World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's Congress-led government to do big business' bidding

இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பெருவணிகத்தின் ஆணையை செயற்படுத்தும்

By Deepal Jayasekera
30 May 2009

Use this version to print | Send feedback

இம்மாத பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள, இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையில் இருக்கும் அரசாங்கம், பெருவணிகத்திற்கு அதன் ஆணையைச் செய்வதாக உறுதி கூற விரைந்துள்ளதுடன், புதிய தாராளச் சீர்திருத்தங்களை வேகமாக செயல்படுத்தவும் பெருகி வரும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையைக் குறைக்கவும் முயலும்.

சமூகப் பொருளாதார கொள்கையில் 2009-10 கூட்டாட்சி வரவு-செலவு திட்டம் வருவதற்கு முன் எந்த பெரிய மாறுதல்களும் அமல்படுத்தப்படாது; வரவு-செலவு திட்டம் ஜூலை ஆரம்பத்தில் வரவிருக்கிறது. ஆனால் பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் நிதிய மந்திரி பிரணாப் முக்கர்ஜி இருவரும் பலமுறையும் இந்தியாவை விரைவில் 9 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலான ஆண்டு பொருளாதார வளர்ச்சிக்கு மீட்க வேண்டியதின் அவசரத்தை வலியுறுத்தியுள்ளதுடன், அது வெளி முதலீட்டிற்கு ஆதரவு தருதல், தனியார் மயத்தை தொடர்தல் மற்றும் பல முதலீட்டாளர், "சந்தை சீர்திருத்த" சார்பு கொள்கைகளை செயல்படுத்துவதின் மூலம்தான் முடியும் என்று கூறியுள்ளனர்.

உலகப் பொருளாதார நெருக்கடி இந்திய பொருளாதாரத்தையும் தாக்கி ஏற்றுமதிகள் வியத்தகு அளவில் சரிவதற்கும் தொழில்துறை உற்பத்தி சுருங்குவதற்கும் வகை செய்துள்ளது. வரிகள்மூலம் வருமானம் வருதல் குறைதல் மற்றும் கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து அரசாங்கம் எடுத்த பல பொருளாதார ஊக்க நடவடிக்கைகளின் கூட்டுப் பாதிப்பால், மத்திய அரசாங்கத்தின் வரவு-செலவு திட்ட பற்றாக்குறை பெரிதும் அதிகமாகியுள்ளது. ஏப்ரல் 1ல் முடிவுற்ற நிதிய ஆண்டில் பற்றாக்குறை GDP யில் 6 சதவிகித்திற்கு சமமாக இருந்தது; இது ஆரம்ப இலக்கான 2.5ல் இருந்து மிக அதிகம் ஆகும்.

புதனன்று பேசிய முக்கர்ஜி அரசாங்கம் "வளர்ச்சி, வேலைவாய்ப்பு" ஆகியவற்றை மீட்பதற்கு குறுகிய காலத்தில் அதிகக் கடன் வாங்க நேரிடும் என்றார். "ஆனால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுள் நிதிய ஒருங்கிணைப்பு வழிவகை சிறப்பாக இருப்பது பற்றியும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்."

வியாழனன்று மன்மோகன் சிங்கும் இதே போன்ற அறிக்கையை வெளியிட்டார்: அதே நேரத்தில் அவற்றை போக்குவரத்து, தொலைத் தொடர்பு மற்றும் விசை உள்கட்டுமானங்களுக்கு பணத்தை எழுப்புவதற்கு அரசாங்கத்தின் பொதுப் பணி நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும். "நிதிய நிதானப்போக்கு மற்றும் பொதுத்துறை முதலீடுகளை அகற்றிக் கொள்ளுதல்--இப்பிரச்சினைகள் வரவு-செலவு திட்டத்தில் நிதி மந்திரியால் தீர்விற்கு உட்படும்" என்று செய்தியாளர்களிடம் சிங் இரண்டாம் முறை தன்னுடைய 78 உறுப்பினர்கள் கொண்ட மந்திரிசபை பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர் கூறினார். "பொருளாதார வளர்ச்சி ஆக்கம் பெற நாங்கள் இயன்றதைச் செய்வோம், ஆனால் அதே நேரத்தில் நிதிய நிதானப் போக்கு மனத்தில் ஆழமாகக் கொள்ளப்படும்" என்றார்.

