World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India bans CPI (Maoist) under draconian "anti-terror" law

இந்தியா கடுமையான "பயங்கரவாத-எதிர்ப்பு" சட்டத்தின்கீழ் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியை தடை செய்கிறது

By Keith Jones
26 June 2009

Use this version to print | Send feedback

இந்தியாவின் காங்கிரஸ்-கட்சித் தலைமையில் உள்ள மத்திய அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவிஸ்ட்) ஐ, கடந்த டிசம்பர் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் விரைவாக அது இயற்றியிருந்த, கடுமையான "பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ்" ஒரு "பயங்கரவாத" அமைப்பு என்று அறிவித்துள்ளது.

இச்சட்டம் சிவில் உரிமைகள் அமைப்பினால் பரந்த முறையில் கண்டிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன, ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர் யார் என்பது பற்றி பரந்த, தெளிவற்ற வரையறைகளின்கீழ் இச்சட்டம் வெளிவந்துள்ளது. ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு அரசியல் பரிவுணர்வு காட்டும் கருத்தை வெளியிடுபவர்கள் அல்லது "அடிப்படை பணிகளுக்கு" இடையூறு செய்யும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுபவர்கள் பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருக்கின்றனர் என குற்றச்சாட்டு பெறும் திறன் உள்ள அளவிற்கு இதன் வரையறைகள் கடுமையாக உள்ளன.

இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று கடந்த டிசம்பர் மாதம் ஏற்கப்பட்டது நீண்டகால நீதித்துறை கொள்கைகளை அகற்றியுள்ளது. இது அரசாங்கத்திற்கு சிலரை 180 நாட்கள் வரை எந்தக்க குற்றச்சாட்டும் இல்லாமல் காவலில் வைக்கவும், பயங்கரவாத செயல்களை கேமரா மூலம் விசாரிக்க இரகசிய சிறப்பு மன்றங்களை தோற்றுவிக்கும் அதிகாரத்தையும் கொடுக்கிறது (அதாவது பகிரங்கமாக, செய்தி ஊடகத்தின் கண்காணிப்பு இன்றி); இதைத்தவிர குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான், ஆயுதங்களுடன் பிடிபட்டால், தங்கள் நிரபராதி தன்மையை சட்டபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

திங்களன்று சுமத்தப்பட்ட தடையின் விளைவாக, இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் அல்லது அதன் சார்பில் செயல்படும் அமைப்பு என்று அரசாங்கம் எதைக் கருதினாலும் அவற்றில் உறுப்பினராக இருப்பது சட்ட விரோதம் ஆகும்; மாவோயிச CPI, அரசியலமைப்பின் கீழ் பாதுகாப்பு பெறும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் தடை செய்யபட்டுள்ளது; இதில் கூட்டம் போடுதல் ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல், அரசியல் தொடர்படைய விஷயங்களை சுற்றறிக்கைக்கு விடுதல் ஆகியவை அடங்கும்.

அரசாங்கத்தின் கருத்துப்படி, இந்தியாவின் 625 நிர்வாக மாவட்டங்களில் கிட்டத்தட்ட 180ல் நக்சலைட் எழுச்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் உட்பகுதியில் பொருளாதர வலிமையற்ற இந்தியப் பகுதிகளில் உள்ளனர்; அவற்றில் பெரும்பாலானவை பழங்குடி மக்கள் வசிக்கும் இடங்களாகவும் உள்ளன.

இந்திய செய்தி ஊடகம் மாவோயிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அரசாங்கம் தடைசெய்துள்ளதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு, 2004ல் ஒன்றாக சேர்ந்து வந்த மக்கள் யுத்தம் மற்றும் மாவோயிச இந்திய கம்யூனிஸ்ட் மையம் இரண்டும் முன்னரே மத்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவைதான் என்று கூறியுள்ளது.

"அது எப்பொழுதுமே ஒரு பயங்கரவாத அமைப்புத்தான்", "இன்று அந்த குழப்ப நிலை அகற்றப்பட்டுவிட்டது" என்று உள்துறை மந்திரி பழனியப்பன் சிதம்பரம் கூறினார்.

