World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The "left" and the US military offensive in Afghanistan

"இடதும்" ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தாக்குதலும்

By Joe Kishore
6 July 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க இராணுவமானது ஆப்கானிஸ்தானில் தெற்கு பகுதியிலுள்ள ஹெல்மாண்ட் மாநிலத்தில் அமெரிக்கா ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட, பெரிய தாக்குதலுக்கு மத்தியில் உள்ளது.

கிட்டத்தட்ட 4,000 அமெரிக்க கடற்படையினர் மற்றும் ஆப்கானிய இராணுவத்தின் 600 உறுப்பினர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆழ்ந்த விரோதம் காட்டும் பகுதிகளில் கட்டுப்பாட்டை எடுப்பதற்கான உந்துதலில் பங்கு பெற்றுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் கொடுத்த தகவல்படி, ஹெல்மாண்ட் மாநிலம் அமெரிக்க-நேட்டோ படைகள் மற்றும் அவற்றின் காபூலில் உள்ள கைப்பாவை அரசாங்கத்திற்கு வெகுஜன எதிர்ப்பு மையமாகிவிட்டது. "ஆப்கானிய மக்களின் உணர்வு தெற்கு ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் ஒரு வெகுஜன எழுச்சி என்ற விதத்தில் கூறப்படுகிறது." இங்கு "மக்கள் வெளித் துருப்புக்களுக்கு எதிராக தங்கள் வீடுகளை காக்க அல்லது வான்தாக்குதல்களில் உறவினர்களை இழந்ததின் கோபத்தை காட்டுவதற்கு ஆயுதங்களை எடுத்துவிட்டனர்" என்றும் செய்தித்தாள் குறிக்கிறது.

இது ஒபாமா நிர்வாகத்தின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் போர் விரிவாக்கம் என்பதின் பகுதியாக, முதல் முக்கிய தரைப்படை நடவடிக்கையாக பெரிய அளவில் அமெரிக்கத் தாக்குதல் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது; இது தாலிபன் போராளிகளை கொல்வதை மட்டும் நோக்கமாக கொண்டிராமல் சிவிலிய மக்களை அச்சுறுத்தல், ஒடுக்குதல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆப்கனிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கையுடன் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வாக பாக்கிஸ்தானிய அரசாங்கம் நாட்டின் எல்லையை ஒட்டி தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கிறது. ஞாயிறன்று பாக்கிஸ்தானிய போர் ஜெட் விமானங்கள் குறைந்தது 6 பேரை வடக்கு வசீரிஸ்தானில் ஒரு தாக்குதலில் கொன்றன; இது கடந்த வாரம் 15 பேரைக் கொன்ற ஒரு அமெரிக்க ட்ரோன் தாக்குதலை அடுத்து வந்ததாகும்.

ஆர்வெல்லிய சொல்லாட்சியைப் பயன்படுத்தி, ஒரு பிரிட்டிஷ் இராணுவச் செய்தித் தொடர்பாளர் வார இறுதியில் கூறினார்: "நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் இப்பகுதி முழுவதும் பாதுகாப்பை விரிவுடுத்துதல், அதையொட்டி உள்ளூர் மக்கள் சாதாரண வாழ்க்கையை அனுபவித்து மிரட்டல், வன்முறை இல்லாமல் வரவிருக்கும் தேர்தல்களில் பங்கு பெற வேண்டும் என்பதாகும்." இதேபோல் அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் தாக்குதலின் நோக்கம், அமெரிக்க படைகள் "அகற்றப்பட்டுவிட்ட" பகுதிகளில் இருக்கும் என்றும், ஆப்கானிய மக்களை "பாதுகாப்பதும்" ஆகும் என்று கூறியுள்ளனர்.

இவையெல்லாம் எதிர்ப்பை ஒடுக்கும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதை குறிக்கும் அலங்கார சொற்கள் ஆகும்; இவற்றில் இலக்கு வைக்கப்படும் படுகொலைகள், கூடுதலாக சிவிலிய மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறை, சோதனைச் சாவடிகள், அடையாள சோதனைகள், தேடல்கள் மற்றும் எதிர்ப்பில் தொடர்பு உடையவர் என்று சந்தேகிக்கப்படும் எவரையும் பரந்த அளவில் கைது செய்தல் ஆகியவை அடங்கும்.

ஹெல்மாண்டில் இருக்கும் மரைன்கள் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் பயன்படுத்திய வழிவகைகளையே கையாளும். பெரும்பாலான பிரிவுகளும் பல அதிகாரிகள், துருப்புகளும் அன்பர் என்ற இடத்தில் அமெரிக்க செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டிருந்தவர்கள் ஆவர். இந்த இடம் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு காட்டிய சுன்னி அரேபியர் மையமாகும்.

ஆப்கானிஸ்தானில் ஒபாமா நிர்வாகம் ஒரு புதிய போர்க் குற்றத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இத்தாக்குதல் அமெரிக்காவில் "இடது" என்று அழைக்கப்படுவதின் பாத்திரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஈராக்கில் போரை எதிர்த்த பல மத்தியதர வர்க்க அமைப்புக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் பின்னே ஊசலாடிச்செல்வதற்கு ஒபாமா நிர்வாகம், அற்றின் வாகனமாக ஆகியுள்ளது.

