World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Port of Marseille hit by economic crisis

பிரான்ஸ்: மார்சேய் துறைமுகம் பொருளாதர நெருக்கடியினால் பாதிப்பு

By Anthony Torres
27 May 2009

Use this version to print | Send feedback

2009 ஆரம்பித்ததில் இருந்து பிரெஞ்சுத் துறைமுகங்களில் செயற்பாடுகள் கணிசமாகக் குறைந்துள்ளன; இது உலகப் பொருளாதார நெருக்கடியுடன் பிணைந்தது ஆகும். 2009 ம் ஆண்டு சர்வதேச வணிகத்தில் 9 சதவிகிதம் சரிவு இருக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்துக் கூறியுள்ளது.

அக்டோபர் 2008ல் வெளிவந்த அரசாங்க ஆணையின்படி முன்பு இருந்த PAM எனப்பட்ட Autonomous Port of Marseille க்குப் பதிலாக புதிய வணிக நிறுவனமாக The Great Maritime Port of Marseille GPMM நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு தன்னாட்சித் துறைமுகம் என்பது பொது அதிகாரிகளால் நடத்தப்படுவது; உள்ளூர் மற்றும் மாகாண அரசாங்கங்கள் நடத்துவது. சில செயல்கள் அதில் தனியார் நிறுவனங்களால் செய்யப்படும்; அவற்றில் வேலை நிலைமைகள் தன்னாட்சித் துறைமுகத்தில் இருப்பதை விட குறைந்த நலன்கள்தான் இருக்கும்.

PAM என்பது வேலைப்பளுவை பொறுத்த வரையில் முக்கிய பிரெஞ்சுத் துறைமுகமாக இருந்து ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட 100 மெகா தொன்கள் சரக்கை இறக்கும். Fos, St.Louis Port மற்றும் மார்சேயி இடங்களை GPMM தன் பொறுப்பில் கொண்டது ஆகும்.

Fos, St. Louis இறுதி நிறுத்துமிடங்கள் (மார்சேயியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளவை) பயணிகள், தானிய வகைகள், மொத்த திடப்பொருட்கள், பழங்கள், கறிகாய்கள் ஆகியவற்றை கையாளும். மார்சேயி இறுதி நிறுத்தமிடம் பெரிய சரக்கு வாகனங்கள், தானியங்கள், பழங்கள், கறிகாய்கள், பயணிகள் ஆகியவற்றைக் கையாளும்.

GPMM இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து 12.7 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டுள்ளது; இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட 21 சதவிகிதம் குறைவு ஆகும்.

சரக்குப் போக்குவரத்து குறிப்பிடத்தக்கவகையில் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது; உலக வணிகச் சுருக்கத்தின் விளைவுகளால் 31 விகித சரிவைப் பதிவு செய்துள்ளது; மேலும் மார்சேயில் பழங்கள், கறிகாய்கள் கையாள்வது மூடப்பட்டுவிட்டது. எண்ணெய், எரிபொருள் நடவடிக்கைகள் 7 சதவிகிதம் குறைந்துவிட்டன; அதே நேரத்தில் மொத்த திடப்பொருட்கள் 50 சதவிகிதச் சரிவை எஃகு உற்பத்தியில் குறைவு ஏற்பட்டதை அடுத்து வீழ்ச்சி அடைந்துவிட்டன. மார்சேயி துறைமுகங்கள் 14,000 தொழிலாளர்களை கொண்டுள்ளது; அவர்களுடைய வேலைகள் இப்பொழுது நெருக்கடியினால் நேரடியாக பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.

Fos ல் உள்ள இறுதி நிறுத்துமிடம் அதன் செயற்பாடுகளில் 34 சதவிகிதம் சரிவைக் காட்டியுள்ளது. St.Louis துறைமுகத்தில் நிறுத்துமிடம் வழியே வரும் போக்குவரத்து 34 சதவிகிதம் குறைந்துவிட்டது. இப்பொழுது ஒரே ஒரு கப்பல்தான் மாதத்திற்கு ஒரு முறை பாக்சைட்டை எடுத்து வருகிறது; நிலக்கரி எடுத்துவரும் கப்பல்கள் செப்டம்பர் மாதத்திற்கு முன் எதிர்பார்க்கப்படவில்லை; இதற்குக் காரணம் Gardanne யில் உள்ள நிலக்கரி சக்தியில் உள்ள விசை உற்பத்தி நிலையம் பழுதடைந்திருப்பது ஆகும்.

