World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Honduran coup: A warning to the working class

ஹொன்டுரா ஆட்சி மாற்றம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை

By Bill Van Auken
8 July 2009

Use this version to print | Send feedback

ஜூன் 28 ஆளும் உயரடுக்கின் மிக வலதுசாரிப் பிரிவுகள் அமெரிக்க பயிற்சி பெற்ற இராணுவத்தின் உதவியுடன் நடத்திய ஆட்சி மாற்றத்தின் பின், ஹொன்டூராஸ் தொழிலாளர்கள் ஒரு நெறியற்ற, அடக்குமுறை ஆட்சி திணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சமரசத்திற்கு இடமில்லாத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மானுவல் ஜெலயா துப்பாக்கிமுனையில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு, குண்டுக்கட்டாக ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு அகற்றப்பட்டு ஒரு நாளைக்கு பின், 60,000 ஹொன்டூரடு ஆசிரியர்கள் ஜூன் 29 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன; மாணவர்களும் பெற்றோர்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். ஹொன்டூராஸின் மற்ற தொழிலாள வர்க்கத்தினரும் இந்தப் போராட்டத்தில் சேர்ந்து, நாட்டின் நெடுஞ்சாலைகளில் தடுப்புக்களை ஏற்படுத்தியதின் மூலம் அதனை விரிவடையச் செய்யும் அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளனர்.

இத்தகைய வீரம்செறிந்த எதிர்ப்பு மெய்நடப்பில் முற்றுகையை எதிர்கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹொன்டூராஸில் ஊரடங்கு உத்தரவு உள்ளது இராணுவம் தெருக்களில் ரோந்து வருகிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன; ஆட்சிமாற்றத்திற்கு எதிரானவர்கள் கிட்டத்தட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றத்திற்கு எதிர்ப்பை தெரிவித்த ஊடகத்தின் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன; ஒலி/ஒளி பரப்பு வசதிகள் துருப்புக்களால் எடுக்கப்பட்டுவிட்டன; தனிப்பட்ட நிருபர்கள் மரண அச்சுறுத்தலையும் பெற்றுள்ளனர்.

ஞாயிறன்று ஆட்சிமாற்றம் அதன் முதல் கொலையை அறிவித்தது; 19 வயதான ஒபெட் முரில்லோ ஹொன்டுராத் துருப்புக்களால் டெகுசிகல்பா விமான நிலையத்தில் சுடப்பட்டார்; அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஜெலாவிற்கு ஆதரவு தெரிவிக்க கூடியிருந்தனர்; அவரது விமானம் அங்கு இறக்க அனுமதிக்கப்படவில்லை.

இது ஒரு ஆரம்பம்தான் என்று அச்சப்படுவதற்கு காரணம் இருக்கிறது, ஹொன்டுராஸில் மட்டும் அல்ல. நாட்டின் ஆளும் தன்னலக்குழு, இப்பிராந்தியத்திலேயே மிகவும் பின்தங்கிய, பிற்போக்குக் குழுவாகும்; அதன் இராணுவ ஆணையகம் பென்டகனில் பயிற்சி பெறுகிறது; அது முக்கிய இராணுவத் தளத்தை சோடோ கானோவில் கொண்டுள்ளது; அங்கு 600 அமெரிக்கத் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹொன்டுராஸ் தொழிலாளர்கள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்து பிரேசில், உருகுவே, சிலி, ஆர்ஜேன்டினா ஆகிய நாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்கள்மீது சுமந்தப்பட்ட துயரத்தைப் போன்ற குருதி கொட்டிய நிலையாக இருக்கலாம்; இது தற்பொழுது உண்மையான ஆபத்தாக உள்ளது.

மற்ற இலத்தீன் அமெரிக்கப் பகுதிகளைப் போலவே, ஹொன்டுராஸிலும், சிலியின் பினோசே, ஆர்ஜென்டினாவின் விடேலா போன்ற குண்டர்கள் தலைமையில், பாசிச இராணுவ ஆட்சிகள், நடத்திய குற்றங்களுக்கு உண்மையான கணக்குத் தீர்க்கப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலைகள், சதிக்கொலைகள், "காணாமற் போகும்படி செய்தல்", சித்திரவதைக்கு ஆளாக்குதல் ஆகியவற்றை செய்த அமெரிக்க ஆதரவுடைய ஹொன்டுராஸ் இராணுவ கொலை நிறைவேற்றும் படையை தலைமைதாங்கி நடத்தியவர்கள், அப்பிராந்தியத்தில் அவர்களின் பிற சகாக்களை போலவே தண்டனையிலிருந்து விலக்கீட்டு உரிமை பெற்றுள்ளனர்.

