World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese regime admits shooting protestors in Xinjiang

ஜின்ஜியாங்கில் ஆர்ப்பாட்டக்கார்களை சுட்டு கொல்ல சீன ஆட்சி அனுமதிக்கிறது

By John Chan
24 July 2009

Use this version to print | Send feedback

ஜின்ஜியாங் உகூர் சுயாட்சி பிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை தணிக்க சீன அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்த போதினும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து உய்குர் (Uighur)் இன எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஒரு காட்டுமிராண்டித்தனமான இராணுவ-போலீஸ் அடக்குமுறை நடத்தப்பட பெய்ஜிங் அனுமதி அளித்துள்ளது.

ஜூலை 5ல் நடந்த கலகங்களின் போதும், அதை தொடர்ந்து மாகாணத்தின் தலைநகரான யூரும்கீயிலும், பாதுகாப்பு படைகளால் 12 எதிர்ப்பாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதை கடந்த சனியன்று ஜின்ஜியாங் மாகாண சேர்மேன் நுர் பெர்கி முதன்முறையாக ஒப்புக் கொண்டார். அந்த துப்பாக்கி சூடு "சட்டத்திற்கு உட்பட்டதென்றும்", உகூர் உலக காங்கிரஸ் போன்ற தடை செய்யப்பட்ட உய்குர்் பிரிவினைவாத குழுக்களால் திட்டமிடப்பட்டிருந்த ஒரு வன்முறை குற்றத்தை ஒடுக்க அது தேவைப்பட்டதென்றும் கூறி அந்த கொலைகளை அவர் நியாயப்படுத்தினார்.

அதற்கடுத்த நாள், பயங்கரவாதம் மீதான ஒடுக்குமுறைக்கும், பிரிவினைவாதத்திற்கும் எதிரான ஜின்ஜியாங்கின் யுத்தத்திற்கு சட்டரீதியான ஆதரவு வழங்க சட்ட அமைப்பு புதிய வரையறைகளை வழங்கி இருப்பதாக ஜின்ஜியாங் பிராந்திய மக்கள் காங்கிரஸ் தலைவர் எலிஜென் இமிபக்ஷி அறிவித்தார். அதாவது, தீவிர போலீஸ் அடக்குமுறையை சட்டபூர்வமாக்குவது.

உய்குர் எதிர்ப்பாளர்களின் உண்மையான இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்க கூடும். 400 மக்கள் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ள உய்குர் உலக காங்கிரஸ், ஆரம்பத்தில் அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது போலீஸ் தாக்குதல் நடத்திய பின்னர் தான் எதிர்ப்பாளர்கள் வன்முறையில் இறங்கினார்கள் என்று கூறியது. ஜூன் இறுதியில், குவாங்டாங் மாகாணத்தில், பொம்மை ஆலையின் இரண்டு உய்குர் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட ஒரு சம்பத்திற்கு நீதி கோரி அந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, உத்தியோகபூர்வமான சின்ஹூவா செய்தி நிறுவனம் கடந்த வாரயிறுதியில் ஒரு செய்தியை பிரசுரித்தது. ஆயிரக்கணக்கானவர்களை கொண்டிருந்த அந்த போராட்டமானது, யூரும்கீ முழுவதும் 50திற்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த ஒருங்கிணைந்த "குற்றமாகும்" என்று அது குறிப்பிட்டது. போராட்டக்காரர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் சின்ஹூவா குறிப்பிட்டது. ஓர் உள்ளூர் வியாபாரியை குறிப்பிட்டு காட்டிய சின்ஹூவா, "இந்த கிளர்ச்சிக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் கத்திகள் அதிக விற்பனையாகும் பொருட்களாக இருந்தன," என்று குறிப்பிட்டது. முன்னதாக பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில், வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளை எவ்வாறு பற்ற வைப்பது என்பதை ஆச்சரியப்படும் வகையில் போராட்டக்காரர்கள் விரைவாக கற்று கொண்டார்கள் என்றும் அது குற்றஞ்சாட்டியது.

சிறிய ஆதாரத்துடனோ அல்லது ஆதாரமற்ற அடிப்படையிலோ, இந்த சம்பவம் 1989 தியானன்மென் சதுக்க படுகொலைக்கான அரசு பிரச்சாரத்தையே நினைவுபடுத்துகிறது. அதில் ஆயிரக்கணக்கானவர்களை இல்லையென்றாலும், நூற்றுக்கணக்கான போராடிய தொழிலாளர்களை இராணுவம் கொன்றது. மேலும் "எதிர்-புரட்சி கலகம்" திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் "காட்டுமிராண்டித்தனமான" "கலகக்காரர்கள்" இராணுவ வாகனங்களை எரித்து படுகொலை செய்தார்கள் என்றும் அந்த ஆட்சி ஒரு தவறான தோற்றத்தைச் சித்தரித்தது.

