World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China: Xinjiang crisis deepens

சீனா: ஜிங்ஜியாங் நெருக்கடி ஆழமாகிறது

By John Chan
9 July 2009

Use this version to print | Send feedback

ஜிங்ஜியாங்கில் உள்ள நெருக்கடியை சமாளிக்க சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ திடீரென்று நாட்டிற்கு திரும்ப முடிவு எடுத்தது பற்றி G8 உச்சிமாநாட்டின் அரசாங்க தலைவர்கள் வியப்படைந்தனர். உலக நிதிய நெருக்கடி பற்றிய விவாதங்களில் சீனா முக்கியமான பங்கு பெறக்கூடும் என்ற நம்பிக்கைகள் ஜிங்ஜியாங் நிகழ்வுகளால் சரிந்து போயின; இது அந்நாட்டில் பெருகும் சமூக பதட்டங்களை அடிகோடிட்டு காட்டுகிறது.

ஜிங்ஜியாங்

இதுவரை எந்த உலகத் தலைவரும் உரும்கியில் சீனப் பாதுகாப்புப்படைகளின் மகத்தான தாக்குதல் பற்றி பகிரங்கமாக கண்டிக்கவில்லை அல்லது இன்னும் அதிக இனவழி மோதலைத் தடுக்கவும் சமூக ஒழுங்கை நிலைநிறுத்தவும் பலத்த ஆயுதமேந்திய துருப்புக்கள் அங்குள்ளன என்ற பெய்ஜிங்கின் கூற்றை சவாலுக்கு உட்படுத்தவும் இல்லை.

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறினார்: "நீண்ட பதட்டம் மற்றும் அதிருப்தி கொண்ட வரலாறு உள்ளது என்பது நாம் அறிந்ததுதான்; ஆனால் உடனடியாக இப்பொழுது செய்யவேண்டியது வன்முறையை ஒரு முடிவிற்குக் கொண்டுவருவதுதான்." ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ருட் அறிவித்தார்: "இப்பொழுது அனைத்துத் தரப்பினரும் நிதானத்துடன் செயல்படுதல் முக்கியமாகும்; அதுதான் இந்த இடர்பாட்டில் அமைதியான உடன்பாட்டை கொண்டுவரும்."

திபெத்தின் CCP செயலாளராக ஹு இருந்து அப்பகுதியில் மார்ச் 1989ல் உள்ளூர் எதிர்ப்புக்களை இரத்தம் தோய்ந்த வகையில் நசுக்கியதை வழிநடத்தினார். அந்த எதிர்ப்புக்கள் நடந்த ஒரு சில வாரங்களில் சமூக பதட்டங்கள் தேசிய அளவில் வெடித்தன; அவை தியனன்மென் சதுக்கப் படுகொலைகளுடன்தான் முடிவடைந்தன. ஜிங்ஜியாங் நெருக்கடி சீனாவின் சமூக வெடிமருந்தை கொளுத்தும் அதே திறனுடன், உலக முதலாளித்துவத்திற்கு இன்னும் அதிக உட்குறிப்புக்களை கொடுக்கக்கூடிய வகையில் உள்ளது.

ஹு திடீரென திரும்பியது CCP தலைமை கடந்த ஞாயிறன்று உரும்கியில் உய்குர்கள் நடத்திய எதிர்ப்புக்களையும் ஜிங்ஜியாங்கில் நடந்த இனவழி மோதல்களையும் தேசிய நெருக்கடியாக காண்கிறது என்பதைக் குறிக்கிறது. பெய்ஜிங் தேசிய சிறுபான்மையினர் மத்தியில் அமைதியின்மை என்பது ஆழ்ந்த சமூக வேர்களை கொண்டுள்ளது என்பதை பெய்ஜிங் நன்கு அறிந்துள்ளது.

உரும்கி எதிர்ப்பிற்கான தூண்டுதல் ஜிங்ஜியாங்கில் அல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் குவாங்டோங் மாநிலத்தில் இருந்தது; அங்கு ஆளும் கட்சியின் திட்டமான முதலாளிகள் வறிய, இனச் சிறுபான்மையினரை குறைவூதிய தொழிலாளர் தொகுப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது, ஹான் சீன மக்களுடன் இனவழி பதட்டங்களுக்கு வழிவகுத்தது.

