World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

The crisis in eastern Europe and the lessons of 1989

கிழக்கு ஐரோப்பிய நெருக்கடியும் 1989ம் ஆண்டின் படிப்பினைகளும்

By Peter Schwarz
26 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஐரோப்பாவில் 1989ம் ஆண்டு ஆரம்பத்தில் உறுதியாக அதிகாரத்தில் நிலைத்திருந்து போல் காணப்பட்ட ஸ்ராலினிச ஆட்சிகளை பரந்த மக்கள் எதிர்ப்பு அலைகள் அடித்துச்சென்றன. ஜூன் மாதம் சொலிடாநோஸ்க் (Solidarnosc) போலந்தில் பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி அடைந்தது; அக்டோபர் மாதம் ஹங்கேரி ஒரு முதலாளித்துவ அரசியலமைப்பை ஏற்றது. நவம்பர் மாதம் பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டது; பல்கேரியாவில் ஸ்ராலினிச ஆட்சி அகற்றப்பட்டது. இதை அடுத்து செக்கோஸ்லோவாக்கிய அரசாங்கம் வீழ்ச்சி அடைந்தது; ருமேனியாவில் ஸ்ராலினிச சர்வாதிகாரி ஷெவ்ஷெஸ்கோ (Ceausescu) ஒரு மரணப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த அரசியல் நிலஅதிர்வுகளை கட்டவிழ்த்த இயக்கங்கள் ஒரு பரந்த, ஆனால் பல்தரப்பட்ட சமூக அடித்தளங்களை கொண்டிருந்தன. அதிக ஜனநாயகம், சிறந்த வாழ்க்கை நிலைகள் ஆகியவற்றிற்கான விருப்பத்தால் அவை உந்துதல் பெற்றிருந்தபோதிலும் அவை இந்த இலக்குகளை எப்படி அடைவது என்பது பற்றித் தெளிவாக அறிந்திருக்கவில்லை. மக்களின் மிகப் பெரும் பெரும்பான்மையை கொண்டிருந்த தொழிலாள வர்க்கம் சுயாதீன முன்னோக்கு எதையும் கொண்டிருக்கவில்லை. பல தசாப்தங்கள் அரசியலில் ஆளும் அதிகாரத்துவத்தால் அரசியல் ஒடுக்குமுறைக்குள்ளாகியிருந்ததாலும் மற்றும் ஸ்ராலினிசத்தால் மார்க்சிசம் திரிக்கப்பட்டிருந்தாலும் தொழிலாள வர்க்கம் உண்மையான சோசலிச மரபுகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இச்சூழ்நிலையில், ஒரு சிறுபான்மை முதலாளித்துவத்தை புனருத்தானம் ஆரம்ப முயற்சியை எடுத்துக் கொண்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, "சோசலிசத்தின் தோல்வியை" பறையறிவித்து, தங்கள் சலுகைகளை பாதுகாத்துக்கொள்ளும் முறையில் தேசியமயமாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் பெரும் பிரிவுகளை தங்களுடைய தனிச் சொத்தைப் போல் எடுத்துக் கொண்டனர். பெரும்பான்மையான மக்கள் இதற்கு உயர்ந்த விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. சமூக வாழ்வு கிழக்கு ஐரோப்பா முழுவதும் வேலையின்மை, பெருகிய முறையில் வறுமை, உள்கட்டுமானம், சுகாதாரம், கல்வி முறைகளில் அழிவு மற்றும் இழந்த சமூக சமத்துவமின்மை ஆகியவற்றினை கூறுபாடுகளாகக் கொண்டது.

இப்பொழுது ஸ்ராலினிச ஆட்சிகள் அகற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின்னர், புதிய எதிர்ப்பு அலைகளுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. சமீபத்திய நாட்களில் லாட்வியா, லிதுவேனியா மற்றும் பல்கேரியாவில் தீவிர மோதல்கள் வெளிப்பட்டுள்ளன.

ஜனவரி 13ம் தேதி லாட்வியாவின் தலைநகரான ரீகாவில் 10,000 மக்கள் கூடி அப்பட்டமான திறமையின்மை மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பனிக்கட்டிகளை எறிந்தனர்; போலீஸ் கூற்றின்படி ஒரு சில எரிபொருள் நிறைந்த போத்தல்களும் எறியப்பட்டன. இதற்கு போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளால் பதிலளித்ததுடன், 126 பேர் கைதுசெய்யப்பட்டனர்; 28 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமுற்றனர்.

