World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama's health care counterrevolution

ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு எதிர்புரட்சி

Kate Randall and Barry Grey
28 July 2009

Use this version to print | Send feedback

ஜனாதிபதி ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களுக்கான பிரச்சாரத்தில் நியூயோர்க் டைம்ஸ் முன்னணியில் நிற்கிறது. அவருடைய சுகாதாரப் பாதுகாப்பு முறை முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும் என்னும் உந்துதல், அனைவருக்கும் பயன்படும், கூடுதலான சுகாதாரப் பாதுகாப்பு பெருகிய முறையில் வடிவமைக்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறி முன்னோடியில்லாத வகையில் தொழிலாள வர்க்கத்தின் சுகாதாரப் பாதுகாப்பின்மீது தாக்குதலை குறிக்கிறது. 1965 முதல் Medicare இயற்றப்பட்டதில் இருந்து பெறப்பட்ட நலன்களை திரும்பப் பெறும் முயற்சியாக உள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பில் இது ஒரு எதிர்புரட்சி நடவடிக்கையாகும். மாபெரும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டுப் பெருநிறுவனங்கள் மற்றும் தொடர் மருத்துவமனைகள் மற்றும் பெரும் நிறுவனங்கள் ஆகியவற்றின் இலாப நோக்கை செயல்படுத்தும். அவை தங்கள் ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை கைவிட ஊக்கம் கொடுக்கும், காப்பீட்டுத் திட்டங்களை அவர்கள் வாங்குவதற்கு கட்டாயப்படுத்தும். அதனால் கூடுதலாக சொந்த பணத்தை செலவிட்டு குறைந்த சுகாதார பாதுகாப்புத்தான் பெறமுடியும் என்ற நிலை ஏற்படும்.

ஞாயிறன்று, "நீங்களும் சுகாதார பாதுகாப்புச் சீர்திருத்தங்களும்" என்ற தலைப்பில் வந்த முழுப்பக்க தலையங்கத்தில், அமெரிக்க மக்களிடையே வெள்ளை மாளிகை திட்டமிட்டு சட்டமன்றத்தின் மூலம் செயல்படுத்த இருக்கும் சட்டத்தைப் பற்றி பெருகி வரும் கவலைகளை அமைதிப்படுத்த முற்படும் வகையில் டைம்ஸ் எழுதியுள்ளது. சமீபத்திய Kaiser Family Foundation கருத்துக் கணிப்பு 21 சதவிகிதத்தினர் புதிய சட்டத்தின்கீழ் தங்கள் நிலைமை மோசமாகும் என்று கருதுவதாகக் கூறுகிறது. இது பெப்ருவரி மாதத்தில் இருந்த எண்ணிக்கை போல் இரு மடங்கு ஆகும்.

தவிர்த்தலையும், ஏமாற்றுத்தனத்தையும் பயன்படுத்திய டைம்ஸ் தற்போதைய சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் நிலையுடன் மக்கள் கொண்டுள்ள பரந்த அதிருப்தியை பயன்படுத்தி ஒபாமாவின் திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்க முற்பட்டுள்ளது. இருக்கும் நிலையில் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமைகளை அது மேற்கோளிட்டு இன்னும் நிலைமை மோசமாகக்கூடும் எனவும் ஒபாமா திட்டமிட்டுள்ள செலவுக்குறைவு சீரமைப்புக்கள் ஒன்றுதான் இதற்கான ஒரேயொரு மாற்றீடு என்று கூறியுள்ளது.

"சுகாதார பாதுகாப்பிற்காக அதிக கட்டணங்களும் சொந்த கைகளால் செலவழித்தலும் ஊதியங்களைவிட வெகு விரைவாக உயர்ந்துகொண்டிருக்கின்றன. மில்லியன் கணக்கான மக்கள் "குறைந்த காப்பீட்டையே" கொண்டுள்ளனர்; அவர்களுடைய காப்பீட்டுக் கணக்குகள் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடிவதில்லை. பலரும் மருத்துவ பாதுகாப்பை ஒத்திப்போடுகின்றனர் அல்லது மருத்துகளை வாங்குவதில்லை, ஏனெனில் அவர்களால் செலவின் பங்கை ஏற்கமுடிவதில்லை. பலரும் தனியார் திவால்தன்மைக்கு கூட விண்ணப்பிக்கின்றனர். காரணம் பெரும் மருத்துவ கடன்களை அவர்களால் அடைக்க முடிவதில்லை."

