிர்த்துக் கூறவில்லை.

இந்த கார் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்கு முற்றிலும் மாறான வகையில், வேலைநிறுத்தங்கள் மீதான தடையை தான் கார்த் தயாரிப்பு முதலாளிகள் மற்றும் வரவிருக்கும் ஒபாமா நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதை எதிர்க்கக் கூடிய தொழிலாளர்களை நசுக்கும் வழிவகையாக UAW அதிகாரத்துவம் வரவேற்றுள்ளது.

டெட்ரோயிட் கார் கண்காட்சி ஒன்று ஜெனரல் மோட்டார்ஸ் உயர் நிர்வாகியான ரிக் வாகோனருடன் கடந்த வியாழனன்று நடத்தப்பட்டபோது, UAW இன் தலைவர் ரோன் கெட்டில்பிங்கர் NBC-TV "Today Show" நிகழ்ச்சி அமைப்பாளரிடம் தொழிற்சங்கம் நிறுவனங்களை "கூடுதல் போட்டித் தன்மை வாய்ந்ததாக செய்வதற்கு" இந்த வாரம் ஆரம்பித்துள்ள டெட்ரோயிட் கார் தொழிலாளர்களுடனான தற்போதைய தொழிற்சங்க ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் "மாற்றத்தை" கொண்டுவர உறுதியாக உள்ளது என்று கூறினார். UAW தலைவர், சங்கம் ஏற்கனவே ஊதிய வெட்டுக்களை ஒப்புக் கொண்டுவிட்டது என்றும் பணிவித மாற்றங்கள் UAW தொழிலாளர்களை டொயோடாவால் செயல்படுத்தப்படும் அமெரிக்காவில் இருக்கும் ஆலைகளில் உள்ள தொழிற்சங்கத்தில் சேராத தொழிலாளர்களைவிட போட்டித் தன்மைக்கு தயாரித்துள்ளது என்றும் கூறினார்.

தன்னுடைய பங்கிற்கு வாகோனர் UAW தொழிற்சங்கத்தை பாராட்டினார்; "நாம் ஒன்றாகப் பேசி தேவையான மாறுதல்களை செய்யமுடியும் என்று நம்புவதாக" அவர் கூறினார். இன்னும் இழப்புக்களை கொடுப்பதற்கு ஈடாக UAW அதிகாரத்துவம் ஜெனரல் மோட்டார்ஸின் இயக்குனர் குழுவில் ஒரு இடம் கேட்பதாகவும் தற்போது அது கொண்டுள்ள GM பங்குகளில் கூடுதல் எண்ணிக்கையை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் எதிர்ப்பின் மிக அடிப்படையான வடிவமைப்பின் மீதான தடையை அரசாங்கம் கொண்டுவருவதை ஏற்கும் ஒரு அமைப்பு, அதையொட்டி தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு அது காட்டும் அடிப்படை எதிர்ப்பைத்தான் நிரூபணம் செய்கிறது. UAW கார்த்தயாரிப்பு நிறுவனங்களின் "பிணை எடுப்பு" என அழைக்கப்படுதவதற்கு உடந்தையாக இருத்தல், தொழிலாளர்களை வறிய நிலைக்குத் தள்ளுதல், அவர்களுடைய வேலைநிறுத்த உரிமையை அகற்றுதல் என்பதவை UAW மற்றும் அமெரிக்க வணிகத் தொழிற்சங்கங்கள் அனைத்தின் முழுக் கொள்கையின் விளைவு மட்டுமல்லாது, பல தசாப்தங்களாக அவர்கள் கடைப்பிடித்த அரசியல் நிலைப்பாட்டின் அதியுச்ச நிலையாகும். UAW அதிகாரத்துவம் உண்மையான தொழிலாளர் அமைப்பாக இருக்கின்றது என்று இந்நிலையில் வாதிடுவது தன்னையே ஏமாற்றுக் கொள்ளுதல், வேண்டுமென்றே போலித்தனத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றிற்கு ஒப்பாகும்.