உலகப் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருவது--ஒராண்டிற்கு முன்பு இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது ஹொன்டூரர்களின் வாங்கும் சக்தியை 30 சதவிகிதம் குறைத்துவிட்டது--ஒரு புதிய ஆழ்ந்த வர்க்கப் போராட்ட காலத்தை கொண்டுவருகிறது; இது இலத்தீன் அமெரிக்க இராணுவ ஆட்சியாளர்கள் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை சிவிலிய அரசியல் வாதிகளுக்கு 1980களில் கொடுத்த பின்னர் கொண்டுவரப்பட்ட ஜனநாயகமயப்படுத்தல் என்ற முகப்பை கீழறுத்துள்ளது.

முந்தைய தோல்விகளின் படிப்பினைகள் புதியவற்றை தடுக்க கற்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பிரேசிலின் 1964 இராணுவ ஆட்சி மாற்றத்தில் இருந்து 1973 சிலியில், 1976 ஆர்ஜன்டினாவில் என்று பலமுறை நிரூபிக்கப்பட்டது போல், தொழிலாள வர்க்கம் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக தன்னுடைய போராட்டங்களை உள்நாட்டு ஆளும் உயரடுக்கின் "முற்போக்கு" பிரிவுகள் என்று கூறப்படுவதற்கு கீழ்ப்படுத்தி வைப்பதின் மூலம் காத்துக் கொள்ள முடியாது.

இராணுவ ஆட்சி மாற்ற தலைவர்களை போல், ஹொன்டுராஸ் ஜனாதிபதி மானுவல் ஜெலயாவும் வாஷிங்டனில் இருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் தலையீட்டை தன்னுடைய ஜனாதிபதி அரசியல் நெறித்தன்மையை காக்க நாடுகிறார் என்பதில் இந்த உண்மை நன்கு வெளிப்படுகிறது.

ஞாயிறன்று டெகுசிகல்பா மீது நாடகத்தனமாக பறந்து சென்றபின் --ஜெலயா ஒரு பாரசூட் கிடைத்தால் குதித்து விடுவதாக அறிவித்திருந்தார்-- அகற்றப்பட்ட ஜனாதிபதி ஹொன்டுராஸிற்கு "வான், தரை அல்லது கடல்" வழியே வரும் உறுதிமொழியை கைவிட்டு, அதற்குப் பதிலாக வாஷிங்டனுக்கு செவ்வாயன்று வெளிவிவகார அமைச்சர் கிளின்டனுடன் பேசுவதற்கு பறந்து சென்றார்.

அந்த சந்திப்பின் விளைவு கோஸ்ட்டாரிக்காவின் ஜனாதிபதி ஒஸ்கார் அரியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கும் அவரை அகற்றியவர்களுக்கும் இடையே "மத்தியஸ்தம்" செய்வார் என்பது ஆகும். இத்தகைய கறைபடிந்த செயல்கள் பலவற்றை அரியாஸ் நடத்தியவர். 1980களின் கடைசிப்பகுதியில் Esuipular என்று அழைக்கப்பட்ட வழிவகைகளில் செயல்பட்டுள்ளார்; அவற்றில் எல் சால்வடோரின் இடது கெரில்லா எழுச்சிக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலையீட்டார், ஆளும் உயரடுக்கின் அமெரிக்க ஆதரவு உள்ள பிரிவிடம் அதிகாரக் குவிப்பிற்கு வகை செய்தார்.

அகற்றப்பட்ட ஜனாதிபதியை மீட்பதற்கு அழைப்பு கொடுக்க கிளின்டன் மறுத்தார்; அமெரிக்க நிர்வாகம் "ஒரு அமைதியான தீர்வு இவ்விஷயத்தில் வருவதை விரும்புவதாகவும்", "ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஹொன்டுராஸில் ஆட்சி மாற்றம் என்பது வாஷிங்டனுக்கு முன்கூட்டித் தெரிந்திருந்தது, அதன் ஆசியுடன் நடைபெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. வெளிவந்துள்ள அறிக்கைகளின்படி, அமெரிக்க தூதர்கள் ஜெலயாவின் எதிரிகளுடன் ஜனாதிபதியை அகற்றுவது பற்றி விவாதித்தனர்; அமெரிக்க மேற்பார்வையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் ஹொன்டுர இராணுவம் களத்தில் இறங்கியிருக்கும் என்பதை நம்புவது கடினம் ஆகும்.