ஆனால் இந்திய அரசாங்கம் மாவோயிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற நக்சலைட் குழுக்களுக்கு எதிராக பெரிய இராணுவ-போலீஸ் தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பது பற்றி பிழைக்கிடமில்லாத அடையாளங்கள் உள்ளன.

இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் நக்சலைட்டுக்களை நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு ஆபத்தைக் கொடுப்பவர்கள் என்று பல முறையும் கூறியுள்ளார்.

இந்த மாதம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின் பாராளுமன்றம் முதல் தடவையாக கூட்டப்பட்டபோது அளிக்கப்பட்ட ஜனாதிபதி உரை அரசாங்கத்தின் முதல் முன்னுரிமையாக "உள்நாட்டுப் பாதுகாப்பு" இருக்கும் என்று அறிவித்தது. "பயங்கரவாதம் எங்கிருந்து தோன்றி வந்தாலும் சிறிதும் சகிப்புத் தன்மை அதன் மீது காட்டப்படாமல், அது அழிக்கப்படும். எழுச்சி மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை கையாள கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்."

ஜனாதிபதி உரைக்கு பின்னர் பாராளுமன்ற விவாதத்தின் முடிவில் பேசிய மன்மோகன் சிங் இந்த "இடதுசாரி தீவிரவாதத்திற்கு" எதிரான போராட்டம் இந்திய முதலாளித்துவத்தின் உந்துதலான வெளி முதலீட்டை ஈர்ப்பதுடன் பிணைக்கப்படும் என்றார்; நக்சலைட்டுக்கள் தீவிரமாக இருக்கும் பல பகுதிகளும் இயற்கை வளங்கள் செழித்தவையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

உண்மையில் நக்சலைட் எழுச்சியின் வளர்ச்சிக்கு காரணமாகும் காரணிகளில் ஒன்று, அரசாங்கம்-பெருவணிகம் ஆகியவை ஆதாரவளங்களை உறிஞ்சும் திட்டங்களுக்காக பழங்குடி மக்களுடைய மரபார்ந்த நிலங்களை பறிக்கும் முயற்சிகளுக்கு அவர்களின் எதிர்ப்பும் அடங்கும்.

சமீபத்திய வாரங்களில் இந்திய செய்தி ஊடகம் சிதம்பரத்தின் வழிகாட்டலில் உள்துறை அதிகாரிகள் ஒரு முக்கியமான, பருவமழைக்கு பின் துணை இராணுவ CRPF (Central Reserve Police Force), மாநில பாதுகாப்பு பிரிவுகளும் மாவோயிச CPI மற்றும் பிற நக்சலைட் குழுக்களுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ச்சியான கிழக்கு மாநிலங்கான ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா ஆகியவற்றில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கைகளுக்கு "துல்லியமாக்கல்" வேலைகளை செய்துவருவதாக பல தகவல்களைக் கொடுத்தது.

மாவோயிச செல்வாக்கு மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியான லால்கரில் பெருகியுள்ளது பற்றி செய்தி ஊடக பரபரப்பை ஒட்டி, மேற்கு வங்கத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையிலான அரசாங்கம் கடந்த வாரம், அங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த CRPF ஐ அழைத்தது. லால்கர் மக்கள் நீண்டகாலமாக மேற்கு வங்க அரசாங்கத்திற்கு எதிராக பல புகார்களை கொண்டுள்ளனர்; அவை பல காலமாக இருக்கும் வறுமை மற்றும் நிர்வாக ஊழல் ஆகியவற்றினால் விளைந்தவை. ஆனால் இப்பகுதியில் நக்சலைட் செல்வாக்கு விரிவைடைந்துள்ளதற்கு கிரியா ஊக்கி, உள்ளூர் மக்கள் மீது போலீசார் விரித்த கடுமையான வலையை ஒட்டி நடந்தவை ஆகும்; அதற்குக் காரணம் லால்கர் வழியே பயணித்தபோது மேற்கு வங்கத்தின் முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மாவோயிச குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக இருந்ததுதான்.

