World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Peruvian massacre aimed at opening Amazon to transnationals

அமேசனை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட பெருவியன் படுகொலை நோக்கம் கொண்டிருக்கின்றது

By Bill Van Auken
8 June 2009

Use this version to print | Send feedback

பன்னாட்டு பெருநிறுவனங்களால் சுரண்டப்பட அமேசனைத் திறந்து விடுவதற்கான ஜனாதிபதி ஆலன் கார்சியா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், போராடி வரும் அமேசன் இந்தியர்களுக்கு எதிராக கனஆயுதந்தாங்கிய பெருவியன் பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்ட ஒரு படுகொலையில் ஒரு தொகையினர் இறந்தனர்.

கடந்த வெள்ளியன்று, லிமாவின் வடக்கில் 1,400 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பெருவியன் நகரமான பாகுவாவில் முன்காலை பொழுதில் இந்த படுகொலைகள் தொடங்கின. முக்கிய சாலையை மறித்து கொண்டிருந்த 1,000 ஆர்ப்பாட்டக்காரர்களை சுமார் 600 இராணுவ போலீஸார் தாக்கியபோது இந்த படுகொலைகள் நிகழ்ந்தன.

பெருவியன் பாதுகாப்பு படைகளின் 23 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அவை தெரிவித்திருக்கும் நிலையில், கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை பழங்குடி குழுக்களின் தலைவர்கள் 40ஆக குறிப்பிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்தனர். பழங்குடி மக்களின் குழுக்கள் பெட்ரோபெரு எரிவாயு நிலையத்தில் 38 போலீஸ்காரர்கள் மற்றும் ஓர் உள்ளூர்வாசியை பிணையகைதியாக கொண்டு செல்லும் அளவிற்கு, இந்த தாக்குதல் பாரிய கோபத்தை தூண்டியுள்ளது. ஒரு மீட்பு நடவடிக்கையில் இந்த போலீஸ்காரர்களில் ஒன்பது பேர் இறந்ததாக சனியன்று தெரிவிக்கப்பட்டது.

அமேசன் காட்டு பகுதியில் (பெருவியன் நிலப்பகுதியில் ஏறத்தாழ பாதி பகுதி) வாழும் பத்து ஆயிரக்கணக்கான பழங்குடியினர் பங்குபெற்ற ஒரு 56 நாட்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சாலைமறியல் போராட்டம் இருந்தது. இந்த நடவடிக்கையானது, குடியிருப்பு நிலங்களை எண்ணெய் எடுப்பதற்கும், மரம்வெட்டுவதற்கும், சுரங்கங்களுக்கும் மற்றும் பெரியளவு பண்ணைகளுக்கும் திறந்து விட வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களை திரும்பக் பெற கோரி, அப்பகுதியில் வாழும் மக்களால் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தின் பகுதியாகும்.

ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் பிரேசிலிய நிறுவனங்கள், எண்ணெய்க்காக தோண்ட, ஒரு அனல்மின் நிலையம் ஏற்படுத்த மற்றும் அமேசன் காடுகளில் உள்ள பரந்த கனிமங்கள் மற்றும் மரவளங்களை சுரண்டுவதற்கான உரிமையை பெற பலபத்து பில்லியன்கணக்கான டாலர்களில் ஏலம் எடுக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னரே முடிவை சந்தித்து விட்ட மாவோயிச கொரில்லா குழுவான Shining Pathக்கு (ஒளிரும் பாதை) எதிரான 20 ஆண்டு கால நீண்ட யுத்தத்திற்கு பின்னர், பெருவில் இந்த மோதலினால் ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை தான் மிக உயர்ந்த அளவாகும். போலீஸ் மற்றும் ஆயுதங்தாங்கிய படைகளின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளானது, ஏற்கனவே ஜனாதிபதி காரிசியாவின் மீதுள்ள கணிசமான பரந்த எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தும். அவரின் ஒப்புதல் விகிதம் வெறுமனே 30 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அவரின் முதல் ஜனாதிபதி ஆட்சி காலத்தில் (1985-1990), ணிறீ திக்ஷீஷீஸீtரஸீ, லிuக்ஷீவீரீணீஸீநீலீஷீ மற்றும் Los Molinos சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான Shining Path கைதிகளை படுகொலை செய்வதற்கான கார்சியாவின் ஆணையை இந்த படுகொலைகள் நினைவுபடுத்தி உள்ளன.