வாஷிங்டனுடைய நோக்கம் ஹொன்டுர ஜனாதிபதியை மாற்றி, அதையொட்டி ஹொன்டுர கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து அவை அப்பகுதியில் அமெரிக்க நலன்களுக்கு இன்னும் சாதகமாக இருக்க வேண்டும் என்பதாகும். இதில் ஜெலயா வெனிஜூலாவின் ஹ்யூகோ ஷாவேஸ் அரசாங்கம் மற்றும் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ அரசாங்கம் ஆகியவற்றுடன் கொண்டிருக்கும் நெருக்கமான பொருளாதார அரசியல் உறவுகளை வெட்ட வேண்டும் என்பதும் அடங்கியுள்ளது. ஒபாமாவின் வனப்புரை, "பரஸ்பர மதிப்பு" என்பது இக்கண்டத்தில் ஒரு சில முறையான எதிர்ப்புக்களை தொடர்ந்து "மிருதுவான ஆட்சி மாற்றத்தை" தோற்றுவிக்கும் என்று நம்பப்பட்டது.

ஜெலயா, வாஷிங்டன் உதவியை நாடுவது என்ற முடிவு, ஆட்சி மாற்றம் செய்த தலைவர்களின் மத்தியஸ்த கோரிக்கைக்கு இணங்குவது என்பது அவருடைய சொந்த வர்க்க நிலைப்பாட்டைத்தான் காட்டுகிறது. மரத்தொழிலில் நலன்கள் கொண்ட செல்வம் கொழிக்கும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் வந்த இவர், லிபரல் கட்சியின் வேட்பாளராக பதவிக்கு வந்தார்; அது தேசியக் கட்சியுடனும், இராணுவத்துடனும் மாறி மாறி ஆட்சிக்கு வரும்; 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த நிலைதான் உள்ளது; இதற்கு ஹொன்டுராஸில் உள்ள பெரும் செல்வந்தர்கள் சிலருடைய ஆதரவு இருந்தது.

ஜெலயா மலிவான எண்ணெய் வாங்கவும், அரசாங்கம் பொது நிதியை எப்படி கையாள்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல் கடன்களை கொடுப்பதற்காகவும் வெனிஜூலாவை அணுகினார். இவ்விதத்தில் அவருடைய வெற்றுத்தன முற்போக்கு சொற்றொடர்களின் பயன்பாட்டினாலும் அவர் தன்னை ஒரு "இடது" தலைவர், தன்னலக்குழுவை எதிர்ப்பவர் என்று காட்டிக் கொண்டார்.

உண்மை என்னவென்றால் ஜெலயா ALBA யில் சேருவதற்கு ஆதரவை பெற்றார் (ALBA என்பது Alternative for the Americas, the Venezuelan-sponsered regional trade group ன் சுருக்கமாகும்); அதற்கு அவர் ரோபர்ட்டோ மிச்செலட்டி ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு உறுதிமொழி கொடுத்தார்; பிந்தையவர் பாராளுமன்றத்தில் வலதுசாரித் தலைவர், இப்பொழுது அப்பதவியில் ஆட்சி மாற்றத்தால் இருத்தப்பட்டவர்.

ஆனால் ஜெலயாவுக்கும் அவரை அகற்றிய வலதுசாரிக் கூறுபாடுகளுக்கும் கடுமையான வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டுமே நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களை உறுதியாகக் காப்பவர்கள். இருவருக்கும் இடையே ஒரு தலையீட்டினால் வரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பது ஹொன்டுராஸ் தொழிலாளர்களுக்கு அரசியல் தோல்வியைத்தான் ஏற்படுத்தும்; அதே நேரத்தில் இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு உதவும்; மேலும் இத்தகைய புதிய மாற்றங்கள் மத்திய அமெரிக்காவில் பல பகுதிகளிலும், கண்டம் முழுவதுமே கூட வரக்கூடும்.

ஆட்சி மாற்றதை எதிர்க்கும் முக்கிய சக்தியாக இருக்கும் ஹொன்டுரா தொழிலாளர்கள்தான் தற்போதைய நெருக்கடியின் இத்தகைய பிற்போக்கு உடன்பாட்டை தோற்கடிக்க முடியும். முக்கியமான பணி தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அரசியல் இயக்கத்தை கட்டியமைப்பது ஆகும்; அது முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். அத்தகைய இயக்கம் ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கும், ஹொன்டுராஸில் மட்டும் இல்லாமல் அப்பகுதி முழுவதும் ஐக்கிய அமெரிக்க சோசலிச அரசுகளின் ஒரு பகுதியாக சோசலிச மாற்றத்திற்கும் போராடுவதற்கு கட்டாயம் கட்டியமைக்கப்பட வேண்டும்.

ஹொன்டுராஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் ஒபாமா நிர்வாகத்தின் ஏகாதிபத்திய சூழ்ச்சிக்கையாளல்களில் ஆதரவைப் பெற முடியாது; அமெரிக்காவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திடம்தான் பெற முடியும்; ஏனெனில் அதுவே பொருளாதார நெருக்கடியால் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.