மேற்கு வங்க அரசாங்கம் ஆரம்பத்தில் மாநில சட்டத்தின்கீழ் இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியை தடைக்கு உட்படுத்துமாறு கோரிய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கோரிக்கையை அலட்சியப்படுத்தியது; அத்தகைய நடவடிக்கை நக்சலைட் எழுச்சிக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு தடையாக இருக்கும் என்று காரணம் கூறியது. ஆனால் சிதம்பரம் CPI மாவோவிஸ்ட் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்த பின்னர், சிபிஐ மார்க்ஸிஸிட் கட்சியின் அரசியற்குழு உறுப்பினராகவும் இருக்கும் பட்டாச்சார்ஜி மேற்கு வங்க அரசாங்கம் தடையை செயல்படுத்தும் என்று மத்திய அரசாங்கத்திற்கு விரைவாக உறுதி கொடுத்தார். இது வியப்பை தரவில்லை. CPI மார்க்ஸிஸ்ட் அல்லது CPM பல தசாப்தங்களாக முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தைத்தான் இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றில் நிர்வாகம் செய்து வருகிறது; மேலும் கடந்த தசாப்தத்தில் இன்னும் வலதிற்கு பாய்ந்து, இந்திய முதலாளித்துவத்தின் பொருளாதார சீர்திருத்த வேலைத் திட்டத்தை ஆக்கிரோஷமாக செயல்படுத்தி வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருவணிகத்திற்கு சிறப்புப் பொருளாதார பகுதிகள் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்களை எடுத்துக் கொள்ளுவதும் அடங்கியிருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்ம் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தை அதன் மாவோயிச எதிர்ப்புத் தாக்குலில் தொடர்புபடுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது; இது ஒரு குருதியை கொட்டி சமாதானத்தை அடைய விரும்பும் பிரச்சாரத்திற்கு சிறந்த அரசியல் மறைப்பைக் கொடுக்கும் என்று கணக்கிடுகிறது.

CPI (மாவோயிஸ்ட்) மற்றும் நக்சலைட்டுக்கள் மொத்தத்தில் ஒரு பிற்போக்குத்தன ஸ்ராலினிச சிந்தனைப்போக்கு ஆகும். இவை ஆயுதமேந்திய போராட்டங்களை ஒரு வழிபாட்டு தத்துவமாக செய்துள்ளன; ஒடுக்குபவர்களை "அழித்தலை" பெருமைப்படுத்துகின்றனர், அதாவது தவறாக நடக்கும் நிலப்பிரபுக்கள், ஊழல் மலிந்த உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகளை குறிப்பாகக் கொன்றுவிடுதல் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவை திருணாமூல் (அடிப்படை வேர்கள்) காங்கிரசின் தலைவர் மமதா பனார்ஜிக்கு உதவியுள்ளனர்; அவரோ நீண்டகாலமாக இந்து மேலாதிக்கவாத பாஜக கட்சிக்கு உற்ற நண்பராவார்; சிடுமூஞ்சித்தனமான வகையில் மேற்கு வங்கத்தின் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் நலன்களுக்கு வாதிடுபவராக தன்மை உருவகப்படுத்தி காட்டி வருகிறார். "சமூக பாசிசத்திற்கு" எதிராகப் போராடுதல் என்று கூறிக்கொண்டு, அவர்கள் பனார்ஜியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்து இடது முன்னணி அரசாங்கம் செயல்படுத்த விரும்பும் மூலதனச் சார்பு உடைய நிலப் பறிப்புக்களை தடுக்க முற்பட்டு, அதையொட்டி திருணாமூல் காங்கிரஸிற்கு உதவியுள்ளனர். இப்பொழுது திருணமூல் கட்சி காங்கிரஸுடன் பங்காளியாக இருந்து கடந்த மாதம் நடந்த தேசியத் தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் பெரும் வெற்றியைக் கண்டது.