வெள்ளியன்று தொடங்கிய தாக்குதலில் இறந்தவர்களில் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளும் இருந்தனர். பாகுவா கிரேண்டேவிலுள்ள குட் சமாரிட்டன் மருத்துவமனையின் மருத்துவர் எட்கர் ரோடாஸ், ஒரு நான்கு வயது சிறுமி உட்பட காயப்பட்டவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்று கூறி, போலீஸின் இந்த நடவடிக்கையை "காட்டுமிராண்டித்தனமானது" என்று குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவ வசதிகள் திணறடிக்கப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க அதிகாரிகளின் கருத்துக்களுக்கு சார்பாக உள்ள பிபிசி மற்றும் நியூயோர்க் டைம்ஸின் செய்திகள், பழங்குடி அமைப்புகளின் தலைவர்களைக் குறை கூறுகின்றன. வெனிசூலா மற்றும் பொலிவியாவின் இடது-தேசியவாத அரசாங்கங்களால் அந்த அமைப்புகள் தூண்டிவிடப்பட்டிருப்பதாகவும் கூட அவை குறிப்பிடுகின்றன. ஞாயிறன்று வெளியான ஓர் அறிவிப்பில், பெருவிற்கு எதிரான ஒரு சர்வதேச சதி குறித்து பேசிய கார்சியா, "அரசிற்கு எதிரான ஆத்திரமூட்டல் மற்றும் பயங்கரவாதத்திற்காக" படுகொலை செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை குற்றஞ்சாட்டினார்.

பெருவியன் தினசரியான La Republica, எவ்வாறு நிகழ்வு கட்டவிழ்த்து விடப்பட்டது என்பது குறித்து ஒரு மிக வித்தியாசமான பார்வையை அளிக்கிறது: "காலை ஆறு மணிக்கு, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகளை வீசிக்கொண்டே தேசிய போலீஸின் சிறப்பு படையை சேர்ந்த மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள் அந்த பகுதிக்கு பறந்து வந்தன. அதே நேரத்தில், AKM ரைபிள்கள் ஏந்திய பெரிய போலீஸ் படை ஒன்று தரைவழியாக அவர்களைத் தாக்கியது. "சில நிமிடங்களில், அந்த சாலை கொல்லப்பட்டவர்களாலும், காயப்பட்டவர்களாலும் நிரம்பி இருந்தது. அவர்களின் சகோதரர்கள் போலீஸ் தாக்குதலின் மத்தியில் மீண்டும் புதுப்பிக்க முயற்சித்து கொண்டிருந்தார்கள்." படுகொலை செய்தி அருகிலுள்ள நகரமான Bagua-Chicaவை எட்டிய உடனேயே, மக்கள் கொதித்தெழுந்தார்கள். கட்டவிழ்த்துவிடப்பட்ட குழுக்கள் ARPA (ஆளும் கட்சி) தலையகங்களுக்கும், அரசாங்க அலுவலகங்கள், Cofopri, Pronaa மற்றும் சட்டமன்றத்தை சேர்ந்த கட்டிடங்களுக்கும் தீ வைத்தன. "பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக Bagua-Grande மக்கள் ஒன்று திரண்டனர், ஆனால் கன ஆயுதமேந்திய போலீஸ் படையினரால் தடுக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் முதலுதவி வழங்கவும் கூட போலீஸ் அவர்களை அனுமதிக்கவில்லை."

அரசாங்க பிரதிநிதிகளின் வருகை உள்ளூர் மக்களின் கோபத்தை மட்டுமே அதிகரித்தது. La Republica அறிக்கை தொடர்ந்து குறிப்பிடுகையில், "ஹெலிகாப்டர்களில் இருந்து, போலீஸ் கண்ணீர் புகைகளையும், வெடிகுண்டுகளையும் வீசியது. ஸ்தம்பித்து போன மக்கள், காயப்பட்டவர்களில் சிலரை தங்களுடன் தூக்கி கொண்டு இங்குமிங்கும் ஓடத் தொடங்கினர்," என்று எழுதியது.

மதியத்தில், அந்த சாலை மீண்டும் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. கற்களை வீசி மீண்டும் சண்டையில் இறங்கிய மக்கள் இருந்த பகுதிகளான Bagua-Grande மற்றும் Bagua-Chicaவில் மீண்டும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தார்கள். ஞாயிறன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பெருவிய அரசாங்கம், இராணுவ பாதுகாப்புடன் ஒரு ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்தது.

