World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-Russian relations remain tense as Obama travels to Moscow

ஒபாமா மாஸ்கோவிற்கு பயணிக்கையில் அமெரிக்க ரஷ்ய உறவுகள் அழுத்தத்துடன் உள்ளன

By Niall Green
6 July 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க ஜனதிபதி பாரக் ஒபாமா ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவையும் பிரதம மந்திரி விளாடிமீர் புட்டினையும் ஜூலை 6-8 தேதிகளில் மாஸ்கோவில் சந்திப்பார். இரு பக்கங்களில் இருந்தும் இப்பேச்சுக்கள் ஒரு புதிய, இன்னும் கூடுதலான ஒத்துழைப்புடைய அமெரிக்க-ரஷ்ய உறவுகள் சகாப்தம் என்று கூறப்பட்டாலும், இரு சக்திகளுக்கும் இடையே அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

மார்ச் மாதம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ராவும் கூடிப்பேசி அமெரிக்க-ரஷ்ய உறவுகள் "மறு கட்டமைக்கப்படும்" என்றனர்; அதாவது இரு நாடுகளுக்கும் இடையே ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகம் மற்றும் கிரெம்ளினுக்கும் இடையே இருந்த விரோதப் போக்குடைய உறவுகள் கடக்கப்படும் என்றனர். இந்த வார உச்சிமாநாடு இந்த நிகழ்வுபோக்கின் ஒரு பகுதியாக வடிவமைப்பு பெற்றுள்ளது. சில வர்ணனையாளர்கள் வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே "பெரும் பேரம்" வரவுள்ளது என்று விவரிக்கின்றனர்.

கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா பேச்சுக்களை எளிதாக்கும் முறையில் ஆப்கானிஸ்தானிற்கு செல்லும் அமெரிக்க இராணுவ விமானங்கள் ரஷ்ய வான்பகுதியில் அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் அமெரிக்க மற்றும் ரஷ்ய ஆளும் உயரடுக்குகளின் நீண்டகால மூலோபாய நலன்கள் இத்தகைய ஒத்துழைப்பு ஒரு தற்காலிகமான நடவடிக்கை என்றுதான் இதை ஏற்றுக்கொள்ளும்.

சோவியத் ஒன்றியம் 1991ல் கலைக்கப்பட்ட பின்னர் அமெரிக்கா கிரெம்ளினால் ஒருகாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தன்னுடைய மேலாதிக்கத்தை கொண்டுவர ஆக்கிரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவை சுற்றி பால்டிக் கடலில் இருந்து மத்திய ஆசியா வரை தொடர்ந்த பல இராணுவத் தளங்ளை வாஷிங்டன் நிறுவியுள்ளதுடன், அதே நேரத்தில் அமெரிக்க தலைமையிலான நேட்டோவில் பல முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சோவியத் தலைமையில் இருந்த வார்சோ ஒப்பந்த நாடுகளையும் சேர்த்துள்ளது.

முன்னாள் ஸ்ராலினிச நாடுகளில் அமெரிக்க நடவடிக்கைகள் இரத்தம்தோய்ந்தவகையில் இன்றுவரை யூகோஸ்லாவியாவை சிதைக்க வைத்ததன் மூலம் வெளிப்பட்டது. அங்கு வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் தங்கள் உள்ளூர் தேசியவாத தலைவர்களான குரோஷியாவின் பிரங்கோ ருட்ஜ்மான் போன்றவர்கள் மூலம் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களை ஏற்படுத்துவதற்கு நாட்டை சிதைக்க தலையிட்டன. அப்பகுதிமீது தன் மேலாதிக்கத்தை பெறுவதற்காக 1999ல் அமெரிக்காவும் நேட்டோவும் சேர்பியாவிற்கு எதிரான வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு, அதற்கு காரணமாக பெல்கிரேட் கொசொவோ மாநிலத்தின் "இனப்படுகொலையில்" ஈடுபட்டுவருவதாகவும் போலியாகக் கூறி அவற்றை நியாயப்படுத்தின.