1960 களுக்கு முன்பு இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பதிவுச்சான்றை CPI மாவோயிஸ்ட் கட்சி நிலைநிறுத்துகிறது; அதாவது ஸ்ராலினிச-மென்ஷிவிக் கோட்பாடான இரு கட்ட புரட்சிக்கு ஏற்ப, காங்கிரஸ் இந்தியாவின் ஜனநாயகப் புரட்சிக்கு தலைமையேற்க உரிமை உள்ள தலைமை என்ற அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சிக்குத் தாழ்த்தி வைத்ததாகும். அதன் பெயரே தெளிவாக்குவது போல, CPI மாவோவிஸ்ட் கட்சி மாவோ சே துங்கின் "பாதையை" ஆதரிக்கிறது; அவருடைய தேசியவாத -ஸ்ராலினிச அரசியல்தான் சீனா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மறுபடி சீரான உறவுகளைக் கொள்ளுவதற்கும், உலக முதலாளித்துவத்திற்கு முக்கிய தூணாக அது மாறியதற்கும் வழிவகுத்தது.

நக்சலைட்டுக்கள் சில நேரம் சடங்கு போல் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு பற்றி குறிப்புக்கள் கொடுத்தாலும், உண்மையில் அவர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் ஆழ்ந்த விரோதப்போக்கை கொண்டவர்கள். அவர்களுடைய "நீடித்த" விவசாயிகளை தளமாகக் கொண்ட "மக்கள் யுத்தம்" என்பது தொழிலாள வர்க்கத்தை வெறும் பார்வையாளர் பங்கில் இருந்துகிறது; அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டுள்ள விவசாயிகளின் புரட்சிகர ஆற்றலை அரசுடன் ஆயுதமேந்திய, தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களில் வீணடிக்கிறது.

ஆனால் நக்சலைட்டுக்கள் இப்பொழுது இந்திய அரசாங்கத்தால் பெரிய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் என்றால், அதற்குக் காரணம் இந்தியாவின் உழைப்பாளிகளில் மிக ஒதுக்கப்பட்ட வறிய பிரிவுகளில் சிலவற்றின் கருவியாக அவை மாறி, அவர்களுடைய வாய்ப்பின்மை மற்றும் அவர்களின் நிலங்கள் மீதான பெருகிய முறையிலான ஆக்கிரமிப்பு பற்றிய அவர்களின் சீற்றம், கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கருவியாகவும் ஆகியுள்ளதாகும்.

இரண்டு காரணிகள் இதில் முக்கியமாக உள்ளன

இந்திய முதலாளித்துவம் கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடரும், விவசாயப் பொருட்களின் விலையில் உதவி அளித்துவந்ததை தகர்த்தல், அரசாங்க நிதியங்களை விவசாயத்தில் இருந்து பெருவணிகம் கோரும் பெரும் திட்டங்களுக்கு மாற்றல், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களுக்கு போதிய நிதியை ஒதுக்காமை ஆகியவை உள்ளடங்கலான புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்தியதானது, கிராமப்புற இந்தியாவின்மீது பேரழிவு தரக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்திருத்தங்கள் முதலில் செயல்படுத்தப்பட்ட 1990களின் ஆரம்பத்தில் இருந்து இந்த தசாப்தத்தின் நடுப்பகுதிக்குள் கலோரி நுகர்வுகூட இப்பொழுது குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன;