இறந்தவர்களில், Awajun பழங்குடி சமூகத்தின் தலைவர்களான Felipe Sabio மற்றும் Mateo Inti ஆகியோரும் அடங்குவர். இயற்கை மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்ததற்காக ஸ்பானிய ரெய்னா சோபியா விருது பெற்றவரும், Aguarunas அமைப்பின் தலைவருமான Santiago Manuin Valera கொல்லப்பட்டதாக தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இது உள்ளூர் மக்களிடையே கோபத்தை மூண்டெழ செய்தது. எவ்வாறிருப்பினும், எட்டு முறை சுடப்பட்டதால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் Manuin Valera காப்பாற்றப்பட்டதாகவும், ஆனால் மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.

Frontier Communities of the Cenepa Organization (Odecofroc in Spanish)ன் தலைவர் ஜெபெலியோ கயாப் La Republicaக்கு கூறுகையில், "சில உடல்கள் போலீஸால் எரிக்கப்பட்டு விணீக்ஷீணீமரஸீ ஆற்றில் வீசியெறியப்பட்டதாகவும்" தெரிவித்தார். கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், படுகொலையின் அளவைக் குறைத்து காட்டும் முயற்சியில் அவை ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த பழங்குடி மக்கள் ஏப்ரல் தொடக்கத்தில் அவர்களின் போராட்டத்தை தொடங்கினார்கள். முன்வைக்கப்பட்டிருக்கும் உடன்பாட்டில் முக்கிய முதலாளித்துவ நலன்களால் காடுகளின் மீது வழிவழியாக தங்களுக்கு இருந்து வரும் உரிமைகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், அரசாங்கம் அவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். ஜனாதிபதி கார்சியா அவரின் குறிப்பிடத்தக்க அலங்கார வார்த்தைகளில், அரசியல் அமைப்பின்படி, பெருவின் அனைத்து கனிமங்களும் மற்றும் ஹைட்ரோகார்பன் வளங்களும் அரசுக்கு சொந்தமாகும் என்பதால் தாம் யாருடனும் கலந்தாலோசிக்க வில்லை என்று கூறி அவரின் பிரதிபலிப்பைக் காட்டினார்.

கடந்த மாதத்தின் இறுதியில் பத்திரிகைகளுக்கு அளித்த ஓர் அறிக்கையில், அமேசன் பழங்குடியினரின் நிலங்களைச் சுரண்ட அவற்றை திறந்துவிடுவதாக அவர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை கார்சியா, "பிற்போக்கானது, பின்நோக்கியது மற்றும் தவறானது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதுடன், அவ்வாறு எதிர்ப்பவர்கள் அரசியல் அமைப்பை "படித்திருக்கவில்லை" என்றும் கூறினார்.

"எப்போதும் அங்கு வரும் வடஅமெரிக்க யான்கீஸ்களுக்கு மட்டுமின்றி, பெட்ரோலியத்திற்காக வரும் கொரிய, அரேபிய, ஜப்பானிய முதலாளிகளும் இருக்கிறார்கள். அதனால் பெரு ஒரு பெட்ரோலியம் ஏற்றுமதியாளராக மாறிவிடும் என்பதால் முதலீட்டை வெறுப்பவர்கள், முதலாளிகளை விரும்பாத மக்களும் அங்கு இருக்கிறார்கள் என்பது தான் அங்கு நடந்து வருகிறது," என்று கார்சியா தெரிவித்தார்.

சுமார் மூன்று மாத கால போராட்டத்தில், பழங்குடியின குழுக்கள் ஓர் உயர்ந்தளவிலான ஒருங்கிணைப்பையும், சீர்மையையும் அபிவிருத்தி செய்து கொண்டுள்ளன.