இது தனியார் இலாபத்தை தளமாகக் கொண்ட ஒரு சுகாதார பாதுகாப்பு முறையின் தோல்வியை விளக்குகிறது. இந்த மத்திய பிரச்சனையை டைம்ஸ் முற்றிலும் தவிர்க்கிறது.

மாறாக, செய்தித்தாள் "சேவைக்கான கட்டண முறை" என அழைக்கப்படுவதைக் குறை கூறுகிறது. செய்தித்தாள் எழுதுவதாவது: "அநேகமான அனைத்து வல்லுனர்களும் மிகப் பெரிய அளவில் இருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களுக்காக குறை கூறுகின்றனர். ஏனெனில் அது மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அவை செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பணம் கொடுக்கிறது."

யார் இந்த வல்லுனர்கள்? என்பதை செய்தித்தாள் கூறவில்லை.

சேவைக்கான கட்டணம் என்ற முறையை அகற்ற விரும்பும் ஒபாமாவின் உந்துதலை நியாயப்படுத்தும் தலையங்கம் சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களைக் குறைப்பதற்காக அது நிறுத்தப்படும் என அஞ்சும் குறைகூறபவர்களுக்கு பதில் கூறுகிறது. "உண்மை என்னவென்றால், சுகாதாரப் பாதுகாப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. எந்த காப்பீடும், தனியார் அல்லது பொது முறையும், அனைத்தையும் எந்த செலவினத்திலும் ஏற்பதில்லை." என்று டைம்ஸ் இழிந்த முறையில் கூறுகிறது.

"திட்டமிடப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களின் முந்தைய அலை, செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் குவிப்பைக் காட்டியது. தாங்கள் விரும்பும் பாதுகாப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமுற்ற நலன் பெற்றோரிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது" என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அத்தகைய கவலைகளை அகற்றும் விதத்தில் செய்தித்தாள் தொடர்ச்சியான முரண்பாடான விவாதங்களை இது பற்றி முன்வைத்து கட்டணத்திற்கு சேவையை முடிவிற்கு கொண்டுவந்து செலவினக் கட்டுப்பாடுகள் தடைகள் ஆகியவை உண்மையில் நோயாளிப் பாதுகாப்பை முன்னேற்றுவிக்கும் என்று கூறுகிறது.

இப்பொழுதுள்ள கட்டண முறைப்படி, "நோயாளிகள் பல நேரமும் அதிக செலவுடைய பாதுகாப்பை பெறுகின்றன, ஆனால் அவை சிறந்தவை என்று கூறுமுடியாது." என்று அது கூறுகிறது. கட்டணத்திற்கு சேவை என்பது, "மிக அதிகமான சோதனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றிற்கு உத்தரவிட நிதிய ஊக்கத்தை கொடுக்கிறது, இவற்றில் சில நோயாளிகளுக்கு தீமை பயக்கின்றன. மிக அதிகமான செலவுடைய சிகிச்சை என்பது எப்பொழுதும் சிறந்த சிகிச்சை என்பது அல்ல." என அது மேலும் குறிப்பிடுகின்றது.

இவை பொருள்பொதிந்த சொற்கள் ஆகும். இவற்றினுள் கூறப்படாத செயற்பட்டியல் மறைந்துள்ளது. "அதிகம்" என்று கூறப்படுவது, தேவையற்ற "அதிக செலவு" எனப்படுவது நோயாளிகள் மற்றும் வைத்தியர்களால் நிர்ணயிக்கப்படமாட்டாது. ஆனால் இலாப நோக்கினால் உந்துதல்பெற்ற காப்பீட்டு நிறுவனங்களாலும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களாலும், தொடர் மருத்துவமனைகளாலும் நிர்ணயிக்கப்படும்.