2000 ம் ஆண்டில் அமெரிக்க ஆதரவு பெற்ற "புல்டோசர் புரட்சி" என்பது சேர்பியாவில் நடத்தப்பட்டு ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசோவ் ஆட்சியை அகற்றியது. ரஷ்யாவின் மரபார்ந்த நட்பு நாடன சேர்பியாவில் இந்த மூலோபாயம் இறுதியில் கடந்த ஆண்டு ஒருதலைப்பட்சமாக சேர்பியாவில் இருந்து கொசொவோவை தனி நாடாக்குவதற்கு வாஷிங்டன் துணை புரிந்ததில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் அதிகமான ஆக்கிரோஷ நிலைப்பாட்டை மாஸ்கோவுடன் நெருக்கமான உறவுகள் கொண்ட நாடுகள் மீது காட்டியது. 2003, 2004 ஆண்டுகளில், முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா மற்றும் உக்ரைனில் "வண்ணப் புரட்சிகளுக்கு" வழிவகுத்தது. இதனூடாக தங்கள் பொருளாதாரங்களை அமெரிக்க முதலீட்டிற்கு ஏற்ப திறப்பவை மற்றும் நேட்டோ உறுப்பினராவதை நோக்கிய நாடுகளில் அமெரிக்க சார்பு உடைய ஆட்சிகள் பதவிக்கு கொண்டுவரப்பட்டன.

இன்னும் ஆழ்ந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஒன்றில் 2002ம் ஆண்டு புஷ் நிர்வாகம் முன்னாள் வார்சோ ஒப்பந்த தளங்களை தங்கள் பகுதிகளில் கொண்டிருந்த போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் ஏவுகணைப் பாதுகாப்பு வசதிகளுக்காக பேச்சு வார்த்தைகளை நடத்தியது.

1990களின் பெரும்பகுதியில் ரஷ்யா சோவியத் ஒன்றியத்தின் சரிவு மற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார "அதிர்ச்சி வைத்தியம்" எனப்பட்ட தனியார்மயமாக்கம் இவற்றால் அரசியல் மற்றும் பொருளாதாரப் பெரும் குழப்பத்தில் இருந்தது. ஆனால் கடந்த தசாப்தத்தில் மாஸ்கோ இன்னும் வலுவான முறையில் அமெரிக்காவின் "சுற்றிவளைப்பிற்கு" பதிலளிக்ககூடியதாக இருந்தது. ரஷ்யாவின் மகத்தான எண்ணெய் ஏற்றமதிகளின் உயர் விலையில் தோற்றுவிக்கப்படும் வருமானங்களை பயன்படுத்தி கிரெம்ளின் முன்னாள் சோவியத் பகுதியை, தன்னுடைய "அருகிலே இருக்கும் வெளிப்பகுதியில்" கூடுதலான செல்வாக்கை செலுத்த முடிகிறது.

இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிகத் தெளிவான வெளிப்பாட்டை கண்டது. அப்பொழுது மாஸ்கோவும் வாஷிங்டனும் ஜோர்ஜியா பற்றி நெருக்கமான இராணுவ மோதலுக்கு அருகில் வந்தன. அமெரிக்க ஆதரவு பெற்ற ஜோர்ஜிய ஜனாதிபதி மிகைல் சாகேஷ்விலி ரஷ்ய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பிரிவினைப் பகுதி தெற்கு ஒசேஷியா மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்கொள்கையில் ரஷ்ய படைகள் ஜோர்ஜியா மீது படையெடுத்து, வலிமையைக் காட்டிய விதம் வாஷிங்டனையும் ஐரோப்பிய சக்திகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஜோர்ஜியாவின் நிறைய இராணுவ வலிமையை குவித்து வைத்திருக்கும் அமெரிக்கா இதை எதிர்கொள்ளும் விதத்தில் தன்னுடைய கடற்படை ஆறாம் பிரிவில் இருந்து ஒரு பிரிவை அனுப்பியது; கிரெம்ளின் தன்னுடைய சிறந்த கருங்கடல் படைக் கப்பல்களில் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது.