மொத்த திடப் பொருட்களை கையாளும் நிறுவனங்களும் கஷ்ட காலத்தில் உள்ளன. ஏப்ரல் 6ம் தேதி WK Transport Logistique வலைத் தளத்தில் வந்துள்ள கட்டுரை ஒன்றில், Louis Dreyfus Shipowners (காய்ந்த மொத்த சரக்கில் சிறப்புக் கவனம் செலுத்துபவர்கள்) உடைய தலைவரான LouisDreyfus ஐரோப்பிய துறைமுகங்களுக்கு வரும் உலர்ந்த மொத்த சரக்கு பற்றி விளக்கியது:"குறிப்பிட்ட ஆர்டர்கள் ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும். 30 சதவிகித ஆர்டர்கள் தாமதித்தாலும், 70 சதவிகித மொத்த சுமப்போரின் ஆர்டர்கள் சந்தைக்கு 2010/2011 ல் வரும். கடல்வழிப் போக்குவரத்துப் பிரிவில், உலர்ந்த மொத்த சரக்கு எடுத்துச் செல்லுபவர்களின் மோசமான நெருக்கடி இனிமேல்தான் வரவுள்ளது."

பழங்கள் மற்றும் காய்கறிகள் செயற்பாடுகள் மார்சேயியில் இருந்து இத்தாலிக்கு இஸ்ரேலியக்குழு Agrexco புதிதாக பொருட்கள் அரங்கைக் கொண்டிருப்பதை அடுத்து மூடப்பட உள்ளது. இது நிகர நஷ்டமாக 200,000 டன்கள் புது விளைபொருட்கள் ஆண்டு ஒன்றுக்கு மார்சேயி பழ இறுதி நிறுத்துமிடத்திற்கு என்று பிரதிபலிக்கிறது. உத்தியோகபூர்வமாக இந்த மாற்றத்தின் காரணம் GPMM நிர்வாகத்திற்கும் Agrexco விற்கும் கடற்கரை வாடகையில் புதிய கட்டணங்களை ஒட்டியதாகும்.

uco nostrum.info [http://www,econostrum.info/] உடைய கருத்தின்படி, இந்த புதிய பழ மற்றும் கறிகாய்கள் போக்குவரத்தூ Marseille Manutention க்கு (பழங்கள், கறிகாய் கடைசி நிறுத்திமிடத்தின் பராமரிப்புக்கு பொறுப்பு கொண்டுள்ள நிறுவனம்) இலாபகரமாக இருக்காது; இது பல ஆண்டுகளாக ஆண்டு ஒன்றிற்கு பல மில்லியன் யூரோக்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. இந்த நஷ்டங்கள் 2008ல் இன்னும் மோசமாயின; ஏனெனில் 50,000 குறைந்த உற்பத்தித் தொகுப்புக்கள்தான் 2007 உடன் ஒப்பிடுகையில் கையாளப்பட்டன. துறைமுகத்தில் வேலைபார்ப்பவர்கள் மறுசீரமைப்பிற்கான விலையைக் கொடுத்தனர்; அதாவது அடிப்படை சரக்கு தொகுப்பை கையாள்வதற்கான கட்டணங்களைக் குறைத்தனர்; இது "ஆண்டு ஒன்றுக்கு 250,000 யூரோக்கள் சேமிக்க உதவியது."