ஒரு சில நாட்களுக்கு பின்னர், இதே போன்ற காட்சிகள் அண்டை நாடான லிதுவேனியாவிலும் நடைபெற்றன. தலைநகரான வில்நியஸில் ஒரு தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, எதிர்பாளர்கள் பனிக்கட்டிகள், முட்டைகள், போத்தல்கள் மற்றும் கற்களை நாட்டின் பாராளுமன்றத்தின் மீது எறிந்தனர். போலீசார் அதை கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு, ரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றால் எதிர்கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சங்கிலித்தொடர் போன்ற எதிர்விளைவு பற்றி அச்சப்படுகின்றது. பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: "பிரஸ்ஸல்ஸில் மக்கள் எதிர்ப்புக்கள் முழுபகுதியிலும் பரவக்கூடும் என்ற பெருகிய கவலை உள்ளது; அங்குள்ள பல அரசாங்கங்ககள் அங்கு ஆட்டம் கண்டுள்ள கூட்டணி ஆட்சி புரிவதுடன் மிகச்சிறிய பெரும்பான்மையைத்தான் கொண்டிருக்கின்றன.

இந்தக் கவலைகள் முற்றிலும் உண்மையானவைதான். சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி கிழக்கு ஐரோப்பாவிற்கு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இது தேசியப் பொருளாதாரங்களை சிதைத்துள்ளது மட்டுமல்லாமல், இந்நாடுகளில் முதலாளித்துவ முறை புனருத்தானம் செய்யப்பட்டதுடன் பிணைந்திருந்த அவற்றின் சிந்தனை கருத்தாய்வுகளையும் தகர்க்கின்றது.

பொருளாதார வளர்ச்சில் ஒப்புமையில் அதிகவீத வளர்ச்சியும், வெளிநாட்டு முதலீடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவு மற்றும் ஒரு மத்தியதர வர்க்க அடுக்கின் சமூக உயர்ச்சி ஆகியவை ஆரம்பகால இடர்பாடுகளுக்கு பின்னர் பொருளாதார மற்றும் சமூக நிலைமை முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்பொழுது இந்தப் போலித் தோற்றங்கள் சிதைந்துள்ளன. சர்வதேச பொருளாதார நெருக்கடி மிருகத்தனமான முறையில் கிழக்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணித்தனத்தையும், பகுதி குற்றத்தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகால முதலாளித்துவ "மறு கட்டமைப்பு" என்றது மலைபோன்ற கடன்களை கொடுத்துள்ளதுடன் பல நாடுகளிலும் திவால்தன்மையையும் கொடுத்துள்ளது.

சர்வதேச நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டி நல்ல இலாபத்தை ஈட்டின; பொருட்களின் தேவை சுருங்குகையில் இப்பொழுது பாரிய வேலைக்குறைப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் மிக அதிக இலாபங்களை ஈட்டிய மேற்கு ஐரோப்பிய வங்கிகள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்க சொத்துக்களை தனியார்மயமாக்கியதில் கொழுத்த செல்வத்தை பெற்ற ஆளும் உயரடுக்குகள் இப்பொழுது மக்கள் இந்நெருக்கடிக்கான விலையைக் கொடுக்குமாறு செய்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் அவை இவ்வாறு செய்கின்றன. லாட்வியாவில் நடந்த எதிர்ப்புக்கள் சர்வதேச நாணய நிதிய நிதியுதவியின் நேரடி விளைவு ஆகும். அது கடினமான சிக்கன நடவடிக்கைகளுடன் பிணைந்துள்ளது. லாட்வியப் பொருளாதாரம் வரும் ஆண்டு குறைந்தது 5 சதவிகிதக் குறைப்பை காணும் என்றும் வேலையின்மை 10 சதவிகிதம் பெருகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாளித்துவமுறை புனருத்தானம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும், நெருக்கடியை சமாளிக்கக்கூடிய திறன் படைத்த அல்லது நின்றுபிடிக்கக்கூடிய எவ்வித அமைப்பும் தோன்றவில்லை. மேற்கு ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் திட்டமிட்டபடி கிழக்கு ஐரோப்பாவை சுரண்டி, சேதப்படுத்தியுள்ளதுடன், உள்ளூர் உயரடுக்குகள் இடைத்தரகர்களாக செயல்பட்டு கொள்ளையில் தங்கள் பங்கை எடுத்துக் கொண்டன. இப்பொழுது நிதிய மூலதனம் திரும்பப் பெறப்படுவதானது அரசாங்கங்களை மட்டுமல்லாது சாதாரண மக்களையும் மலை போன்ற கடனில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரிய நாளேடான Kurier கொடுத்துள்ள தகவல்படி, கிழக்கு ஐரோப்பிய வீடுகளில் வருமானத்தில் 30 சதவிகிதம் கடன்களை திருப்பிக் கொடுப்பதில் பிணைந்துள்ளது. இந்த சதவிகிதம் உக்ரைன், ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் இன்னும் அதிகமாக உள்ளது. யூரோப் பகுதி நாடுகளில் இதற்கு ஒப்புமையில் இருக்கும் சதவிகிதம் 10 என்று உள்ளது.