ஜோர்ஜியா பற்றிய தொடர்ந்த அழுத்தத்தின் அடையாளமாக அமெரிக்காவும், ரஷ்யாவும் சமீபத்தில் கருங்கடலில் ஜோர்ஜிய கடல்கரைக்கு எதிரே தனித்தனிப் போர் விளையாட்டுக்களை நடத்தின. மே மாதத்தில் நேட்டோ 1,000 க்கும் மேற்பட்ட படையினரை கொண்டு "நெருக்கடியை எதிர்கொள்ளும் விதம்" என்பது பற்றி ஒரு பயிற்சியை நடத்தியது.

இப்பகுதியில் அழுத்தங்களை உயர்த்தியதற்கு நேட்டோவை மாஸ்கோ குற்றம்கூறியது. இந்த நடவடிக்கைகளில் கனடா தலையிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகை என்று நம்பப்படும் விதத்தில் மாஸ்கோவில் நேட்டோ அலுவலகத்தில் இருக்கும் இரு கனேடிய அதிகாரிகளை வெளியேற்றியது. ஜூன் மாத இறுதியில் ரஷ்ய துருப்புக்கள் ஒரு வார கால பயிற்சி முகாமை ஜோர்ஜிய எல்லைக்கு அருகே "2009 காகசஸ்" என்ற பெயரில் நடத்தியது.

குடியரசுக் கட்சியில் இருந்து வரும் அழுத்தங்கள், மற்றும் ஒபாமா நிர்வாகத்தினுள்ளேயே மாஸ்கோவிற்கு கணிசமாக எதையும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்று வந்த அழுத்தங்ளை எதிர்கொள்ளும்விதத்தில், வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா புறப்படுவதற்கு முன் வந்த கருத்துக்கள் அமெரிக்கா கணிசமாக சலுகைகளை மாஸ்கோவிற்கு கொடுக்கும் என்ற குறிப்பை அதிகம் வலியுறுத்திக் கூறவில்லை. ஒபாமா ஒரு "கடினப் போக்கைத்தான்" பேச்சுவார்த்தைகளின்போது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க ஏவுகணை நிலையங்கள் மற்றும் நேட்டோ கிழக்குப் புற விரிவாக்கம் பற்றி கொள்வார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் அடையாளம் காட்டினர்.

ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்க உளவுத்துறை வலைத் தளமான Stratfor.com வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் பற்றிய விவாதத்தை கசியவிட்டது. இவற்றில் நிர்வாக அதிகாரிகள் மாஸ்கோவிற்கு சில சலுகைளை கொடுப்பதை ஏற்று, அதற்கு ஈடாக அமெரிக்கா ஈரானில் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு ஆதவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைப்பு என்பவற்றை கோரக்கூடும்.

" ..நேட்டோவின் விரிவாக்கம் அல்லது ஏவுகணைகள் பாதுகாப்பு பற்றி ரஷ்யாவுடன், நாம் ஒன்றும் உறுதிமொழி கொடுக்கவோ அல்லதுவிட்டுக்கொடுக்கவோ அல்லது பேரமோ நடத்தப் போவதில்லை" என்று வெள்ளை மாளிகையின் ரஷ்ய, யூரேசிய விவகாரப் பிரிவுகளின் மூத்த இயக்குனர் மைக்கேல் மக்பவுல் செய்தி ஊடகத்திடம் கூறினார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அமெரிக்க நிர்வாகம், "வெளிப்படையான சலுகைகள் அல்லது நயமான உத்தரவாதங்களை" ரஷ்ய நிர்வாகத்திற்கு கொடுக்காது என்று கூறியது.

மாஸ்கோவுடன் அழுத்தங்களை அசாதாரண இராஜதந்திர நெறி இல்லாத வகையில் வெளிப்படுத்திய ஒபாமா Associated Press இடம் கடந்த வாரம் கிரெம்ளினில் ஆதிக்கம் உடைய நபரான பிரதம மந்திரி புட்டின் "பழைய வழியில் செயல்களை செய்வதில் ஒரு காலையும் புதிய வழியில் ஒரு காலையும் வைத்துள்ள ஒருவர் " என்று கூறினார்.