ஒவ்வொரு நேரத்திலும் மாமோகிராம்கள் (Mammograms) புற்றுநோயைக் கண்டுபிடித்து விடுவதில்லை. எனவே டைம்ஸ் கடைபிடிக்கும் தர்க்கத்தின்படி, அவை "அதிகப்படியானவை" என்று கருதப்படலாம். மிக முன்னேற்றமான மருந்துகள்கூட எப்பொழுதும் மருத்துவ விளைவுகளில் முன்னேற்றத்தை காட்டுவதில்லை. இதுவும் மற்றொரு வீண், "திறமையற்ற தன்மைக்கு" ஆதாரம் போலும்.

இத்தகைய தீர்ப்புக்கள் சாதாரண மக்களுக்குத்தான் பொருத்தப்படும் என்று கூறத் தேவையில்லை. செல்வந்தர்களை பொறுத்தவரையில், மிக "அதிகமானவை", செலவு மிக்கவை மற்றும் "திறமையற்ற" காப்பிற்கு எப்பொழுதும் அவர்கள் உட்படுத்தப்படுவர்.

இத்தகைய கருத்துக்கள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், வறிய மக்கள் ஆகியோருக்கு மிக முக்கியமான வழிவகைகள், சோதனைகள், மருந்துகள் ஆகியவற்றைப் பெற முடியாத தன்மையில் தள்ளுவதற்கான போலி நியாயப்படுத்தல்கள் என்று உணர்வதற்கு அரிய திறனாய்வு சிந்திப்பு ஒன்றும் தேவைப்படாது.

ஒபாமா திட்டத்தைப் பற்றி விளக்குவதற்கு அது வேண்டுமென்றே பயன்படுத்தும் தெளிவற்ற சொற்கள் செய்தித்தாள் மக்களிடையே இந்தச் சட்டவரைவு சிறந்தது என்பதைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. காங்கிரஸில் இருக்கும் சட்டவரைவுகளின்படி, "அனைத்து அமெரிக்கர்களும் சுகாதாரக் காப்பீட்டுகளை குறிப்பிட்ட குறைந்தபட்ச நலன்களைக் கொண்டு வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு அபராதத்தைக் கட்ட வேண்டும் என்று கோருகிறது" என தலையங்கம் எழுதியுள்ளது. பல வணிகங்களும் "தொழிலாளர்களுக்கு தேவையான குறைந்த பட்ச தரங்களுக்கு காப்பீட்டை அளிக்க வேண்டும், உதவித் தொகை கொடுக்க வேண்டும், செய்யமுடியாவிட்டால் ஒரு கட்டணம் கொடுக்க வேண்டும்" என்று கட்டண வரைவு கோருகிறது. "குறிப்பிட்ட தரம் உடைய நலன்கள்", "இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டிய அடிப்படை நலன்கள்" பற்றியும் தலையங்கம் கூறுகிறது.

ஆனால் இந்த "குறைந்த பட்ச நலன்கள்", "அடிப்படை நலன்கள்" எவை என்று செய்தித்தாள் கூறவில்லை.

காப்பீட்டு நிறுவனங்களால் நிறுவப்பட உள்ள தனியார் "சுகாதாரப் பாதுகாப்புப் பிரிவுகள்" பற்றி தலையங்கம் குறிப்பிடுகிறது. வேண்டுமென்றே தெளிவற்ற சொற்றொடர்களில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சுகாதாரத் திட்டங்களை நிறுத்திவிட அனுமதிக்கப்படும் என்று கூறிகிறது. அவர்கள் அதையொட்டி கட்டணப்படி தங்கள் சொந்த காப்பீட்டை வாங்கலாம் என்றும், அந்த தனியார் பிரிவுகள் என்ன என்று கூறப்படாது "குறைந்த பட்ச நலன்களை" கொடுக்கும் என்றும் தெரிவிக்கிறது.