இந்த போராட்டங்கள் கிsஷீநீவீணீநீவீரஸீ மிஸீtமீக்ஷீஙtஸீவீநீணீ பீமீ ஞிமீsணீக்ஷீக்ஷீஷீறீறீஷீ பீமீ றீணீ ஷிமீறீஸ்ணீ றிமீக்ஷீuணீஸீணீ (கிவீபீமீsமீஜீஜிலீமீ மிஸீtமீக்ஷீ-மீtலீஸீவீநீ கிssஷீநீவீணீtவீஷீஸீ யீஷீக்ஷீ tலீமீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ஷீயீ tலீமீ றிமீக்ஷீuஸ்வீணீஸீ யிuஸீரீறீமீ-பெருவிய காடுகளின் அபிவிருத்திக்கான இனங்களுக்கிடையாலான அமைப்பு) என்பதின் தலைமையில் நடைபெற்றன. "நாங்கள் 1,350 இனங்களைப் பிரதிநிதிப்படுத்துகிறோம், இது 600,000 அமேசன் இந்தியர்களுக்கு சமம். நாங்கள் 25 மில்லியன் ஹெக்டேர் (62 மில்லியன் ஏக்கர்) நிலங்களை பழங்குடி பிராந்தியமாக அறிவிக்க அரசாங்கத்திடம் கோருகிறோம்," என்று போராட்ட தலைவர் Alberto Pizango சமீபத்தில் AFPயிடம் தெரிவித்தார்.

வெள்ளியன்று நடந்த வன்முறை போராட்டத்திற்கு பின்னர், Aidesepன் தலைவர் Alberto Pizando எதிராக கார்சியாவின் அரசாங்கம் கைது ஆணையைப் பிறப்பித்தது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்பதுடன், எங்கிருக்கிறார் என்றும் அறிய முடியவில்லை.

போராட்டக்காரர்கள் உடனடியாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற பழங்குடி அமைப்புகளின் தேசிய ஆதரவை வென்றார்கள். அவர்களின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் திட்டமிடப்பட்டன. அமேசன் நதிக்கரையில் உள்ள மிகப் பெரிய பெரு நகரமான Iquitosஇல், பழங்குடியின மக்களுக்கு ஆதரவான ஒரு பேரணியை போலீஸ் ஒடுக்கியது.

தெற்கு பெருவின் காட்டு பிராந்தியங்களில் வாழும் Machiguenga பழங்குடி மக்கள், பெருவின் முக்கிய சுற்றுலா தளமான Macchu Picchuவிற்கு செல்லும் ரயிலை மறித்தார்கள்.

அதன் ஆதரவைத் தெரிவித்திருந்த போராட்ட ஆசிரியர்கள் சங்கமான SUTEP, பெருவின் உழைக்கும் மக்கள் நலன்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திற்கு எதிராக போராட வேண்டியதன் தேவையை எழுப்பியது.

பொலிவியன் எல்லைக்கருகில் பெருவின் மிகதெற்கத்திய பிராந்தியத்தில் உள்ள Titicaca ஏரிக்கரையில் அமைந்துள்ள முக்கிய நகரமான புனோவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மத்திய ஆண்டெஸின் Ayacucho நகரத்தில் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 1980கள் மற்றும் 1990களில், இராணுவ படைகளுக்கும், Shining Pathஇற்கும் இடையில் நடத்த யுத்தத்தில் Ayacucho நகரம் மைய தளமாக இருந்தது.

இந்த படுகொலை தொடர்பாக, பிரதம மந்திரி யெஹூடெ சைமனுக்கு வெள்ளியன்று எழுதிய ஒரு கடிதத்தில், பிராந்திய பழங்குடி கூட்டமைப்பான Awajun of Alto Mayo (FERIAAM) பின்வருமாறு எழுதியது: "எங்கள் போராட்டத்தின் காரணங்களை திரித்துவிட நீங்கள் முயன்றாலும், எங்கள் சகோதரர்களின் படுகொலை ஒரு திட்டமிடப்பட்ட வடிவத்தில் நடத்தப்பட்டுள்ளது. யுத்த ஆயுதமேந்திய போலீஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் ஈட்டிகளைக் கொண்டிருந்த பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வேளையில், பழங்குடியின தலைவர்களுக்கு எதிராக வழக்குகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன."

அந்த கடிதம் மேலும் தொடர்ந்ததாவது: "லிமாவில் எங்கள் கூட்டமைப்புடன் நடத்த பேச்சுவார்த்தைகளில் அளிக்கப்பட்ட உங்கள் உறுதிமொழிகளும், அத்துடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான உங்களின் விருப்பமும் அனைத்தும் தவறென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தடையற்ற வர்த்தக உடன்படிக்கையைப் பாதுகாப்பதற்கான உங்களின் விருப்பமும், நான்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு எங்களின் மாகாணங்களை விற்பதற்கான சட்டங்களின் வடிவமைப்பும் மட்டுமே உங்களுக்கு அவசியமாகி உள்ள நிலையில், செய்தி பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து வசனங்களும் பெருவிய மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது."