வெள்ளிக் கிழமை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி முரளி தியோரா பெட்ரோலியம் மற்றும் டீசல் விலைகளைக் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுவது பற்றிய திட்டம் அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களுக்குள் மந்திரிசபை முன் வைக்கப்படும் என்றார்.

பெருவணிகத்திற்கு களிப்புத் தரும் வகையில் காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) கூட்டணி மீது தன்னுடைய அதிகாரத்தை போற்றத்தக்கவகையில் அதிகமாக வலியுறுத்தியுள்ளது.

UPA இன் முதல் ஆட்சிக் காலத்தில் பலமுறையும் பெருவணிகம் காங்கிரஸ் அதன் கூட்டணிப் பங்காளிகளின் அழுத்தத்திற்கு தலைவணங்கியதாக, குறிப்பாக மே 2004 முதல் ஜூன் 2008 வரை UPA க்கு "வெளியில் இருந்து" ஆதரவு கொடுத்திருந்த ஸ்ராலினிஸ்ட் தலைமையிலான இடது முன்னணிக்கு தாழ்ந்து நின்றதாக, பல முறையும் குற்றம் சாட்டியது. மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை தம் நம்பகத்தன்மையை அதிகம் விரிவுபடுத்திய முறையில், இந்தியாவின் பெருநிறுவன ஆதரவு பெற்ற நிலையில் இவர்கள் இடது முன்னணியின் ஆதரவை கடந்த ஜூலையில் நிராகரித்து அரசாங்கத்தின் பாராளுமன்ற பெரும்பான்மையை ஆபத்திற்கு உட்படுத்தி, இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தவும் வாஷிங்டனுடன் "உலகளாவிய, மூலோபாய" பங்காளித்தனத்தை கொள்ளவும் முடிந்தது.

காங்கிரசின் புதிய வலிமையைக் காட்டும் விதத்தில், அது புதிய மந்திரிசபையில் நான்காம் அணி என்று அழைக்கப்பட்டதில் இருந்த சமாஜ்வாடிக் கட்சி (SP), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), லோக் ஜனசக்திக் கட்சி (LJS) ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் தரவில்லை. தொகுதிகள் பங்கீட்டில் பேச்சுவார்த்தைகள் முறிந்தவுடன், இக்கட்சிகள் தேர்தல்களில் காங்கிரஸில் இருந்து தனித்துப் போட்டியிட்டன. ஆனால் அவை UPA அரசாங்கத்திற்கு-- (RJD, LJS இரண்டும் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தன)--தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதரவைக் கொடுக்க இருப்பதாகவும் கூறின; தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதிக்கு தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறமுடியும் என நிரூபிக்க மன்மோகன் சிங் கொடுத்த கடிதத்தில் ஆதரவுக் கட்சிகளாக இவை சேர்க்கப்பட்டிருந்தன.
UPA
பங்காளிகள் ஒரு பொது குறைந்த பட்ச வேலைத்திட்டத்தை, அரசாங்க இலக்குகளை கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று கூறியிருந்த மேற்கு வங்கத்தின் திருணமூல் காங்கிரஸின் வேண்டுகோளையும் காங்கிரஸ் ஒதுக்கியிருந்தது. 2004 தேர்தல்களை அடுத்து ஒரு பொது குறைந்த பட்ச வேலைத்திட்டம் UPA கூட்டணியை இணைக்கும் வகையிலும் அதன் இடது முன்னணியுடனான பிணைப்பைக் காட்டும் வகையிலும் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாராளுமன்றத்தில் அதன் வலிமை பெருகிய நிலையில் தடையற்ற சுதந்தரத்தை செலுத்த விரும்பியுள்ளது.

