World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Forty years since the first Moon landing

சந்திரனில் மனிதன் இறங்கி நாற்பது ஆண்டுகள்

Patrick Martin
20 July 2009

Use this version to print | Send feedback

இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 20, 1969ல் இரு அமெரிக்க விண்வெளிவீரர்கள், நீல் ஆர்ம்ஸ்ட்ரோங், எட்வின் (பஸ்) ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் இறங்கும் முதல் மனிதர்களாயினர். இந்த வரலாற்றுத் தன்மை நிறைந்த அறிவியல், தொழில்நுட்ப தீரச்செயல் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பானது" ஏனெனில் பூமியைச் சுற்றும் துணைக்கோள், மனிதர்களையும் ஏற்றிச்செல்ல அப்பலோ 11 தொடக்கிய காலகட்டம் மூன்று ஆண்டுகளுக்குப் பின் முடிவிற்கு வந்தது. சந்திரனுக்கு சென்ற ஆறு செயற்பாடுகளும் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்கசனின் தனியொரு முதல் பதவிக்காலத்தில் முற்றுப்பெற்றன.

டிசம்பர் 19, 1972 அன்று அப்பலோ 17ல் யூஜின் செர்னன், ரோனால்ட் இவான்ஸ் மற்றும் ஹாரிசன் ஷ்மிட் ஆகியோர் பூமிக்கு திரும்பியபோது, வெள்ளை மாளிகையில் நிக்சனும், கிரெம்ளினில் லியோனிட் பிரெஷ்நெவ் மற்றும் சீனாவில் மாவோ சே துங் பதவியில் இருந்தனர். அமெரிக்க இராணுவம் அப்பொழுதுதான் Operation Linebacker II, என்று அழைக்கப்பட்ட ஹனோய் மற்றும் ஹைபோங் மீதான கிறிஸ்துமஸ் குண்டு வீச்சை பாரிஸ் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் வட வியட்நாமிய பிரதிநிதிகள் குழுவின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு தொடங்கியிருந்தது.

சந்திரனில் மனிதன் இறங்கி நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் 21ம் நூற்றாண்டின் தரங்களின் அடிப்படையாக இருந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற ஒரு இணையற்ற பொறியியல், அமைப்பு முறை மற்றும் துணிவான சாதனையாக உள்ளது. நம்முடைய காலத்தில் இருப்பதைவிட இரண்டாம் உலகப் போருக்கு அருகில் இருந்த 1960களின் நடுப்பகுதிகள் எட்டு பதிவுகள் இருக்கும் ஒலிநாடா, ஆரம்ப நிலையில் இருந்த லேசர் மற்றும் காரில் காற்றுப்பை போன்ற புதிய கண்டுபிடிப்புக்களை கண்ணுற்றது. மைக்ரோசிப் அப்போதுதான் மிகத் தொடக்க நிலையில் இருந்தது. பூமியில் இருந்து நிலவிற்கு பயணிக்கத் தேவையான சிக்கல்வாய்ந்த கணக்குகள் இலத்திரன் குழாய்களும் டிரான்ஸிஸ்டர்களும் இருந்த மாபெரும் கணினிகளாலும் மற்றும் குத்து அட்டைகளையும் (punch cards) காகித நாடாவையும் பயன்படுத்தி செய்யப்பட்டன.

எட்டு ஆண்டுகளாக சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி, குறிப்பிட்ட சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையின் விளைவும் மற்றும் மகத்தான முறையில் வளங்கள் திரட்டப்பட்டதால் சாத்தியமாயின. ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி ஒரு தசாப்தத்திற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பிவைத்தல் இலக்கு என்று அறிவித்தபோது அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போரின் உச்சக் கட்டத்தில் இருந்து, விண்வெளி ஆராய்ச்சியல் சற்று பின்தங்கி இருந்தது. சோவியத்யூனியனோ விண்வெளியில் ஸ்புட்நிக்கை செலுத்தியிருந்ததுடன், விண்வெளிக்கு முதல் மனிதனாக யூரி அலெக்சேவிட்க் ககாரினையும் அனுப்பியிருந்தது.