மூன்று முழு தசாப்தங்களாக UAW தன்னுடைய முயற்சிகளை வேலைகள் அழிப்பு, வாழ்க்கைத் தர வீழ்ச்சி, பணிநிலைகள் வீழ்ச்சி இவற்றிற்கு எதிராக கார்த் தொழிலாளர்கள் ஈடுபடும் போராட்டங்களை தகர்க்கும் முயற்சிகளில்தான் முக்கியத்தை காட்டியுள்ளது; இதை தொழிலாளர்-நிர்வாகம் "பங்காளித்தனம்", "அமெரிக்கப் பொருட்களை வாங்குக" என்ற தேசியவெறி உரை ஆகியவற்றின் மூலம் செய்கிறது. தன்னுடைய உறுப்பினர்களிடையே எஞ்சியிருக்கும் அனைத்து வர்க்க முழு உணர்வையும் அழித்துவிடத்தான் இது வேண்டும் என்றே முயல்கிறது; இதன்மூலம் அது பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமான பிணைப்பை கொள்ள முடியும். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீன பங்கை நினைத்தும் பாராத நபரும், உலகத்தையே கார் தயாரிப்பு முதலாளிகளின் இளைய பங்காளி என்ற நிலைப்பாட்டில் பார்க்கும் கெட்டில்பிங்கரின் வடிவத்தில் நாம் UAW இன் சீரழிவு மற்றும் மாற்றத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டைத்தான் காண்கிறோம்.

இந்த இழிசரிவின் வேர்கள் UAW ன் ஆரம்பகாலங்களுக்கு பின்னோக்கி செல்கின்றன; அப்பொழுது இது 1930 களில் பெரும் வேலை நிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் ஆகியவற்றிற்கு தலைமை தாங்கி வழிநடத்திய இடதுசாரிப் போராளிகள் பலருக்கும் உணர்வூட்டியிருந்த முன்னோக்கான சோசலிசத்திற்காக போராடுதலை நிராகரித்தது. வால்டர் ரூதர் மற்றும் பிற UAW தலைவர்கள் ஒரு தொழிற்கட்சி கட்டமைப்பதற்காக பரந்த கோரிக்கைகளை எதிர்த்து புதிதாக நிறுவப்பட்ட தொழிற்சங்கங்களை ரூஸ்வெல்ட் நிர்வாகம், ஜனநாயகக் கட்சி இவற்றுடன் பிணைந்து, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீன அரசியல் இயக்கம் வளர்ச்சியுறாமல் தடுத்தனர்.

வர்க்க கூட்டுழைப்பு மற்றும் இலாபமுறைக்கு ஆதரவு என்ற முன்னோக்கு இரண்டாம் உலக போருக்கு பின்னர் தொழிற்சங்கங்களில் பலர் கம்யூனிச எதிர்ப்பு களையெடுப்பில் இழிந்த முறையில் அகற்றப்பட்டதில் இழிந்த வெளிப்பாட்டை கண்டது. இது UAW அதிகாரத்துவத்தின் பிந்தைய காட்டிக்கொடுப்புக்களுக்கு அரங்கு அமைத்துக் கொடுத்து, இறுதியில் தொழிற்சங்க சரிவிற்கும் வழிவகுத்தது. அமெரிக்க தொழில் துறை உலகச் சந்தையில் மேலாதிக்கத்தை தொடர கார் தொழிலாளர்களின் விதியையும் அத்துடன் பிணைத்தபின், UAW இடம் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறைக்கு விடை ஏதும் இல்லை; மேலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைமை சரிவிற்கும் விடை இல்லை; இதையொட்டி ஆசிய, ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் பெருகிய முறையில் போட்டிக்குள்ளானபோது அதற்கு விடையிறுக்கும் வகையில் நிர்வாகத்தின் செலவினக் குறைப்புக்களை செயல்படுத்தும் தன்மையைத்தான் கொண்டது.