திடீரென வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களாக குச்சிகள், கத்திகள் மற்றும் கோடாரிகளை எடுத்ததுடன், உய்குரியர்களுக்கு எதிராக சமூக பழிதீர்க்கப்படும் என்றும் அச்சுறுத்திய ஹன் கலகக்காரர்களைப் பற்றி சின்ஹூவா எதுவும் குறிப்பிடவில்லை. கலகத்தின் போது மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 197 என்றும், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1,721 என்றும் (இதில் பெரும்பாலானவர்கள் ஹன் பொதுமக்கள்) குறிப்பிட்டதன் நோக்கம், அப்பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ள கனத்த பாதுகாப்பு முறைமைகளை நியாயப்படுத்துவதும், சகல இனப்பின்புலம் கொண்ட தொழிலாளர்களையும், கிராமப்புறத்து ஏழைகளையும் பயமுறுத்துவதுமாகும்.

சீன பாதுகாப்பு துறைகளின் உள்வட்டாரங்களின் அடிப்படையில் ஜூலை 19ல் பைனான்சியல் டைம்ஸின் படி, பெய்ஜிங் பெருமளவிலான ஆயுதமேந்திர போலீஸை ஜின்ஜியாங்கிற்கு அனுப்பி கொண்டிருந்தது. இந்த எண்ணிக்கை, அக்டோபரில் சீன கம்யூனிஸ்டு கட்சி (CCP), ஆட்சிக்கு வந்த 60ஆம் ஆண்டு நினைவுநாளின் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை வைக்கவிருக்கும் அக்டோபருக்கு முன்னதாக இந்த எண்ணிக்கை 130,000ஐ தொடும்.

உண்மையில், 4,000த்திற்கும் மேற்பட்ட உய்குரியர்கள் கைது செய்யப்பட்டனர். இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட சுமார் 1,400 என்ற எண்ணிக்கையை விட மிக அதிகமாகும். "ஒடுக்குமுறை குறித்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தின் விவாதத்தில் கலந்து கொண்ட ஒரு நபரின் கருத்துப்படி, யூரூம்கியின் சிறைச்சாலைகள் நிரம்பிவிட்டன, புதிதாக கைது செய்யப்படும் மக்கள் மக்கள் விடுதலை இராணுவ பண்டகசாலையில் தங்க வைக்கப்படுகிறார்கள்," என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

அடையாள பரிசோதனைகள் நடத்த, குறிப்பாக உய்குர் பயணிகளுக்காக யூரூம்கியிலும், காஷ்கர் போன்ற ஜின்ஜியாங்கின் பிற நகரங்களிலும் அனைத்து முதன்மை சாலைகளிலும் துணை இராணுவ போலீஸ் சோதனைச்சாவடிகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பாதுகாப்பு வட்டாரம் பைனான்சியல் டைம்ஸிற்கு குறிப்பிடுகையில்: "யூரும்கியில் இருந்து உய்குர்யர்கள் வெளியேறுவது சாத்தியமாக இருக்கலாம், ஆனால் யாரும் வலையில் இருந்து விடுபட முடியாது." தெற்கு ஜின்ஜியாங்கில் உள்ள பல கிராமப்புற மாவட்டங்களில் உய்குர் போராட்டக்காரர்கள் தங்கி இருக்க கூடும் என்று சந்தேகத்தில், அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

இன ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவதாக கூறப்படும் அனைத்து பெய்ஜிங் பேச்சுக்களுக்கும் நடுவில், நாட்டுப்பற்றுக்கான பெய்ஜிங்கின் மத்திய பல்கலைக்கழகத்தில் படிப்பித்து வரும் உய்குர் பொருளாதார நிபுணரான இல்ஹாம் தோஹ்தியை, யூரூம்கியில் ஜூலை 5ல் போராட்டம் நடந்த ஓரிரு நாட்களில், இரகசிய போலீஸ் கைது செய்தது. இன ஒற்றுமைக்கு அழைப்புவிடுக்கும் மற்றும் ஜின்ஜியாங்கில் உள்ள சமூக பிரச்சனைகளை வெளியிடும் உய்குர் ஆன்லைன் என்ற அவரின் வலைத் தளமும் முடக்கப்பட்டது.உய்குர்களின் மத்தியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிக அதிகமாகிவிட்டதாக மார்ச்சில், தோஹ்தி அமெரிக்க ஆதரவிலான ரேடியா Free Asiaவிற்கு தெரிவித்தார். 1990களில் சீன அரசாங்கம் குறித்து அவர் ஆராய்ச்சி செய்த போது, 9 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையில் 1.5 மில்லியன் உய்குர்யர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக அவர் கண்டறிந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற சீன அறிவுஜீவிகள், தோஹ்தியை விடுவிக்க வேண்டுமென்று கோரியும், அவர் மீதான கைது நடவடிக்கை இன பதட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று எச்சரித்தும் எழுதப்பட்ட ஒரு பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