"விண்வெளிப் பந்தயம்" என்று அழைக்கப்பட்டதற்கு ஸ்புட்னிக் ஆரம்ப உந்துதலைக் கொடுத்தது; ஆனால் அப்பொழுது உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இருந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த வளங்கள், அப்பலோ திட்டத்தின் இறுதி வெற்றியை உறுதியாக்கின. அதன் உச்சக் கட்டத்தில், திட்டம் 90,000 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுனர்களின் தொழில்நுட்ப, உற்பத்தித் திறனை பயன்படுத்தி மொத்தம் 420,000 தொழிலாளர்களையும் பயன்படுத்தியது. இது அமெரிக்கா முழுவதும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக செலவழிக்கப்பட்டதில் பாதிக்கும் மேலான எண்ணிக்கை ஆகும்.

கென்னடி ஆரம்ப பச்சைக்கொடி காட்டியிருந்தபோதிலும், அவருடைய உந்ததுதல் முக்கியமாக சோவியத் ஒன்றியம் உலகம் முழுவதும் பெற்றிருந்த பெருமிதத்தை அகற்றுதல் என்ற அரசியல் தன்மையை கொண்டிருந்தது. "எனக்கு ஒன்றும் விண்வெளியைப் பற்றி கவலை இல்லை" என்று அவர் 1962 கடைசியில் நாசாவின் நிர்வாகி ஜேம்ஸ் இ.வெப்பிடம் தெரிவித்த அவர் "இது நல்லது என்று நினைக்கிறேன். இதைப் பற்றி நாம் அதிகம் அறிய வேண்டும். ஆனால் நாமோ பெரும் வியப்பு அளிக்கும் செலவு பற்றிப் பேசுகிறோம்." எனக்கூறினார்.

1960களின் நடுப்பகுதியை ஒட்டி, நாசாவின் வரவுசெலவுத்திட்டம் வியட்நாம் போரில் பெருகிய செலவினங்களை அடுத்து அழுத்தத்திற்கு உட்பட்டன. நிலவில் இறங்கும் நேரத்தின்போது நாசாவும் அதன் ஒப்பந்தக்கார தொழிலாளர் பிரிவும் முறையாக எண்ணிக்கை குறைவை சந்தித்தன, திட்டமிடும் அளவு குறைந்துவிட்டதுடன், மேலும் விண்வெளித் திட்டம் புதிய பணி பற்றி சந்தேகத்தை கொடுத்தது. அது இன்றும் தொடர்கிறது.

ஜூலை 1969ல் இருந்து டிசம்பர் 1972வரை நாற்பது மாத காலம் நடந்த மனிதன் நிலவில் இறங்குவதற்கான தயாரிப்புக்கள் பல வகையில் அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் முக்கிய திருப்புமுனை ஆகும். போருக்கான செலவுகள் மற்றும் அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஊதியத்திற்கான தாக்குதல்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் நிதிய நிலைமையில் பெருகிய கடின நிலைகளை ஏற்படுத்தியது; அவை செலுத்துமதி நிலுவையை பெரிதும் அதிகரித்ததில் பிரதிபலித்தது.

ஆகஸ்ட் 15, 1971ல் ஜனாதிபதி நிக்சன் தேசிய தொலைக்காட்சியின் தோன்றி அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகளின் முக்கிய மாற்றத்தை அறிவித்து 1944ல் பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் நிறுவப்பட்ட சர்வதேச நிதிய முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்; அம்முறை டாலர் தங்கத்திற்கு 35$ க்கு ஒரு அவுன்ஸ் என்ற விகிதத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. 90 நாட்களுக்கு ஊதிய முடக்கத்தையும் இறக்குமதிகளில் 10 சதவிகித வரிவிதிப்பையும் அவர் அறிவித்தார்.

இந்த முடிவுகள் ஆழமான வரலாற்று முக்கியதுவத்தை கொண்டிருந்தன. அமெரிக்க முதலாளித்துவம் உலக நிதிய முறையை உறுதிப்படுத்தும் பங்கை இனிச் செய்ய முடியாது என்று போயிற்று. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் எழுச்சி பெற்ற முதலாளித்துவ போட்டியாளர்களை சந்தித்த நிலையிலும், உள்நாட்டில் சக்தி வாய்ந்த தொழிலாளர் இயக்கத்தையும் சந்தித்த நிலையிலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் சர்வதேச, உள்நாட்டு கொள்கைகளில் கடுமையான போக்கு மாற்றம் தேவை என்று உணர்ந்து அதில் இறங்கியது.