ஹான் தீவிர வெறியினால் எரியூட்டப்பட்டு, பெருகிய முறையில் CCP ஆல் வளர்க்கப்படும் வகையில் கடந்த மாதங்கள் வெடித்த பதட்டங்கள் ஷாவோகுவான் நகரத்திலுள்ள ஒரு முக்கிய விளையாட்டுப் பொம்மைகள் ஆலையில் இருந்த உய்குர் தொழிலாளர்கள்மீது ஆபத்தான தாக்குதலில் முடிந்தன. இந்த நிகழ்வு சமூகச் சமத்துவமின்மை மற்றும் இன பாகுபாடு என்று உய்குர் மக்களிடையே அடக்கி வைக்கப்பட்ட சீற்றத்திற்கு எரியூட்டியது; அவர்கள் சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் மிக ஒடுக்கப்பட்ட பகுதிகளுள் ஒருவராவர்.

புதனன்று People's Daily ல் வந்த கருத்து ஒன்று ஜிங்ஜியாங்கில் அமைதியின்மை "சட்டம், ஒழுங்கு" மீறப்பட்ட செயல் என்றும், அரசாங்க அதிகாரம் சமூக ஒழுங்கை மீட்பதற்கு மறுகட்டமைக்கப்பட வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தது. ஆனால் வன்முறையைப்பயன்படுத்தாமல் இதை ஆட்சி எப்படி சாதிக்க முடியும், என்பது தெளிவாக இல்லை; வன்முறைப் பயன்பாடு நிலைமையை இன்னும் எரியூட்டத்தான் செய்யும்.

அரசு கட்டுப்பாட்டிலுள்ள செய்தி ஊடகம் உய்குர் மக்கள் ஹான் மக்களை கொடூரமாக குருதி கொட்டும் முறையில் தாக்குவதாக செய்திகளைத் தொடர்ந்து பரப்புகிறது. உரும்கியின் CCP செயலாளரான லி ஜி நேற்று உய்குர் பல்கலைக்கழக மாணவர்கள் தவறாக வழிகாட்டப்பட்டுள்ளனர் என்றும் மிருதுவாக நடத்தப்பட வேண்டும் என்றும், "கொடூர வகையில் குற்றம் செய்யப்படுபவர்கள்" தூக்கிலிடப்படுவர் என்றும் அறிவித்தார்.

லியின் அறிவிப்பு ஆட்சியின் வர்க்க சார்பை வெளிப்படுத்தியுள்ளது; இத்தகைய போக்குத்தான் 1989ல் தியனன்மென் சதுக்க படுகொலைக்கு வித்திட்டது. சில மாணவர்கள் மிருதுவாக நடத்தப்படக்கூடும் என்றும், தொழிலாளர்களும் நகர்ப்புற வறியவர்களும் "வெறிபிடித்த வெகுஜனம்", "குண்டர்கள்" என்று சித்திரிக்கப்பட்டு மிருகத்தனமான தண்டனை அல்லது தூக்கு தண்டனைக்கு உரியவர்கள் என்று விவரிக்கப்படுகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் உய்குர் குழுக்கள், 600 முதல் 800 உய்குர் எதிர்ப்பாளர்கள் அரசாங்கத் துருப்புக்களால் கொல்லப்பட்டனர் என்றும் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறுகின்றனர்.

சீனாவில் போலீஸ் அரு கருவிகளின் தலைமைகள் நேற்று உரும்கியில் வலிமையைக் காட்டும் வகையில், வளங்கள் நிறைந்த மாநிலத்திற்குள் ஆயிரக்கணக்கான துணை இராணுவப் பிரிவுகளுடன் பெருகி இருந்தனர். போலீஸ் அதிகாரிகள் கலக எதிர்ப்பு உடையுடன் நகரத்தில் அணிவகுத்து, சமூக ஸ்திரத்தன்மைக்கான கோஷங்களை எழுப்பினர். தலைக்கு மேலே ஹெலிகாப்டர்கள் பறந்த வண்ணம் இருந்தன; இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட கவச வாகனங்கள் தெருக்களை ரோந்து புரிந்தன.