எப்படியும் பேசலாம் என்ற விதத்தில் பேசும் தலையங்கம் ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் "குறைந்த செலவில் சிறந்த நலன்களை பெறக்கூடும்" என்று உறுதியாகக் கூறுகிறது. மற்றொரு இடத்தில் "காப்பீடு வாங்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படும்போது மத்தியதர வருமானம் உடைய அமெரிக்கர்களுக்கு எத்தகைய நிதிச் சுமை இருக்கும் என்பது சரியாக தெரியாதது. உதவித்தொகைகள், இறுதியில் காங்கிரசால் ஒப்புதல் கொடுக்கப்படுபவை தாராளமாக இருக்காது என்ற கவலைகள் உள்ளன." என்றும் அது எழுதியுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், "மத்தியதர வருமானம் உடைய அமெரிக்கர்கள்", அதாவது மக்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் காப்பீட்டில் பெரும் சரிவைக் காண்பர். அது மட்டும் இல்லை. தற்பொழுது தங்கள் நிறுவனத் திட்டங்கள் மூலம் சோதனை, மருந்துகள், வழிவகைகள் ஆகியவற்றை பெறுபவர்கள் திடீரென ஏராளமான விஷயங்கள் கூறப்படுவர், அவை காப்பீட்டில் இருக்காது, பெறுவதற்கு அதிக செலவு செய்யப்பட வேண்டும்.

மருத்துவப் பாதுகாப்பிற்கு ஒரு பிரிவை தலையங்கம் ஒதுக்குகிறது. ஒபாமாவின் திட்டமே அதன் மைய இலக்காக உள்ளது. வயதானவர்களுக்கு அரசாங்க காப்பீடு முறை என்பதில் இது செலவு குறைக்கும் விதத்தில் அறிமுகப்படுத்தப்படும். இதில் "Medicare திட்டத்தில் உள்ள பண ஊக்கங்கள் இருக்கும், அவை தேவையில்லாமல் மருத்துவமனைகளில் நோயாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவதையும் குறைக்கும்" என்றும் தெரிவித்துள்ளது.

"மருத்துவ பாதுகாப்பில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி பெறமாட்டார்கள்" என்று டைம்ஸ் ஒப்புக் கொள்கிறது. சட்டமன்றம் மருத்துவக்காப்பு நலன் திட்டங்களுக்கு கொடுக்கும் உதவித் தொகைகளை "குறைக்கலாம், அல்லது முற்றிலும் நீக்கிவிடலாம்." ஆனால் இதைத்தான் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் அரசாங்க உதவிகளுடன் இணைந்து வரும் என்று நம்பியுள்ளனர்..... இத்திட்டங்களில் பல வாடிக்கையாளர்கறளை இருக்கும் முறைக்கு அதிகமாக வசூலிக்கலாம் அல்லது குறைந்த நலன்களை மட்டும் கொடுக்கலாம்" என்று இது கூறியுள்ளது.

இருந்தபோதிலும்கூட, டைம்ஸ் ஒப்புதலுடன் எழுதுகிறது; "ஜனாதிபதி ஒபாமா நலன்கள் குறைக்கப்பட மாட்ட என்று உறுதியளிக்கிறார், அவை இன்னும் திறமையாக வழங்கப்படும் என்றுதான் கூறுகிறார்."

Medicare இல் இருப்பவர்களுக்கு குறைப்புக்கள் என்பது ஒரு முன்னோடியாகி விடும். டைம்ஸ் எழுதியிருப்பது போல் மருத்துவப் பாதுகாப்பில் வரும் மாற்றங்கள் "சுகாதாரப் பாதுகாப்பு முறையிலும் ஊடுருவி கிடக்கும்."