புதிய அமைச்சரவை அமைத்தல் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தாமதத்திற்கு உள்ளாகியது; ஏனெனில் தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்ட திமுக உடன் எந்த இலாக்காக்கள் அதற்கு வழங்கப்படும் என்ற பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் கடினப் போக்கை மேற்கொண்டது.

ஆரம்பத்தில் இந்தியப் பெருநிறுவன உயரடுக்கின் பிரிவுகள் திட்டக்குழுவின் துணைத் தலைவரும் தடையற்ற சந்தை சிந்தனைப் போக்கு உடையவருமான மோன்டெக் சிங் அலுவாலியா நிதி மந்திரியாக வேண்டும் என்று போராடின. ஆனால் முன்பு வெளியுறவு மந்திரியாக இருந்த பிரணாப் முக்கர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டதும் பெருவணிகத்தால் உளம் கனிந்து பாராட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் "இரண்டாம் இடம்" என்று கருதப்படுகையில், முக்கர்ஜி ஒரு நீண்ட நாள் காங்கிரஸ் கட்சி அனுபவம், மந்திரி அனுபவம் ஆகியவற்றைக் கொண்டவர் ஆவார். 1984ல் இந்தியா பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த நிலையில் அப்பொழுது நிதி மந்திரியாக இருந்த அவர் வரி குறைப்பு வரவு-செலவு திட்டத்தை கொண்டுவந்தார்; அது பெருவணிகத்தால் பாராட்டப்பட்டது.

முக்கர்ஜியின் நியமனம் காங்கிரஸ் தலைமை பாராளுமன்றத்தின் வலுவான நிலை இருந்தபோதிலும், அதன் பெருவணிக செயற்பட்டியல் மக்கள் எதிர்ப்பைக் கொள்ளும் என்பதை உணர்ந்த நிலையில் திறமையுடைய அரசியல் செயல்வீரரால் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளதையும் காட்டுகிறது. மேற்கு வங்கத்தில் இருந்து வரும் முக்கர்ஜி UPA உடைய முந்தைய ஆட்சிக் காலத்தின் நான்கு ஆண்டுகளில் இடது முன்னணியுடன் காங்கிரஸின் உறவிற்குப் பொறுப்பு ஏற்றிருந்தார்; மேலும் ஸ்ராலினிஸ்ட்டுகளுக்கு தேவையானவற்றை கொடுத்தல், அச்சுறுத்தல் என்ற இணைப்பை பயன்படுத்துவதிலும் நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார்.

உயர்ந்து விட்ட வர்க்கப் பூசல்

காங்கிரஸ் கட்சியின் தலைமை மற்றும் இந்தியப் பெருநிறுவனச் செய்தி ஊடகத்தின் கூற்று தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு "ஒரு மகத்தான ஆதரவு" என்பது, குறைந்தபட்சம் கூறுவதென்றால் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டது ஆகும். காங்கிரஸ் கட்சி மொத்தத்தில் 28.5 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. இது 2004 பெற்ற மக்கள் வாக்குகள் பங்கில் 2 சதவிகிதப் புள்ளிதான் அதிகம்; ஆனால் காங்கிரஸிற்கு 543 உறுப்பினர்கள் இருக்கும் லோக் சபாவில் அதிக அளவில் 60 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுக் கொடுத்துள்ளது.

முன்னோடியில்லாத பொருளாதார வளர்ச்சி அதன் ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டுகள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் சில சமூக நலச் செலவினங்களையும் செய்தது; அவை அதற்கு கிராமப்புற இந்தியாவில் ஆதரவைப் பெருக்கியது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அதன் வெற்றி இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (BJP) யின் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளுக்கு ஏற்பட்ட தீவிர விளைவை அடுத்து என்று கூறலாம்; அதே போல் மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் இடது முன்னணி அரசாங்கங்கள் முதலீட்டாளர் சார்புக் கொள்கையை மக்கள் எதிர்த்ததாலும் ஏற்பட்டது.