1970கள் தீவிர மந்த நிலை மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் கடும் தொடர் தாக்குதல்கள் ஆகியவற்றை கொண்டிருந்தது. இதில் குறிப்பிடத்தக்கது 111 நாட்கள் அமெரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததாகும். இதில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வேலைநிறுத்தத்தை முறிக்க Taft-Hartley சட்டத்தை பயன்படுத்த முயன்று தோல்வியுற்றார். 1980 ஐ ஒட்டி, வட்டி விகிதங்கள் இரட்டை இலக்கத்தில் இருக்கையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு ரேகன் நிர்வாகத்தை பதவிக்கு கொண்டுவந்து, வெளிப்படையான தொழிற்சங்க உடைப்பைத் தொடங்கி, தொழில்துறையை அழித்தலையும் தொடக்கியது. இது ஒரு தசாப்தத்திற்கு கடுமையான வேலைநிறுத்தப் போராட்டங்களை தூண்டியது. ஆனால் அவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டன.

இத்தோல்விகளின் விளைவுகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களில் பாரிய சரிவு ஆகும். அதே ஆண்டில், 1972ல், மனிதனை ஏற்றி நிலவிற்கு சென்றிருந்த பணிகள் முடிவுற்றதை குறித்த அதே ஆண்டுகள்தான் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் உச்ச நிலையையும் குறித்தது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. அமெரிக்க முதலாளித்துவம் திரும்ப முடியாத வரலாற்றுச் வீழ்ச்சியின் காலத்தில் நுழைந்துவிட்டது, அந்த நிகழ்போக்கு ஒவ்வொரு சமூக, பண்பாட்டு கூறுபாடுகளிலும் வெளிப்பாட்டைக் கண்டது.

அதன் வெளியுறவுக் கொள்கையில் இந்தச் சரிவு தொடர்ச்சியான ஆக்கிரோஷ இராணுவ செயற்பாடுகளை தூண்டியது. வியட்நாமில் தோல்வியுற்றபின் ஒரு படைக்குறைப்புக்காலத்தை அடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியம் மற்றும் "மூன்றாம் உலகின்" தேசியவாத நாடுகளுக்கு எதிராக இராணுவக் கட்டமைப்பு முறையைத் தொடக்கியது. ''மூன்றாம் உலகமோ'' அமெரிக்காவிற்கும் சோவியத் முகாம்களுக்கும் இடையே சமப்படுத்தலை நிறுவ முற்பட்டிருந்தது.

விண்வெளித்திட்டம், இந்த இராணுவ மேலாதிக்க உந்துதலுக்கு முற்றிலும் தாழ்த்தப்பட்டது. பூமியின் சுற்றுக் கோளத்திற்கு அப்பால் ஆராய்ச்சி என்பது இயந்திரங்களிடம் விடப்பபட்டது. மனிதனை ஏற்றிச் செல்லும் திட்டங்கள் விண்கலத்தை அனுப்புவதுடன் நிறுத்தப்பட்டது, ரேகன் நிர்வாகத்தால் பகுதியாக வெளிவந்த திட்டம் ஆகும். அதுவும் அது கூறிய "நட்சத்திரப் போர்கள்" திட்டத்தின் பிற்சேர்க்கையாக விண்வெளியில் தாக்குதல், பாதுகாப்பு ஆயுதங்களை நிலைகொள்ள வைத்தல் அப்போரின் திட்டமாக இருந்தது.

விண்வெளிக் கலம் பெயரளவிற்கு "பொதுத்தேவை" என்று கூறப்பட்டது--இதுதான் நிலையான விண்வெளி நிலைந்திற்கான அஸ்திவாரங்களை அமைத்தது. ஆனால் இதன் உண்மை நோக்கம் பென்டகனுக்கு ஒற்றுவேலை பார்க்கும் செயற்கை கோள்களை வழங்க கூடுய திறனை வழங்குதலும், அவை வெற்றிகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டால், உண்மையான விண்வெளி ஆயுதங்களை தயாரித்தலும் ஆகும். "நட்சத்திரப் போர்களின்" தொழில்நுட்பத் தோல்வி விண்வெளித்திட்டத்தின் உண்மையான நோக்கத்தை இல்லாமல் செய்துவிட்டதுடன், நாசாவின் வரவுசெலவுத் திட்டமும் தேக்கம் அடைந்து.