உள்ளூர் அதிகாரிகளும் மார்சேயில் இருக்கும் அரசியல் நிறுவனங்களும் தொழில்துறை நடவடிக்கைகளை St.Louis துறைமுகத்திற்கு மாற்றி மார்சேயியை பயணிகள் போக்குவரத்து துறைமுகமாக இருப்பதற்கு விரும்புகின்றனர். கோர்சிகா, சார்டினியா, வட ஆபிரிக்கா ஆகிய இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு வசதிகளை பெருக்குவதற்கான மூலதனம் (1,300,000 பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்சேயி துறைமுகத்தில் இறங்குகின்றனர்) இக்கொள்கையுடன் இயைந்துள்ளது. மார்சேயில் இறங்கும் பயணிகள் மூலம் வரும் பொருளாதார நடவடிக்கைகள் நகரத்திற்கு கூடுதலான இலாபத்தைத் தருகின்றன (செலவினங்கள் குறைவு, பயணிகளின் நுகர்வுச் செலவு உள்ளது). St.Louis துறைமுகப் பகுதியை நான்கு மடங்கு அதிகரிக்கும் முதலீடுகள் 2011ல் இருந்து சரக்குகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும்.

GPMM க்கும் Agrexco விற்கும் உறவுகள் முறிதல் என்பது GPMM பழங்கள், கறிகாய்கள் சலுகைகளை மீட்க அனுமதித்து கடல் பிரிவு துறைமுக செயல்களுக்கு அதை அர்ப்பணிக்கிறது. பொது அதிகாரிகள் இச்சீர்திருத்தத்தின் நோக்கம் பணிகளை முன்னேற்றுவிப்பது, போட்டிகளை துறைமுகத்தில் அதிகப்படுத்துவது என்று கூறுகையில், GPMM மார்சேயில் வலுவான செயற்பாட்டில் இருக்கும் ஒரு நிறுவனத்தை சென்றுவிட அனுமதித்து 60 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகள் இழப்பிற்கும் வகை செய்கிறது.

துறைமுகங்களின் பல ஆதரவாளர்கள், CMA-CGM கப்பல் உரிமையாளர், சரக்கு அனுப்புவர் DHL ஆகியோர் தங்கள் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்; இதன் தொழிலாளர்கள் சமூக நிலைமை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும் அடங்கும் (புதுப்பிக்கப்பட முடியாத குறுகிய கால ஒப்பந்தங்கள், பணி நேர மாறுதல்கள், வேலைகள் குறைக்கப்படல் ஆகியவை). ஆனால் இப்படி தொழிலாளர்கள் கொடுக்கும் சலுகைகளை ஒட்டி நிறுவனங்களின் செலவினங்கள் குறையும் என்றோ வேலைகள் காக்கப்படும் என்றோ உத்தரவாதம் இல்லை.

Marseille Mauntention ல் 2,000 வேலைகள் 2009 ல் Golfe de Fos ல் இழக்கப்பட்டுவிட்டன. மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் ஆவர்; இவர்கள் எஃகு தொழில் நிறுவனங்கான Arcelor Mittal, Ascometal ஆகியவற்றின் துணை ஒப்பந்தக்காரர்களிடம் வேலை செய்பவர்கள்.

இந்த அபயாகரமான நிலைமையை மார்சேயிப் பகுதியில் எதிர்கொண்டுள்ள CGT தொழிற்சங்கக் கூட்டமைப்பு (பொதுத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது) மற்றும் பிற தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் பரந்த போராட்டம் நடத்துவதைத் தடுக்கின்றனர். துணை ஒப்பந்தக்காரர்கள் பணிநீக்கம் செய்துள்ள தொழிலாளர்கள், துணை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற பெரிய கடல்பிரிவு துறைமுகங்களில் நெருக்கடியின் பாதிப்பினால் அவதியுறும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் ஒன்றுபட்ட நடவடிக்கை இல்லை.

சமீபத்தில் Ascometal and Lylondeel (இரசாயனத் தொழில்) தொழிலாளர்கள் குறுகிய நேரப்பணிக்கு ஊதிய உயர்விற்கான நடவடிக்கை எடுத்து, Lyondell ல் பணிநீக்கங்கள் பற்றிய அச்சுறுத்தலுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிறுவனங்கள் துறைமுகப் பகுதியிலேயே இருந்தபோதிலும்கூட, CGT துறைமுகத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் தங்கள் போராட்டங்களை இணைத்துக் கொள்ளுமாறு கூறவில்லை.