அதிகளவிலான போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதானது, சூழ்நிலை உடனடியாக கோபமாக திரும்பியதையும், பெருவிய அரசாங்கத்திற்கு எதிராக உள்ளூர் மக்களின் முழு வீச்சிலான எதிர்ப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆத்திரமிக்க பிரதிபலிப்பு ஜனாதிபதி ஆலன் கார்சியா மற்றும் அவரின் பிரதம மந்திரி சைமனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நவீன ஆயுதந்தாங்கிய போலீஸ்காரர்கள் அதிக எண்ணிக்கையில் காயப்பட்டிருப்பதும், அவர்களின் தொண்டைகள் ஈட்டிகளுடன் இருந்த உள்ளூர் குடியானவர்களால் சிதைக்கப்பட்டிருப்பதையும் எவ்வாறு ஒருவரால் விவரிக்க முடியும்?

பழங்குடியின தலைவர்களின் குரல்களுக்கு செவி கொடுக்க அரசாங்கத்திற்கு எவ்வித ஆர்வமும் இல்லை என்பதையும், மாறாக, அது ஓர் இரத்தந்தோய்ந்த தாக்குதலுக்காக தயாரிக்கப்பட்டது என்பதால் அவர்களை ஏமாற்றவும், திசைதிருப்பவும் ஒரு நுண்மையான திட்டத்தை புகுத்தி இருப்பதையும் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த தொடர்ச்சியான சம்பவங்கள் எடுத்துகாட்டுகின்றன.

மே மாத மத்தியில், Aidesepன் தலைவர் Pizando பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்றும், மாறாக ஒரு வன்முறையான தீர்வை எதிர்பார்ப்பதாகவும் பிரதம மந்திரி சைமன் கூறியிருந்தார். இருப்பினும், அரசாங்கமே வன்முறையைப் பயன்படுத்த தயாராகி வந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஏப்ரல் 20ல், பழங்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஒரு பேச்சுவார்த்தையை தொடங்க பழங்குடியின தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மே 8ல், சாலைகள், அத்துடன் விமானங்கள் மற்றும் பாலங்களின் மறியல்களுக்கு பிரதிபலிப்பாக 60 நாட்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

மே 17ல், தேசிய போலீஸிற்கு 30 நாட்களுக்கு ஆதரவளிக்குமாறு ஆயுதந்தாங்கிய படைகளுக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கஸ்கோவில் உள்ள எண்ணெய் குழாய்வழியை கைப்பற்றிய 200 Machiguengan இந்தியர்களின் போராட்டத்தை ஜூன் 3ல் அடிபணிய வைத்தில் போலீஸ் வெற்றிகண்டது. இந்த நடவடிக்கையின் வெற்றி, பாகுவாவில் சாலைமறியலை உடைக்கும் அதன் முயற்சியிலும் அதே விளைவை அளிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிற்கு அரசாங்கத்தை இட்டு சென்றிருக்க கூடும்.

பெரு காடுகளைச் சுரண்டுவதற்கு வசதியாக சட்ட தடைகளை கிழித்தெறியும் "காடுகள் மற்றும் வனவிலங்குகள் சட்டம்" என்றழைக்கப்படும் சட்டமசோதா 1090ஐ நிராகரித்து, ஒரு வாதத்தை தடுப்பதற்காக ஜூன் 4ல், APRA காங்கிரஸ்காரர்கள் வெற்றிகரமாக அறிக்கை தாக்கல் செய்தார்கள். அவர்கள் மிகவும் அதிகாலையில் பாராளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் வரவதற்கு முன்னர் அல்லது அவர்கள் தமது உரையை தயாரிப்பதற்கு முன்னர் விவாதத்தை பிற்போடுவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இதனை செய்தனர்.

விவாதத்தை தடுப்பதற்கான APRAவின் அறிக்கையானது, ஜனநாயக நிகழ்முறையின் ஒரு பகுதியாகும் என்று சைமன் ஒரு வெட்ககேடான மற்றும் நேர்மையற்ற அறிக்கையை வெளியிட்டார். பழங்குடியின தலைவர்களை நிராகரித்து, தாம் தனிப்பட்ட முறையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார். அவரும், அரசாங்கமும், குறிப்பாக ஜூன் 11ல் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு Pizango அழைப்பு விடுத்ததற்கு பின்னர், ஒடுக்குமுறை முறைமைகளைக் கையாள தயாராக இருந்தன என்பது தெளிவாக இருந்தது.