அமெரிக்க ரஷ்ய உறவுகளில் ஒரு புதிய சகாப்தம் என்ற கருத்து மாஸ்கோவிலும் அதிகமாக பேசப்படவில்லை, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர், ஒபாமா "ஒரு உற்சாகமற்ற வரவேற்பைத்தான்" மாஸ்கோவில் பெறுவார் என்றும் இதற்கு அவர் புட்டினை மறைமுகமாக குறை கூறியதுததான் காரணம் என்றும் கூறினார்.

"நாம் மிக அதிக நம்பிக்கை கொள்ளக்கூடாது" என கூட்டத்தைப் பற்றி என்று ஒரு மூத்த ரஷ்ய இராஜதந்தர அலுவலர் கூறினர். "ஒரு நல்ல சூழ்நிலை இருந்தாலும், விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால், இன்னும் அதிக இடர்பாடுகளைத்தான் காண நேரிடும்" என்று மாஸ்கோ அதிகாரி கூறினார்.

கூட்டத்தை பற்றி மிக அதிகம் தகவல் கொடுக்கப்பட்டுள்ள கூறுபாடு 1991 மூலோபாய அணுசக்தி குறைப்பு ஒப்பந்தம் ஆகும்; இது டிசம்பரில் முடிவடைகிறது. வெள்ளை மாளிகையும் கிரெம்ளினும் மூலோபாய அணுவாயுதங்களை ஒவ்வொரு பக்கமும் அதிகபட்ச வரம்பான 2,200ல் இருந்து 1500க்கு குறைத்துவிடுதல் என்று முறையாக அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெறும் தலைப்புச் செய்திக்கு வரும் விஷயம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; இந்தக் குறைப்பு அடிப்படையில் பழைய அணுவாயுதங்ளை, எப்படியும் உதறித் தள்ள வேண்டும் என்பதாகும். இரு நாடுகளும் உலகின் மொத்த அணுவாயுதங்களில் 90 சதவிகித்ததிற்கும் மேல் வைத்திருக்கின்றன. இந்த மிகக் குறைந்த உடன்பாட்டின் பின்னணியில் இன்னும் அதிகமான இந்நாடுகளின் விரோதங்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா அபிவிருத்திசெய்ய திட்டமிட்டுள்ள BMD எனப்படும் ஏவுகணைப் பாதுகாப்பு, போலந்து மற்றும் செக் குடியரசில் தளங்களை பயன்படுத்துதல், என்பது மாஸ்கோவிற்கு பெரும் கவலை அளிப்பதாகும். தலைவர்களுக்கு இடையே இது விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் இந்த திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்புகேடயம் எதிரியின் அணுவாயுத ஏவுகணைகள் போன்ற நீண்ட தூர இலக்கு உடைய பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழித்துவிடும் திறன் உடையவை.

BMD என்பது "நட்சத்திரப் போர்களின் புதல்வன்" என்று அழைக்கப்பட்டுள்ளது. ரேகன் சகாப்த காலத்தில் ஏவுகணை எதிர் முறை சோவியத்தின் அணுவாயுத சக்திக்கு எதிர்கனமாக இருந்தது போல். ஏவுகணை பாதுகாப்புகேடயத் திட்டம் 1990 கள் முழுவதும் தீவிரமாக இருந்தது. ஆனால் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாக காலத்தில் அதிகம் முன்னெடுக்கப்பட்டது.

ஏவுகணை பாதுகாப்புகேடய திட்டம் ரஷ்யாவை இலக்கு கொள்ளவில்லை என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஈரான், வட கொரியா போன்ற "தீய நாடுகளின்" தாக்குதலில் இருந்து காக்க என்று வாஷிங்டன் கூறுகிறது. இத்தகைய கருத்துக்களை கிரெம்ளில் நிராகரித்து, அமெரிக்க முறை ரஷ்ய தேசிய பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது. வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், கேடயம் ரஷ்யாவில் தரைத்தள பாலிஸ்டிக் ஏவுணைத் திட்டத்தின் பல பிரிவுகளை செயலிழக்கச் செய்து, அமெரிக்கா மற்றும் நேட்டோவிற்கு யூரேசியா மீது அணு ஆதிக்கத்தை நிலைநிறுத்திவிடும்.