சீனா மற்றும் ரஷ்யா, ஜூலை 22 முதல் 26 வரை "அமைதி திட்டம் 2009" என்ற ஒரு கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொள்கின்றன, மத்திய ஆசியாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயிற்சியில், 2,600 துருப்புகள், டாங்கிகள், ஆயுதந்தாங்கிய தாக்கும் வாகனங்கள் மற்றும் போர் விமானங்கள் பங்குபெறுகின்றன. அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள மக்களை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும் சீனா மற்றும் ரஷ்யாவின் "பின்புலத்தில் உள்ள பகுதிகளில்" மத்தியஸ்தம் செய்ய வேண்டாம் என்பதற்காக, இது, ஆப்கானிஸ்தானில் தன் யுத்தத்தைத் தீவிரப்படுத்தி வரும் அமெரிக்காவிற்கு அளிக்கப்படும் ஒரு மறைமுகமான எச்சரிக்கையும் கூட.

மத்திய ஆசியாவில் ஆழமாக காலூன்றவும், தொழிற்துறைக்கு முக்கியமாக உள்ள எரிசக்தி ஆதாரங்களையும், பருத்தியையும் பெற தற்போது சீன தலைநகருக்கு ஜின்ஜியாங் ஒரு வர்த்தக மையமாக இருக்கிறது. ரஷ்யா, கஜகிஸ்தான் மற்றும் பிற மத்திய ஆசிய குடியரசுகளுக்கான உடை மற்றும் விவசாய பொருட்களின் ஏற்றுமதியும் உயரும் என்பதால், அப்பிராந்தியத்தின் வெளிநாட்டு வர்த்தகம் இந்த ஆண்டு 25 சதவீதம் உயர்ந்து 27.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன் புலம்பெயர்ந்தோரிடையே அதிகரிப்பு, வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் (துரித உணவு அங்காடிகள் மற்றும் பங்கு வர்த்தகம் முதல் அழகு ஆராவார கண்காட்சிகள் வரை) வெற்று முதலாளித்துவ உறவுகளுடன் இணைகிறது என்பதால், இதன் விளைவு, மரபார்ந்த உய்குர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கலாச்சாரங்கள் தெளிவாக நசுக்கப்படுவதாக தான் இருக்கும். அப்பிராந்தியத்தில் உள்ள ஏழை விவசாயிகள் விவசாய நிறுவனங்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வரப்படாததுடன் மற்றும் மலிவு உழைப்புக்கான ஒரு புதிய ஆதாரமாக விளங்கும் உழைக்கும் வர்க்கத்துடனும் அவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

வறுமையால் மட்டுமின்றி, போலீஸின் மிரட்டல் மற்றும் கடுமையான அபராதங்கள் குறித்த அச்சத்தாலும் 2002 முதலாகவே உய்குரியர்கள் தொழிற்சாலைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று ஜூலை 15ல் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. ஹீப்யூவில் உள்ள ஒரு ஜவுளித்துறை ஆலையின் உரிமையாளர், லீ குவாலின் கூறுகையில், 2007ல் ஜின்ஜியாங்கில் இருந்து அவர் 143 பெண்களை வேலைக்கு அமர்த்திய போது, அவர்களின் தினசரி வாழ்க்கையை மேற்பார்வையிட அவர்களின் சொந்தநகரத்தில் இருந்து ஒரு போலீஸ்காரரும் உடன் வந்தார். "அந்த போலீஸ்காரர் இல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் ஆரம்பத்திலேயே விலகி ஓடி இருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். உள்ளூர் அதிகாரிகள் பின்னர் தெளிவுபடுத்தாத வரை நான் உணராமல் தான் இருந்தேன். அந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி வரவில்லை என்பதை நான் பின்னர் தான் தெரிந்து கொண்டேன்" என்றார்.