அமெரிக்க மக்களின் ஈராக் போருக்கு எதிரான எதிர்ப்புக்களை திட்டமிடுவதில் தொடர்பு கொண்டிருந்த முக்கிய அமைப்புக்களில் எதுவும் --United for Peace and Justice (UFPJ), மற்றும் ANSWER -- ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் போரை விரிவாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை திட்டமிடவில்லை. அப்படிப்பார்த்தால் அவை ஈராக்கிய ஆக்கிரமிப்பு தொடரப்படுவதற்கும் எதிர்ப்பு எதையும் காட்டவில்லை.

இந்த அமைப்புக்களும் இவற்றை உள்ளடக்கிய முன்னாள் முற்போக்கு, தாராளக் குழுக்களும் தம்மை பெருமளவில் ஒபாமாவிற்கு ஆலோசனை கூறும் அமைப்புக்களாக மாற்றிக் கொண்டுள்ளன--அமெரிக்க நலன்களை காப்பாற்றும் சில கொள்கைகளை ஆலோசனையாக கூறுதல், அல்லது அமெரிக்க மக்களிடையே போர், ஆக்கிரமிப்பிற்கு ஆதரவை கொடுக்கமாறு அறிவுறுத்துவது ஆகும்.

UFPJ தற்போதைய தாக்குதல் பற்றி ஏதும் எழுதவில்லை. ஆப்கானிஸ்தானை பற்றி அது கொடுத்த, இரு வாரங்களுக்கு முன் வந்த சமீபத்திய அறிக்கை, "ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் திட்டத்தை கோருக" என்று ஆதரவாளர்களுக்கு அழைப்பைக் கொடுத்திருந்தது. "வெளியேறும் மூலோபாயம்" காங்கிரசில் சமர்ப்பிக்கப்படுவதற்கு கைமாறாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு பல பில்லியன்களைக் கொடுத்திருக்கக்கூடிய அமெரிக்க பிரதிநிதிகள் மன்றத்தில் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தது (அது இறுதியில் தோல்வியுற்றது.) அந்த நடவடிக்கை போரை விரிவாக்கம் செய்யும் என்பதோடு மட்டும் இல்லாமல், மற்றொரு ஆறு மாதங்களுக்கு வெளியேறும் "திட்டம்" என்ற மூடிமறைப்பும் தேவைப்பட்டிருக்காது.

ஒபாமா தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்து Moveon.org என்னும் "இடது" வலைத் தளம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முற்றிலும் புறக்கணித்து, ஈராக் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுதல், ஆப்கானிஸ்தானில் போர் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு உட்குறிப்பாக ஆதரவையும் கொடுத்துள்ளது.

தன்னுடைய பங்கிற்கு Nation ஏடு தெற்கு ஆப்கனிஸ்தான்மீதான தாக்குதல் பற்றி மெளனமாக உள்ளது. வலைத் தளத்தின் முன் பக்கத்தில் ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடைய கட்டுரை ஒன்றுகூட இல்லை. இதேதான் Huffington Post ன் நிலைமையும். இந்த பதிப்புக்கள் அனைத்தில் இருந்தும் அமெரிக்கா ஒரு மிருகத்தனமாக இராணுவத் தாக்குதலை நடத்துகிறது என்று எவரும் அறிந்து கொள்ள முடியாது.

இந்த தட்டுக்களில் குறைகூறல்கள் உள்ளன என்றால் அவை முற்றிலும் தந்திரோபாயம் பற்றியதாகத்தான் இருக்கும். Nation ல் முன்னதாக வந்த தலையங்கம் ஒன்றில் ("Don't Escalate in Afghanastan", February 4, 2009) இந்த ஏடு அதிக அமெரிக்க துருப்புக்கள் மக்கள் விரோதத்தைத்தான் அதிகரிக்கும் என்று எச்சரித்தது. "30,000 துருப்புக்களை கூடுதலாக சேர்த்தல் என்பது குறுகிய காலத்தில் அரசாங்கம் வீழ்ச்சி அடையாமல் தடுக்கப் போதுமானதாக இருக்கலாம், ஆனால் சில ஒபாமா ஆலோசகர்கள் கூறும் எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த போதுமானதாக இருக்காது." என்று அது எழுதியது. "அதற்கு சில இராணுவ வல்லுனர்கள் நம்மிடையே 600,000 துருப்புகள் வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளனர்" என எழுதியது.

"ஒரு பெரிய எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெறுமா என்பது கூட சந்தேகம்தான்" என்று Nation எச்சரித்தது. தன்னுடைய விமர்சன நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஏடு முடிவாகக் கூறியதாவது: "ஆப்கானிஸ்தான் "பேரரசுகளின் புதைகுழி" என்று அழைக்கப்படுகிறது "சரியான காரணத்திற்குத்தான்", --அதாவது நாட்டில் ஒரு புதிய புதைகுழி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு பேரழிவு கொடுத்துவிடக்கூடும்."