அவ்வாறு இருந்தும் காங்கிரஸ் மற்றும் அதன் UPA அரசாங்கம் தேர்தல்களில் இருந்து வலுவாக வெளிப்பட்டுள்ளன என்று தெளிவாகக் கூற முடியும்; ஆளும் உயரடுக்கு இந்த அதன் மரபார்ந்த அரசாங்கத்தை இவ்வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை ஒரு பெரிய குறைவூதியத் தொழிலாளர் - உற்பத்தி நாடாக உலக முதலாளித்துவத்திற்கு மாற்றுவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்ப்பதோடு கோருகிறது.

மே 18ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தபின் மும்பாய் பங்குச் சந்தை திறந்தவுடன், பங்குகளின் மதிப்புக்கள் 17 சதவிகதம் உயர்ந்தன; அதன் ஒரே நாளில் மிக அதிக ஆதாயம் என்ற விதத்தில். இந்த உயர்வின் தன்மை மிக அதகம் என்பதால் வணிக ஏற்றத்தாழ்வுகளை அது தூண்டியதால் தினத்தின் எஞ்சிய பகுதியில் வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

"மன்மோகன் சிங் இனி சிறு கட்சிகளில் அழுத்தங்களினால் பாதிக்கப்படமாட்டார். கம்யூனிஸ்ட்டுக்கள் [மார்க்சிச இந்தியக் கம்யூனிஸ் கட்சித் தலைமையில் உள்ள இடது முன்னணி] செயலற்றுவிட்டது" என்று இந்திய வணிக மற்றும் தொழில் குழு (FICCI) இன் தலைமைச் செயலாளரான அமித் மித்ரா களிப்புடன் கூறினார்.

"இந்தப் புதிய அரசாங்கம் இனி சாக்குப் போக்குகள் கூறத் தேவையில்லை. பெரிய அளவு சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சியை மீண்டும் 9 சதவிகிதத்தற்கு கொண்டு செல்லுபவை மற்றும் நீண்ட காலம் இந்தியாவிற்கு வெளிநாட்டுப் பணம் கொண்டுவருவதில் அது ஈடுபட வேண்டும். இப்பணம்தான் நமக்கு அவசரமாக நம்முடைய மிகப் பெரும் உள்கட்டுமானத் திட்டங்களுக்கு தேவைப்படுகிறது" என்று மித்ரா தொடர்ந்து கூறினார். பின், அரசாங்கத்தின் முன்னுரிமைகளை பட்டியலிட்ட விதத்தில் அவர் கூறியது. "எளிதில், அருகே பெறக்கூடிய விதத்தில் பலன்களை கொடுக்கக்கூடியவை வங்கிமுறை, ஓய்வூதிய நிதிகள் மற்றும் காப்பீட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் ஆகியவை; பல ஆண்டுகள் கம்யூனிஸ்ட்டுக்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன"

பெரு வணிகம் நீண்ட காலமாக வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் வெளி மூலதனப் பங்கு உயர்மட்டம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறது. அதேபோல் அரசாங்கத்தின் ஊழியர் ஓய்வூதியநிதிகள் தனியார்மயமாக்கப் படவேண்டும். சில்லறைத் தொழில் பெருகிய முறையில் வெளி முதலீட்டைப் பெறுதல், பொதுத் துறை பிரிவுகளை விற்றல்--இதில் அதிக இலாபம் கொடுக்கும் நவரத்னா (கிரீட கற்கள்) நிறுவனங்களும் அடங்கும்; அவற்றுள் பல எண்ணெய் மற்றும் விசை உற்பத்தி பிரிவுகளில் உள்ளன.

நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் "தொழிலாளர் சீர்திருத்தமும்" அரசாங்கத்தால் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதில் பெருநிறுவம் உறுதியாக உள்ளது; சீர்திருத்தம் இல்லாத நிலை இப்பொழுது பெரிய நிறுவனங்களில் பணிநீக்கம் மற்றும் ஆலை மூடல்கள் ஆகியவற்றின் மீது இருக்கும் தடைகளை நீக்க முடியாமல் செய்துள்ளன.

மே 25ம் தேதி ஒரு தலையங்கத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா UPA அரசாங்கம் பெருகிய சமூகநலச் செலவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் "கடுமையான முடிவுகள்மீது" குவிப்புக் காட்ட வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளது. "மத்திய, மாநில அரசாங்கங்களின் மொத்த வரவு-செலவு திட்ட பற்றாக்குறை GDP யில் 11 சதவிகிதத்திற்கு அருகில் உள்ள நிலையில், அரசாங்கம் நிதியப் பொறுப்பு மற்றும் இருப்புக்களை திரட்டுதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.... கிராமப்புற வேலைவாய்ப்புக்கள் உத்தரவாதம் அல்லது உறுதியளிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு ஆகியவை காலவரையற்ற அரசாங்கக் கடன் மூலம் செயல்படுத்த முடியாதவை. அதே போல் கடன்களை தள்ளுபடி செய்தல் (கடன்பட்டுள்ள விவசாயிகளுடைய) என்ற மக்களை திருப்தி செய்யும் செயல்களும் வாடிக்கையாக வந்துவிடக்கூடாது."

"அரசாங்கம் வெளியீடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் தேவையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்" என்று தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா கூறியுள்ளது. ..கடினமான முடிவுகளை உதவித்தொகை கொடுப்பதில் காட்ட வேண்டும், எரிபொருள் விலையும் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்பட வேணடும். தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள் கொண்டுவருதல் கடினம்...[ஆனால்] செயற்பட்டியலில் அவை உறுதியாக இருக்க வேண்டும்."

முதல் பதவிக்காலத்தில் வெளிநாட்டு முதலீடு மகத்தான முறையில் வந்ததாலும், மிக அதிகப் பொருளாதார வளர்ச்சியினாலும், சற்றும் மதிப்பு குறையாத வகையில் இடது முன்னணி கொடுத்த முக்கிய அரசியல் ஆதரவினாலும், காங்கிரஸ் தலைமையிலான UPA சமசீர் செயற்பாடுகளைச் செய்யமுடிந்து, புதிய தாராள சீர்திருத்தங்களை செயல்படுத்தி அதே நேரத்தில் சில ரொட்டித் துண்டுகளை வறுமை அகற்றும் திட்டச் செலவுகள் என்று ஏழைகளுக்கும் ஒதுக்கியது. (இந்தியாவின் 1.1 பில்லியன் மக்களில் 25 சதவிகிதத்தினர் நாள் ஒன்றுக்கு ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்; 70 சதவிகிதத்தினர் நாள் ஒன்றுக்கு 2டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்.)

ஆனால் உலகப் பொருளாதார நெருக்கடி இந்த கழைக்கூத்தாடி செயலை பெருகிய முறையில் தக்க வைக்க இயலாததாக்கியுள்ளது; இது UPA ஐ வெளிப்படையான மோதலை தொழிலாள வர்க்கம், உழைப்பவர்கள் ஆகியோருடன் காட்டச் செய்யும்.