தேசிய வரவுசெலவுத்திட்டங்களும் பாரிய முறையில் கடனில் ஆழ்ந்துள்ளன. உக்ரைனில் நிலைமை மிக மோசமான உள்ளது; இந்நாட்டில் 46 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். நாடு திவால்தன்மையை எதிர்கொள்ளுகிறது; புதிய கடன்களை மிக அதிக வட்டிவிகிதத்தில்தான் பெற முடிகிறது. உக்ரைனிய அரசாங்க பத்திரங்கள் 27 சதவிகித இலாபத்தை வாங்குவோருக்கு கொடுக்கின்றன; நாணயம் தடையின்றி வீழ்ச்சியடைந்து வருகிறது. உக்ரேன் நாணயமான Hrywnja அதன் மதிப்பில் 30 சதவிகிதத்தை கடந்த மூன்று மாத காலத்தில் இழந்துவிட்டது. தொழில்துறை உற்பத்தி டிசம்பர் மாதம் மட்டும் 27 சதவிகிதம் சரிந்துவிட்டது.

இதற்கிடையில், மேற்கு ஐரோப்பிய வங்கிகள் இக்கொந்தளிப்பில் தாமும் அகப்பட்டுக் கொண்டுவிடுவோமா என்ற கவலையில் உள்ளன. கிழக்கு ஐரோப்பா முதலீட்டார்களுக்கு பெரும் ஆபத்தை கொடுக்கக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் தற்பொழுது கூறுகின்றனர். ஆஸ்திரிய நிதிய நிறுவனங்கள் குறிப்பாக ஆபத்திற்கு உட்பட்டுள்ளன. அவை 224 பில்லியன் யூரோக்களை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கடனாக கொடுத்துள்ளன. இது ஆஸ்திரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 78 சதவிகிதத்திற்கு சமம் ஆகும். மற்ற ஐரோப்பிய வங்கிகளான இத்தாலிய Unicredit, ஜேர்மனிய Hypo Vereinsbank (அதன் துணை வங்கியான பாங்க் ஆஸ்திரியா மூலம்), பிரான்சின் Societe General, பெல்ஜியத்தின் KBC ஆகிவை அனைத்தும் இப்பகுதியில் பலத்த தொடர்புகளை கொண்டுள்ளவை ஆகும்.

ஒன்பது பெரிய வங்கிகள் ஒன்று சேர்ந்து ஒரு செல்வாக்குக் குழுவை ஏற்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கும் அழுத்தம் கொடுத்து கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆதரவு கொடுக்க முயல்கின்றன. இந்த வங்கிகள் குறிப்பாக தங்கள் முதலீடுகளுக்கு உத்தரவாதங்களை கோருகின்றன. கிழக்கு ஐரோப்பிய மக்கள் ஐரோப்பிய ஒன்றிய பணத்தில் ஒரு சென்டைக் கூட கண்ணால் காணமாட்டார்கள். மாறாக மேற்கு வங்கிகளின் பிணை எடுப்பிற்கான விலையை அவர்கள் ஊதியக் குறைப்புக்கள் மற்றும் வாழ்க்கை, சமூகத்தரங்கள் குறைப்புக்கள் என்ற விதத்தில் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

முதலாளித்துவ புனருத்தானம் செய்யப்பட்டதால் பெற்ற ஆதாயங்களும் இழக்கப்பட்டுவிட்டன என மேற்கு ஐரோப்பிய வங்கிகள் அஞ்சுகின்றன. "இந்நாடுகளை கம்யூனிசத்தில் இருந்து மீட்க எங்களில் பல நாடுகள் ஐம்பது ஆண்டுகள் போராடின; இப்பொழுது ஒரு தடையற்ற சந்தை முறை அப்பகுதியில் இருக்கையில் நாங்கள் அவர்களை தனியேவிட்டுவிட்டு சென்றுவிட முடியாது." என்று Austrian Raiffeisen International உடைய தலைவரான Herbert Stepic பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார். அவருடைய வங்கி ஒன்பது வங்கிகளின் செல்வாக்குக் குழுவை ஒன்றுசேர்க்க முக்கிய பங்கை வகித்தது.

கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் தொழிலாள வர்க்கம் 1989ம் ஆண்டில் இருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் முதலாளித்துவ புனருத்தானவாதிகள் வெற்றி பெற முடிந்ததற்கு காரணம் தொழிலாளர்களிடையே சுயாதீனமான வேலைத்திட்டம் ஏதும் இல்லாததுதான். இதனுடைய விளைவுதான் தற்போதைய பேரழிவுதரும் நிலைமையாகும்.

அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முதலாளித்துவ புனருத்தானம் பற்றி பலமான எச்சரிக்கைகளை கொடுத்திருந்தது; "தொழிலாள வர்க்கம் Honecker, Mielke, Krenz [கிழக்கு ஜேர்மனியின் தலைவர்கள்], முழு ஸ்ராலினிச மாபியா கும்பல்களையும் தூக்கிவீசியது உற்பத்தி நெம்புகோல்களை Daimler, Thyssen, Deutsche Bank யிடம் கொடுப்பதற்காக அல்ல. இந்த முதலாளித்துவ நலன்கள்தாம் இரு உலகப் போருக்கு வழிவகுத்து தொழிலாளர்களுக்காக கடும் சிறை முகாம்களையும் நிறுவின." என்று Bund Sozialistischer Arbeiter (இன்றைய ஜேர்மனிய சோசலிச சமத்ததுவக் கட்சி) பெப்ருவரி 1990ல் வேலைத்திட்டம் பற்றிய அறிக்கையில் கூறியிருந்தது.

நாங்கள் ஸ்ராலினிசம்தான் சோசலிசத்தின் தவிர்க்க முடியாத விளைவு என்ற கூறப்பட்ட இகழ்வான பொய்யையும் எதிர்த்தோம்: "ஸ்ராலினிசத்தின் வரலாறு சோசலிசத்தின் பெயரால் நடத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிகப் பெரிய குற்றங்களின் வரலாறாகும். கிழக்கு ஐரோப்பாவில் ஆட்சிச் சரிவு என்பது ஸ்ராலினிஸ்டுக்களை நிராகரித்துள்ளது மட்டும் இன்றி அனைத்து கம்யூனிச எதிர்ப்புக்களையும் நிராகரித்துள்ளது. தோற்றது சோசலிசம் அல்ல, ஸ்ராலினிசம்தான்."

தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தோம். "தொழிலாள வர்க்கத்தின் பெரும் தியாகத்தில் நிறுவப்பட்ட உற்பத்தி வசதிகள் முதலாளித்துவத்தினரின் விருப்பத்திற்கு விடப்படலாகாது. அரசாங்க சொத்துக்கள் ஒட்டுண்ணித்தன ஸ்ராலினிச சமூகப்பிரிவின் கைகளில் இருந்து அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். ... தொழிலாளர் குழுக்கள் பொருளாதாரத்தின்மீது கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும்; ஜனநாயக வழிப்படி திட்டமிட்ட பொருளாதார முறையை மேலிருந்து கீழ் வரை மறு சீரமைக்க வேண்டும்; அதுதான் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் ஆகியோரின் தேவைகளை பூர்த்தி செய்யும்''.

இறுதியாக, இந்த இலக்குகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட செயற்பாட்டின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். "கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ புனருத்தானம் மேற்கு ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்திற்கு மோசமான விளைவுகளை கொடுக்கும்; இது முதலாளித்துவத்தினரை கிழக்கில் இருக்கும் தகுதி பெற்ற தொழிலாளர்களை குறைவூதிய தொகுப்பாக பயன்படுத்த அனுமதிக்கும்; இது மேற்கில் இருக்கும் தொழிலாளர்களை சுரண்டவும் பெரிதும் பயன்படும்... தற்பொழுதைய நிலைமை முன்னைரைக் காட்டிலும் இன்னும் அவசரமான முறையில், எல்லைகளை கடந்து அனைத்து தொழிலாளர்களையும் திரட்டி முதலாளித்துவத்தையும், ஸ்ராலினிசத்தையும் தூக்கிவீசுவதற்கான ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான கடமையை முன்வைக்கின்றது.."

இந்த முன்னோக்கு இன்று மிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு ஒன்றுபடுதல் என்பதுதான் ஒரே முற்போக்கான மாற்றீடு ஆகும்; அதுதான் 1914, 1939களில் ஐரோப்பாவை மீண்டும் போருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இட்டுச்சென்ற நிகழ்வுகள் மீண்டும் வராமல் தடுக்கக்கூடியது ஆகும்.