BMD உடைய வளர்ச்சியை, போலந்து மற்றும் செக் குடியரசின் தளங்களில் நிறுத்துவது என்பது ரஷ்யாவிற்கும் மெட்வெடெவிற்கும் அமெரிக்க ஜனாதிபதியுடன் நடத்தும் பேச்சுக்களில் ஒரு முன்னுரிமை ஆகும். ஒபாமா நிர்வாகம் தான் ஏவுகணை கேடயத்தை அபிவிருத்தி செய்வதை தொடரும் என்று குறிப்பு காட்டியுள்ளது. ஆனால் மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்ற குறிப்பையும் காட்டியுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் அமெரிக்கா ஏவுகணைக் கேடயத்தில் சிறியளவு ரஷ்யாவின் பங்கை அனுமதிப்பதை ஏற்கலாம் என்று குறிப்பு காட்டியுள்ளனர். அதன்படி சமரச நடவடிக்கையாக ரஷ்யாவின் முன்மொழிவான அமெரிக்கா தனது BMD முறையின் ஒரு பகுதியை ரஷ்ய மண்ணில் நிலைநிறுத்தலாம்.

ரஷ்யாதான் ஏவுகணை கேடயத்திற்கு வெளிப்படையான இலக்கு என்று இருக்கையில், மாஸ்கோவிற்கு அமெரிக்கா கொடுக்கும் எந்தச் சலுகையும் குறைகிய காலத்திற்கு, ஆப்கானிஸ்தான், மற்றும் வடக்கு பாக்கிஸ்தானில் அமெரிக்கத் தலைமையில் நடக்கும் போர்களுக்கான அவசர இராணுவத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தைத்தான் கொண்டிருக்கும்.

பென்டகனில் திட்டமிடுபவர்கள் இதைப்பற்றி நன்கு அறிவர். பாக்கிஸ்தான் செயற்பாடுகளுக்கு தளம் என்பது நம்பக்கூடிய வரை, ஆப்கானிஸ்தான போர், ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தொடர ஒரே வழி ரஷ்யா மூலம், மற்றும் மத்திய ஆசியாவில் இருக்கும், ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார, இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கும் முன்னாள் சோவியத் குடியரசுகள் மூலம் விநியோகங்களை அனுப்புவதுதான்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரையில் மாஸ்கோ மாறுபட்ட நலன்களைக் கொண்டுள்ளது. ஒருபுறத்தில் கிரெம்ளின் இஸ்லாமிய தீவிரவாதம் ரஷ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை இருக்கும் இடங்களில் பரவுமோ என்ற அச்சத்தை கொண்டு, வாஷிங்டனின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" பயன்பாட்டை அங்கீகரிக்கிறது. இது செச்ஷேன்யா மீது தான் நடத்திய வன்முறை அடக்குதல் செயல்களுக்கும் மறைப்பு ஆகிறது. இந்த அளவிற்கும் மற்ற இடங்களில் சலுகை பெறுவதற்கும் கிரெம்ளின் ஒபாமாவிற்கு இணங்க சிறிது நடக்கலாம்.

ஆனால் ரஷ்ய உயரடுக்கு அமெரிக்கா மத்திய ஆசியாவில், ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு மேலாதிக்கத்தை செலுத்துவதை விரும்பவில்லை. பெப்ருவரி மாதம் உள்ளூர் ஆட்சியின் மீதான ரஷ்ய அழுத்தம் அமெரிக்க விமானப்படைகள் ஆப்கானிஸ்தானத்தில் செயற்பாடுகளுக்கு முக்கிய இடமாக இருந்த கிர்கிஸ்தானில் இருந்த மனஸ் விமானத் தளத்தில் இருந்து நீங்கும் நிலைக்கு பங்களித்திருக்கலாம். ஜூன் மாதம் கிர்கிஸ் அதிகாரிகள் அமெரிக்க 376 வது வான் படை பிரிவிற்கு தளத்தை பயன்படுத்த அனுமதி கொடுத்தது, வாடகையை உயர்த்தியது. இந்த நடவடிக்கை ஆப்கானியப்போரில் அமெரிக்க-ரஷ்ய ஒத்துழைப்பு புதுப்பிக்கப்பட்டதுடன் தொடர்புபட்டதாக நோக்கப்படுகின்றது.