இரண்டாவதாக, பாராளுமன்றத்தில் உள்ள ஸ்ராலினிச கட்சிகள் CPM, CPI மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை அதன் சொந்தத் திட்டத்தை சமூக நெருக்கடிக்கு விடைகாணும் வகையில் முன்வைக்க தடுக்கின்றன. மேலும் நிலப் பிரபுத்துவ மற்றும் காலனித்துவ அடக்குமுறை, நிலப்பிரபுத்துவ முறை, சாதியம் ஆகியவற்றின் மிச்சசொச்சங்கள் உள்ளடங்கலாக இந்திய முதலாளித்துவத்திற்கு எதிரான தாக்குதலில் இந்திய கிராமப்புற மக்களின் ஆதரவைத் திரட்டவும் மறுக்கின்றன;. ஸ்ராலினிசத் தலைமையிலான இடது முன்னணி எங்கு அது அதிகாரத்தை செலுத்திகிறதோ அங்கு அங்கு எல்லாம் முதலீட்டாளர் சார்பு கொள்கையை செயல்படுத்தியுள்ளது, புது டெல்லியில் தற்போதைய UPA ஆட்சிக்கு முன்பு நான்கு ஆண்டுகள் கொடுத்த ஆதரவு உள்ளடங்கலாக ஒரு வலதுசாரி அரசாங்கத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக மற்றொன்றிற்கு ஆதரவு கொடுத்துள்ளது.

நக்சலைட்டுக்கள் இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முடக்கத்திற்கு தங்கள் அளிப்பை கொடுத்து, அதை கைவிட்டுவிட்டது மட்டும் இல்லாமல், இந்தியாவின் காட்டுப்பகுதிகளில் கொரில்லா போர்முறையை கடைபிடித்து வருகிறது.

"நக்சலைட் பயங்கரவாதத்துடன்" போரிடுவதாக கூறிக் கொண்டு UPA அரசாங்கம் அரசாங்கத்தின் அதிகாரம் இந்திய கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலவற்றின்மீது மீண்டும் கட்டுப்பாட்டை கொண்டுவர, இரத்தம் சிந்தும் வலிமை மற்றும் கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. சிங்கே ஒப்புக் கொண்டுள்ளபடி, இதன் நோக்கம் முதலாளித்துவ வளர்ச்சி விரைவில் அடையப்படலாம் என்பது ஆகும்.

விசாரணை இன்றி தூக்கிலிடுதல், நபர்கள் காணாமற் போய்விடுதல், சித்திரவதை ஆகியவை அடங்கலான முறையான மனித உரிமைகள் மீறலுக்கு இழி பெயர் பெற்ற இந்தியாவின் பாதுகாப்பு படைகள், மேலும் எழுச்சியை அடக்குவதில், தேசிய இனக்குழு. அல்லது நக்சலைட் என்று எப்படி இருந்தாலும் முழு மக்கள் தொகுப்பையும் இலக்கு வைக்கிறது.

சட்டிஸ்கரில் உள்ள பாஜக மாநில அரசாங்கம் சல்வா ஜூடும் எனப்படும் மாவோயிச எதிர்ப்பு "விவசாயி குடிப்படை" அமைப்பை கள்ளத்தனமாக நிறுவியது; அது பல கொடுமைகளை செய்ததுடன் மாநில பாதுகாப்புப் படைகளுடன் சேர்ந்து கொண்டு நக்சலைட்டுக்களிடம் நட்பு கொண்டுள்ள கிராமங்கள் மீது திடீர்த் தாக்குதல்களையும் செய்துள்ளது.

இந்தியாவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின்கீழ் என்ன எதிர்பார்க்கப்படலாம் என்று அறியவும் வகையில் சட்டிஸ்கர் அரசாங்கம், ஒரு முக்கியமான மனித உரிமைகளுக்கு வாதிடுபவரும், ஒதுக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பிற்கு வகை செய்தவருமான டாக்டர் பினாயக் சென்னை, அவர் சல்வா ஜூடும் வன்முறைச் செயல்களைக் குறைகூறியதற்காக இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் அடைத்தது. சட்டிஸ்கரின் சிறப்பு பொது பாதுகாப்புச் சட்டம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சென் மாவோவிஸ்டுகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மனித உரிமைகள் அமைப்புக்கள் சர்வதேச அளவில் பிரச்சாரம் நடத்திய பின்னர்தான் இந்தியாவின் தலைமை நீதிமன்றம் கடந்த மாதம் சென்னை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.