குவாண்டொங் மாகாணத்தின் ஷொகுவான் நகரத்தில் உள்ள The Early Bright பொம்மை ஆலை, அதனது 18,000 தொழிலாளர்களின் ஒரு பகுதியாக, 818 உய்குர் தொழிலாளர்களை மே மாதம் நியமித்தது. ஆரம்பத்தில், ஹன் மற்றும் உய்குர் தொழிலாளர்கள் இணைந்து இரவுநேர ஆட்டங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் தங்களுக்குள் ஓர் இணைப்பை உருவாக்க முயன்றார்கள். ஆனால் உய்குரியர்கள் இரண்டு பெண் தொழிலாளர்களைக் கற்பழித்துவிட்டதாக வெறுப்படைந்த ஒரு ஹன் தொழிலாளரால் பரப்பப்பட்ட ஒரு வதந்தி, சச்சரவைத் தூண்டிவிட்டது, இதில் இரண்டு உய்குரியர்கள் கொல்லப்பட்டனர், அத்துடன் இந்த நிகழ்வு யூரும்கியில் ஜூலை 5 போராட்டத்தையும் பற்ற வைத்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்ட, நாட்டின் சிறுபான்மை இனத்தவரை நோக்கிய பிற்போக்குவாத ஹன் மேலாதிக்கத்தால் நிச்சயமாக Early Bright தொழிற்சாலை சம்பவத்தை பற்றவைத்தது. இது, ஏற்றுமதி தொழிற்துறையில் பாரியளவில் வேலை இழப்புகளை ஏற்படுத்தி வரும் சர்வதேச பொருளாதார நெருக்கடியால் உருவாக்கப்பட்டு, தீவிரமடைந்து வரும் சமூக பதட்டங்களின் ஓர் அறிகுறியுமாகும். ஜின்ஜியாங் கிளர்ச்சி சீன தொழிலாள வர்க்கத்திடையே ஒரு பரந்தளவிலான போராட்டத்திற்கு இட்டு செல்லும் என்பது வெளிப்படையாக தெரிகிறது, பெய்ஜிங்கின் போலீஸ் அரசு அடுக்குமுறைக்கு பிரதிபலிப்பாக மேற்கத்திய அரசாங்கங்கள் ஒட்டுமொத்தமாக மெளனம் காத்து வருகின்றன.

சீனாவின் எதிர்வரவுள்ள உடைவு (The Coming Collapse of China) என்பதன் ஆசிரியரான கோர்டன் சாங், இந்த மாதம் போர்ப்ஸ் இதழுக்கு கூறுகையில், மேற்கத்திய தலைநகரங்களின் பிரச்சனைகளை வெளியிட்டார். "ஜின்ஜியாங்கில் நாம் பார்த்து கொண்டிருப்பதால், சீன ஆட்சி விழக்கூடும், கட்சி அதன் இதயங்களையும், மனங்களையும் இழந்து கொண்டிருக்கிறது, மேலும்... அவ்வாறு நடக்கும் போது ஓர் ஆளும் அமைப்பு நிச்சயம் பாதிப்படையும். சீனாவின் பெரும்பாலான பிற பகுதிகளில், இன பதட்டங்கள் ஒரு காரணியாக இல்லை, ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி வேறு பிற பிரச்சனைகளை கொண்டுள்ளது. பெரும்பாலும் எவருமே அதன் சித்தாந்தத்தை நம்பவில்லை, சிலர் தைரியமாக அதை எதிர்க்கிறார்கள், ஆனால் சிலர் எங்கும் அதை உற்சாகமாக ஆதரிக்கிறார்கள். அக்கறையின்மை, பயம் மற்றும் சீனா சிறப்பாக இருக்க முடியும் என்று கற்பனை செய்வதற்குமான பயம் ஆகியவற்றில் அக்கட்சி மாட்டிக் கொண்டுள்ளது," என்றார்.

சாங் பின்னர் பின்வருமாறு எச்சரித்தார்: "ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் பத்து நூறாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெறுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை இனங்களுக்கிடையிலான மோதல்களுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. உரூம்கியில் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒன்று, எவ்வாறிருப்பினும், பெரும்பாலும் அவற்றில் ஏதேனும் ஒன்று, நகரம் விட்டு நகரம் மற்றும் பரந்த பிராந்தியங்களுக்குள் விரைவாக பரவக்கூடும்." சீனாவில் தங்களின் பொருளாதார நலன்கள் அச்சுறுத்தப்படும் என்ற மேற்கத்திய அரசாங்கங்களின் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களின் அச்சம் வெளிப்படையாக உள்ளது.