ஈராக்கும் Nation பக்கங்களில் இருந்து பெரிதும் அகன்றுவிட்டது. வரும் கருத்துக்கள்கூட ஒபாமாவின் நகரங்களில் இருந்து துருப்புக்களை பகுதி அளவில் திரும்பப் பெறுவது என்பதை --அமெரிக்க துருப்புக்கள் 130,000 அங்கு இருந்தாலும், நிர்வாகம் அந்நாட்டில் பல ஆண்டுகளுக்கு பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை நிறுத்துவது என்ற முடிவிற்கு வந்த போதிலும், போர் எதிர்ப்பு இயக்கத்தில் பெரிய அடிவைப்பு என்பது போல் காட்டுகின்றன.

இந்தக் குழுக்கள், வெளியீடுகள் ஆகியவற்றில் எதுவும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையான அக்கறைகள் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. அவற்றைப் பொறுத்தவரையில், இது "ஒரு நல்ல போர்". தலிபனை தோற்கடிக்கவும் ஆப்கானிஸ்தான மக்களை காப்பாற்றவும் இது தொடுக்கப்பட்டுள்ளது என்ற கூற்று வினாவிற்கு உட்படுத்தப்படாமல் ஏற்கப்பட்டது.

போர் தொடக்க முதல் காரணமாக கூறப்பட்ட ஒசாமா பின் லேடன் மற்றும் அல் கொய்தாவும் செய்தி ஊடகத்திலும் அரசியல் நடைமுறையிலும் ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அமெரிக்க நலன்களை எண்ணெய், எரிவாயு கொழிக்கும் மத்திய ஆசியப் பகுதியில் காக்கும் தொடர்பைக் கொண்ட உண்மையான அமெரிக்க நலன்கள் பற்றி பேச்சு இல்லை.

தம்மைத்தாமே முற்போக்குவாதிகள், "இடது" அமைப்புக்கள் என்று அழைத்துக் கொள்ளுபவற்றின் விடையிறுப்பிற்கும் ஈரானில் அமெரிக்க ஆதரவில் நடக்கும் உறுதிக் குலைப்பிற்கு ஒருமித்த ஆதரவிற்கும் இடையே ஒரு ஒப்புநோக்கு உள்ளது. இக்குழுக்கள் உடனடியாக அமெரிக்க ஆதரவு பெற்ற "பசுமைப் புரட்சிக்கு" ஆதரவு கொடுத்து, அதன் தலைமையில் இருக்கும் ஈரானிய முதலாளித்துவத்தின் கன்னைகளுக்கும் ஆதரவு கொடுக்கின்றன.

போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இக்குழுக்கள் கலைத்துவிட்டது அவற்றின் அரசியல் முன்னோக்கின் தர்க்கரீதியான விளைவுதான். ஈராக்கில் அமெரிக்கப் போர் தொடங்கியதில் இருந்தே, இவை மக்கள் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக திசை திருப்ப முற்பட்டு, தொழிலாளர்களும், இளைஞர்களும் போருக்கு எதிராக சுயாதீனமாக திரட்டப்படுவதை எதிர்த்தன. ஜனநாயகக் கட்சி 2006 தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாட்டை கொண்டு, புஷ்ஷின் போர்க் கொள்கைகளை ஆதரிக்க தலைப்பட்டவுடன், இவை தங்கள் எதிர்ப்பு முயற்சிகளை பெரிதும் கைவிட்டன.

ஒபாமா நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்தது--அதன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் அனைத்திலும் பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் அடிப்படை நலன்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது--இந்த வழிவகையை முழுமையாக்கிவிட்டது. மத்தியதர வர்க்க அரசியலுக்கும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை அடிப்படையாக கொண்ட சோசலிச இயக்கத்திற்கும் இடையே உள்ள அடிப்படை சமூகப் பிளவுகளை வெளிக் கொண்டு வர உதவியுள்ளது. புஷ் பற்றிய "இடதின்" விமர்சனங்கள் பல தந்திரோபாய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இருந்தன அல்லது நிர்வாகத்தின் மேம்போக்கான கூறுபாடுகளை மையமாகக் கொண்டிருந்தன என்ற உண்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியது. புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்தபின், இந்த சமூக அடுக்கு ஏகாதிபத்தியத்துடன் சமாதானமாகிவிட்டது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு என்பது அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அனைத்து அரசியல் கட்சிகள், பிரதிநிதிகளுக்கு எதிராக சுயாதீனமாக தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவதின் மூலம் மட்டுமே வர முடியும். தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கானது, அனைத்து அமெரிக்கப் படைகளையும் உடனடியாக, நிபந்தனையற்ற வகையில் திரும்பப் பெற வேண்டும் மற்றும் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் ஈராக்கில் அனைத்து அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கட்டாயம் தொடங்க வேண்டும்.