பல ஆண்டுகள் UAW உடைய "புதிய வழிகாட்டி நெறிகள்" ஆரம்பித்து "ஒற்றுமைக்கான வீரர்கள்" எனப்படுதல் வரையிலான பல பிரிவுகளும் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் "இடது" சந்தர்ப்பவாத அமைப்புக்களில் இருந்தவர்களும் கார் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை UAW வடிவமைப்பிற்குள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளன. UAW கொள்கைகளினால் கார்த் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட பேரழிவுகளில் இருந்து அவர்கள் எந்த படிப்பினையையும் கற்றுக்கொள்ளவில்லை; மேலும் கீழிருந்து அழுத்தத்தின் மூலம் பெருநிறுவன மற்றும் அதிகாரத்துவ அமைப்புக்கள் சாதாரண தொழிலாளர்கள் நலன்களுக்கு பாடுபடமுடியும் என்ற கூற்றையும் முன்வைத்துள்ளன.

இது ஒரு பொய்யாகும். கார் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை காக்கவும், வாழ்க்கைத் தரங்களை காக்கவும் நடத்தும் போராட்டம் எதுவும் உடனடியாக UAW க்கு எதிரான மோதலுக்கு கொண்டுவருவதையும், அதனால் அதிலிருந்து அவசியமாக உடைத்துக்கொண்டுவரவதற்கும் தொழிற்சாலை, பணியிட குழுக்கள் உள்ளடங்கலான புதிய வகைப் போராட்டத்தை கட்டுவதற்கான தேவையை முன்வைத்தது.

தொழிலாளர்கள் இயக்கத்தை புதுப்பித்தல் என்பது இப்பொழுதுள்ள தொழிலாள வர்க்கத்தின் நடைமுறை, அரசியல், தத்துவ உணர்வு ஆகியவற்றில் இருந்து முற்றிலும் மாறிய தன்மையில்தான் இயலும்.

கார்த் தொழிலாளர்கள் பெருநிறுவனங்கள், அரசாங்கங்ம், மற்றும் UAW இன் மிரட்டலை நிராகரித்து, போராளித்தன எதிர்ப்பிற்கு தயாரிக்க வேண்டும்; அதில் பெரும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை பணிநீக்கங்கள், ஆலைமூடல்கள், ஊதியக் குறைப்புக்கள், நலன்கள் வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்பட வேண்டும். அத்தகைய போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் அடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படவேண்டும்; அப்போராட்டம் வேலைகள் பாதுகாப்பிற்காக இருக்கும் என்பதுடன் வீடுகள் ஏலத்திற்கு விடப்படல், முக்கிய சமூக நலன்கள் பாதுகாப்பை அகற்றுதல் இவற்றிற்கு எதிராகவும் இருக்கும்.

வரவிருக்கும் ஒபாமா நிர்வாகம், முந்தைய குடியரசுக் கட்சி நிர்வாகத்தை போலவே, அமெரிக்க நிதிய உயரடுக்கின் நலன்களுக்குத்தான் செயல்படும்; அது கார்த் தொழிலில் இலாபத்தை புதிப்பிக்க நிரந்தரமாக தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களை குறைப்பதின் மூலம் முயலவேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டது. பொருளாதார நெருக்கடியில் தங்கள் நலன்களை காக்க விழையும் கார்த் தொழிலாளர்கள், ஜனநாயகக் கட்சியுடன் உடைத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கான பெரும் அரசியல் கட்சி ஒன்றை கட்டமைக்க வேண்டும்.

இதன் பொருள் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பது ஆகும்; இதுதான் தேசியவாதத்தை நிராகரித்து ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடுகிறது. இதில் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கார்த்தொழில் தேசியமயமாக்கப்படுவதும், முழுப் பொருளாதாரமும் தனியார் இலாபத்திற்காக என்று இல்லாமல் மனிதத்தேவைக்கு ஏற்ப உற்பத்தி முறையை மறுசீரமைத்தலும் அடங்கும்.