MRTA கெரில்லாக்களுக்கு ஆதரவளித்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டு 1990களில் ஜெயிலில் அடைக்கப்பட்ட சைமன், 2008 ஆகஸ்டில் Alberto del Castilloவிற்கு மாற்றாக பிரதமராக கொண்டு வரப்பட்டார். அந்த நேரத்தில், ஜனாதிபதி கார்சியா வளர்ந்து வந்த பாரிய எதிர்ப்பை, குறிப்பாக போர்க்குணமுள்ள சுரங்க உழைப்பாளர்களிடமிருந்து பாரிய எதிர்ப்பை முகங்கொடுத்து கொண்டிருந்தார். ஆகவே அவரின் வலதுசாரி பிராச்சாரத்தை முன்னெடுத்து தொடர, தவிர்க்கமுடியாமல் அவருக்கு ஒரு இடதுசாரி போர்வை தேவைப்படுகிறது.

முதலாவதாக பெருவிய மக்களை ஏமாற்றும் முயற்சியிலும், பின்னர் பாகுவா சாலைமறியலில் ஈடுபட்ட பழங்குடி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதன் மூலமும் ஓர் ஆண்டுக்கும் குறைவான காலத்தில், அவரின் ஊழல் ஜனாதிபதிக்கும், அன்னிய மூலதனத்திற்கும் அவரின் விசுவாசத்தை சைமன் காட்டியுள்ளார்.

அமேசன் இந்தியர்கள் மீது ஓர் இரத்தந்தோய்ந்த தாக்குதலை நடத்துவதற்கான கார்சியா அரசாங்கத்தின் அவசரமானது, காட்டை அன்னிய மூலதனத்திற்கு திறந்து விடுவதற்கான தேவையாலும், அமெரிக்காவுடன் அவர் சமீபத்தில் கையெழுத்திட்ட தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் ஒரு மைய நோக்கத்தாலும் உந்தப்பட்டுள்ளது. பில்லியன்கணக்கான டாலர்கள் அங்கு பங்கு வகிக்கின்றன.

உண்மையில், படுகொலை நடந்து கொண்டிருந்தபோதும் கூட, மேற்கத்திய நிலப்பிராந்தியத்திற்கான வர்த்தக இணைசெயலாளர் வால்டர் பாஸ்டியன் தலைமையிலான அமெரிக்காவின் எரிசக்தி, சுரங்கம், தொலைதொடர்பு ஆகியவற்றிற்கான ஒரு பிரதிநிதிகள் குழுவும், பிற அதிகாரிகளும் லிமாவில் முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அமேசனில் கொலைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், பெருவின் "அரசியல் மற்றும் நீதியின் ஸ்திரத்தன்மைக்காக" அந்நாட்டை பாராட்டி, "புதிய பெருவின்" உருவாக்கம் குறித்து வலியுறுத்தினார்.

பழங்குடி மக்களிடையே இருக்க கூடிய பின்தங்கியநிலை மற்றும் "காட்டுமிராண்டித்தனத்திற்கு" எதிராக பெருவிய மக்களின் "முன்னேற்றம்" மற்றும் சமூக நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கார்சியா அரசாங்கத்தின் வாதங்கள் இகழ்ச்சியின்கீழ் உள்ளது. ஸ்பானிய போர்வீரர்களுக்கு பின்னர் இந்த மக்களுக்கு எதிராக திட்டமிட்டு கையாளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு தான் அவர்கள் காரணங்களை எதிரொலிக்கிறார்கள்.

பெருவிய அமேசனை எரிசக்தி பெருநிறுவனங்களுக்கும், பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிடுவதானது, அன்னிய மூலதனத்திற்கும், பெருவின் சிலவராட்சிகளுக்கும் (Oligarchy) மட்டும் தான் பயனை அளிக்க கூடும். பெருவிய சமூகத்தைப் பாத்திரப்படுத்தும் பெருந்திரளான மக்களின் வறுமை மற்றும் ஆழ்ந்த சமூக சமத்துவமின்மை தீவிரமடைந்து வரும் நிலையில், இலாப அடிப்படையிலான உற்பத்தியும், தனியார் சொத்துரிமையும் பழங்குடி மக்களின் மற்றும் சுற்றுச்சூழலின் பேரழிவைத் தான் தவிர்க்கமுடியாமல் ஏற்படுத்தும்.