கிரெம்ளின் அதிகாரிகள் அமெரிக்க இராணுவம் திகைத்து நிற்பது பற்றி களிப்புடன் உள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. சோவியத் நாடு ஆப்கானிஸ்தானில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அங்கு நடக்கும் போரில் வெற்றி காணமுடியாது என்றும் ரஷ்யாவில் கருதுகின்றனர்.

சமீபத்திய ஈரானிய தேர்தல்கள் மற்றும் இஸ்லாமிய குடியரசின் அணுசக்தித் திட்டமும் அமெரிக்க, ரஷ்ய தலைவர்களால் விவாதிக்கப்படக்கூடும்.

ரஷ்யா ஈரானுடன் குறிப்பாக எண்ணெய், எரிவாயு, அணுசக்தி விசை மற்றும் இராணுவத் துறைகளில் நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டுளது. அமெரிக்க தலைமையில் புதிய சர்வதேச பொருளாதாரத் தடைகள் தெஹ்ரானின் அணுச்தி திட்டத்தை ஒட்டி கொண்டுவரப்படுவதற்கு தயக்கத்தையும் காட்டியுள்ளது. ஈரானிய அரசாங்கத்தை சீர்குலைக்க நினைக்கும் அமெரிக்க முயற்சிகள் பற்றியும் மாஸ்கோ எச்சரிக்கை காட்டியுள்ளது. மெட்வெடேவ் ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட்டின் கடந்த மாத தேர்தலை தயக்கத்திற்கு இடமின்றி ஏற்றுள்ளார்.

தெஹ்ரானுக்கு மாஸ்கோ கொடுக்கும் ஆதரவு ஒன்றும் நிபந்தனையற்றது அல்ல. காகசஸ் மற்றும் மத்திய ஆசியப் பகுதியில் ஈரான் நீண்ட காலமாக மாஸ்கோவின் போட்டி நாடு ஆகும். அதே போல் கிரெம்ளின் ஒரு அணுவாயுதம் தாங்கிய ஈரான் இருக்கவும் விரும்பவில்லை. தெஹ்ரானில் "ஆட்சி மாற்றத்தை" அமெரிக்கர்கள் செய்வது மாஸ்கோவின் நலன்களுக்கு ஏற்ப இல்லை என்றாலும், மெட்வடேவும் புட்டினும் அமெரிக்க அழுத்தமான ஈரான் அணுத்திட்டம் பற்றி ரஷ்ய ஒத்துழைப்பு வேண்டும் என்பதற்கு இணங்கலாம்; மேலும் ஒபாமா நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகப் பொருளாதாரத் தடைகளுக்கும் ஒப்புதல் கொடுக்கலாம்.

முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, உக்ரைன் பற்றியும் மாஸ்கோ சலுகைகளை எதிர்பார்க்கும். ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காஜியா, தெற்கு ஒசேஷியா ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அங்கீகாரம் செய்ததை இன்னமும் அமெரிக்கா எதிர்க்கிறது. இரு பகுதிகளிலும் மாஸ்கோ பெரிய இராணுவ முகாம்களை கொண்டிருக்கிறது. இதைத்தவிர கடந்த ஆண்டு போருக்கு பின்னர் ஜோர்ஜியாவின் நடைமுறை எல்லைக்குள்ளும் துருப்புக்களை வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகியவற்றில் ரஷ்ய ஒத்துழைப்பிற்காக இப்பொழுது இதை வாஷிங்டன் பொருட்படுத்த தயாராக இல்லாமல் போகலாம். ஆனால் வாஷிங்டன் ஜோர்ஜியா மற்றும் காகசஸ் பகுதி மீது மேலாதிக்கம் கொள்வது வாஷிங்டனின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு இன்றியமையாதது ஆகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் முக்கியமான எண்ணெய், எரிவாயு குழாய்களை காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து ஜோர்ஜியா மூலமாக உலகச் சந்தைக்கு பாதுகாப்பாக பெற வேண்டும். இந்த வழிகள் ரஷ்யாவின் புறத்தே செல்லுகினற்ன. ரஷ்யாதான் காஸ்பியன் எரிபொருளுக்கான மேலை ஐரோப்பாவின் முக்கிய பாதையாக உள்ளது. வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் புதிய குழாய் திட்டங்களை காகசஸ் பகுதியின் வழியே கட்டமைக்கும் திட்டத்தை முன்வந்துள்ளன. இது எரிபொருள் விநியோகங்கள் மீது மாஸ்கோ கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை இன்னும் குறைத்துவிடும்.

இப்பகுதியே மாஸ்கோ மற்றும் வாஷிங்டனுடைய இராணுவ-மூலோபாய நலன்களுக்கும் முக்கியமானது ஆகும்; ஏனென்றால் இது ரஷ்யவின் தென்மேற்கு எல்லையாகவும் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு ஆகியவற்றிற்கு நுழைவாயிலாகவும் உள்ளது.

ரஷ்ய தலைவர்கள் அமெரிக்க முயற்சிகளான ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் ஆகியவற்றை நேட்டோவிற்குள் சேர்க்கும் முயற்சியையும் தகர்க்க முற்படுவர். வாஷிங்டன் இராணுவத் திட்டமிடுபவரின் இந்த இலக்கு ரஷ்யாவை இராணுவ முறையில் சுற்றி வளைப்பதாக உள்ளது. "மறு அமைப்பு என்ற முறையில் எந்த விதத்திலும் நாங்கள் இந்த இரு குடியரசுகளுடனும் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை கைவிடுவதாக இல்லை." என்று விவாதத்திற்கு இடம் கொடுக்கும் ஒரு அறிக்கையில் McFaul கூறியுள்ளார்; இது நேட்டோவில் அவை சேருவதற்கான மனுவை கொடுக்கும் விருப்புரிமையை சற்று பின்னே தள்ளியுள்ளது.

இது கூட்டின் ஐரோப்பிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியையும் சமாதானப்படுத்தும். அவை நேட்டோவில் ஜோர்ஜியா மற்றும் உக்ரைனிய அங்கத்துவம் ரஷ்யாவிற்கு எதிரான மிக அதிக ஆத்திரமூட்டல் என்று கூறி எதிர்த்துள்ளன.

ரஷ்யாவில் இருக்கும்போது, ஒபாமா மாஸ்கோவில் இருக்கும் New Economic School என்னும் 'தடையற்ற சந்தை' ஆதரவு அமைப்பில் உரையாற்ற உள்ளார். இது ஒரு முக்கிய வெளியுறவு கொள்கை அறிக்கை என்று கூறப்படுகிறது. கெய்ரோவில் இதே போன்ற முறையில் அவர் அமெரிக்க-முஸ்லிம் உறவுகள் பற்றிப் பேசியதுபோல், இங்கு ஒபாமா கிரெம்ளினுக்கு சமாதான முறையில் ஓலிவ் கிளையை கொடுக்கக்கூடும் என்றும் அதே நேரத்தில் ரஷ்யாவ் "ஜனநாயக உரிமைகளுக்கு" ஊக்கம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெம்ளினுக்கு அச்சுறுத்தல் என்று காணப்படும் நடவடிக்கையில், அதுவும் அமெரிக்கா முந்தைய "வண்ணப் புரட்சிகளுக்கு" ஆதரவு கொடுத்த நிலையில், ஒபாமா ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்களையும், தற்போதைய ரஷ்ய தலைமை பற்றி குறை கொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவரான மிகாய்ல் கோர்ப்பஷாவையும் சந்திக்க இருக்கிறார்.