World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The World Economic Crisis and Imperialist Aggression

Sri Lanka: SEP/WSWS to hold a public meeting in Jaffna

உலக பொருளாதார நெருக்கடியும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும்

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன

14 July 2009

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும், "உலக பொருளாதார நெருக்கடியும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும்" என்ற தலைப்பில், வட இலங்கையின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.

1930களின் மாபெரும் பின்னடைவின் பின்னர், பூகோள பொருளாதாரம் மிகவும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த பின்னடைவானது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் முதல் சீனா, இந்தியா மற்றும் இலங்கை வரை உலகின் எல்லா மூலை வரையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது எதிரிகளின் செலவில் இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண ஒவ்வொரு பெரும் வல்லரசும் எடுத்த முயற்சிகள் ஏகாதிபத்திய உள் முரண்பாடுகளையே உக்கிரமாக்கின.

தனது பூகோள பொருளாதார மேலாதிக்கத்தை இழந்த அமெரிக்கா, தனது பொருளாதார பின்னடைவில் இருந்து தலையெடுக்கும் முயற்சியில் அதனது ஆற்றல்மிக்க இராணுவ பலத்தை பயன்படுத்தி ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலும் போர் தொடுத்துள்ளது. செல்வாக்கு தேடுவதற்கான போராட்டத்தில் தெற்காசியா ஒரு போர்க்களமாகியுள்ளது. இலங்கை தனது மூலோபாய அமைவிடத்தின் காரணமாக இத்தகைய ஏகாதிபத்திய உள் பகைமைகளின் குவிமையமாகியுள்ளது.

பூகோள பொருளாதார நெருக்கடி இலங்கையை பாதிக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் கூறிக்கொண்டாலும், கிட்டத்தட்ட இந்த ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் 200,000 பேர் தொழிலை இழந்துள்ளனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெற்றிகண்டதில் இருந்து, அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது "பொருளாதார யுத்தமொன்றை" முன்னெடுத்துள்ளது.

சோ.ச.க./உலக சோசலிச வலைத் தள கூட்டம், பொருளாதார நெருக்கடிக்கு ஒரு அனைத்துலக சோசலிச தீர்வு பற்றி கலந்துரையாடுவதோடு இலங்கை மற்றும் ஆசிய தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு மாற்று அரசியல் முன்நோக்கை முன்வைக்கும் இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மீனவர்கள் உட்பட தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்: நாவலர் கலாச்சார மண்டபம்,

நல்லூர்,

யாழ்ப்பாணம்

காலம்: ஜூலை 18 சனிக்கிழமை பி.ப. 2 மணி