காப்பீடு இல்லாமல் இருக்கும் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, காப்பை விரிவாக்குவது பற்றி செய்தித்தாள் ஒபாமா திட்டத்தின்படி இப்பொழுது காங்கிரஸிற்கு வந்துள்ள பல வரைவுகள் "சிறந்த வேலையைச் செய்யும்" என்று கூறுகிறது. உண்மையில் குறைந்த பட்சம் 16 மில்லியன் குழந்தைகளும் வயது வந்தவர்களும் எந்த காப்பீடும் இல்லாமல்தான் இருப்பர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறன்றே வாஷிங்டன் போஸ்ட்டும் ஒரு தலையங்கத்தை, ''சுகாதார பாதுகாப்பு அர்ப்பணிப்பு''("The Health-Care Sacrifice") என்று வெளியிட்டது; இதில் ஒபாமா திட்டத்தின் உட்குறிப்புக்கள் பற்றி வெளிப்படையான கருத்துக்கள் வந்துள்ளன. பொதுமக்களோடு சமமாக நிற்காமல், அவர்களுடைய சுகாதாரத் திட்டத்தில் பெரும் குறைப்புக்களுக்கு அவர்களை தயாரிக்கவில்லை என்று கூறியுள்ளது. இது செய்தித்தாள் இதுவரை கொடுத்த முழு ஆதரவில் இருந்து ஒரு மாற்றம் ஆகும்.

"சுகாதார செலவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது என்பதற்கு "முடியாது' என்று சொல்லவேண்டும், நோயாளி அதிகம் கொடுக்க வேண்டும்" என வரவேண்டும் என்று போஸ்ட் எழுதியுள்ளது.

மருத்துவப் பாதுகாப்பில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சுகாதாரக் காப்பு செலவு அதிகமாகியுள்ளதற்கு அடிப்படை உந்துதல் ஆகும் என்று செய்தித்தாள் குறிக்கிறது. செலவினங்களைக் குறைப்பதற்கு மிக முன்னேற்ற சிகிச்சைகள் பெறுவது பகிர்ந்து கொள்ளப்படுதல் தேவை என்றும் அறிவிக்கிறது. "வேறுவிதமாகக் கூறினால், உங்கள் செலவினங்கள் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வேண்டியது எப்பொழுதும் கிடைக்காது. இதற்கு குறிப்பாக Medicare இன் தற்போதைய நடைமுறையில் இருந்து மகத்தான மாற்றம் தேவை........."

ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு எதிர்ப்புரட்சி நடவடிக்கை அவருடைய முழு உள்நாட்டு செயற்பட்டியலுடன் இயைந்துள்ளது. வங்கிகளுக்கு பல டிரில்லியன் டாலர் பிணை எடுப்பு பொதி கொடுத்தது, பணிநீக்கங்களை சுமத்தியது, கார்த்தயாரிப்புத் துறையில் ஊதிய, நலன்களை குறைத்தது மற்றும் பொதுக் கல்வி, ஆசிரியர்கள் செலவினங்களில் தாக்குதல் நடத்தியது என்பவை அவற்றில் அடங்கும்.

அமெரிக்க நிதிய பிரபுத்துவம் அதன் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து வரும் வர்க்கப்போர் செயற்பட்டியலை நடத்துவதற்கு ஒபாமா நிர்வாகத்தை அதன் மையக் கருவியாக பயனபடுத்த பொருளாதார நெருக்கடியை பற்றி எடுத்துள்ளது. இவை பெரும்பான்மையான அமெரிக்க மக்களுக்கு எதிராக இயக்கப்படும். 1930கள், 1960 களில் பெறப்பட்ட சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் விளைந்த பலன்கள், முந்தைய தலைமுறையில் தொழிலாளர்கள் கடுமையான போராட்டத்தின் மூலம் பெற்ற நலன்கள் ஆகியவை தகர்க்கப்படும்.

சமூக சமத்துவமின்மை மகத்தான முறையில் பெருகியுள்ளது, மற்றும் நிதியத் தன்னலக்குழு சமூகம் மற்றும் அரசியல் முறையில் மேலாதிக்கம் கொண்டிருப்பது என்பவை ஜனநாயக, சமத்துவ கொள்கைகளின் மிச்சங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், திட்டங்கள் ஆகியவற்றுடன் பொருந்தாது. பொதுக் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை வெளிப்படையாக, நேரடியாக வர்க்க அடித்தளத்தில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

தாராளவாதம், பழைமைவாத, ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என்று எப்படி இருந்தாலும் ஆளும் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளின் அடிப்படைத் திட்டமும் இதுதான்.