1987ல் சாலஞ்சர், 2003ல் கொலம்பியா ஆகியவற்றின் இழப்பு விண்வெளி கலத்திட்டத்தில் உள்ளடங்கியிருந்த இயல்பான மட்டுப்படுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியுறும் பொருளாதார நிலைமையின் பாதிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. இருப்பில் இருந்த திட்டங்களை தொடர்வதற்கு மட்டும் போதிய இருப்புக்கள்தான் நாசாவிற்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த பேரழிவை தவிர்க்க அது போதுமானதாக இல்லை. இறுதியாக கொலம்பியாவிற்குப் பின் நாசா விண்வெளிக்கலத்திட்டம் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு, அப்பல்லோ வகையிலான ராக்கட் உந்தும் அமைப்பினை நோக்கி மீண்டும் செல்லவேண்டியிருக்கும் என்று அறிவிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. மற்றும், அது 2015 வரை தயாரிப்பு நிலைக்கு வராது என்றும் கூறப்பட்டது.

மேலும் விண்வெளிநிலையம் இரு தசாப்தங்களில் $1000 பில்லியன் செலவிற்கு பின்னர் இப்பொழுதுதான் கிட்டத்தட்ட முழுமை அடைந்துள்ளது. இது பணம் இல்லாததால் கைவிடப்படக்கூடும். நாசா விண்வெளி நிலையத் திட்டத்தின் நிர்வாகி மைக்கேல் டி. சப்ரிடினி வாஷிங்டன் போஸ்ட்டிடம் கடந்த வாரம், "2016 முதல் காலாண்டுப் பகுதியில் விண்வெளிக் கலத்தை சுற்றுக்கோளத்தில் இருந்து அகற்ற தயார் செய்வோம்." எனக்கூறினார்

அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் முட்டுச்சந்தி என்பது ஒரு கிரகத்தில் இருந்து கிரகங்களுக்கு அப்பாலும் வாழமுடியும் என்ற மனிதகுலத்தின் எழுச்சிக்கு அளிப்பு அளிக்க முற்பட்ட உண்மையான விருப்பத்தை கொண்டிருந்த அறிவியல் வல்லுனர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்களும் தோல்வியால் ஏற்பட்டுவிடவில்லை. மனிதனற்ற விண்வெளிக்கலம் மூலம் சூரிய மண்டலத்தை ஆராயும் தொடர்ச்சியான மிகச் சிறந்த முயற்சிகளை நாசா தன்னுடைய தொழில்நுட்ப, அறிவியல் முன்னேற்றங்களுடன் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் புதன் கிரகத்திற்கு செல்லல், செவ்வாய் கிரகத்திற்கு பினிக்ஸ் பயணம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட இரு ரோவர்களின் தொடர்ந்த வெற்றி, ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை சீர்படுத்தியமை மற்றும் வெளிக்கிரகங்களுக்கு மேலதிக பயணிப்பிற்கான தயாரிப்புக்கள் ஆகியவை நடைபெற்றன.

இறுதிப்பகுப்பாய்வில், விண்வெளியை வெற்றிகரமாக ஆராய்ந்தது, மிக பணம் வாய்ந்த, தொழில்நுட்ப முன்னேற்றம் படைத்த நாடாயினும் கூட எந்தவொரு தேசிய நாட்டின் திறனுக்கும் அப்பால் இருந்தது. இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில், கடந்த தசாப்தங்களில் பெறப்பட்ட ஆதாயங்களில் எஞ்சியிருப்பவையும் விரைவில் இழக்கப்பட்டுவிடும்.

வரலாற்றில் அனைத்து முன்னேற்றப் பணிகளைப் போலவே, விண்வெளியில் மனிதகுலத்தின் முன்னேற்றம் உற்பத்திக்கருவிகளை தனியார் உடமை ஆக்கியுள்ள மற்றும் உலகத்தை போட்டியிடும் எதிரெதிர் தேசிய அரசுகளாக பிரித்து வைத்துள்ள இலாபமுறையினால் நிறுவப்பட்ட தடைகளை கடப்பதில் தங்கியுள்ளது. வேறுவிதமாகக் கூறினால் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை அடித்தளமாக கொண்ட உலகத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சியை நம்பியுள்ளது.

கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்

The Moon landings in historical perspective

[20 July 1999]

The Columbia tragedy: NASA, Congress, Bush ignored safety warnings

[4 February 2003]

The Columbia Space Shuttle disaster: science and the profit system (three-part series)

Part 1, Part 2, and Part 3

[19, 20 and 22 September 2003]