இந்தியாவின் கொள்ளை முறை விழைவுகள்

பெருவணிகமும் UPA அரசாங்கமும் இன்னும் கூடுதலான உறுதியளிக்கும் பங்கை உலக விஷயங்களில் கொள்ளுமாறு எதிர்பார்க்கிறது; அத்தகைய பங்கு வட்டார மேலாதிக்கத்தை இந்தியா கொள்ளவேண்டும் என்ற விழைவுகளுடன் ஒத்திருக்கிறது; உண்மையில் உலக சக்தியாக வேண்டும் என்ற விழைவும் உள்ளது. இந்தியச் செய்தி ஊடகம் சமீபத்திய வாரங்களில் தெற்கு ஆசியாவில் பெருகிவரும் சீனாவின் செல்வக்கை கண்டித்து, இந்தியாவின் பாக்கிஸ்தான், இலங்கை, நேபாள் ஆகியவற்றை பற்றியுள்ள "நலன்கள்" ஆபத்திற்கு உட்பட்டிருப்பதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளன.

மன்மோகன் சிங் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளியுறவு மந்திரியான எஸ்.எம். கிருஷ்ணவும் பாக்கிஸ்தானுடன் "ஒருங்கிணைந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள்" விரைவில் தொடங்கும் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்; இது கடந்த நவம்பர் மாதம் மும்பை மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டபின் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. "சமாதானம், நட்பு ஆகிய கரங்களை நீட்ட நாங்கள் தயாராக உள்ளோம்; ஆனால் பாக்கிஸ்தான் நம்பகத்தன்மை உடைய நடவடிக்கையை பயங்கரவாத உள்கட்டுமானத்தை அகற்றுவதில் காட்ட வேண்டும்" என்று கிருஷ்ணா அறிவித்துள்ளார். புதனன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தியாவின் விமானப் படைப்பிரிவு தலைவர் இந்தியா மும்பைத் தாக்குதலை அடுத்து பாக்கிஸ்தான் மீது தாக்குதலுக்கு வெகு அருகில் வந்திருந்ததாக கூறினார்.

ஏ.கே. அந்தோணியை பாதுகாப்பு மந்திரியாக தக்க வைத்துக் கொண்டிருப்பது உறுதியான தகவலைக் கொடுக்கிறது. இந்திய இராணுவ வரவு-செலவு திட்டத்தில் மகத்தான விரிவாக்கத்தை அந்தோணி மேற்கொண்டிருந்தார்; புது டெல்லி நீல நிற நீர் கடற்படை மற்றும் நவீன ஏவுகணைத் திறனை வளர்க்க முற்படுகிறது; மேலும் அதன் விமானப் படை மற்றும் அணு "தடுப்பு சக்தியை" வளர்க்கவும் முற்பட்டுள்ளது. அந்தோணியின்கீழ் இந்தியா பெரிய அளவில் அதன் இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்காவுடன் விரிவுபடுத்தியுள்ளது.

செய்தி ஊடகத் தகவல்கள்படி UPA இன்னும் கூடுதலாக அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவுகளை விரிவாக்க முயல்கிறது. பெயரிடப்படாத மூத்த இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம், இந்திய அமெரிக்க நிலைக்கள ஆதரவு உடன்பாடு (LSA) இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கையெழுத்திடப்படாமல் இருப்பது விரைவில் இறுதிவடிவம் பெறும் என்று கூறியுள்ளார். அத்திட்டம் இரு நாடுகளும் இராணுவக் கப்பல்கள், விமானங்கள் ஆகியவை மற்ற நாட்டுத் துறைமுகங்கள் ஆகியவற்றில் எரிபொருள் பெறுதல், பழுது நீக்குதல் ஆகியவற்றைச் செய்து கொள்ள அனுமதிக்கும்.

இத்தகைய உடன்பாடு இன்னும் கூடுதலான பெரும் நலன்களை அமெரிக்காவிற்கு அளிக்கும் என்பதை கூறத் தேவையில்லை; அதுவோ ஏற்கனவே இந்திய பெருங்கடல் சக்தியாக உள்ளது, இந்தியா என்று இல்லாமல் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பாக்கிஸ்தான், ஈராக் ஆகிய இடங்களில் போரில் ஈடுபட்டுள்ளது.