2,000 ஆயுதமேந்திய போலீசாரை மக்கள் சதுக்கத்தில் பார்வையிட்ட துணை இராணுவ போலீஸின் தேசியத் தலைவர் Wu Shuangzhan, ஒழுங்கை மீட்பதில், "நேற்றைய தினம் மிக முக்கியமான நாள்" என்றார். பொதுப் பாதுகாப்பு மந்திரி மெங் ஜியாங்ஜு ஞாயிறு எதிர்ப்புக்கள், வெளியே இருக்கும் உய்குர் தலைவர் ரெபியா கதீரின் தலைமையில் இருக்கும் பிரிவினைவாதிகளால் தூண்டப்பட்ட வன்முறைக் குற்றம் என்றார். உள்ளூர் CCP செயலாளர் லி "ரெபியா ஒழிக" என்ற கோஷங்களை வழிநடத்தினார்; பின் ஹான் எதிர்ப்பாளர்களை வீட்டுக்குத் திரும்புமாறு வலியுறுத்தினார் ஏனெனில் அதிகாரிகளே "கொலைகாரர்களை தூக்கிலிட்டுவிடுவர்" என்றார்

உய்குர்கள் மற்றும் ஹான்களுக்கு இடையேயான மோதல் நகரத்தின் பகுதிகளில் தொடர்ந்த அளவில், லி சட்டத்தை மீறுபவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாயினும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றார். உய்குர்களுக்கு எதிரான சில ஹான் ஆக்கிரோஷக்காரர்கள் செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர்.

ஆனால், ஆட்சியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிரபராதியான உய்குர் மக்கள்மீது பழிவாங்க வேண்டும் என்று கூறும் ஹான் சமூகத்தின் பிற்போக்குக் கூறுபாடுகளுக்குத்தான் ஊக்கம் அளித்துள்ளன. செய்தி ஊடகத் தகவல்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ற பேரில் ஹான் மக்கள் தடிகள், எஃகு கம்பிகள் மற்றும் கூரிய பொருட்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர், என்க காட்டியுள்ளன..

உய்குர் பகுதிகளில் இருந்து Associated Press கொடுக்கும் தகவல்: "ஹான் வந்து கொண்டிருக்கின்றனர் என்று சிலர் கூச்சலிட்டபோது, சிறுவர்கள் வீட்டிற்குள் ஓடினர், மகளிர் பின் சந்தைத் தெரு வழியே அச்சத்துடன் கூவித் திரும்பினர். ஒரு சில வினாடிகளில் ஆண்கள் ஈட்டி போன்ற ஆயுதங்களை வைத்து கதவுகளின் பின்னேயும் சந்தை பகுதியிலும் தயாராக இருந்தனர்.... ஏராளமான கற்குவியல்கள் தெருக்களில் ஆயுதம் போல் வைக்கப்பட்டிருந்தன."

உண்மை என்ன என்றால் உய்குர்கள் சீனாவில் இரண்டாந்தர குடிமக்களாகிவிட்டனர். நேற்று பைனான்சியல் டைம்ஸ் உரும்கியில் ஒரு வறிய உய்குர் பகுதியான பலிகுன்னில் இருக்கும் நிலைமைகள் பற்றித் தகவல் கொடுத்தது; அங்கு இருக்கும் "அசுத்தமான சந்துகள், கருப்படித்த வீட்டுத் தொகுப்புக்கள்... என்பவை நகரம் முழுவதும் வந்து கொண்டிருக்கும் புதிய இல்ல வளாகங்களில் இருந்து முற்றிலும் மறுபட்டவை." பிந்தையவை பெரும்பாலும் ஹான் இனத்தவருக்காக கட்டப்படுகின்றன. ஒரு உள்ளூர் இளைஞர் செய்தித்தாளிடம் கூறியது: "பல இளைஞர்களுக்கும் வேலை இல்லை. முறையான வேலை கிடைப்பது அரிது."