தொழிலாளர்கள் பரந்த முறையில் திரள்வதைத் தடுக்கும் முயற்சியாக CGT மற்ற துறைமுகங்களில் இருக்கும் தொழிலாளர்கள் நிலைமை பற்றி மிகக் குறைவான தகவலைத்தான் கொடுத்துள்ளது; 2011க்குள் பொருளாதார நிலைமை முன்னேறும் என்ற போலித் தோற்றத்தையும் ஊக்குவிக்கிறது. உண்மையில், பொருளாதார நெருக்கடி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் முயற்சியுடன் குறுக்கிடுகிறது; இது துறைமுகங்களில் அதிக வேலைப் பாதிப்புக்கள் மற்றும் பணி நிலைமை பாதிப்புக்களை அச்சுறுத்துகிறது.

துறைமுகங்கள் மறுசீரமைப்பு பெருவணிகம் தொழிலாளர் தொகுப்பைக் குறைக்க, தொழிலாளர்களின் சமூக நிலைமைகளைத் தாக்கிக் கொண்டிருக்கும் இலக்கை அடையாளம் காட்டுகிறது. பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அரசாங்கம் இந்த வழிவகையை விரைவுபடுத்தப் பார்க்கிறது. 2008 துறைமுகச் சீர்திருத்தம் வசதிகளை (துறைமுகப்புற கிரேன்கள், வாகனங்கள்) மற்றும் கூலித் தொழிலாளர்கள் பிரிவு தனியார்மயமாக்கப்படுவதை அனுமதிக்கிறது; இது துறைமுகத் தொழிலாளர்களின் வேலைகள், நிலைமைகள் பற்றி உறுதியற்ற தன்மையைக் காட்டுகிறது. துறைமுகத் தொழிலாளர்கள் சீர்திருத்தம் செயல்படுவதைத் தடுக்கும் முயற்சியாக வேலைநிறுத்தங்களை பல முறை அறிவித்துள்ளனர்.

தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் ஒன்றாக துறைமுகங்களைப் புதுப்பிக்கும் மூலோபாய திட்டங்களை விரிவாக்கிக் கொண்டு வருகின்றனர். இத்திட்டங்களின் செயல்பாட்டிற்கு அரசாங்கம் பொறுப்பு ஆகும். மூலோபாயத் திட்டங்கள் ஏற்கப்படுவதற்கு ஆளும் உயரடுக்கு பிரெஞ்சுத் துறைமுகங்களின் போட்டித்தன்மை தக்க வைப்பதற்கு கூலித் தொழிலாளர்களைச் சுரண்டுதலை தீவிரப்படுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும். துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்களிலுள்ள CGT தொழிற்சங்கம் மார்சேயி பற்றிய மூலோபாயத் திட்டம் பற்றி விவரங்களைக் கொடுக்க மறுக்கிறது; சமீபத்தில் இது ஏற்கப்பட்டது; இதைத்தவிர தன்னாட்சி துறைமுக தொழிலாளர்களை இடமாற்றம் செய்யும் திட்டமும் உள்ளது.

அதே நேரத்தில் அரசாங்கம் தனியார் துறைமுக நிறுவனங்களின் இலாபங்களை சட்டவிரோதமாக அதிகரிக்கிறதோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி பற்றியதுறை பிரெஞ்சுத் துறைமுகங்கள் சீர்திருத்ததை ஆராய உள்ளது; ஏனெனில், "அரசாங்கம் உதவித் தொகை கொடுப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் போட்டிகள் விதியுடன் பொருந்தி வராது என்று அது சந்தேகிக்கிறது." ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் கருத்துப்படி, துறைமுகங்களுக்கு பொது வசதிகள் கொடுப்பது, சீர்திருத்தத்தில், "இத்தக் கட்டத்தில் சிலருக்கு ஆதாயம் கொடுப்பது போலவும், அதே நேரத்தில் இந்த பொது சொத்துக்கள் சந்தைவிலைக்கு விற்கப்படுவதற்கு உறுதியளிக்காமல் போகலாம் என்றும் காணப்படுகிறது." ஐரோப்பியக்குழு பொதுச் சந்தைக் கருத்துடன் வரிச் சலுகைகள் அளித்தலும் ஏற்பதற்கு இல்லை என்று கருதுகிறது.