அப்பகுதியில் இருக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற மற்றும் ஜிங்ஜியாங்கின் அதிக வளர்ச்சியற்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள். பெரும்பாலான முஸ்லிம் மகளிர் தலைமறைப்பு போட்டிருந்தனர், சீன மந்தரின் மொழி அதிகம் பேசுவதில்லை; ஆனால் பெரும்பாலான ஆண்கள் உள்ளூர் கசாப்புக் கடைகளில் வேலை செய்கின்றனர், அல்லது வேலையில்லாமல் உள்ளனர்.

விரிவடையும் கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கத் தொழில்கள் ஜிங்ஜியாங்கில், உள்ளூர் உய்குர்களைவிட ஹான் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கின்றன; உய்குர்களுக்கு பயிற்சி குறைவு, நிர்வாகத்துடன் பேசுவதில் கஷ்டம் அதிகம். சில்லரை விற்பனை, விருந்தோம்பல் வணிகங்கள், ஹான் குடியேறிய பிரிவின் நடத்தப்படுபவை பலநேரமும் உள்ளுர் உய்குர் போட்டியாளர்களை எளிதில் கடந்துவிடுகின்றனர்.

அரசாங்கத்தின் கொள்கையான உய்குர்களை அலைந்து குடியேறும் தொழிலாளர்களாக கிழக்கு மாநிலங்களில் மாற்றுவது என்பது இனவழி ஒற்றுமைக்கு உதவவில்லை. தங்கள் உள்ளூர் கிராமங்களில் இருந்து மிகத் தொலைவில் இருத்தல் என்பது அவர்களுடைய விவசாய மற்றும் முஸ்லிம் பின்னணியுடன் தீவிர மோதலை நகர்ப்புற முதலாளித்துவ முறையுடன் ஏற்படுத்துகின்றன; இங்கு அவர்கள் கடுமையான தொழில்முறை கட்டுப்பாடு, நீண்ட பணி நேரங்களை வியர்வை சிந்தும் தொழிற்கூடங்களில் செலவழிக்கின்றனர்.

உய்குர் தொழிலாளர்களின் நிலைமை CCP உடைய முதலாளித்துவ சார்பு உடைய கொள்கைகளில் உள்ள மகத்தான சமூக வர்க்க மோதல்களுடன் பிணைந்துள்ளது. ஹாங்காங்கின் செங் மிங் ஏடு பெப்ருவரி மாதம் சீனாவில் எதிர்ப்புக்கள், மனுக்கொடுத்தல் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை 2008ல் 127,467 எண்ணிக்கையை எட்டியதாகக் கூறியுள்ளது. இதில் 12 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சம்பத்தப்பட்டிருந்தனர்; இது 2005ல் ஒப்பிடும்பொழுது 87,000 நிகழ்வுகளாக இருந்தது. 2008 எதிர்ப்புக்களில் 467 உள்ளூர் அரசாங்கத் துறைகளை எதிர்த்து இருந்தன, 615 போலீஸ் மற்றும் நீதித்துறை அதிகறாரிகள் மீதான தாக்குதல்கள்; 110 அரசாங்கக் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களாகும்.

ஜூன் 19 மற்றும் 20 தேதிகளில், கிட்டத்தட்ட 70,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் 10,000 போலீசாருடனும் படைவீரர்களுடனும், ஹுபேய் மாநிலத்தில் Shishou நகரத்தில் உத்தியோக பூர்வ ஊழல் மற்றும் வணிகர்களுடன் கூட்டு சேர்ந்தது பற்றி மோதினர். இரு நாட்களுக்குப் பிறகு Nanjing Industrial Technical Scool ன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குறைந்த மட்ட பட்டத்தைத்தான் தாங்கள் பெற இருக்கிறோம், எனவே வேலைவாய்ப்புக்கள் இருண்டு உள்ளன என்பதை அறிந்ததும் ஜன்னல்களை உடைத்து, கார்கள் மற்றும் வளாக பல்துறை அங்காடிகள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.